Pages

Saturday, May 31, 2014

அமெரிக்கா..ஓ..அமெரிக்கா (1 )

”இதயம் பேசுகிறது” மணியன் முதல்--”வாஷிங்டனில் திருமணம் “ சாவி முதல் எத்தனையோ எழுத்தாளர்கள் அமெரிக்காவை “ பிரித்து மேய்ந்து “ இருக்கிறார்கள்..

என்னுடைய எழுத்து வடிவம் (கட்டுரை அல்ல) அப்படி இருக்காது என நினைக்கிறேன்.

என்னுடைய சிந்தனையே வித்தியாசமானது,,( அதை நாங்கள் சொல்லவேண்டும் நீ அல்ல _-என நீங்கள் சொல்வது என் காதில் கேட்கிறது)

நான் “இந்தியா--அமெரிக்காவை”--”ஒப்பு நோக்கப்போவதில்லை--”நோ கம்பாரிசன்”--அமெரிக்காவை பார்த்து அதிசயிக்கவில்லை..அதனால் வாய்பிளக்கவில்லை..

என்ன சொன்னாலும் இது ஒரு மாறுபட்ட உலகம்தான்..நமக்கு புதுமையான உலகம்..என் கண்ணில் பட்ட அமெரிக்காவை “எனது பார்வையில்” எழுதுகிறேன்..

ஹூஸ்டன் ஜார்ஜ்புஷ் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் இறங்கியபோது அந்நாட்டின் நேரம் மாலை 4.30..வெளியில் வந்தபோது இரவு 7.00..ஆனால் சூரியன் மறையவில்லை.வெய்யில் காலமாம்..சூரியன் இவர்கள் இஷ்ட்டத்திற்கு மறையாதாம்..இரவு 8.00 வரை அதற்கு “டைமாம்”..

இந்த பதிவில் “போக்குவரத்து “ பற்றி மட்டுமே எழுதப்போகிறேன்.

நானே ஒரு மிக “நல்ல--திறமையான---சிறப்பான--அனுபமுள்ள--டிரைவர் என்பதால்.( பாராட்டுவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள் என்பதால் நானே என்னை பாராட்டிக்கொள்கிறேன்)..அந்த பார்வையில் இதை எழுதுகிறேன்..

சாலைகள் மிக அகலமானவை..பாலங்களும் அகலமானவை--பெரிதானவை..( இதன் ஒரு 60 சத வடிவத்தையே தற்போது நாம் இந்தியாவில் பார்க்கிறோம்..வாஜ்பாய் என்னும் மாமனிதர் மட்டும்
 இல்லாமல் இருந்திருந்தால்..இவ்வடிவத்தைக் கூட நாம் பார்க்க இன்னும் பல ஆண்டுகாலம் பிடித்திருக்கும்..)  

வாகனங்களின் கட்டுப்பாடு பிரமிப்பு ஊட்டுகிறது..”ஹாரன் “ என்பதே இங்கு இல்லை..யாரவது “ஹாரன் அடித்தால் “ அது மிகப்பெரிய “ அவசரமாம்”--நானிருந்த 4 வாரமும் ஒருதடவை கூட “ஹாரன்” சத்தம் கேட்டதில்லை..

அதுபோல இரவு வண்டி ஒட்டுவதும் ஒருசுகமான பாதுகாப்பான  அனுபவம்..எதிரே வரும் வாகனங்களின் மீது குறிப்பாக வானக ஓட்டிகளின் “கண் கூசுகின்ற “ அளவு “ஹெட் லைட்டை” அமைக்கும் நம்மூர்காரர்கள் முன்  அமெரிக்கர்கள்--ஜுஜ்ஜு பீ “ தான் 15 அடிக்குமேல் வாகன விளக்குகள் தெரியாது ஓட்டுபவர்கள் கண்ணில் அடிக்காது..ஓட்டும் சிரமமும் இருக்காது..இரவு பகல் எதுவாயினும் “நோ ஹார்ன்”தான்.. 

ஒவ்வொரு சந்திப்புக்களிலும் வேகத்தை குறைத்தோ அல்லது நிறுத்தியோதான் வாகனங்கள் செல்லுகிறன..அனைத்து கார்களிலும் “ஆட்டொ மேட்டிக் “ கியர்தான்..வேகம் சீறிப்பாய்கிறது..ஆனாலும் வேகக்கட்டுப்பாடுகளை மீறுவதில்லை..மீறினால்..”தூணிலும் இருப்பார்--துரும்பிலும் இருப்பார்” என்று நாம் சொல்லும் நரசிம்மர் போல அந்த ஊர் போலீஸ் திடீரென தோன்றும் ..

