Pages

Monday, August 27, 2012

மந்திரிகள் சோதனையும்-- ஒருநாள் கூத்தும்

நாமக்கல் அருகே போக்குவரத்து மந்திரியும்--- கணக்கு காட்ட துணைக்கு இன்னொரு மந்திரியும்.. சேர்ந்து வாகன சோதனை செய்திருக்கிறார்கள்..இதில் என்ன புதுமை?

ரேஷன் கடையில் சோதனை…பாலம் வேலை சோதனை…பால் பூத்தில் சோதனை…இப்படி அமைச்சர்கள் சோதனையும் அடுத்தநாள் பத்திரிக்கையில் “போஸோடு..செய்தியும்..” சகஜம் தானே?

இதில் புதுமை இல்லைதான்…ஆனால் இது தினசரி செய்யவேண்டிய விஷயம்—மந்திரிகளால் அல்ல..அதிகாரிகளால்..கணக்கு காட்டுவதற்காகவோ..காசு வாங்குவதற்காகவோ அல்ல…சட்டமும் –ஒழுங்கும்—விதிகளும் காப்பாற்றப்பட..காக்க..

ஆனால் நடந்தது என்ன?—அம்மாவுக்கு கணக்கு காட்ட…இதயத்தில் இடம்பெற…மந்திரி பதவியை தக்க வைக்க…வாக்களர்களுக்கு “படம் “ காண்பிக்க இப்படி ஒரு ”நாடகம்”…

இதில் வேடிக்கை என்னவென்றால்…1300 வண்டிகள் பிடிபட்டன…400 வாகனங்களில் (33 சதம் ) ஆவணங்கள் சரியில்லை…அப்படியானால் ஒரு சாம்பிள் சர்வேயாக இதை வைத்துக்கொண்டால்…தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களில்…30 சதவீதத்துக்கும் அதிகமானவை---சட்டத்திற்கு புறம்பானவை—அல்லது ஆவணங்கள் சரியின்றி ஓடுகிறது என வைத்துக்கொள்ளலாமா?

நாடின் சாலை விபத்துக்களில் முதலிடம் வகிக்கும் தமிழகத்தில்---விபத்துக்கு காரணம் இப்போது புரிகிறதா?...இந்த ஆவணங்களை சரிபார்க்கும் வேலையை மந்திரி வந்துதான் செய்யவேண்டுமென்றால்..நிர்வாகம் என்ன செய்துகொண்டிருக்கிறது..?
காமராசர்—பக்தவக்சலம்---அண்ணாதுரை—காலத்தில் மந்திரியோ—எம்.எல்.ஏயோ—கலக்டரோ…இப்படி ”இறங்கி”—சோதனை செய்ததாக செய்தி இல்லையே (”தேவை ஏற்பட்டாலே தவிர”---என சில விதிவிலக்குகள் தவிர )…

நான் சென்னை துறைமுக பொறுப்புகழகத்தில் டிரஸ்டியாக இருந்தபோது..டிரஸ்டின்..ஆஸ்பத்திரி—கிச்சனை சோதையிட்டோம்…மறுநாள் பணியாளர்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்தது…ஆனால் நிர்வாகம் “இது டிரஸ்டிகளின் வேலையல்ல” என்றது..உண்மைதான்….நல்ல திறமையான நிர்வாகிக்கு..”கீழே இரங்கி”—சோதனை செய்யவேண்டிய அவசியம் எழாது..

அதிமுக ஆட்சியில் அம்மாவைத் தவிர..அனைவரும் “0” சைபர்…என அவர்களே ஒத்துக்கொள்ளும் போது..இப்படி ”இறங்கி வந்து “சோதனை செய்துதானே ஆகவேண்டும்..Saturday, August 25, 2012

ஈமு ஒரு கூட்டிலே… கோழி ஒரு கூட்டிலே— ஏமாந்தவர் நடு ரோட்டிலே..எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்..பாத்தீங்களா?—ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
ஈமூன்னு ஒரு நெருப்புக்கோழி…ஆஸ்திரேலியா நியுஜிலந்து பூர்வீகம்..நம் நாட்டுக்கு---தமிழ் நாட்டுக்கு---ஈரோட்டுக்கு---பெருந்துறைக்கு---அந்நியம்—ஆனாலும் ஒருத்தன் கொண்டுவந்தான்..

