Pages

Wednesday, November 28, 2012

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோவை லேத்துபட்டறை மாணிக்கத்தின் மனம் நொந்த மடல்



அன்புடையீர் வணக்கம்.
நான் கடந்த 40 ஆண்டுகளாக கோவையில் லேத் வொர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறேன்..கடந்த 4 ஆண்டுகளாக சரியாக “கரண்ட்” வராததால். என் சர்வீஸை 36 ஆண்டுகளாக குறைத்து கொள்கிறேன்.

நான் என்ன சொல்லவருகிறேன் எனபது உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்...மின்வெட்டு என்றால் ...கடிதம் மாநில முதல்வருக்கோ,,,மின்துறை அமைச்சருக்கோதானே எழுத வேண்டும் எங்களுக்கு ஏன் எழுதுகிறீர்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது..

இந்த மின்வெட்டு பிரச்சனை தீர்ப்பதில் உங்களுடைய தனிப்பட்ட பங்கு..மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டுப் பங்கை நீங்கள் செய்யாததால் தான் எழுதுகிறேன்.

முதலில் ஆளும் அண்ணா (அம்மா) திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என் வணக்கம்.
மின்வெட்டினால் நான் ரொம்பவே நொந்து போயிருக்கேனுங்க.உங்க அம்மா..”நாங்க ஆட்சிக்கு வந்தா 6 மாதத்துல மின் வெட்ட சரிசெய்வேன்னு “ சொனனாங்க..ரொம்பவே சந்தோஷப்பட்டு பின்னங்கால் பிடரியில் இடிக்க குடும்பத்தோட ஓடிப்போய் அம்மாவுக்கு ஓட்டுப்போட்டேன்.
கண்ட பலன் என்ன? கருணாநிதி ஆட்சியில 4 மணி நேரமாய் இருந்த “பவர்கட்” உங்க ஆட்சியில 16 மணிநேரமாய் பதவி உயர்வு பெற்றதுதான் மிச்சம்…

மிக்ஸி--,கிரைண்டர், ஆடு, மாடு, சைக்கிள்னு கொடுத்து தான்சொன்ன வாக்குறுதியெல்லாம் நிறைவேத்தின உங்கள் “அம்மா” மின்வெட்ட மட்டும் நீக்காம எங்க வாழ்க்கையை நடு ரோட்டுக்கே கொண்டு வந்துட்டாங்க..

கரண்ட் இல்லாததால் வேலை இல்லை..அதனால் வருவாய் இல்லை..செலவுக்கு பணம் இல்லாததால் கடன்.--.கடன்--..என கடன் மேல் கடன் வாங்கி..கடனில் மூழ்கி வருகிறேன்..நானும் என்னை நம்பியுள்ள 4 தொழிலாளர்களும் வாழவழி தெரியாமல் பித்து பிடித்து அலைகிறோம்..
இனியும் என்னால் பொறுக்க முடியாது எனது 4 கோரிக்கைகளில் எதாவது ஒன்றையாவது உடனடியாக நிறைவேற்றுங்கள்..வணக்கம்,

கேப்டனின் சட்டமன்ற அன்புத்தம்பிகளுக்கு வணக்கம்..
நீங்களெல்லாம் சட்டமன்றத்துக்கு போனதும் நீறைய நல்லது நடக்கும் என்று எதிர்பார்த்தேன்..கேப்டனும் அம்மாவும் சேர்ந்து வெற்றி பெற்ற மாதிரி மின்வெட்டையும் சேர்ந்து ஜெயிப்பார்கள் என்று காத்திருந்தேன்.

கேப்டனுக்கு சினிமாவில் வாய்ப்பு வராததால் சட்டசபைக்கு போய் சண்டை காட்சிகளில் நடிச்சார்..நாக்கை துருத்தி கையை மடக்கி ஆவேசப்பட்டவரை அம்மா வெளியே அனுப்பினார்..அப்போது போனவர்தான் இன்னும் வரவில்லை.
தமிழ் நாட்டின் தலைஎழுத்து எதிர் கட்சித்தலைவர் சட்டசபைக்கு வருவதே இல்லை.இனி எங்கள் கோரிக்கைகளை எதிர் கட்சியாய் யார் பேசுவார்.
உங்களிடத்திலும் அதே 4 கோரிக்கைகளை வைக்கிறேன்..உடனடியாக ஏதாவது ஒன்றை நிறைவேற்றுங்கள்.. வணக்கம்.

மேன்மை தங்கிய கலைஞர் சட்டமன்ற் உறுப்பினர்களுக்கு வணக்கம்.
“செத்தும் கொடுத்தான் சீதக்காதி” என்பது பழமொழி…நீங்கள் தோற்றும் “கெடுத்து”தான் வருகிறிர்கள்.தமிழகத்தை ஆண்டபோது 4 மணிநேரம் பவர்கட் உங்கள் பரிசளிப்பு…இப்போது இந்தியாவை ஆளும் போது மன்மோகந்-சோனியாவிடமிருந்து “கரண்ட்” வாங்கித்தர மறுக்கிறீர்கள்.அம்மாமேல இருக்கிற கோபத்தை எங்கள் மீது காட்டுகிறீர்கள்.

