Pages

Sunday, October 31, 2010

மைனாரிட்டி---யார்--?

தலைப்பு வித்தியாசமாய் இருக்கிறது--
பிரச்சினைக்குரியதாக இருக்கிறது--அதிகமாக, பேசப்படும்--எழுதப்படும்--விவாதிக்கப்படும்--
ஆங்கிலச் சேனல்களில் அடிக்கடி--”big fight " செய்யப்படும் தலைப்பாக இருக்கிறதே--
இப்படி ஒரு சிந்தனை வருவது நமக்கு இயல்புதான்.

ஜாதி--மொழி--மதம்--இனம்--நிறம்--பணம்--அழகு--அந்தஸ்து---படிப்பு---இவைகளின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது--மைனாரிட்டி--மெஜாரிட்டி--
உண்மையில் இந்த லிஸ்டில் இல்லாத --மனமும்--குணமும்தான் -மையினாரிட்டி ஆக உள்ளது..

இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் மைனாரிட்டி--மெஜாரிட்டி---பிரிவினை--உலகில் எந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை--
நம் இந்திய அரசியலார்கள் உலகின் மிகச் சிறந்த தலைவர்கள்--இதற்குமேல் இந்திய மக்களை ஜாதி--மொழி --மதத்தால் பிரிக்க முடியுமா--என உலகிற்கு சவால் விடுபவர்கள்.அவ்வளவு ஜாதி---அவ்வளவு மதம்--அவ்வளவு மொழிப் பிரிவினைகள்--நாளுக்கு நாள் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே வருகிறது.

காஷ்மீரத்து மக்கள் நான் இந்தியன் இல்லை என்கிறார்கள்--அதை  ஆதரித்து ஒரு கூட்டம் குரல் எழுப்புகிறது--இது தேச விரோதம் என்கின்றனர் நல்லவர்கள்--நடுநிலையாளர்கள்--அரசியல் சட்டமுமே அப்படித்தான் சொல்கிறது--இல்லை..இல்லை --இது பேச்சுரிமை---எங்களை யாரும் தடுக்கமுடியாது என்கிறது ஒரு கூட்டம்--
தேசம் எனபது ஒரு வரையறுக்கப்பட்ட “”நிலப்பரப்பு”--இது மற்ற நாடுகளுக்கு-----நம்மைப் பொறுத்தமட்டில்--நம் தேசம் எனபது “நிலப்பரப்பு “”மட்டுமல்ல--
அது அத்தனை ஆன்மாக்களின் சங்கமம்.
இதயங்களின் பூஞ்சோலை--எண்ணங்களின் மலர்ப்படுகை---
ஆங்கிலத்திலே ஒரு அழகான வாக்கியம் உண்டு..
””house is built by bricks--home is built by HEARTS '--என்பார்கள்-- 
INDIA IS BUILT BY HEARTS --

நாம் காஷ்மீரத்துக்கு செய்ததெல்லம் சொன்னால் அது கணக்கிலடங்காது---சொல்லிக்காட்டுவதும் நமது இயல்பு அல்ல--

ஒரு சிலர் தூண்டி விடுகிறார்கள்--ஒரு சிலர் தூபம் போடுகிறார்கள்--ஒரு” சில பேச்சுரிமை வாதிகள்”---எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுகிறார்கள்--

இந்திய கலாச்சாரதையும்--பண்பாட்டையும் --கட்டிக்காத்து--இத்தேசத்தை புனர் நிர்மாணம் செய்யும் பணியில் தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு மகா புருஷர் சொன்னர்--

””முஸ்லீம் கிருஸ்தவர்கள்--வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல--நம் சொந்த சகோதரர்கள்---கொஞ்சம் காலத்திற்கு முன்பு ஏதோ காரணத்திற்காக மதம் மாறியவர்கள்--அவர்களை ஒதிக்கி வைத்து விட்டு நாட்டை ஆளுவது எனபது அறியாமைதான் --”-நாமும் இந்த நாட்டின் மூதாதையர்கள்--என்ற எண்ணத்துடன் இரண்டர கலக்க வேண்டியதும்” அவர்களுடைய கடமைதான் ”--என்றார் அந்த பெரியவர்..
அப்படிப் பார்த்தால் இங்கு ஏது--மைனாரிட்டி--மெஜாரிட்டி--எல்லாரும் இந்நாட்டவர்தானே-
வேற்று நாட்டிலிருந்து இங்கு வந்தவரே உண்மையில் மையினாரிட்டி
--

ஊழலை--தாங்கிப் பிடிக்கும் பாதுகாப்பு அரண் --காங்கிரஸ்

-- ஆதர்ஷ்---இதற்கு அர்த்தம்--””முன்மாதிரியாக””--ுன்னோடியாக---வழிகாட்டியாக---சிறந்த உதாரணமாக””” என்பதெல்லாம் dictonary" யில் கொடுக்கப்பட்டுள்ள அர்த்தம்---

“”ஆதர்ஷ்””--இதற்கு காங்கிரஸ்காரர்கள் கொடுத்த அர்த்தம்----கொள்ளையடி---சொத்துக்குவி----ஏமாற்று--பொய்சொல்---ஏழைகள்......ராணுவம்...பொது......நாட்டு......விதவைகள்.....சொ்தை.. அபகரி---

மும்பயில் “கார்கில் போரில் வீரமரணம் எய்த--உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களின் விதவை மனைவியருக்கு  ஒதுக்கிய வீடுகளை மராட்டிய முதலவர் அசோக் சவானின் மாமியார்--மைத்துனி--மைத்துனர்--ஆகியோர் அபகரித்துள்ளனர்--இப்படி   எடுத்துக்கொண்ட”” முறையற்ற முறையை””-- “”அபகரித்துக்கொண்டனர்”” என்கிற வார்த்தையை தவிர வேறு வார்த்தையால் என்னால் நிரப்பமுடியவில்லை.