இரண்டு மூன்று வருடம்..ஒண்ணும் போனியாகல்ல..விவசாயம் படுத்துச்சு..விவசாயிகளுக்கு ஆசைகாட்டி “விளம்பரங்கள்” கொடுத்தான்.
“சுசி..ஈமு ஃபார்ம்” குருன்னு அவன் பேரு..ஏழோ..எட்டோ..லட்சம் கட்டணுமாம்..தெரியல்ல..

கொஞ்சம் ஈமு கோழி கொடுப்பானாம்..தீவனமும் கொடுப்பானாம்..( அதுக்கு காசு நாமதான் கொடுக்கணும்.).மாதாமாதம் கோழி வளர்க்க காசும் கொடுப்பானாம்..கோழி—முட்டை..அவனே வில கொடுத்து திரும்ப எடுத்துக்குவானாம் இதில் வெளிநாட்டு ஏற்றுமதி ஆசை வேறு..…6..7..வர்ஷத்துல கட்டின முழு பணத்தையும் திரும்ப கொடுத்துடுவானாம்..ஆசை பிச்சுக்கிட்டு போச்சு..ஈமு கோழிப்பண்னை குருவுடைய லாபமும் பிச்சு கிட்டு போச்சு..

சுசி ஈமு ஃபார்ம்ல கோழிக்கு சாணி அள்ளினவன் எல்லாம் புதுப் புது பண்ண ஆரம்பிச்சு.கோடிஸ்வரன் ஆனான்..இதில ஸ்பெஷல் என்ன என்றால் இந்த கோழியோ..கறியோ..முட்டையோ..இதுவரை வெளியில் வியாபாரத்துக்கு வந்ததே இல்லை..

இந்த குருதான்…முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேரை அனுமதியில்லாமல் விளம்பரத்துக்கு பயன் படுத்தி..ஒரு கேஸ் வாங்கிக்கொண்டான்..அதற்கு பிறகு பல வழக்குகள் அவன் மீது என்பது வேறு விஷயம்.
டெல்லியில் “கூடங்குளம் அணுகுண்டு மந்திரி”..நாரயணசாமியை வைத்து  ஈமு கோழிக் கறிக்கடை ஒன்று திறந்து..ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு ஒரே நாளில் அதை மூடிய பம்மாத்து பேர்வழி இந்த குரு.

உடனடி பணம் கிடைக்க…இதை பார்த்து ஆசையோ ஆசை பெருகி பலர் ஆரம்பிக்க –ஆரம்பித்த அனைவரும் கண்முன்னே கோடிகோடியாய் சம்பாதிக்க..யாருமே சாப்பிடாத கோழி…வாங்காத முட்டை---ஈமு கோழி தமிழ்நாடு முழுதும் தத்தித் தத்தி பறந்தது.

நமது தட்ப வெட்ப நிலை,..சுற்றுசூழலுக்கு…சிறுதும் ஈடு கொடுக்க முடியாத ஒரு பறவை இனத்தை வைத்து, --மக்களின் அறியாமை..பணத்தாசை..உடனடி காசு…இவைகளை மூலதனமாக்கிய..ஈமு கோழிப்பண்ணை காரர்கள்..இன்று போலீஸ்காரர்கள் பின்னாடி அலைகிறார்கள்..---முதலீடு செய்த பெருமக்கள்..போலீஸ் ஸ்டேஷன் முன்னாடி..கிடக்கிறார்கள்.

ஈமு கோழியின் வியாபார வெற்றித் தந்திரத்தை அறிந்து கொண்ட பல கிரிமினல்கள்,,நாட்டுக்கோழி பண்ணைக்கும் விளம்பரம் கொடுத்து வலை வீசினார்கள்..மீண்டும் நம்மக்கள் அவர்கள் வீசிய வலையில் தாங்களாகவே சென்று மாட்டிக்கொண்டார்கள்.
நூறு கோழிக்குஞ்சுகளை கொடுத்து விட்டு ஒரு லட்சம் ரூபாயை லபக்கி..ஒருமாதத்தில் பறந்து விட்டனர்..