கார்கள் ”குட்டி ”--முதல் “பிசாசு” சைசிலும் உள்ளது பெரும்பாலும் “பெரும் சைஸ்” கார்களையே அதிகம் அமெரிக்கர்கள் விரும்புகிறார்கள்..

“பைக்குகளை” பார்ப்பது அரிதே..அதுவும் மிக ஆடம்பரமாக உள்ளது..நம்மூர் “ராயல் என்ஃபீல்டை” விட..2.. 3..சைஸ் பெரிதாக உள்ளது..சகலவித சவுகரியங்களுடன் ”ட்டூ..ட்டூ..ட்டூ”..சத்தத்துடன்..செல்கிறது மதுரைக்கார மைனர்கள் மிகப்பெரிய சத்ததுடன் பாட்டு போட்டு ஓட்டும் ஆட்டோக்கள் போல ”பாட்டுக்களும்” அமர்க்களமாக உள்ளது..

காரைவிட பைக்க் ஓட்ட லைசன்ஸ் வாங்குவது சிரமமாம்..நம்மூர் போல “ ஏ பேமானி..வீடல சொல்லிட்டு வந்துட்டயா?” என கேட்காமல் பைக் காரகளுக்கு மிகுந்த மரியாதையை-- கார்காரர்கள் கொடுக்கிறார்கள்..

ஒரே வீட்டில் 3..4..கார்கள் உண்டு..கார் ஷெட் போக நம்மூர் போல ரோட்டிலும் கார்கள் தாராளமாக நிறுத்துகிறார்கள்..அதுவும் வார விடுமுறை நாட்களில்”விருந்தாளிகள் வருகையால்” தெருமுழுதும் கார்கள் பார்க் செய்திருப்பதை பார்க்கலாம்.....

எல்லா கார்ஷெட் கதவுகளும் “ஆட்டோமேட்டிக்” ரிமோட் கண்ரோலில் இயங்குவதால் நம்மூர் போல வாசலில் வந்து “ஹார்ன்” அடித்து அடுத்தவீட்டுகாரன் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ளவோ--மனைவிமார்கள் வெளியே வந்து கதவை மூடும்/திறக்கும்  அவசியமோ இல்லை....காரை ஓட்டுபர்களே கதவை திரந்து மூடிக்கொள்ளலாம்..

வாகனங்களிலுருந்து “புகை கசிவதை” பார்க்கவே முடியாது..கார்கள் எல்லாம் பெட்ரோலில் இயங்குவதே..டீசல் கார்களை பார்க்க முடியாது..இங்கு பெட்ரோலை விட டீசல் விலை அதிகம்..வெளியில் “தூசி” என்பதே இல்லாததால் காரை மாதம் ஒருமுறைதான் கழுவுகிறார்கள்..

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள நான் பார்த்த 6 வித்தியாசங்களில் முதல் மூன்று வித்தியாசங்கள்
1..கண்கூசும் வாகன வெளிச்சம்
2.வானப் புகை--தூசி
3.வாகன சப்தம்..
இவை இல்லை....இவை இல்லாத இந்தியாவை உருவாக்க முடியுமா?

இதுதான் என்னுடைய கனவு திட்டமாக இருந்தது..நான் மந்திரியானால் இவைகளை அமுல் படுத்த காத்திருந்தேன்..ம்ம்ம்ம்ஹூம்...எம்பி சீட் கிடைக்கவில்லையே?...

அதனால் என்ன..என் நண்பர் திரு..நிதின் கட்கரிஜி அவர்களிடம் என் திட்ட ஃபைலை கொடுத்து விடுகிறேன்..என்ன சரிதானே..

தொடரும்------

Monday, May 26, 2014

நரேந்திரா மோடியால் நாட்டை தூக்கி நிறுத்த முடியுமா?

  1.  கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், இந்தியாவின் “கிரெடிட் ரேட்டிங்க்” அதல பாதாளத்துக்கு போய் ஜி-20 நாடுகள் உட்பட எதிலும், நம்மை சல்லிக்காசுக்கு கூட மதிக்காத நிலையில் மோடி பதவி ஏற்கிறார்..

2.--2013-14 ம் ஆண்டு நல்ல விளைச்சல். நல்ல தானிய கொள்முதல் மற்றும் கையிருப்பு அதிகம்..ஆனாலும் விலை வாசி இறங்க வில்லை..காரணம் கிடங்குகளில் தனியங்கள் சரியாக பாதுகாப்பின்றி அழுகி வருகிறது..தேவையான் இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கும் ஏற்பாடில்லை..காரணம் உணவு மந்திரி, “புரோக்கர்களின் கைய்யில்” விலை போன அவலம்..
இந்த சூழலில் மோடி பதவி ஏற்கிறார்..