இதோடு இவர்களோடு-- மூன்று முன்னாள் முதல்வர்கள்--நூறூக்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்கள்--- “”கூட்டுக் களவாணித்தனம் “ செய்து தங்கள் குடும்பத்தாருக்கும்-- “பிளாட்ஸ்”--பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் கும்பல்---புரிந்த ஊழலை--அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ஆங்கில டி.வி.க்களே ஆதரங்களை அடுக்கி--அடுக்கி --மீண்டும் மீண்டும்--போட்டு காட்டி காட்டி காங்கிரஸின்  மானத்தை அப்பளம் நொறுக்குவதை போல நொறுக்கி விட்டார்கள்.

இதற்கு பிறகும் “மீசையில் மண் ஒட்டாத “ சோனியா--”பிரணாப்--அந்தோணி”  --விசாரணைக்குழுவாம்--
ம்ம்ம்ஹூம்--இன்னும் ஏமாறுபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.  விசாரணை செய்து கண்டு பிடிக்கப் போகிறார்களாம்--அசோக் சவான் -நிலத்தை திருப்பிக்கொடுக்க தயாராம்--ராஜினாமா செய்து விட்டாராம்--அவருக்கு மாற்று இன்னும் கிடைக்கவில்லையாம்--ஒபாமா இந்தியா வருவதால்-....-மும்பை வருவதால் --இவர் பதவியில் இருப்பது அவசியமாம்---என்னையா வாதம் --ஊழலை தாங்கிப் பிடிக்க-- எத்தனை பாதுகாப்பு அரண்கள்.

காமன் வெல்த்தில்--70000 கோடி ஊழல்--கார்கிலில் வெறும் 103 வீடு ஊழல்தானே---காங்கிரசுக்கு இதெல்லாம் சகஜமப்பா--

Sunday, October 17, 2010

அயோத்தி பிரச்சினை தீர்ந்தது--கோயில்--மசூதி வேண்டாம்--இந்து..முஸ்லீம் மக்கள் முடிவு

- அயோத்தி தீர்ப்புக்கு பிறகு.. இரு தரப்பிலும் பெரும்பான்மையினர் நீதி மன்ற தீர்ப்பை வரவேற்றாலும் “”தீவிர எண்ணம் கொண்ட “”ஒரு பகுதியினர் ”தங்களுக்கு அந்த இடத்தில்-- கோயில்--மசூதி-- “கட்டித்தர வேண்டும்  என்று கூறி ஜனாதிபதி பிரதிபா பட்டீலை சந்தித்தனர்-- ஜனாதிபதியும் கட்டித்தருவதாக ஒத்துக்கொண்டார்.
இரு தரப்பும் மகிழ்ச்சியாக திரும்பினர்--

அடுத்தநாள் இருதரப்பின் அலுவலகத்திற்கும் கோயில்--மசூதி வரைபடத்தோடு ஒரு கடிதம் வந்தது----அதில்  காமன் வெல்த் கேம்ஸ் புகழ் சுரேஷ் கல்மாடி யிடம் காண்டிராக்ட் ஒப்படைக்கப் பட்டிருப்பதாகவும் ஓரிரு மாதத்தில் கட்டிமுடிக்கப்படும் என்று எழுதி இருந்தது.

இருதரப்பும் உடனே ஜனாதிபதியை பார்த்து எங்களுக்கு கோயிலும் வேண்டாம்--மசூதியும் வேண்டாம்--ஒரு மழையில் கட்டடம் இடியபோகிறது. அதற்கு சண்டையிடுவதைவிட --நாங்கள் சமாதானமாக போகிறோம்--என்று அறிவித்துவிட்டு வந்துவிட்டனர்.

காமன் வெல்தில் குழப்பம் உண்டாக்கினாலும்--நாட்டின் குழப்பம் தீரக்காரணமான சுரேஷ் கல்மாடி மீதிருந்த அத்தனை ஊழல் வழக்குகளும் வாபஸ்பெறப்பட்டு--அவருக்கு “பாரத ரத்னா””அறிவிக்கபட்டது..

ஆயுதங்கள் என்னை சிதைக்காது--நான் வெற்றிபெறவே படைக்கப்பட்டவன்.

நான் என்பது அகந்தை—அது வெளியே—நான் என்பது அகமனதின் -வைரம்—வைடூரியம்—வைராக்கியம்—என அடிக்கிக்கொண்டே போகலாம்.

காட்டு விலங்குகளிலே எது பயங்கரமானது?---என்றால் நாம் எதை சொல்வோம்---சிங்கம்—புலி—ஏன் கரடி—நரியைக்கூட சிலர் சொல்வார்கள். –உண்மையிலேயே எப்போது என்ன செய்யும் என சொல்லமுடியாதது ””யானைதான் “”நீங்கள் அருகில் செல்லுங்கள் ஆடாமல் இருக்கும்—உங்களை பார்த்துக்கொண்டே பதவிசாக இருக்கும். எப்போது தாக்கும் என்பதை ஊகிக்க முடியாது.பழக்கிய யானையை பாருங்கள்—இவ்வளவு பெரிய மிருகம்—பூனைக்குட்டியைப் போல—ஒரு நோஞ்சான் பாகனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு எப்படியெல்லாம் உடலை வளைத்து வேலை செய்கிறது.