கிரிமினல் வியாபாரிகளின் வலை எல்லை விரிந்தது..ஆயிரம் தேங்காயை கொடுத்து உரிக்கச்சொன்னார்கள்..கொப்பரை எம்.எல்.எம்..நடத்தினார்கள்.அந்த எண்ணெய்.கொப்பரையிலும் மக்கள் விழுந்தார்கள்..
ஏமாந்த நம் மக்கள் அவர்கள் கொடுத்த முதலீட்டு பத்திரத்தை “பத்திரிக்கைகள் முன் காட்டி தன் ஏமாந்த கதையை சொல்லி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

ஒரு ஊரில் ஏமாற்றி விட்டு அடுத்த ஊருக்கு இவர்கள் போனாலும் அங்கும் மக்கள் தெரிந்தே ஏமாறுகிறார்களே ஏன்?
தாசில்தாரும்..காவல்துறையும்..கலக்டரும் (தாமதமாக இருந்தாலும்) எச்சரித்தும் கூட..மீண்டும் புதிய கம்பெனிகளில் முதலீடு செய்து மீண்டும் ஏன் ஏமாறுகிறார்கள்?

இனியும் நாம் இப்படி ஏமந்து கொண்டிருந்தால்..இவர்கள்..சிட்டுக்குருவி வளர்ப்பு..எம்.எல்.எம்..—பன்னிக்குட்டி பெருக்கு எம்.எல்.எம்---சாணி.ராட்டி தட்டும் எம்.எல்.எம்..என்ற முகமூடியில் மீண்டும் வரலாம்..

ஆசையை புத்தர் அரவே ஒழிக்க சொன்னார்..
அரவே ஒழிக்காவிட்டாலும் கொஞ்சமாவது ஒழித்திருந்தாலாவது…
இந்த இழவு கம்பனிகளுக்கு நாம் இரையாகி இருக்கமாட்டோமே.

Friday, August 24, 2012

சிட்டுக்குருவி கொண்டைக்காரி…ஸ்ரீரங்கத்து அதிர்ஷ்டக்காரி

நேற்று புதன்கிழமை 22.8.12…காலை 6 மணி தொடங்கி வியாழன் காலை முடிந்த 24 மணிநேரத்தில் 131/2 மணிநேரம் “பவர்கட்”இது கோவையில்..நகரத்தில்..அதுவே ½ மணிநேர முன்ன-பின்ன வித்தியாசத்தில் இன்றும் தொடர்கிறது..
ஒரு சத்தம் இல்லை..ஒரு மூச் இல்லை..ஒரு லெட்டர் டூ எடிட்டர் இல்லை.

எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த்தை விட்டு விடுவோம்.பாவம் அரசியலுக்கு புதிது..எழுதிக்கொடுத்தாலும்…பேசத்தெரியாது..
எடுத்ததெற்கெல்லாம் அறிக்கை விடும் “கேள்வி—பதில் அறிக்கை திலகம்”-தலைவர் கலைஞர் கூட அறிக்கை விடவில்லை..வாய் திறக்கவில்லை..”அம்மாவின் அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா?

அம்மா ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் நிறைய பணபுழக்கம் இருக்குமாம்..(யாருக்கு என்பது கேள்வி)..கலைஞர் வந்துவிட்டால் அது குறைந்து விடுமாம்..இப்படி ஒரு பேச்சு இன்னும் “ஜெ” க்கு சாதகமாக உலவிக்கொண்டுதான் இருக்கிறது.

“மின்வெட்டை “ வைத்துத்தான் கருணாநிதி ஆட்சியையே “வெட்டி விட்டோம்” ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் மின் வெட்டை சரிசெய்வேன் என்றார் “ஜெ”.. 1..1/2 வருடம் முடியப்போகிறது.. என்ன நடந்திருக்கிறது..பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்..

