Pages

Saturday, August 25, 2012

ஈமு ஒரு கூட்டிலே… கோழி ஒரு கூட்டிலே— ஏமாந்தவர் நடு ரோட்டிலே..எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள்..பாத்தீங்களா?—ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
ஈமூன்னு ஒரு நெருப்புக்கோழி…ஆஸ்திரேலியா நியுஜிலந்து பூர்வீகம்..நம் நாட்டுக்கு---தமிழ் நாட்டுக்கு---ஈரோட்டுக்கு---பெருந்துறைக்கு---அந்நியம்—ஆனாலும் ஒருத்தன் கொண்டுவந்தான்..

இரண்டு மூன்று வருடம்..ஒண்ணும் போனியாகல்ல..விவசாயம் படுத்துச்சு..விவசாயிகளுக்கு ஆசைகாட்டி “விளம்பரங்கள்” கொடுத்தான்.
“சுசி..ஈமு ஃபார்ம்” குருன்னு அவன் பேரு..ஏழோ..எட்டோ..லட்சம் கட்டணுமாம்..தெரியல்ல..

கொஞ்சம் ஈமு கோழி கொடுப்பானாம்..தீவனமும் கொடுப்பானாம்..( அதுக்கு காசு நாமதான் கொடுக்கணும்.).மாதாமாதம் கோழி வளர்க்க காசும் கொடுப்பானாம்..கோழி—முட்டை..அவனே வில கொடுத்து திரும்ப எடுத்துக்குவானாம் இதில் வெளிநாட்டு ஏற்றுமதி ஆசை வேறு..…6..7..வர்ஷத்துல கட்டின முழு பணத்தையும் திரும்ப கொடுத்துடுவானாம்..ஆசை பிச்சுக்கிட்டு போச்சு..ஈமு கோழிப்பண்னை குருவுடைய லாபமும் பிச்சு கிட்டு போச்சு..

சுசி ஈமு ஃபார்ம்ல கோழிக்கு சாணி அள்ளினவன் எல்லாம் புதுப் புது பண்ண ஆரம்பிச்சு.கோடிஸ்வரன் ஆனான்..இதில ஸ்பெஷல் என்ன என்றால் இந்த கோழியோ..கறியோ..முட்டையோ..இதுவரை வெளியில் வியாபாரத்துக்கு வந்ததே இல்லை..

இந்த குருதான்…முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேரை அனுமதியில்லாமல் விளம்பரத்துக்கு பயன் படுத்தி..ஒரு கேஸ் வாங்கிக்கொண்டான்..அதற்கு பிறகு பல வழக்குகள் அவன் மீது என்பது வேறு விஷயம்.
டெல்லியில் “கூடங்குளம் அணுகுண்டு மந்திரி”..நாரயணசாமியை வைத்து  ஈமு கோழிக் கறிக்கடை ஒன்று திறந்து..ஒரு போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு ஒரே நாளில் அதை மூடிய பம்மாத்து பேர்வழி இந்த குரு.

உடனடி பணம் கிடைக்க…இதை பார்த்து ஆசையோ ஆசை பெருகி பலர் ஆரம்பிக்க –ஆரம்பித்த அனைவரும் கண்முன்னே கோடிகோடியாய் சம்பாதிக்க..யாருமே சாப்பிடாத கோழி…வாங்காத முட்டை---ஈமு கோழி தமிழ்நாடு முழுதும் தத்தித் தத்தி பறந்தது.

நமது தட்ப வெட்ப நிலை,..சுற்றுசூழலுக்கு…சிறுதும் ஈடு கொடுக்க முடியாத ஒரு பறவை இனத்தை வைத்து, --மக்களின் அறியாமை..பணத்தாசை..உடனடி காசு…இவைகளை மூலதனமாக்கிய..ஈமு கோழிப்பண்ணை காரர்கள்..இன்று போலீஸ்காரர்கள் பின்னாடி அலைகிறார்கள்..---முதலீடு செய்த பெருமக்கள்..போலீஸ் ஸ்டேஷன் முன்னாடி..கிடக்கிறார்கள்.

ஈமு கோழியின் வியாபார வெற்றித் தந்திரத்தை அறிந்து கொண்ட பல கிரிமினல்கள்,,நாட்டுக்கோழி பண்ணைக்கும் விளம்பரம் கொடுத்து வலை வீசினார்கள்..மீண்டும் நம்மக்கள் அவர்கள் வீசிய வலையில் தாங்களாகவே சென்று மாட்டிக்கொண்டார்கள்.
நூறு கோழிக்குஞ்சுகளை கொடுத்து விட்டு ஒரு லட்சம் ரூபாயை லபக்கி..ஒருமாதத்தில் பறந்து விட்டனர்..