அதுபோலதான் நம்மனதும்—பழக்கப்படாத மனம் –படிப்பை மட்டுமே அறிந்த மனம்---பதற்றத்திலிருந்து விடுபட படாதபாடு படும். ””மதநீர் “”வழியும் யானைமுன் மாவீரனும் நடுநடுங்கிப் போவான் ---பயம் என்னும் மதநீர்—மனிதனை நிலைகுலையச் செய்யும்—பண்படாத மனதின் இருள்மேகம் தான் பயம்---

நமக்குள்ளே ஒரு இடத்தில் நம்மை தட்டியெழுப்பும் “”நம்பிக்கை “ இருக்கிறது.
அது எங்கிருக்கிறது—எவ்வளவு ஆழத்தில் ஒளிந்திருக்கிறது-----என்பதை கண்டுபிடிக்கும் போது நாம் எழுச்சியுருகிறோம். புகழ்ச்சி பெறுகிறோம்---இகழ்ச்சி அகற்றுகிறோம்----விளைவு மகிழ்ச்சியடைகிறோம்.

ஆப்பிரிக்க காடுகளிலே தன் கூட்டத்தால் கைவிடப்பட்ட---வழிதவரிய சிங்கம்—புலி குட்டிகளை எடுத்து வளர்ப்பார்கள். பெரிதாகும்வரை மாமிச துண்டுகளை இறையாக போடுவார்கள். முழுமிருக உணவை அது பார்த்தே இருக்காது.காட்டில் சென்று விடத்தீர்மானித்த சில நாட்களுக்குமுன் –கொல்லப்பட்ட பிராணியின் முழு உடலை –குளம் குட்டைகளில் மிதக்கவிடுவார்கள்---வளர்ந்த இந்த குட்டிகள் பாய்ந்து சென்று இறந்த அந்த மிருகத்தின் கழுத்தைதான் முதலில் இருக்கி பிடிக்கும்.

எப்படி மறைத்து--- மறத்து வளர்த்து-- மாமிச துண்டுகளையே இறையாக கொடுத்திருந்தாலும்---உணவாகப் போகும் இரையின் கழுத்தை கடித்து உயிரை போக்குவது சிங்கம்—புலியின் ரத்தத்தில் விளந்த குணம்—

மனிதனின் ரத்தத்தில் விளைந்த குணம்—நம்பிக்கை—புதைந்து கிடக்கும் இந்த பொக்கிஷத்தை வெளிக்கொணர தொல்பொருள் ஆராய்ச்சியாளன் தேவையில்லை. வித்தையை கற்றுக்கொடுக்கும் குருவுக்கு –கற்ற சீடனை வெல்ல –அதற்குமேல் வித்தை கைவசம் இருக்கும். அதுபோல நம்பிக்கையை ஒளித்துவைத்த அதே மனத்தால் நம்பிக்கையை வெளிக்கொணரவும் முடியும்.

என்னிடம் +2 படிக்கும் மாணவனை அவனது தந்தை கூட்டிவந்தார். மார்ச் பரிக்‌ஷைக்கு 3 மாதம் தான் இருக்கிறது—பயமாக இருக்கிறது—பரிக்‌ஷைக்கு போகமுடியாது என்கிறான் என் பையன் என மிகவும் வருத்ததுடன் சொன்னார்.

மாணவனுடன் பேச்சு கொடுத்தேன்  --மார்க் பட்டியலை பார்த்தேன் -நல்லமதிப்பெண் பெற்றிருந்தான் ---பின் ஏன் இந்நிலை என்ற போது –””முதல் மதிப்பெண் வாங்காது போய் விடுவேனோ “”என்ற பயம் என்றான்.

இந்த பயம் என்பது நம்பிக்கையின்மையின் வெளித்தோற்றம்—இதற்கான காரணத்தை தேடுவதை விட அம்மாணவன் பெற்ற வெற்றிகளை சுட்டிக்காட்டி “”ஏற்கனவே உள்ள நம்பிக்கை திசுக்களுக்கு “”வலிவூட்டினேன். அவன் பெற்ற அத்தனை மதிப்பெண்களையும் சொல்லச்சொன்னேன்  --அவனது பெற்றோர்—ஆசிரியர்கள்—அவனது  நண்பர்கள்—அவனை பாராட்டியதை—நினைவு கூறச்செய்தேன்  -இத்தனைநாள் எழுதியதை போல இதுவும் ஒரு பரிக்‌ஷயே—இதற்குமேல் இப்பரிக்‌ஷைக்கு ஒரு கொம்பு முளைத்துவிடவில்லை—எனபதையும் சொன்னேன்.

உன்னால் முடியும் என்பதை –ஏற்கனவே  நிரூபித்த விஷயங்களை—வெற்றிகளை—மீண்டும் அசைபோடும்போது மனது ஏற்றுக்கொள்கிறது. –என்பதை புரியவைத்தேன். பரிக்‌ஷை முடிவுகள் மாணவனுக்கு நல்லமதிப்பெண் பெற்றுத்தந்தது---அம்மா அப்பாவை—அலைய வைக்காமல் நல்லகல்லூரியில் இடமும் கிடைத்தது…

“”தூங்கிகிட்டு இருக்கிற இந்த சிங்கத்தை தட்டி எழுப்பிடாத””—என சினிமாவில் வடிவேலுவும் விவேக்கும் ஜோக் அடிப்பார்கள்---ஆம்—அதை தட்டியெழுப்பித்தான் ஆகவேண்டும்---சிங்கம் மாதிரி வலுவான மனதை வைத்துக்கொண்டு தூங்கிகொண்டிருந்தால் என்ன லாபம்.