3.சமூக ஏற்ற தாழ்வுகளை சரி செய்ய “உற்பத்தி செக்டார்” (production sector)மாபெரும் வளர்ச்சி பெற வேண்டும்..கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இத்துறை “நெகடிவ் குரோத்” அடைந்துள்ளது..இந்நிலையில் மோதியின் பதவி ஏற்கிறார்..

4.வங்கிகள்--- தொழில் துறைக்கு கடன் கொடுக்க அஞ்சுகின்றன..வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய “என்.பி.ஏ” யும் ஏராளமாக நிலுவையில் உள்ளது..ஒரு வலுவான திறமையான “வங்கித்துறை” ஏற்படுத்த பட வேண்டும்..வங்கிகள் மடிந்த காலம் நரேந்திர மோடியின் பதவிகால தொடக்கமாக உள்ளது..

5.மின் வெட்டில் மூழ்கி இருக்கும் நாடு--மின் தேவை எறாளம்..தயாரிப்பு மிக குறைவு..இதை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் நரேந்திர மோடி--ஆனாலும் மின் மிகை மாநிலமாக குஜராத்தை மாற்றிய அவரது அனுபவம்--இதற்கு கை கொடுக்கும் என்றாலும் இது ஒரு மாபேரும் சவால் என்னும் சூழலில் பதவி ஏற்கிறார்.

6.மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பெட்ரோலிய பொருட்கள்--அதனால் ஏற்படும் மாபெரும் அந்நிய செலாவணி ”டிஃபிசிட்”-இதை சரி செய்யும் சவால் மோடிமுன்..இன்னிலையில் மோடி பதவி ஏற்கிறார்.

7. மின் தேவையை பூர்த்தி செய்ய சூரிய ஒளி மின் உற்பத்தி உட்பட எல்லாவகை மின் உற்பத்தியும் செய்ய வேண்டும்..இவற்றிக்காக அகில இந்திய அளவில் “ சூரிய ஒளி மின் உற்பத்தி இணையம் “ உருவாக்க வேண்டும் என மோடி அவர்கள் பேசி இருக்கிறார் என்பது அவரது ஞானத்திற்கு சான்று என்றாலும் இச்சவாலை அவர் எப்படி சமாளிப்பார் என்பதை நாம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

8அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் “தங்க நாற்கர சாலை” அதை இவர் விரிவு படுத்த வேண்டும்..ரெயில் வே மற்றும் மற்றும் கடல் வழி போக்குவரத்தையும் இணைத்து, “ஒருகிணைந்த பன்முக போக்குவரது துறையை” ஏற்படுத்த வேண்டும்--இச்சவால்களை மோடி எப்படி செய்யபோகிறார்?

8.தனக்கு விசா தராத அமெரிக்காவை அலைய விட்டு சரித்திரம் படைத்த மோடி, மேலை நாடுகளை நம்பாமல், ஜப்பான், சிங்கப்பூர், சீனா மற்றும் இஸ்ரேல் ஆகியவைகளுடன் வியாபாரம் மற்றும் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டார் என்றாலும் அயல் உறவில், குறிப்பாக இலங்கை பாகிஸ்தானுடன் இவரது உறவு வளருமா வீழுமா? என்ற நிலையில் இவர் பொறுப்பேற்கிறார்..

9.கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வெளியுறவு சிரிப்பாய் சிரித்தது..உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு கை கொட்டி சிரித்தது..ராணுவ வீரர்களின் தலை கொய்தல், அருணச்சல பிரதேசத்தில் சீனாவின் ஆகிரமிப்பு, இலங்கை தமிழர்களுக்கு அநீதி, என்ற மிக இக்கட்டான நிலையில் மோடி பதவிஏற்கிறார்.

10.காஷ்மீர் சத்தீஷ்கர், அஸ்ஸாம், என உள்நாட்டுகலவரம், குண்டு வெடிப்பு-- நக்சல் ஆதிக்கம், என்ற இந்த சோதனைகளை --மோடி எப்படி சரி செய்ய போகிறார்?..