“டாஸ்மாக்” கெடுத்தது போக மீதியுள்ள தொழிலை “மின்வெட்டு” கெடுத்து வருகிறது..ஏதோ ஒரு 30—40—நாள் “வாயுபகவான்” கருணையால்..காற்றாலை மின்சாரம் கைகொடுத்தது..இன்று அதுவும் படுத்துக்கொண்டது..

மீண்டும் “கொஞ்சம்கூட முன்னேற்றம் இல்லாத இந்த மின்வெட்டுக்கு” என்னென்ன காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1.கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் திடீர்க்கோளாறு.—மின் உற்பத்தி தடை
2.மேட்டுர் அனல் மின்நிலையத்தில் பழுது..மின் உற்பத்தி பாதிப்பு..
3.நெய்வேலி மின்னுற்பத்தி சுரங்கம் எண் 1 இல் கோளாறு..சரிசெய்ய ஒருமாதம் ஆகும்..
4.எண்ணூர் அனல் மின்நிலயம் பராமரிப்புக்காக ஒருமாதம் விடுமுறை—நோ கரண்ட்
5.மத்திய தொகுப்பில் இருந்து கேட்ட மிசாரம் கிடைக்கவில்லை..காங்கிரஸ் அரசு கைவிரிப்பு..
6.அதோ வருது –இதோ வருது என்ற கூடங்குளம் மின்சாரம் உற்பத்தி தொடங்க இன்னும் ஒருமாதம் ஆகும்..

அதுசரி..இவையெல்லாம் கருணாநிதி ஆட்சியின் போதும் நடந்த விஷயங்கள் தானே? அப்போது பக்கம் பக்கமாய் கருணாநிதியை திட்டி தீர்த்த பத்திரிக்கைகளும்..ஆயிரக்கணக்கில் ஆட்களை சேர்த்து ஊர்வலம் நடத்திய தொழில் அமைப்புக்களும்..கண்டனம் தெரிவித்த கம்யூனிஸ்டுகளும்..இன்று எங்கே இருக்கிறரார்கள்..
இவ்வளவு பேரையும் வாய்மூடசெய்தது..அம்மாவின் அதிர்ஷ்டம் தானே?

ஈமு கோழி ஊழல்..தீவனமின்றி கோழிகள் சாகுது..முதலீட்டாளர்கள் முற்றுகை..கருணாநிதி தும்மினாலேயே..பக்கம் பக்க்மாக எழுதும் பத்திரிக்கைகள்.. அம்மாவை பற்றியும் ஆட்சியை பற்றியும் ஒருவர்கூட வாய் திறக்கவில்லையே..இதுவல்லவோ அம்மாவின் அதிர்ஷ்டம்..

மதுரை கிரானைட் ஊழல் 16,000/- கோடி..எல்லா கட்சிக்கும் பங்கு..பாஜக தவிர..அம்மா பதட்டபடவே இல்லையே..பத்திரிக்கைகள்..அம்மாவையோ ஆட்சியையோ..பற்றி வாய் திறக்கவில்லையே..மாறாக இதை கண்டு பிடித்தது அவர்தானாம்.. இதற்கு பெயர்தான் அம்மாவின் அதிர்ஷ்டமோ
..
தினசரி “மணல் கொள்ளை—மணல் கொள்ளைன்னு..பக்க பக்கமாக செய்தி..மணலை ஆளும் கட்சி காரன் தான் கொள்ளை அடிக்கி..றான்.இது அம்மாவுக்கு தெரியாமல் நடக்குமா?.அம்மாவை சம்பந்தப் படுத்தி ஒரு பேச்சில்லையே..இது அதிர்ஷ்டமா?—ஆச்சரியமா?

உலகத்திலேயே ஒரு “சேவையும் “ செய்யாமல் கட்டணத்தை உயர்த்திய கம்பெனி ஒன்று இருக்குமானால் அது தமிழ்நாடு மின்சார வாரியம்தான்..கட்டண உயர்வை பொதுமக்கள் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டார்களே…இந்த லட்சணத்தில் டிரான்ஸ்பருக்கு ஏஈ..பிஈ..சிஈ..என 25 லட்சத்திலிருந்து 1 கோடிவரை லஞ்சம் தலை விரித்தடுகிறதே..இது அம்மாவின் ஆசியில்லாமலா? காசு போச்சே என வயிற்றிலடித்துக்கொள்ளும் கலைஞரைத்தவிர மற்ற கட்சியினர் வாய் திறக்கவில்லையே..இதற்கு பெயர் வேரென்ன..அதிர்ஷ்டம்தானே,,