தன்னம்பிக்கைக்கு உரமேற்றும் பயிற்சிகள் உள்ளன--தினசரி தியானம்--மந்திர உச்சாடனங்கள்போல்---மனதை வளமாக்கும் --வலிவாக்கும் சிந்தனைகளை வளர்க்கவேண்டும்--
" ஆயுதங்கள் என்னை சிதைக்காது---
தோட்டாக்கள் என்னை துளைக்காது--
நெருப்பு என்னை எரிக்காது
நீர் என்னை நனைக்காது
காற்று என்னை உலர்த்தாது
நான் வெற்றிபெறவே படைக்கப்பட்டவன்.
நான் ஞானம் பெற்று படைக்கப்பட்டவன்””

என்ற உச்சாடனங்கள்--மனதுக்கு வலு சேர்க்கும்--ஆழ் மனதிற்குள் புதைந்திருக்கும் நம்பிக்கையை--கேணித்தண்ணியை வாளியால் இறைப்பதுபோல மேலே கொண்டுவரும்.

Saturday, October 16, 2010

கர்னாடகா -- விவகாரம்-- எடியூரப்பா—குமாரசாமிக்கு---ஜோதிடம்—கொடுத்ததா?—கெடுத்ததா?


அப்பாடா—தலை தப்பியது தம்புரான் புண்ணியமாக எடியூரப்ப அரசு பிழைத்துக்கொண்டது.
“உன்னைத்தொலைக்காமல் விடமாட்டேன் “ என்ற உறுமல் குமாரசாமியிடம் இதற்கு பிறகும் நின்றபாடில்லை.

என் தலைப்பு “நான் ஜோதிடத்திற்கு எதிரானவன் “போல் தோன்றுகிறதல்லவா…

ஜோதிடம் என்னும் விஞ்ஞான பூர்வமான கலையை நான் நம்புகிறேன்.

தன்னை நம்பாமல்—அதை மட்டுமே நம்பி----தன் கடமையை செய்யாமல்------அதுவே---அதுவே………அதுவாகவே----எல்லாம் செய்யும் என்னும் மூட நம்பிக்கையில்….சோம்பேரியாய்….சுற்றிக்கொணடு இருப்பவர்களைத்தான் நான் வெறுக்கிறேன்..

நமக்கு என்ன கிடைக்கும் என்பதை---ஜாதகம்….ஜோசியம்….நியுமராலஜி….வாஸ்து….அதிர்ஷ்டகல்…
.தீர்மானிக்கிரதா?
இவைகள்தான் -தீர்மானிக்கிறது... என்றால் உழைப்பு எனபது எதற்கு?
இல்லை…””ராஜா குடும்பத்திலும்..நல்ல நேரம்—தேதி—இடம்---இவற்றில் பிறந்திருந்தால்தான் எல்லாம் கிடைக்கும் என்றால்----நீதி…நியாயம்…நேர்மை…தர்மம்…கடவுள்…உழைப்பு…..
இவையெல்லாம் எதற்கு?

தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் –ஆஞ்சனேயரால் புகழ்பெற்ற ஒரு ஊரிலுள்ள ஒரு ஜோதிடர்---குமாராசாமியின் அப்பா—தேவேகவுடாவை—நீ..ஒருநாள்..பிரதமர் ஆவாய்..என்றார்.. அதுவும் நடந்தது…ஏதோ..வந்தோம்..இருந்தோம்…என பிரதமர் பட்டியலில் “”குல்ஜாரிலால் நந்தா “’ மாதிரி இவர்பெயரும் வந்தது..

ஒரு கணிப்பு பலித்ததால்—அவரே கதி என்று இவர் கிடந்தார்---இப்போது இவரின் மைந்தர்…குமாரசாமியும்..கிடக்கிறார்..குமாரசாமிக்கு இவர் ஒருவர் மட்டும் கிடையாது—ஊருக்கு ஊர் பலர்.  இப்போது அவரை சுற்றி இருப்பவர்களில் பலர் இப்படிப் பட்ட ஆட்கள்தான்.

பா.ஜ.கவோடு பதவியை பங்குபோட்ட காலத்தில் –தான் ஒண்ணரை வருடம் அனுபவித்தை---பின்னர் அடுத்த பகுதியை  பா.ஜ.கவிற்கு தராமல் மறுத்ததற்கு ஜோதிடர்கள் சொன்ன ஆலோசனை தான் காரணமாம்..பா.ஜ.கவிற்கு 18 மாதம் கொடுத்தால்—அப்புறம் ம.ஜ.தவிற்கு ஆட்சி கிடைப்பதற்கு பதில் “”அல்வாதான்” கிடைக்கும் –என எச்சரித்ததால்—குமாரசாமி உஷாராகி—நடத்திய நாடகமும் அதன் விளைவுகளும்—நாடறியும்.

இதோடு விடவில்லை “ஜோதிடர் கூட்டம்”---””டிரை பண்ணுங்க—டிரை பண்ணுங்க—பண்ணிகிட்டே இருங்க---( சூரியன் எஃப்.எம் மாதிரி )உங்க ஜாதகம் உச்சம்—உங்களுக்கு போகதான் மத்தவங்களுக்கு மிச்சம்---”சி.எம் நிச்சயம்—பி.எம் லட்சியம்---
என கலைஞர்—வசனங்களை பேசி—குமாரசாமியின் “மண்டை கிருக்கை “ ஏற்றிவிட்டனர்..18 மாத முதல்வரில் சம்பாதித்த பணமும் விளையாடியது.