11.அத்தனை பேருக்கும் அமைச்சர் பதவி, வழங்கி “இஷ்டத்துக்கு” அமைச்சர் நியமனம் செய்த சோனியாவின் குழப்பங்களை மோடி எப்படி சரி செய்யப்போகிறார்
மோடியால் இச்சோதனைகளை சாதனைகளாக மாற்றமுடியுமா?--மோடி கரை ஏறுவாரா>--முடியுமா மோடியால்?--

எல்லா கேள்விகளுக்கும் பதில் “ மோடியால் முடியும்” என்பது மட்டுமே---அது --ஏன்? எப்படி?

இந்திய வரலாற்றில் 12 ஆண்டுகாலம் ஒருமாநிலத்தின் வெற்றிகரமான முதல்வராக பணியாற்றி.. பிரதமர் பதவியை ஏற்கப்போகும் முதல் மனிதர் நரேந்திர மோடி மட்டும் தான்..

இந்தியா பொன்றே...”பொருளாதார சீரழிவு, வெளியுறவில் சீர்கேடு--உள்நாட்டு பாதுகாப்பில் அச்சுறுத்தல்” என்ற மோசமான சூழலில் ஜப்பானின் பிரதமராக பதவி ஏற்றார் “ சின்ஜி அபே”
தனது திறமையான நிர்வாகத்தால் ஜப்பானை தூக்கி நிறுத்திணார்..ஆனால் அவர் ஜப்பான் அரச குடும்பத்தை சேர்ந்தவர்--அதிகார மையத்தை அனுபவித்தவர்..

ஆனால் நரேந்திர மோடி ஒரு சாதரண குடும்பத்திலிருந்து வந்தவர்..டீ விற்ற்வர்..அதிகார மைய்யம் என்பதை புத்தகத்தில் மட்டுமே படித்தவர்.;;;

செய்வாரா---நரேந்திர மோடி செய்வாரா?---நாட்டை வளர்ச்சிப்பாதையில் ஏற்றுவாரா ?

செய்வார்..ஏனேனில் “அவர் “நிரூபிக்கப்பட்ட வெற்றியாளர்”

ஏற்கனவே ஆட்டத்தை துவங்கிவிட்டார்...சார்க் நாடுகளின் பிரதமர்கள் வருகை--இலங்கை பாகிஸ்தனிலிருந்து இந்திய மீனவர்கள் அனைவரும் விடுதலை என ----”பவுண்டரிகள்” அடிக்க தொடங்கிவிட்டார்..

நிச்சயம் செய்து காட்டுவார்--அன்னை பாரத மாதாவை உலகின் குரு வாக ஆக்கி காட்டுவார்..நம்புவோம்--காத்திருப்போம்... 

Sunday, May 25, 2014

இலங்கை தமிழர்களுக்கு தீர்வுதான் என்ன?


ஒரு மூத்த பத்திரிக்கையாளர் என்னிடம் கேட்ட கேள்விகளை . உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்..ஏனெனில் நான் ஒரு “கைநாட்டு”--அவ்வளவு ஞானம் இல்லை ..நீங்கள் பதில் சொல்லுங்களேன்..
1.தமிழர்களுக்கு தீர்வுக்காக நாம் இலங்கையுடன் “போர் தொடுக்கலாமா?”--அது முடியுமா?--உலகநாடுகள் பார்த்துக்கொண்டிருக்குமா?--போர் தொடுத்தால் தீர்வு கிடைத்து விடுமா?ஏற்கனவே ராஜீவ் காந்தி அதைத்தானே செய்தார்..
2.தமிழ் நாட்டில் இன்னும் அதிகமாக “ஆர்ப்பாட்டம்--போராட்டம்--கண்டன அறிக்கை”-மனித சங்கிலி --இவைகளை நடத்தினால் ராஜபக்‌ஷே பயந்து “தீர்வு” கொடுத்து விடுவாரா?
3.எதற்கும்--எக்காரணத்திற்கும் --இந்தியாவிற்குள் ராஜபக்‌ஷேவை அழைக்காமல். அனுமதிக்காமல் இருந்தால் தீர்வு உடனடியாக கிடக்குமா?
4.ராஜபக்‌ஷேவிற்கு நெருக்கமாக உள்ள சீனாவையோ--பாகிஸ்தானையோ பார்த்து சமாதான தூது விட்டால் “காரியம்” நிறைவேறுமா?
5.ஐ.நா---மனித உரிமை அமைப்புக்கள்---நவநீதம் பிள்ளை---நார்வே நாடு---இன்னும் சமாதானம் பேசிய பலரை “மேலும் அழுத்தம் “ கொடுத்து மீண்டும் பேசச்சொன்னால் “வேலை ஆகுமா”?
6.இல்லை --டெல்லிக்கு கூப்பிட்டு..”மிரட்டி” அனுப்புதல் சரியா? அப்படி கூப்பிட வேண்டும் என்றால் அவரை இந்தியாவிற்குள் நுழைய விடாமல்--”நடுவானத்தில் வைத்து” பேசலாமா?
மொத்தத்தில் “அழைத்து பேசும் “ராஜதந்திர உக்தியா?”
ஆர்ப்பாட்டம் செய்து நாமும் வீணாய் போய்--தமிழர்களுக்கும் “உதட்டளவு ஆதரவோடு” நிறுத்திக்கொள்வதா?
மோடி இன்னும் “செய்யவே ஆரம்பிக்க வில்லையே?” அதற்குள் கூப்பாடு போடுவது தமிழர்களின் மீது நமக்கு உள்ள அக்கரையை காட்டவா? அல்லது “இரச்சல் மட்டும் போட்டுவிட்டு” உட்கார்ந்துகொள்ளவா?
ராஜபக்‌ஷேவுடன் பேச்சு வார்த்தை ந்டத்தவே முடியாத காங்கிரஸ் அரசைவிட --ராஜபக்‌ஷேவை அழைத்திருப்பதன் மூலம் “மோடி நிச்சயம் “ உருப்படியாக ஏதாவது செய்வார் என்று நான் நினைக்கிறேன் “--என்றார்..
இது சரியா தோழர்களே?