கிரிமினல் வியாபாரிகளின் வலை எல்லை விரிந்தது..ஆயிரம் தேங்காயை கொடுத்து உரிக்கச்சொன்னார்கள்..கொப்பரை எம்.எல்.எம்..நடத்தினார்கள்.அந்த எண்ணெய்.கொப்பரையிலும் மக்கள் விழுந்தார்கள்..
ஏமாந்த நம் மக்கள் அவர்கள் கொடுத்த முதலீட்டு பத்திரத்தை “பத்திரிக்கைகள் முன் காட்டி தன் ஏமாந்த கதையை சொல்லி ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

ஒரு ஊரில் ஏமாற்றி விட்டு அடுத்த ஊருக்கு இவர்கள் போனாலும் அங்கும் மக்கள் தெரிந்தே ஏமாறுகிறார்களே ஏன்?
தாசில்தாரும்..காவல்துறையும்..கலக்டரும் (தாமதமாக இருந்தாலும்) எச்சரித்தும் கூட..மீண்டும் புதிய கம்பெனிகளில் முதலீடு செய்து மீண்டும் ஏன் ஏமாறுகிறார்கள்?

இனியும் நாம் இப்படி ஏமந்து கொண்டிருந்தால்..இவர்கள்..சிட்டுக்குருவி வளர்ப்பு..எம்.எல்.எம்..—பன்னிக்குட்டி பெருக்கு எம்.எல்.எம்---சாணி.ராட்டி தட்டும் எம்.எல்.எம்..என்ற முகமூடியில் மீண்டும் வரலாம்..

ஆசையை புத்தர் அரவே ஒழிக்க சொன்னார்..
அரவே ஒழிக்காவிட்டாலும் கொஞ்சமாவது ஒழித்திருந்தாலாவது…
இந்த இழவு கம்பனிகளுக்கு நாம் இரையாகி இருக்கமாட்டோமே.

4 comments:

sakthi said...

நல்ல விழிப்புணர்வு பதிவு அண்ணா ,
அண்ணா ஒரு புது ஸ்கீம் ஆரம்பிச்சு இருக்காங்க .கறவை மாடு வளர்க்கும் MLM .கிணத்துகடவு பக்கம் விளம்பரம் பண்ணி இருக்காங்க .புது செய்தி .

HOTLINKSIN.COM திரட்டி said...

நீங்கள் சொல்வதைக் கேட்க நல்லாத்தான் இருக்கு நண்பரே... கொஞ்ச நாள் கழிச்சு பாருங்க... வேறு யாராவது ஏதாவது சொல்லி நம் மக்களை ஏமாத்திட்டு இருப்பாங்க... குறைந்த நாட்களில் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்ற திட்டத்தை யார் முன் வைத்தாலும் அது இப்படி சோடை போகிற ஏமாற்றுகிற விஷயமாகத்தான் இருக்கும்... நம் மக்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை உணர்வு பூர்வமாக பார்க்கிறார்களே தவிர... அறிவுப் பூர்வமாக பார்ப்பது இல்லை... அது ஒன்றுதான் இதற்க முதல் காரணம்...

jagan nathan said...

dear friend,
in this case, u have to beat the bush instead of beast(s). when these people, including yrselves made hue and cry that pierced thru
even the stratosphere for raising milk price, bus fare, power tariff etc, pay lakhs of rupees (Hard earned?) in such schemes, imagine
the hypocracy and by the by, aristocracy of them. In the last five/six years alone many such fraud schemes were hugely patronised
by the so called poor of TN. And the sum involved may run many thousands of crores. A hard earned money will never be spent
like this --u would agree.
Hence I request, u like socialogists, to write about people's greed for unethical offers such as free food, free drink, money for votes,
lap tops etc etc. As we can see, such money flows are seen only in TN. God only knows where it comes from.

Anonymous said...

இப்படிப்பட்ட போலி நிறுவனங்கள் எந்த தைரியத்தில் செயல்பட ஆரம்பிக்கிறது? இவர்களுக்கு அனுமதி கொடுக்கும் அரசாங்கம்தான் இவர்களின் தொழில் உண்மையானதுதானா என்று ஆராய்ந்து இவர்களுக்கு அனுமதி கொடுத்திருக்கவேண்டும்..

பொதுமக்களின் நிலைதான் பரிதாபம்