கர்னாடகவில் ஜனநாயகம் கேலிக்கூத்தானது—ஒருவார காலமாக அரசாங்கமே நடக்கவில்லை—போலி ஜோதிடர்கள் உசுப்பேற்றிய--- பதவிப் பித்தும்—பணபலமும்—நன்றாக நடந்து கொண்டிருந்த அரசை—அமைதியை---சீர்குலைத்தது.
இது ஒரு பக்கம்----
எடியூரப்பாவும் லேசுபட்ட ஆளில்லை---ஜோதிடர்கள் போட்ட கோட்டுமேலேயே தடம் புரளாமல் நடப்பார்—அவரால் தமிழ் நாட்டு கோயில்களுக்கு “ஜாக்பாட்”---பலகோயில்களுக்கு அரசு பணத்தை லக்‌ஷ…லக்‌ஷமாக…வாரி வழங்கினார்…ஓட்டெடுப்பு முதல் நாள் கூட கேரளாவில் ஒரு கோயிலுக்கு சென்றுவிட்டுத்தான் வந்தார் அவர்..

சென்ற பொதுத்தேர்தலில் ஜெயித்த வுடன் தனி மெஜாரிடிக்கு 10—15 எண்ணிக்கை குறைவாக இருந்தபோது—அதை அடைக்க—திட்டம் தீட்டியிருக்க வேண்டும்.. காங்கிரஸை—ம.ஜ.தவை—திட்டமிட்டு—வெட்டியெரிந்து—உடைந்த பானையாக்கி—இருக்கவெண்டும்..
அரசாங்கம் கையில் இருந்தது—முதல் மந்திரியே இவர்தான் -பொதுக்கூட்டதில் அழுவதை நிறுத்திவிட்டு—எதிர் கட்சிகளை அழவைதிருக்க வேண்டாமா?----மூளையை கசக்கி இருந்தால்—எதிர் கட்சிகள் கசங்கி –சுருங்கி—போயிருக்க மாட்டர்களா?—

ஆட்சியை கவிழ்க்க ஒருவர் ஜோதிடர்களிடம் தஞ்சம்---ஆட்சியை காப்பற்ற மற்றொருவர் ஆண்டவனிடம் தஞ்சம்—மொத்ததில் கர்னாடகா மக்களுக்கு—இது போதாத காலம் --

Wednesday, October 13, 2010

சிலி மீட்பு பணி--நம்மனித வலிமையின் வெளிப்பாடு
ஆகஸ்ட் மாதம் 5ந்தேதி அதிகாலை—சிலி நாட்டின் வடபகுதியில் உள்ள “”காப்பியாபோ””நகரத்தின் ‘’தங்கம் மற்றும் தாமிர சுரங்கம்” திடிரென மூடிக்கொண்டது. பூமியிலிருந்து அரை மையில் ஆழதில் 33 தொழிலாளிகள் சிக்கிகொண்டனர். விபத்து நடந்து 17 நாட்களுக்கு பின்னரே அவர்கள் உயுருடன் இருப்பது தெரியவந்தது.

இதற்கு பின்னர் நடந்ததுதான் உலகசரித்திரத்தின் மிகமிக முக்கியமான பக்கங்கள். அமெரிக்க விண்வெளி நிலயம் “நாசாவின் “’உதவியுடன் சுரங்கத்தொழிலாளரகள் இருப்பிடம் கண்டுபிடிக்கப் பட்டு சிறு குழாய்கள்மூலம் அவர்களுக்கு ஆக்ஸிஜன் -உணவு –மின்சாரம் முதலியன அனுப்பப்பட்டன.
அவர்களோடு பேசுவதற்கான கருவிகள், டி.வி.நிகழ்ச்சிகள் பார்க்க வசதிகள் உண்டாக்கபட்டன. தொழிலாளர்களின் உறவினர்களோடு பேசவைக்கபட்டனர்.

இதற்குள் சிலி கடற்படை தயாரித்த மீட்பு இயந்திரங்கள் 40 லாரிகளில் கொண்டுவரப்பட்டன. ஒரு கால்பந்து மைதானம் அளவு கான்கிரீட் தளம் போடப்பட்டு அதில் இரண்டடிக்கும் சற்று கூடுதலான அகலத்துக்கு –668 மீட்டர்—சுமார் 2200 அடி ஆழத்துக்கு ஆழ்துளை போடும் பணி துவக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானத்தில் துளை போட்டுக்கொண்டிருந்த அமெரிக்கர்—அமெரிக்காவில் பணியிலிருந்த சுரங்க நிறுவனங்கள்—வரவழைக்கப்பட்டு—பணியை மேற்கொண்டனர்.

முதலில்—சிக்கிகொண்ட தொழிலாளர்களை நெருங்க 2 மாதம் ஆகும் என கணக்கிடப்பட்டது—ஆனால் பணி துவக்கப்பட்ட உடனேயே துளையிடும் கருவியின் வேகத்தினால்—45 நாளில் முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.   ஒன்றில் பிரச்சினை ஏற்பட்டாலும் மற்ற இரண்டு காப்பாற்றும் என்பதால் ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் துளை போடும் பணி துவங்கியது.

சிக்கிய தொழிலாளியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்—உள்ளே இருப்பவர்களுக்கும்—மற்றும் துளைபோடும் மீட்பு குழுவினருக்கும்—உற்சாகம் கொடுக்க மீட்பு பகுதியில் திரண்டனர். 24 மணிநேரமும்—ஆட்டம்—பாட்டம் –கொண்டாட்டம்—என உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

அக்டோபர் மாதம் 9ந்தேதி  66 ஆம் நாள் –ஆழ் துளை குழாய் சுரங்கத்தில் சிக்கியவர்கள் அருகே சென்றடந்துவிட்டது. 13 ந்தேதி---- முதல் தொழிலாளி-- மீட்கப்பட்டு விடுவார்.