Saturday, May 24, 2014

இது ஒரு செயல் காலம்--மோடியின் திறமைகள் பாயும்..


பாராளுமன்ற மையமண்டபத்தில் பாஜக எம்பிக்கள் மத்தியில் மோடிஜி ஆற்றிய முதல் உரை.....சரித்திர பிரசித்தி பெற்றது..எதிரிகள் நேசிக்கிறார்கள்..துரோகிகள் சிலாகிக்கிறார்கள்..”கட்சிதான் எனது தாய் “ என அவர் கண்கலங்கியது....அப்பப்பா...துவக்கமே தூள்..

பாராளுமன்ற வாயிற்படியில் மோடி தலைவைத்து வணங்கியது...இது உலகை கவர்வதற்காக மோடி செய்ததா?---நேற்றைக்கும் சரி--அதற்கு முந்தைய பலதடவைகளிலும் சரி---மோடியின் பல உரைகளில் “பாராளுமன்றம் நமது கோயில்--அரசமைப்பு சட்டமே நமது கீதை”--என முழங்கி இருக்கிறார்..

அதன் வெளிப்பாடுதான் --உண்மையின் உரைகல்தாந்-மோடிஜியின் பாராளுமன்ற படிகளில் தலைவைத்து வண்ங்கிய காட்சி..

மோடியிம் துவக்க வெற்றியின் 7 படிகள் என் கண்முன்னே நிற்கிறது..

1. பாராளுமன்ற படிகளில் தலைவைத்து வணங்கியது..

2.”அவர்களால் முடிந்த அளவிற்கு செய்தார்கள்” என காங்கிரஸ் ஆட்சியை குற்றஞ்சொல்லாமல் பாராட்டியது..

3. தனது பதவி ஏற்பு விழாவிற்கு சார்க் நாடுகளின் தலைவர்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசியல் சமுதாய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது 

4.ஒவ்வொரு அமைச்சகத்தின் “ரிப்போர்ட் கார்டுகளை “ சமர்ப்பிக்க சொன்னது--

5.இதுவரை இந்திய அரசியலில் இல்லாதவகையில் பிரதமரே ஒவ்வொரு துறையினரிடமும்  நேரடியாக விவாதிக்க இருப்பது..

6.ராணுவ அமைச்சகத்தின் முப்படை தளபதிகளை யும் இதே மாதிரி “ரிப்போர்ட் கார்டுகளோடு “ வரசொல்லி இருப்பது..

7.நாம் எல்லோரும் சேர்ந்து செயல்பட இருக்கிறோம்--இதில் ஒவ்வொரு எம்பிக்களுக்கும் பங்கிருக்கிறது”--என அனவர்களிடத்திலும் “ accountability" யை புகுத்தியது..

ஆக--துவக்கமே தூள்---”நல்ல துவக்கம் பாதி முடித்தமைக்கு சமம்”--என்ற ஆங்கில பழமொழிக்கு அர்த்தம் இப்போது புரிந்திருக்கும்...

போக போக தெரியும்--இந்த பூவின் வாசம் புரியும்----

இது அந்தகால பாட்டு---

இப்போதே புரிகிறது--நல்ல எதிர்காலம் தெரிகிறது--

இது மோடி செயலகளை --பார்த்து.....