பஸ் டிக்கட் விலை உயர்த்தினார்கள்....இன்னும் அதே ஓட்ட ஒடசல் பஸ்தான்..இன்னும் அதிக ஆக்சிடண்ட் தான்..ஒரு மூச் இல்ல பேச்சு இல்ல அம்மா அதிர்ஷ்ட்டக்காரிதானே..

நிலக்கரி ஒதுக்கீடு ஊழலில் நாடே கொந்தளித்து நிற்கிறது…2ஜி ஊழலில் நாடே நாறிப்போனது…மின்வெட்டுக்கும்…கிரானைட்டுக்கும்…மணல் கடத்தலுக்கும் தமிழ்நாட்டில் சத்தமே இல்லையே…இது அம்மா பவரா..அதிர்ஷ்டமா?

பிஜெபில கூட சென்னை வரும் போது எல்லா தலைவரும் அம்மாவை சந்திக்கிறார்கள்.ஆட்சி பற்றி எந்த பேட்டியும் கொடுப்பதில்லையே..புள்ளிவிபரங்களை அள்ளிவீசி பேசும் புத்திசாலிகளின் புகலிடம் பாஜக கூட அம்மாவை குத்திக்காட்டாதது..அம்மாவின் ராஜதந்திரத்தின் வெற்றி என்பதா?..அல்லது அதிர்ஷ்டக்கார அம்மா என்பதா?

Tuesday, August 7, 2012

அத்வானியின் கருத்தை மீடியா ஏன் மாற்றிச்சொன்னது?

வரலாறு காணாத தோல்வியை காங்கிரஸ் சந்திக்கும்---
மூணாவது அணி கானல்நீர்----என்ற----
அத்வானியின் கருத்தை மீடியா ஏன் மாற்றிச்சொன்னது?


”நடிகை ஹேமமாலினி வீட்டில் வாஜ்பாய்”—என பிலிட்ஸ் ஆசிரியர் கரஞ்சியா 1970 களில் எழுதியது எனக்கு நினைவுக்கு வருகிறது…ஆனால்..நடந்தது என்ன?

ஹேமமாலினி பங்கேற்ற நாட்டிய நாடக நிகழ்ச்சியில் வாஜ்பாயும் பங்கேற்றார்..இது எப்படி திரித்து கூறப்பட்டது..அந்த எழுத்து எப்படி உள்நோக்கமானது..

அதுவே இப்போதும் நடந்தேறியுள்ளது..ஆனால்..வேறு வடிவில்..அத்வானிக்கு..

இதுவரை மோடியை துரத்திய “மீடியா” இப்போது பாஜகவை அத்வானிமூலம் துரத்த முயல்கிறது.
அவர் எழுதிய கருத்தை பாதி பாதியாக…. முன்னுக்குப் பின் முரணக..போட்டிருப்பதும்.. அதுவும் நாடு முழுதும் பாஜகவை தூற்றும் ஆங்கில பத்திரிக்கைகள் ஒரே தலைப்பிட்டு போட்டிருப்பதும் –தோல்வி ஜுரத்தில் உள்ள காங்கிரஸின் சகுனி வேலை..

பேசினால்.. இல்லை என்று சொல்லலாம்..மறுக்கலாம்..தவறாக எழுதிவிட்டார்கள்..எனலாம்..அத்வானி தனது “பிளாகில்” எழுதியது…ஆதாரம்..அதை திரித்து போடும் “மீடியாக்களின் “செயல்.. தடுக்கமுடியாத பாஜக வெற்றி வாய்ப்பினால் ஏற்பட்ட பயம்..

நேற்றைய மீடியாக்களின் செய்தியில் மாபெரும் சூது உள்ளது என்பதற்கு ஆதாரம்…
நாடுமுழுதும் ஒரே தலைப்பிட்ட செய்தி—அதற்கு..உடனே காங்கிரஸிடமிருந்து பதில்..

