Pages

Saturday, May 31, 2014

அமெரிக்கா..ஓ..அமெரிக்கா (1 )

”இதயம் பேசுகிறது” மணியன் முதல்--”வாஷிங்டனில் திருமணம் “ சாவி முதல் எத்தனையோ எழுத்தாளர்கள் அமெரிக்காவை “ பிரித்து மேய்ந்து “ இருக்கிறார்கள்..

என்னுடைய எழுத்து வடிவம் (கட்டுரை அல்ல) அப்படி இருக்காது என நினைக்கிறேன்.

என்னுடைய சிந்தனையே வித்தியாசமானது,,( அதை நாங்கள் சொல்லவேண்டும் நீ அல்ல _-என நீங்கள் சொல்வது என் காதில் கேட்கிறது)

நான் “இந்தியா--அமெரிக்காவை”--”ஒப்பு நோக்கப்போவதில்லை--”நோ கம்பாரிசன்”--அமெரிக்காவை பார்த்து அதிசயிக்கவில்லை..அதனால் வாய்பிளக்கவில்லை..

என்ன சொன்னாலும் இது ஒரு மாறுபட்ட உலகம்தான்..நமக்கு புதுமையான உலகம்..என் கண்ணில் பட்ட அமெரிக்காவை “எனது பார்வையில்” எழுதுகிறேன்..

ஹூஸ்டன் ஜார்ஜ்புஷ் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் இறங்கியபோது அந்நாட்டின் நேரம் மாலை 4.30..வெளியில் வந்தபோது இரவு 7.00..ஆனால் சூரியன் மறையவில்லை.வெய்யில் காலமாம்..சூரியன் இவர்கள் இஷ்ட்டத்திற்கு மறையாதாம்..இரவு 8.00 வரை அதற்கு “டைமாம்”..

இந்த பதிவில் “போக்குவரத்து “ பற்றி மட்டுமே எழுதப்போகிறேன்.

நானே ஒரு மிக “நல்ல--திறமையான---சிறப்பான--அனுபமுள்ள--டிரைவர் என்பதால்.( பாராட்டுவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள் என்பதால் நானே என்னை பாராட்டிக்கொள்கிறேன்)..அந்த பார்வையில் இதை எழுதுகிறேன்..

சாலைகள் மிக அகலமானவை..பாலங்களும் அகலமானவை--பெரிதானவை..( இதன் ஒரு 60 சத வடிவத்தையே தற்போது நாம் இந்தியாவில் பார்க்கிறோம்..வாஜ்பாய் என்னும் மாமனிதர் மட்டும்
 இல்லாமல் இருந்திருந்தால்..இவ்வடிவத்தைக் கூட நாம் பார்க்க இன்னும் பல ஆண்டுகாலம் பிடித்திருக்கும்..)  

வாகனங்களின் கட்டுப்பாடு பிரமிப்பு ஊட்டுகிறது..”ஹாரன் “ என்பதே இங்கு இல்லை..யாரவது “ஹாரன் அடித்தால் “ அது மிகப்பெரிய “ அவசரமாம்”--நானிருந்த 4 வாரமும் ஒருதடவை கூட “ஹாரன்” சத்தம் கேட்டதில்லை..

அதுபோல இரவு வண்டி ஒட்டுவதும் ஒருசுகமான பாதுகாப்பான  அனுபவம்..எதிரே வரும் வாகனங்களின் மீது குறிப்பாக வானக ஓட்டிகளின் “கண் கூசுகின்ற “ அளவு “ஹெட் லைட்டை” அமைக்கும் நம்மூர்காரர்கள் முன்  அமெரிக்கர்கள்--ஜுஜ்ஜு பீ “ தான் 15 அடிக்குமேல் வாகன விளக்குகள் தெரியாது ஓட்டுபவர்கள் கண்ணில் அடிக்காது..ஓட்டும் சிரமமும் இருக்காது..இரவு பகல் எதுவாயினும் “நோ ஹார்ன்”தான்.. 