Wednesday, May 21, 2014

கோபாலகிருஷ்ணன் காந்திக்கு ஒரு மனம் நிறைந்த பதில்


"தி இந்து" .. அவசரம் அவசரமாக வாங்கி வெளியிட்ட உங்கள் (திரு.கோபாலகிருஷ்ணன் காந்தியின் )----மனம் திறந்த மடல்..படித்தேன்..
தனது ஆங்கிலம் மற்றும் தமிழ் பதிப்புகளில் இக்கடிதத்தை வெளியிட்டு “இந்து” நரேந்திர மோடி மீதிருந்த தனது “துவேஷத்தை” உங்கள் மூலம்வெளிப்படுத்திக்கொண்டது..

பிரதமருக்காக தனது ஆதரவை ஏகோபித்த அளவில் தெரிவித்த கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளுக்கு கொஞ்சம் கூட மதிப்பளிக்காமல்..கொஞ்சம் காலம் கூட பொறுத்திருந்து பார்க்காமல் ”இந்து” தனது வக்கிரத்தை மீண்டும் வெளிக்காட்டியுள்ளது எதிர்பார்த்ததுதான்.

இறுதியாக மோடி வெற்றிவாகை சூடிவிட்டார்..

இந்தியாவிலுள்ள “அறிவு ஜீவிகள்” அத்தனை பேரும் தங்களுக்கு தெரிந்த “பித்தகோரஸ்” தியரத்திலிருந்து, “பித்துபிடித்த” தியரங்கள் வரை, அத்தனையும் கூட்டி கழித்து போட்டு பார்த்து “ மோடி வரமுடியாது..ஜெயிக்க முடியாது....ஜெயித்தாலும் பிரதமராக முடியாது”..’..என்ற வெளியிட்ட அத்தனை கணக்குகளும் பொய்த்து போய்விட்டபடியால், இப்போது “திறந்த மடல்கள் “ எழுத துவங்கியுள்ளனர்..அதன் வெளிப்பாடுதான் கோ.காந்தியின் நரேந்திர மோடிக்கான திறந்த மடலை இந்து வெளியிட்டதின் மர்மம்.

இனி விஷயத்துக்கு வருகிறேன்..

காந்தி குடும்பத்திலிருந்து வந்திருந்த படியாலும், பாட்டன் சம்பாதித்த நற்பெயரை பேரன் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையிலும், கடிதத்தை படிக்க ஆரம்பித்தால், ....கொஞ்சம்நாள் ஆம் ஆத்மிக்கு போய் வந்ததே இவ்வளவு “ஆழ் மனது வக்கிரங்களை” உங்களுக்குள் ஏற்படுத்தி இருப்பது உங்கள் எழுத்தில் வெளிப்படையாக தெரிந்தது.

“இப்போது அடைந்திருக்கும், உச்சபட்ச பதவியில், உங்களை காண விரும்பியவர்களில், ஒருவனல்ல நான்”

“நீங்கள் பிரதமராவது குறித்து கோடிக்கணக்கானோர் பரசவப்படுவது போல, கோடிக்கணக்கானோர் வருத்தமுற்றிருக்க கூடும்”

மோடி பிரதமராவதை விரும்பாத கோஷ்டியை சேர்ந்தவர் நீங்கள் என்பதும், ஒருசில.. வருத்தப்படும் வயதானவர்களில் நீங்களும் ஒருவர்  என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டது..பின் ஏன் இக் கடிதம் எழுத வேண்டும்?
 எதிர்ப்பாளர்களிடமிருந்து “அட்வைஸ்” ஏன் வேண்டும்? நீங்கள்தான் என்ன நன்மைகள் செய்தாலும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையே..

என்னுடைய விமர்சனத்தில் “ஆழ்மனது வக்கிரம்” என்று குறிப்பட்டது மேலே சொன்ன உங்கள் வார்த்தைகளிலிருந்து உண்மை என்பது தெளிவாகிறது அல்லவா?

” 31 சத ஓட்டுக்கள் மட்டும் பெற்ற நீங்கள் எப்படி தேசத்தின் ரக்‌ஷகன் ஆவீர்கள்?..69 சதம் உங்களுக்கு எதிர்ப்புத்தானே ” என்ற உங்கள் வரிகள், 60 ஆண்டுகளாக நாட்டை ஆண்ட காங்கிரசும் 40 சதவீதத்திற்கும் குரைவான ஓட்டுக்களை பெற்றே நாட்டை ஆண்டது –60திலிருந்து 70 சதவீத மக்கள் அதற்கு எதிர்ப்பாக இருந்தார்கள் ----என்பதை நீங்கள் ஏற்க மறுக்கிறிர்கள் என்பது புரிந்தது--.