எதை தின்றால் பித்தம் தெளியும் என்றிருந்த காங்கிரஸின் காட்டில் சிறிது தூரல்..அத்வானியின் “பிளாகிற்க்குள்” சென்று படித்து பார்த்தால்..அத்தனை உண்மையும் வெளிப்படும் ..காங்கிரஸ் மீண்டும் வரண்டு போகும்.

பிரதீபா பட்டீலின் பிரிவுபசார விழாவில் இரண்டு காங்கிரஸ் மூத்த மந்திரிகள் அத்வானியிடம் உளறிக்கொட்டியதை பேர் சொல்லாமல் எழுதுகிறார்.

**2014 தேர்தலில் காங்கிரசோ—பாஜகவோ “தனி மெஜரிட்டி பெரும் கூட்டணிகளை “ அமைக்க முடியாது.
** 2013—அல்லது 14 இல் எப்போது லோக்சபா தேர்தல் வந்தாலும்..அமையும் அரசு மூன்றாவது அணி அமைக்கும் அரசு மாதிரிதான் இருக்கும்..

இவை காங்கிரஸ் மந்திரிகள் உதிர்த்த பொன்மொழி..இதில் காங்கிரஸ் தோற்க்கும் என்பதைஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு அத்வானியின் பதில்---
”உங்கள் கவலை எனக்கு புரிகிறது..ஆனால் உங்கள் கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை –( அதாவது பாஜகவும் தோற்கும் என்பதில் )

சரி தன் கருத்தாக அத்வானி என்ன சொன்னார்…அவரே எழுதுகிறர்.
“**கடந்த 25 ஆண்டுகளாக டெல்லியில் அமையும் அரசுகள் காங்கிரசோ—பாஜகவோ ஆதரவின்றி அமையவில்லை.
** எனவே மூன்றாவது அணி (மாதிரி) என்ற பேச்சுக்கே இடமில்லை.
இது காங்..மூத்த மந்திரிகளின் கருத்துக்கு பதிலாக அத்வானி எழுதியுள்ளார்..
மூனாவது அணி பெரும் தோல்வியே என அதன் பிரதமர்கள் பெயரை குறிப்பிட்டு பின்னால் இரண்டு பாராக்களில் விளக்கியுள்ளார்.

 ” **மத்தியில் பாஜகவோ—காங்கிரசோதான் நிலையான ஆட்சியை தரமுடியும்.
** ஆனால் ஐ.மு.கூ1..ஐ.மு.கூ2 அரசின் மிகக்கேவலமான நிர்வாகம் காரணமாக காங்கிரஸ்.. தோல்வி பயத்தில் பரிதவிப்பதை என்னால் உணர முடிகிறது..”
””**எமர்ஜென்சி காலத்திற்கு பிறகு 1977 தேர்தலில் காங்கிரஸ் மிகபெரிய தோல்வியை சந்த்தித்தது..வருகின்ற லோக்சபா தேர்தலிலும்-- 1952 க்கு பிறகு வரலாறு காணாத தோல்வியை காங்கிரஸ் சந்திக்கும்..”—என எழுதியுள்ளார்..

இதில் பாஜக தோல்வி எங்கே வந்தது..3வது அணி ஆட்சி எங்கே வந்தது..?
திரித்துக்கூற எல்லை வேண்டாமா..மீடியா தம்பிகளா?

கேக்குறவன் கேனையனா இருந்தா நண்டுகூட “நானோ கார்” ஓட்டுமாம்..
அடப்போங்கப்பா..வேற வேலைய பாருங்க…

Saturday, August 4, 2012

அண்ணா ஹசாரேயும் --சாமியார் பூனை வளர்த்த கதையும்

ஆசிரமத்திலிருந்த எலிகளை விரட்ட சாமியார் பூனை ஒன்றை வளர்த்தார்.
பூனைக்கு பால் கொடுக்க பசு ஒன்றையும், அதன் பாலை கறக்க, பராமரிக்க, மேய்க்க, என சிலரையும், --இவர்களுக்கு சோறு போட ஒரு சமையல்காரியையும் சேர்த்தார்.
சமையல் கட்டிற்குள்ளிருந்த சமையல்காரி --சரோஜா --சந்நிதானத்திற்குள் வந்தாள்…சந்ததிகளை தந்தாள்..இது கதை..