மத்திய மின்சாரத்தை கையில் வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு மின்சாரம் தர மறுக்கும் நீங்கள் தமிழர்கள் தானா? என சந்தேகம் வருகிறது.
மத்தியிலிருந்து உடனடியாக தமிழ்நாட்டுக்கு மின்சாரம் கொண்டுவரமுடியாவிட்டால்..என்னுடைய நான்காவது கோரிக்கையாவது உடனடியக நிறைவேற்றுங்கள்..

அன்பிற்கினிய காங்கிரஸ் பேரியக்க சட்டமன்ற சகோதரர்களுக்கு வணக்கம்..
அடுத்த கூட்டணியை பற்றி மட்டுமே கவலைப்படும் உங்களிடம் சொல்லி எந்தப்பயனுமில்லை..வாய்பேசாத வாசன்..ஞானம் மட்டுமே உள்ள “பாவம்”தேசிகன்..வாயையே மூடாத நாரயண சாமி,,இவர்களெல்லாம் இருந்து என்ன பயன்?--குறைந்த பட்சம் சோனியாவிடம் சொல்லி டெல்லி முதல்வர் ஷீலாதீக்‌ஷித்..வேண்டாமென்று ஒப்படைத்த1745 மேகாவாட் மின்சாரத்தை தமிழ்நாட்டுக்கு பெற்றுத்தர செய்யுங்கள்..

சோனியாவுக்கு தமிழ்நாடு இந்தியாவுக்குள் இருப்பது தெரியாது..பாவம் அவர் இத்தலிக்காரர்..நீங்கள் இந்திய வரைபடத்தை காட்டி புரியவைய்யுங்கள்.
முடியாவிட்டால் எனது 4வது கோரிக்கையை உடனே நிறைவேற்றுங்கள்.

போராட்டம் செய்யவும்..கூட்டணியில் இடம்பிடிக்க துண்டுபோடுவைதையும் மட்டுமே தெரிந்த கம்யூனிஸ்ட் தோழர்களால் ஒன்றும் செய்யமுடியாது என்பதால் அவர்களுக்கு இந்த கடிதம் இல்லை.

ராமதாஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த கடிதம் இல்லை ..அவரிடம் மின்சாரம் கேட்டால்..மின்சாரம் கொடுக்கும் “ஷாக்கை” விட பெரிய ஷாக் கொடுப்பார்..அதான் அன்புமணியை முதலமைச்சார் ஆக்குங்கள்  என்பார்..

அன்பிற்கினிய தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வணக்கம்..
என்னைப்போல பாதிக்கப்பட்ட லட்சக்கணகானவர்களின் சார்பாக என் 4 கோரிக்கைகள் வருமாறு…

1…மின்வெட்டை ரத்து செய்து உடனடியாக 16 மணிநேரமாவது தொடர் மின்சாரம் கொடுங்கள்.

2..முடியாவிட்டால்..உடனடியாக..”மாற்றுவழி மின்சாரம்—ALTERNATIVE POWER”—கொடுங்கள்..இலவசமாக வேண்டாம்—மானியமும் வேண்டாம்..இப்போது அரசு வசூலிக்கும் மின்விலைக்கு சம்மான மின்விலைக்கு கொடுங்கள்.

3..அதுவும் முடியாவிட்டால்..திமுக ஆட்சியில் ஒன்றரை வருடம் உங்கள் ஆட்சியில் ஒன்றரை வருடமாக கரண்ட் இன்றி நஷ்ட்டம் தலைக்கேறி நொந்து நூடுல்ஸ் ஆன எனக்கும் என்னிடம் வேலை பார்க்கும் 4 ஊழியர்களுக்கும் இன்றைய விலைவாசியில் குடும்பம் நடத்த மாதம் தலா ரூ.10,000/= மாவது கொடுங்கள்.

4…அதுவும் முடியாவிட்டால்..உங்களுக்கு எதற்கு எம்.எல்.ஏ—பதவி--..ராஜினாமை கொடுங்கள்..மின்சாரம் தரும் வல்லமை உடைய வேறு ஒருவரை நாங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம்….
( ஆண்டவா..இம்முறையாவது வாக்குறுதியை கொடுத்துவிட்டு..ஏமாற்றாத எம்.எல்.ஏயை எங்களுக்குத்தருவாயா?)

 வணக்கம்………………………………………………………………………………………………………இங்ஙனம்
மிசாரத்துக்காக ஏங்கி  காத்துக்கிடக்கும்       மாணிக்கம்-கோவை