நாம் “வெஸ்ட் மினிஸ்டர் “ மாடல் பார்லிமெண்டரி ஜனநாயகத்தை பின் பற்றுவது உங்களுக்கு தெரியாததா? அதிக ஓட்டுவாங்கியவரின் ஓட்டு சதத்தை மொத்தஓட்டில் கழித்து, ”எதிர்ப்பு ஓட்டு என்று கருணாநிதி போடும் கணக்கை” போன்ற உங்களின் வாதம் ”தோல்வியை ஒத்துக்கொள்ள மறுக்கும் உங்களின்  மனம் ”என எடுத்துக்கொள்ளலாமா?

“சிறுபான்மையினர் தொடர்பாக அரசமைப்பு சட்டம் கொண்டிருக்கும் லட்சியத்தை உங்கள் நோக்கத்திற்கு ஏற்ற விதத்தில் மாற்றியமைக்கவோ நீர்த்துப்போகவோ செய்யாமல், அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் மோடி அவர்களே”—-----என்ற உங்கள் கோரிக்கை காங்கிரசுக்கும் பொருந்தும் அல்லவா. ? 

தாழ்த்தபட்டோருக்காக மட்டுமே அண்னல் அம்பேத்காரும் உங்கள் தாத்தாவும் பெற்றுத்தந்த சலுகைகளை மதம் மாறிய கிற்ஸ்தவர்களுக்கும் தாரை வார்த்ததை நீங்கள் ஏண் தட்டிக்கேட்க வில்லை என நாங்கள் கேட்கலாமா? 

தாழ்த்தபட்டவருக்காக மோடியை குரல் கொடுக்கச்சொல்ல உங்களுக்கு “தார்மீக உரிமை இல்லை என்பதை நீங்கள் ஏன் நினைத்துப்பார்க்கவில்லை?—ஏனெனில் “அட்வைஸ் செய்வது சுலபம்..வாழ்ந்து காட்டுவது கடினம் “நீங்கள் முதலாம் ரகத்தை சேர்ந்தவர் என்பதை ஒப்புக்கொள்கிறீகளா?

இந்நாட்டின் மையக்கலாச்சாரம் “மதசார்பின்மை”..இதை போதித்தது இந்துதர்மம்..ஆர்.எஸ்.எஸை டி.என்.ஏ யில் உள்ள மோடி முதல் ஆர்.எஸ்.எஸையே தெரியாத அறியாத கோடிக்கணக்கான இந்தியனின் டி.என்.ஏ யிலும் “சர்வா ஜனதோஸ்து சுகினா பவந்துதான்” உள்ளது..இதை நீங்களோ அரசமைப்பு சட்டமோ எங்களுக்கும் கற்றுத்தரவேண்டாம்..

மக்கள் அமைதியாக இருக்கும் போது உங்களின் இந்த உபதேசங்கள் “மைனாரிட்டிகளை உசுப்பிவிடமட்டுமே செய்யும்..வேறு நற்பலன்களை அவர்களுக்கு தராது.என்பதை நீங்கள் ஏன் அறியவில்லை?

சச்சார் கமிட்டி அறிக்கையில் “மைனாரிட்டிகளை காக்கும் மஹானுபாவன்” என குஜராத் அரசையே சுட்டிக்காட்டியுள்ளது..காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை அல்ல..இது தெரிந்தும் நீங்கள் எழுதுவது உங்கள் “நம்பகத்தன்மைக்கு “ ஒரு கேள்விக்குறியாகவே நான் பார்க்கிறேன்.

பிரதமர் தவிர ( நேரு குடும்பத்திற்கு மட்டுமே அது குத்தகை) வேறு பதவிகளில் ஒன்றை கொடுத்து விட்டு “மைனாரிட்டிகளை” ஏமாற்றிவரும் ஜாலம் காங்கிரசுக்கு மட்டுமே தெரியும்.என்பது உங்களுக்கும் தெரியும்

உப்பு தடவிய பிரம்பு உதராணம் மூலம் நீங்கள் ஒரு உண்மையை போட்டு உடைத்திருக்கிறீர்கள்.உங்கள் கடிதத்தின் “ஒரு சார்பு நிலைக்கு “ இதுவே சாட்சியம்..