அண்ணா ஹசாரே ஊழலை ஒழிக்க புறப்பட்டார்..சரி—16 நாள் உண்ணாவிரதம் இருந்தார்..சரி—ஜனலோக்பல் வேண்டுமென முரண்டு பிடித்தார்..சரி—ப.சிதம்பரம்—கபில் சிபல் உள்ளிட்ட மந்திரிமார் வீட்டுமுன் ஆர்பாட்டம் செய்யத் தூண்டினார்…சரி—
எதுவும் தேறாததால் மீண்டும் ஒரு உண்ணா விரதத்தை துவக்கினார்..இங்குதான் சமையல்காரி சரோஜா உள்ளே புகுந்தாள்...கூட்டம் வராததால், கெஜ்ரிவாலும் பிரஷாந்த் புஷனும், ஓதி அடித்த வேப்பிலையால், சம்சார சாகரத்தில் ,அரசியல் கடலில், குதித்தார்.
.
இதுவும் சரிதான்..—இதுவரை-1339 கட்சிகள்..1340 ஆக இவர்களையும் வரவேற்கிறோம்..கட்சி ஆரம்பிக்க காரணம் சொன்னார்களே..அப்பப்பா..அதுதான் இவர்களின் அகத்தை தோலுரித்து காட்டியது..

ஒரு மாற்று அரசியலாம்..யாருக்கு மாற்று..--காங்கிரசுக்கு என்றால் பாஜக இருக்கிறதே..அப்புறம் எதுக்கு மாற்று?

எது மாற்று அரசியல்?—மதசார்பற்ரவர்கள் அணிதிரளும் ஊழல் எதிர்ப்பு என்கிறாரே…அதுவா?
ஊழலுக்கு ஏதையா மதம்?—அது என்ன பச்சை சட்டை போட்டு வருகிறதா?—மஞ்சள் சட்டை?--போட்டு வருகிறதா?—அல்லது கலர் கலராக சட்டை போட்டு வருகிறதா?—அது பெரும்பாலும் வெள்ளை சட்டை..கதர் குல்லா அல்லவா போட்டு வருகிரது..

என்ன தெளிவு என்ன தொலை நோக்கு?—ஊழலை ஒழிக்க யாரிடம் போய் மனு கொடுத்தார்?— “INSTITUTIONALIZE பண்ணிய காங்கிரஸ் கட்சியின் “ஊழல் மகா ராணி”..சோனியா காந்தியிடம் .இதில் .ராகுலை வரவேற்று அறிக்கை வேறு..

ஊழல் ஒழிப்பு என்றால் ஆளும் கட்சியின் ஊழல் தானே..அப்படியானால் காங்கிரசின் ஊழல்தானே…அப்ப கட்சி ஆரம்பித்தால் ஊழல் எதிர்ப்பு ஓட்டு பிரியும் தானே…அப்ப அது காங்கிரசுக்கு லாபம் தானே..
அப்ப இவ்வளவுநாள் போராடியது காங்கிரசுக்கு லாபம் தேடித்தரவா?..அப்ப இவர் கட்சி ஆரம்பித்தால் அது காங்கிரசின் வெற்றிக்குத்தானே? அப்ப இவர் காங்கிரஸ் வீசிய வலையில் வீழ்ந்து விட்டார் என்று சொல்வது சரிதானே?

ஒரு பக்கம் மோடியை கட்டித்தழுவும் பாபா ராம்தேவை கட்டிதழுவுகிறார்.
இன்னொறுபக்கம், மோடியை இவர் குருப்பில் இருந்தே ஒருவரை வாய்கூசாமல் விமர்சனம் செய்யத்தூண்டுகிறார்…இப்போதே பழுத்த அரசியல் வாதி ஆகிவிட்டார்..இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே வாயால் மோடியையும், குஜராத் அரசையும் பூமாரிப் பொழிந்தவர்தான் இவர்.