சிலி நாடு உலகின் வரைபடத்தில் கடுகளவே உள்ளது. 1989இல் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர்—அந்நாடு உலகுக்கு தெரிவது இந்த சுரங்க விபத்து மூலம் தான் .
தங்கம் மற்றும் தாமிர சுரங்கம்—பழ ஒயின் -இதுதவிர சிலியில் சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றும் இல்லை. “”நம் நாட்டுக்கு ஒரு கால் பந்து அணி இல்லையே—கொலம்பியா--”ஷகிரா”’--போன்ற ஒரு பாப் பாடகி இல்லையே-- என்பது சிலி மக்கள் வருத்தம்.

ஆனால் இந்த சுரங்க விபத்தின் ஒற்றுமை நாட்டு மக்களுக்கு அந்த வருத்தத்தை போக்கிவிட்டது.ஒவ்வொரு வீட்டின் முன்பும் “நம் வலிமையை காண்பிப்போம் “”என்கிற வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. சுரங்கத்துக்குள் செல்லும் மீட்பு குடுவைக்கு அவர்கள் வைத்துருக்கும் பெயர் “”ஃபோனிக்ஸ்”—பீனிக்ஸ் பறவையின் பெயர்—எரித்து சாம்பலானாலும் மீண்டும் உயிர்த்தெழும் பறவையின் பெயர் சிலி மக்களின் மனத்திடத்தின் அடையாளம்.

முதலில் 4 வலிமையான –திடகாத்திரமானவர்கள் மீட்கப்படுவர்—சுழன்று மேல்நோக்கிவரும் குடுவையின் 20 நிமிட பயணத்தை தாக்கு பிடித்து –மற்றவர்களுக்கு நம்பிக்கை உண்டாக்கவே இந்த பலசாலிகள்—அடுத்து 10 சீக்காளிகள்—கடைசியாகவே 33 பேரின் மூத்த அதிகாரி—நம்மூர் என்றால் தலைவன் தானே முதலில் வருவான்…

இந்த சுரங்க மீட்பு “ஆப்பரேஷன்””உலக வரலாற்றில் மிகமிக அதிசயம்—ஒரு பக்கம் மீட்புப் பணி—மறு பக்கம் சுரங்கத்துக்குள் சிக்கியவர்களுக்கு “”நம்பிக்கை கொடுக்கும் பணி”’—மூன்றாம் பக்கம் வெளியே உள்ள மக்களின் அசாத்திய ஒத்துழைப்பு—ஒற்றுமை—பிரார்த்தனை.—சிக்கிகொண்ட தொழிலாளர்கள் அத்தனை பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்கள் குடும்பத்துடன் ஒன்றுசேர நாம் இந்தியர்களும் பிரார்த்தனை செய்வோம்—

சிலி நாட்டு மக்களின் ஒற்றுமை போல —ராமர் கோயில் விஷயத்தில் இந்திய நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது அல்லவா…   

Sunday, October 10, 2010

வாயில்லா ஜீவனுக்கு எதிராக பேசாதே


””விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம்”----
“’பயிர்களை சூறையாடி ரகளை””
“”வால்பாறையில் வீட்டுக்குள் ஓட்டைபோட்டு அரிசி--பருப்பு களவாடிய யானைகளை வெடிவைத்து விரட்டினர்””

                                                                    யானைகள் நமது எதிரியா?---நம் நிலத்தை அது அபகரிக்கிறதா?-----அல்லது அதன் இருப்பிடமான காடுகளை நாம் அழித்ததால்--வாழ வழி தெரியாமல்---நாட்டுக்குள் புகுந்ததா?

இதில் எது சரி?--எது தவறு?

“”யானைகள் துவம்சம்--அட்டகாசம்----விவசாய நிலங்கள் அழிப்பு-----வாழைத்தோட்டங்கள்--சூறை-------சாலையின் நடுவில் நின்று கொண்டு வாகனங்கள் இடை மறிப்பு---மற்றும் துரத்தல்””

இப்படி செய்திகள் வெளியிட்டால்--விவசாயிகள் யானைகளை எதிரியாகத்தானே பார்ப்பர்---விளைவு “முள் வேலியில் கரண்ட் பாய்ச்சி யானைகள் கொலை”---பயிர்களில் விஷம் கலந்து யானைகள் கொலை “”என்ற செய்திகள்

இப்படி யானைகளையும் மக்களையும் பிரித்துப் போடுவது ஸன் டி.விக்கு சரியா?

யானைகளின் அடுத்த வில்லன் “இந்தியன் ரயில்வே”
யானைப்பாதைகளில் ரயில்வே லயன்கள்---மலை--காட்டுப்பாதைகளை--பள்ளமான பகுதிகளாக்கி---தண்டவாளங்கள்---இறங்கினால்--யானைகளால் ஏற முடியாது--விளைவு ரயிலில் அடிபட்டு பலி---

ஆண்டுதோறும் ஏளமான யானைகளை கொன்று குவிக்கும் “”யானைகாசுரன்” ரயில்வே  துறைதான்.

மிருகங்கள் விதிமீறுவதில்லை---மனிதனின் எல்லையில் ஊடுருவதில்லை----ஆக்கிரமிப்பதில்லை---

மனிதன் இவற்றையெல்லாம் செய்துவிட்டு---மிருகத்தின் மீது பழிபோடுகிறானே---அவைகள் பேசாது என்பதாலா?