“தப்பு செய்தால் தலைமை ஆசிரியர் எப்படியெல்லாம் தோலை உரிப்பார்” என்ற வரிகளின் மூலம் “ மைனாரிட்டிகள் தப்பு செய்வார்கள் என்றும், அதற்கு தண்டனை தரக்கூடாது என்றும். மோடியை கட்டுப்பாடான ஒரு தலைமை ஆசிரியராகவும்.,மாணவர்களை ( மைனாரிட்டிகளை )அவர் கண்டிக்க கூடாது எனவும். தெளிவாக சொல்லி மைனாரிட்டிகளை தாஜா செய்யும் போக்கை ஊக்குவிக்க சொல்லியுள்ளீர்கள்.

முசாஃபர் நகர் கலவரம் உ.பி மாநிலத்தில் காங்கிரசின் கூட்டாளி முலயாம் சிங்கின் சமாஜவாடி ஆட்சியில் நடைபெற்றதை மோடியின் கடிதத்தில் குறிப்பிடும் உங்கள் உள் நோக்கம் என்ன? மைனாரிட்டிகள் எங்கு தவறு செய்தாலும்,பாதிக்கபட்டாலும் அதற்கு ஏக போக குத்தகைதராராக மோடியைத்தான் ஆக்குவீற்களோ?

“முஸ்லீம்கள் மட்டுமல்ல இந்தியாவின் மத சிறுபாம்ன்மையினர் அனைவரும், தங்கள் மனதில் ஆழமான வடுக்களை சுமந்து கொண்டிருக்கிறார்கள்”..என்று எழுதியிருக்கிறீர்கள்..

உலகிலுள்ள எந்த நாட்டிலும் இல்லாத சுதந்திரமும் சமத்துவமும், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு உள்ளது என்பது தங்களுக்கு தெரியாததா? பாகிஸ்தானிலும். வங்க தேசத்திலும். இந்துக்களுக்கு எவ்வளவு சுதந்திரம் உள்ளது என்பதை நவாஸ் ஷெரிஃபிடமும் கலிதாஜியாவிடமும் கேட்டு சொல்லுங்கள்..ஏன் இலங்கையில் தமிழ் சிறுபான்மையினருக்கு என்ன உரிமை சலுகை என உங்கள் நண்பர் ராஜபக்‌ஷேவிடம் கேட்டு சொல்லுங்கள்..

முஸ்லீம் நாடுகளில் கூட அவர்களுக்கு கிடைக்காத சலுகைகள் இந்தியாவில் அவர்களுக்கு கிடைக்கிறது என்பதை நீங்கள் ஏற்க மறுப்பது ஏன்?
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் “மைனாரிட்டிகளை உசுப்பிவிட்டு தேசிய நீரோட்டத்துடன் அவர்களை சேரவிடாமல் செய்யும்  பேச்சுக்களை தொடரப்போகிறீர்கள்?

கடந்த 12 ஆண்டுகாலமாக “உங்களை போன்ற எல்லோரும் ஓரணியில் திரண்டு” நரேந்திர மோடி மீது அபாண்ட தாக்குதல்களை நடத்தியதற்கு. இந்திய மக்கள் ஓட்டுச்சீட்டின் மூலம் அவருக்கு “நியாய தீர்ப்பு” வழங்கிய பின்னரும் ஏன் உங்கள் புலம்பல்கள் குறையவில்லை? புத்தி தெளிய வில்லை?

மோடியின் டி.என்.ஏயில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதால்தான் அவர் 125 கோடி மக்களும் ஒன்று என்று சிந்திக்கிறார்.. காங்கிரசை போல் ”தேர்தல் மதசார்பின்மை” மட்டுமே இருந்திருந்தால் உங்களை போல் மைனாரிட்டிகளை பிரித்துப்பேசி. “கடிதம் எழுதிக்கொண்டிருப்பார்”

இனியாவது மைனார்ட்டி—மெஜாரிட்டி என பிரித்துப்பேசி, “உசிப்பிவிடுவதை” தவிருங்கள்..125 கோடி மக்களும் ஒன்று என்ற “சித்தாந்தத்தை” துவக்குங்கள்..பிரித்தாளும் நரிகளை துரத்துங்கள்..

மோடியின் ஆட்சியில் எல்லோரும் நலமாக இருக்கப்போகிறார்கள்..நீங்கள் உட்பட….அதை ஜாதி..மொழி…மதம் வாரியாக பார்க்காமல்…”ஒன்றாக “ பாருங்கள்..

இனி உங்களுக்கு ஓய்வெடுக்கும் காலம் .--.கடிதம் எழுதுவதை நிறுத்துங்கள்..

நன்றி..ஜெய்ஹிந்த்..வந்தேமாதரம்..பாரத் மாதாகீ ஜெய்