ஆர்.எஸ்.எஸ்ஸோடு தொடர்பு கிடையாதாம்…அவர்களை பார்த்தது கூட கிடையாதாம்…தலையில் வைத்திருக்கும் காந்தி குல்லாவை தயவு செய்து கழற்றிவிட்டு இந்த பச்சை பொய்யை சொல்லுங்கள் அண்ணாஜி..

மலேகன் சித்தி கிராமத்தோடு புதைந்து போயிருக்க வேண்டிய இவரது சரித்திரத்தை, உலகம் புகழ வைத்தது யார் என இவரது நெஞ்சம் மட்டுமல்ல , இவரோடு சுற்றியிருப்பவர்களும் தொட்டுப்பார்த்து சொல்லட்டும்..
நாங்கள் ஏற்றி விட மட்டுமே தெரிந்தவர்கள் என எண்ணி ஏமாறாதீர்..அண்ணாஜி..

ஊழல் என்பது சமூகத்தின் அனைத்து இடங்களிலும் புரையோடிய புண்..அதை ஆற்ற ..நீக்க…அரசும், --அரசியலும் மட்டுமே போதாது..அரசாங்கத்தாலே மட்டுமே முடியும் என்றால் --அது என்றோ ஊதி தள்ளப்பட்டிருக்கும்.

அரசியலுக்கு…வெளியிலிருந்து…காந்தியின் கிலாபத் இயக்கம் போல,, வினோபா பாவேயின் பூமிதான இயக்கம் போல…ஜயப்பிரகாஷ் நாராயணின் மக்கள் போராட்டம் போல..ஊழல் எதிர்ப்பை நீங்கள் மக்கள் இயக்கமாக வழி நடத்துவீர்கள் –அரசுக்கு ஆராய்ச்சி மணியாக—அங்குசமாக இருப்பீர்கள் என்றுதான் மக்கள் நினைத்தார்கள்..

கட்சி ஆரம்பித்து காங்கிரஸ் விரித்த வலையில் வீழ்ந்து, கடைசி காலத்தில் கரை படிந்து, மனம் ஒடிந்து காணாமல் போவீர்கள் என நாங்கள் நினைக்க வில்லை.

எப்போ நீங்கள் ---அன்று உண்ணாவிரதத்தை முடிக்கும் போது, முஸ்லீம் மற்றும் அரிசன சிறுவர்களை அருகில் வைத்து முடித்தீர்களோ..அப்போதே உங்கள் மனதில் அரசியல் ஆசை துவங்கிவிட்டது என்பது தெரிந்து விட்டது.

எப்போ நீங்கள் ஊழல் எதிர்ப்புக்கு மதச்சாயம் பூசதுவங்கினீர்களோ..அப்போதே உங்கள் நேர்மை மறையத் தொடங்கிவிட்டது..

எப்போ நீங்கள் ஆர்.எஸ்..எஸ்ஸை..நான் பார்த்ததே இல்லை என்றீர்களோ அப்போதே நீங்கள் தர்மத்துக்கு எதிராக கண்ணை மூடத்துவங்கி விட்டீர்கள் என்பது தெரிந்து விட்டது.

ஆயிரக்கணக்கான மண்டல்கள், லட்சக்கணக்கான கிளைகள், கோடிக்கணக்கான தொண்டர்கள், --இவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் நூற்றுக்க்கணக்கான சங்க பரிவார் அமைப்புக்கள் அதிலுள்ள “ஜீவனையே” நாட்டிற்களிக்கும் கோடிக்கணக்கான செயல் மறவர்கள்,
இந்த விஸ்வரூப சங்க மகா பரிவாரின் அங்கமான பாஜக யார் தடுத்தாலும் இம்முறை ஆட்சிக்கு வரப்போவது உறுதி..

ஊடகங்கள் தூக்கிப்பிடித்த..ஒருநாள் ராஜா..சோளக்காட்டு பொம்மை---நீங்கள் ஆட்சியை பிடிக்க ஆசைப்படுவது..இந்த தள்ளாத வயதில் பொல்லாத சோகத்தை மட்டுமே.பரிசாகத் தரும் அண்ணாஜி…சாரி..அய்யாஜி..