Monday, October 4, 2010

கலைஞரின் பட்டுடை மஹாத்மியம்

தஞ்சை பெரிய கோயில் 1000 ஆவது ஆண்டு விழாவில் ஜரிகையுடன் கூடிய வெண்பட்டு வேட்டி, சட்டை, துண்டு அணிந்து வந்தது அவரைப் பற்றி தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம்.—பத்திரிக்கைகளில் பளபளக்கும் ஃபோட்டோக்கள்,அருமை மகள் கனிமொழியின் :”சூப்பர் “காமண்ட்—பக்கத்திலிருந்த கணேசனாருக்கு “நம்மூர் டிரஸ்” என்ற விளக்கம், நமக்கெதுவும் “”குத்தவும் இல்லை—குடையவும் இல்லை”

கலைஞர் குடும்பம் வெளியுலகுக்கு பகுத்தறிவாளர் குடும்பம்.  உள்ளே சராசரி இந்து குடும்பம். கோவிலுக்கு போவதும்-- பல கோவில்களில் மருமகள்கள் கட்டளை தாரர்களாக இருப்பதும்,-- கோவில்களுக்கு அன்னதான மண்டபங்கள் கட்டுவதும்,--சாய் பாபாவை வீட்டுக்கழைத்து தயாளு அம்மாள் அவர்காலில் விழுந்து ஆசிகள் வாங்குவதும்,-- பலபத்திரிக்கைகளில் வந்த செய்திதான்.

 தமிழகத்தின் ஒரு மூத்த அரசியல் தலைவர், பள்ளிப்படிபை தாண்டாமலே கலை, இலக்கியம், நாடகம், சினிமா, என பல துறைகளில்-- முத்திரை பதித்தவர்--ஆலமரம் போல பரந்து-- விரிந்து கிளை பரப்பி, இருக்கிற ஒரு பெரும் குடும்பத்தின் தலைவர்,-- இந்தவயதில், இந்த கெட்டப்பில், பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருந்தார். காணக்கண்கோடி வேண்டும் –எனபதுபோல் இருந்தது அந்தக்காட்சி.

நாம் எற்றுக்கொள்ளாவிட்டாலும், தமிழகத்தின் ஒருபகுதி மக்களை தன் திசையில் இழுத்துச் சென்ற அந்தப் பெரியவரின் இந்த உடையை அவரது “கொள்கை கூட்டமே “”விமரிசித்தாலும் நமக்கு இது புதுமையாய் தோன்ற வில்லை. இதுபோல பல்வேறு வகையான உடைகளை போட்டு அவரை அழகு பார்க்கவேண்டும் என்ற அவரது குடும்பத்தின் ஆசைகளை இப்போது செய்யாமல் பின் எப்போது செய்யமுடியும்.

கருப்பு –சிவப்புகரை துண்டிலிருந்து மஞ்சள் துண்டிற்கு அவர் மாறிய போது நாவலர் நெடுஞ்செழியன் “மஞ்சள் துண்டு மடாதிபதி “ என சொன்னதும், கையிலே இருந்த “கழக மோதிரத்தை கழற்றி விட்டு “ஜாதகப்படி கல்மோதிரம் “ போட்டதை பகுத்தறிவாளர்கள் சாடியதும் பற்றி கருத்து சொல்ல நாம் விரும்பவில்லை.

ஆட்சி அதிகார கட்டிலில் ஏறுவதற்குமுன் பலர் இரும்புக்கோட்டையாகத்தான் இருந்திருக்கிறார்கள். கொள்கைக்கோமான்களாக, லக்‌ஷிய புருஷர்களாக, கரைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரர்களாக, என அடுக்கிகொண்டே போகலாம். ஆனால் அதிகாரம் என்னும் “பட்டணத்து பூதம்” இந்த கிராம தேவதைகளை ஒரே அடியில் வீழ்த்துவதும் நாம் கண்டுகொண்டிருக்கும் எதார்த்தம்.

பதவிகள் பெற்ற பிறகு ,புரோக்கர்களும், கைத்தடிகளும், ஜோதிடர்களும், இவர்களை சூழ்ந்துகொள்கிறார்கள்.எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே இன்று வருகிறதே “பன்றிக்காய்ச்சல் “அதுபோல இவர்கள்.—மந்திரித்த கயிறை கட்டிக்கொள்ள சொல்வார்கள். கழக மோதிரத்தை மந்திரக்கல் மோதிரத்துக்கு மாற்றுவார்கள்.—இவர்தான் பெரிய ஜெம்மாலஜிஸ்ட் என்பார்கள்.—இவர்கொடுத்த கல்லால் எம்.எல்.ஏ—மந்திரியானதாக சொல்வார்கள். அவர் எதால் எம்.எல்.ஏ. ஆனார் என்பதை மறக்கடிக்க செய்வார்கள்.

இந்தக்கோவிலில் பாலாபிஷேகம் செய்தால் “எதிக்கட்சி தலைவன்” தூள்—தூளாவான் -என்பார்கள்.நேற்றுவரை நம்மை தெரியாதவன் இன்று நமக்காக “தங்கத்தேர் “ இழுத்தேன் என்பான். மிளகாய் வத்தலை போட்டால் –உள் எதிரி—வெளி எதிரி—எல்லாரும் கருகிப் போவான் என்பார்கள். இல்லாத எதிரிகள் வற்றல் மிளகாயால் இருக்கும் எதிரிகளாவார்கள்.உனக்கு நடக்கும் இந்த திசைக்கு பரிகாரமாக சோட்டானிக்கரைக்கு போ---மாசாணி அம்மனை கும்பிடு—பச்சை துண்டை வெளியில் தெரியுமாறு போடு—என சொல்லும் “”ஐடியாக்களை” இந்த “”பவர் சீட் “நம்பவைக்கும்.