ஒவ்வொரு சந்திப்புக்களிலும் வேகத்தை குறைத்தோ அல்லது நிறுத்தியோதான் வாகனங்கள் செல்லுகிறன..அனைத்து கார்களிலும் “ஆட்டொ மேட்டிக் “ கியர்தான்..வேகம் சீறிப்பாய்கிறது..ஆனாலும் வேகக்கட்டுப்பாடுகளை மீறுவதில்லை..மீறினால்..”தூணிலும் இருப்பார்--துரும்பிலும் இருப்பார்” என்று நாம் சொல்லும் நரசிம்மர் போல அந்த ஊர் போலீஸ் திடீரென தோன்றும் ..

கார்கள் ”குட்டி ”--முதல் “பிசாசு” சைசிலும் உள்ளது பெரும்பாலும் “பெரும் சைஸ்” கார்களையே அதிகம் அமெரிக்கர்கள் விரும்புகிறார்கள்..

“பைக்குகளை” பார்ப்பது அரிதே..அதுவும் மிக ஆடம்பரமாக உள்ளது..நம்மூர் “ராயல் என்ஃபீல்டை” விட..2.. 3..சைஸ் பெரிதாக உள்ளது..சகலவித சவுகரியங்களுடன் ”ட்டூ..ட்டூ..ட்டூ”..சத்தத்துடன்..செல்கிறது மதுரைக்கார மைனர்கள் மிகப்பெரிய சத்ததுடன் பாட்டு போட்டு ஓட்டும் ஆட்டோக்கள் போல ”பாட்டுக்களும்” அமர்க்களமாக உள்ளது..

காரைவிட பைக்க் ஓட்ட லைசன்ஸ் வாங்குவது சிரமமாம்..நம்மூர் போல “ ஏ பேமானி..வீடல சொல்லிட்டு வந்துட்டயா?” என கேட்காமல் பைக் காரகளுக்கு மிகுந்த மரியாதையை-- கார்காரர்கள் கொடுக்கிறார்கள்..

ஒரே வீட்டில் 3..4..கார்கள் உண்டு..கார் ஷெட் போக நம்மூர் போல ரோட்டிலும் கார்கள் தாராளமாக நிறுத்துகிறார்கள்..அதுவும் வார விடுமுறை நாட்களில்”விருந்தாளிகள் வருகையால்” தெருமுழுதும் கார்கள் பார்க் செய்திருப்பதை பார்க்கலாம்.....

எல்லா கார்ஷெட் கதவுகளும் “ஆட்டோமேட்டிக்” ரிமோட் கண்ரோலில் இயங்குவதால் நம்மூர் போல வாசலில் வந்து “ஹார்ன்” அடித்து அடுத்தவீட்டுகாரன் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ளவோ--மனைவிமார்கள் வெளியே வந்து கதவை மூடும்/திறக்கும்  அவசியமோ இல்லை....காரை ஓட்டுபர்களே கதவை திரந்து மூடிக்கொள்ளலாம்..

வாகனங்களிலுருந்து “புகை கசிவதை” பார்க்கவே முடியாது..கார்கள் எல்லாம் பெட்ரோலில் இயங்குவதே..டீசல் கார்களை பார்க்க முடியாது..இங்கு பெட்ரோலை விட டீசல் விலை அதிகம்..வெளியில் “தூசி” என்பதே இல்லாததால் காரை மாதம் ஒருமுறைதான் கழுவுகிறார்கள்..

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள நான் பார்த்த 6 வித்தியாசங்களில் முதல் மூன்று வித்தியாசங்கள்
1..கண்கூசும் வாகன வெளிச்சம்
2.வானப் புகை--தூசி
3.வாகன சப்தம்..
இவை இல்லை....இவை இல்லாத இந்தியாவை உருவாக்க முடியுமா?

இதுதான் என்னுடைய கனவு திட்டமாக இருந்தது..நான் மந்திரியானால் இவைகளை அமுல் படுத்த காத்திருந்தேன்..ம்ம்ம்ம்ஹூம்...எம்பி சீட் கிடைக்கவில்லையே?...

அதனால் என்ன..என் நண்பர் திரு..நிதின் கட்கரிஜி அவர்களிடம் என் திட்ட ஃபைலை கொடுத்து விடுகிறேன்..என்ன சரிதானே..

தொடரும்------

No comments: