Pages

Monday, August 27, 2012

மந்திரிகள் சோதனையும்-- ஒருநாள் கூத்தும்

நாமக்கல் அருகே போக்குவரத்து மந்திரியும்--- கணக்கு காட்ட துணைக்கு இன்னொரு மந்திரியும்.. சேர்ந்து வாகன சோதனை செய்திருக்கிறார்கள்..இதில் என்ன புதுமை?

ரேஷன் கடையில் சோதனை…பாலம் வேலை சோதனை…பால் பூத்தில் சோதனை…இப்படி அமைச்சர்கள் சோதனையும் அடுத்தநாள் பத்திரிக்கையில் “போஸோடு..செய்தியும்..” சகஜம் தானே?

இதில் புதுமை இல்லைதான்…ஆனால் இது தினசரி செய்யவேண்டிய விஷயம்—மந்திரிகளால் அல்ல..அதிகாரிகளால்..கணக்கு காட்டுவதற்காகவோ..காசு வாங்குவதற்காகவோ அல்ல…சட்டமும் –ஒழுங்கும்—விதிகளும் காப்பாற்றப்பட..காக்க..

ஆனால் நடந்தது என்ன?—அம்மாவுக்கு கணக்கு காட்ட…இதயத்தில் இடம்பெற…மந்திரி பதவியை தக்க வைக்க…வாக்களர்களுக்கு “படம் “ காண்பிக்க இப்படி ஒரு ”நாடகம்”…

இதில் வேடிக்கை என்னவென்றால்…1300 வண்டிகள் பிடிபட்டன…400 வாகனங்களில் (33 சதம் ) ஆவணங்கள் சரியில்லை…அப்படியானால் ஒரு சாம்பிள் சர்வேயாக இதை வைத்துக்கொண்டால்…தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களில்…30 சதவீதத்துக்கும் அதிகமானவை---சட்டத்திற்கு புறம்பானவை—அல்லது ஆவணங்கள் சரியின்றி ஓடுகிறது என வைத்துக்கொள்ளலாமா?

நாடின் சாலை விபத்துக்களில் முதலிடம் வகிக்கும் தமிழகத்தில்---விபத்துக்கு காரணம் இப்போது புரிகிறதா?...இந்த ஆவணங்களை சரிபார்க்கும் வேலையை மந்திரி வந்துதான் செய்யவேண்டுமென்றால்..நிர்வாகம் என்ன செய்துகொண்டிருக்கிறது..?
காமராசர்—பக்தவக்சலம்---அண்ணாதுரை—காலத்தில் மந்திரியோ—எம்.எல்.ஏயோ—கலக்டரோ…இப்படி ”இறங்கி”—சோதனை செய்ததாக செய்தி இல்லையே (”தேவை ஏற்பட்டாலே தவிர”---என சில விதிவிலக்குகள் தவிர )…

நான் சென்னை துறைமுக பொறுப்புகழகத்தில் டிரஸ்டியாக இருந்தபோது..டிரஸ்டின்..ஆஸ்பத்திரி—கிச்சனை சோதையிட்டோம்…மறுநாள் பணியாளர்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்தது…ஆனால் நிர்வாகம் “இது டிரஸ்டிகளின் வேலையல்ல” என்றது..உண்மைதான்….நல்ல திறமையான நிர்வாகிக்கு..”கீழே இரங்கி”—சோதனை செய்யவேண்டிய அவசியம் எழாது..

அதிமுக ஆட்சியில் அம்மாவைத் தவிர..அனைவரும் “0” சைபர்…என அவர்களே ஒத்துக்கொள்ளும் போது..இப்படி ”இறங்கி வந்து “சோதனை செய்துதானே ஆகவேண்டும்..















1 comment:

sakthi said...

சரியா சொன்னிங்க அண்ணா