பக்கத்தில் ஒட்டிஉறவாடும் இந்த தினசரி போன் ஒட்டுண்ணிகள் மெயின் ரோட்டிலிருக்கும் நம்மை சந்துபொந்துகளுக்கு பதவி இறக்கம் செய்வார்கள். ஏற்கனவே நம்மைக்காத்த நல்லவர்களிடமிருந்து நம்மை அன்னியமாக்குவார்கள். ””தள்ளி நின்றால்தான் தலைவன் -எட்டிப்போ—என நம்மை ஒட்டவிடாமல் புதிய கீதை உபதேசம் செய்வார்கள். பழய சோற்றுக்காரனுக்கு புதிய கீதை அமிருதமாக தெரியும். மெயின் கூட்டதை விட்டு இப்படி கண்ணைக்கட்டி தன் கூட்டத்துக்கு இழுத்துக்கொள்ளும் இந்த காக்காய் கூட்டம். இதிலே விழாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

உழைப்பு—உண்மை—தன்னம்பிக்கை—இவைகளை மீறி உலகில் உள்ள ஒரே விஷயம் சகுனித்தனம் மட்டுமே. அது தற்காலிக வெற்றி மட்டுமே தரலாம்.அதன் பின் சென்றால் நாம் இவ்வளவு நாள் உழைத்து சம்பாதித்த இடத்தை ஒரேநாளில் இழக்கவேண்டியிருக்கும்.

கலைஞருடைய கதை கடைசியில் இங்கேதான் வருகிறது. பகுத்தறிவெல்லாம் வெறும் மேடை பேச்சுக்குத்தான். உள்ளே இருக்கும் ஆசைகளின் வெளிப்பாடாக கலைஞர் வெண்பட்டு உடுத்தி இருந்தால் நாம் அதை பார்த்து பரவசப்படுகிறோம். ஆனால் ராஜராஜனின் கோயிலை மிதித்தால் ஆட்சிகட்டில் நம்மை மிதிக்கும் என்னும் மூடநம்பிக்கை அவர்மனதில் ஓடி, அதற்காகத்தான் இது பரிகாரம்---. வேறுவாசல் வருகை,-- மேல்குலப்பெண்டிரின் நாட்டியத்தை காணவே இந்த மேட்டுக்குடி பட்டுடை—என்பது இருக்குமானால், இவ்வளவு நாள் பிரச்சாரம் செய்த –பகுத்தறிவை—மூடநம்பிக்கை ஒழிப்பை,--- “”ஓதிய தலைவன் உடைத்தெரிந்தான் --- படித்த தொண்டன் மட்டுமே பாது காக்கிறான் “”—என்ற நிலை உருவாகும்.

இதுதான் பட்டுடை மஹாத்மியத்தின் ரகசியம்


--

Saturday, October 2, 2010

அனுபவ பாத்யதை

வீடு இல்லாதவர்கள் இனி கவலைப் படவேண்டாம்--

சொத்து இல்லாதவர்கள் இனி வருத்தப்படவேண்டாம்--

வண்டியோ வாகனமோ இல்லாதவர்கள் இனி  துயரப்படவேண்டாம்--

அலஹாபாத் உயர்நீதிமன்றம் ஒரு அழகான முன்மாதிரியை நாட்டுமக்களின் நன்மைக்காக  காட்டியுள்ளது.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான்.

1.வாடகை வீட்டில் ஒருசில வருடங்கள் குடியிருங்கள்--வீட்டுக்காரன் காலி செய்ய சொன்னால் கோர்ட்டுக்கு போங்கள்...கோர்ட்--வீட்டின் ஒரு பகுதியை உங்களுக்கு எழுதித்தந்துவிடும்

2.யாருடையாவது நிலத்தில் சிலவருடம் குடிசை போட்டு குடியிருங்கள்..நில சொந்தக்காரனுக்கு தெரிந்து காலி பண்ண சொன்னால் கோர்ட்டுக்கு போங்கள்--கோர்ட் நிலத்தை உங்களுக்கும் குடிசையை நில சொந்தக்காரனுக்கும் தரச்சொல்லி  தீர்ப்பு வழங்கும்--உழைக்காமலே சொத்து உங்களைச் சேரும்

3.வாகனங்களை சில மாதங்களுக்கு வாடகைக்கு எடுங்கள்--திருப்பி கொடுக்காமல் கோர்ட்டுக்கு போங்கள்--முன் சக்கரம்  உங்களுக்கும் பின் சக்கரம் வண்டி ஓனருக்கும் என தீர்ப்பாகும்..

 அலஹாபாத் நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது.இனி மற்ற கோர்ட்டுகள் இதை தொடரும்

தமிழக அரசு இலவசங்கள் தருவது போல இனி "கோர்ட் இலவசங்களை" பெற கூட்டம் அலைமோதும்.கேசுகள் எகிறும்.

Friday, October 1, 2010

தீர்ப்பா?--பஞ்சாயத்தா?-


-சட்டம்--சாட்சியம்--ஆத
ாரம்--இவற்றின் அடிப்படையில் வழங்குவது--தீர்ப்பு--
மனு போட்டவருக்கெல்லாம் தன் இஷ்ட்டத்துக்கு பிரித்து கொடுப்பது பஞ்சாயத்து---
இது தீர்ப்பா?--பஞ்சாயத்தா
?

--