Pages

Sunday, October 31, 2010

மைனாரிட்டி---யார்--?

தலைப்பு வித்தியாசமாய் இருக்கிறது--
பிரச்சினைக்குரியதாக இருக்கிறது--அதிகமாக, பேசப்படும்--எழுதப்படும்--விவாதிக்கப்படும்--
ஆங்கிலச் சேனல்களில் அடிக்கடி--”big fight " செய்யப்படும் தலைப்பாக இருக்கிறதே--
இப்படி ஒரு சிந்தனை வருவது நமக்கு இயல்புதான்.

ஜாதி--மொழி--மதம்--இனம்--நிறம்--பணம்--அழகு--அந்தஸ்து---படிப்பு---இவைகளின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது--மைனாரிட்டி--மெஜாரிட்டி--
உண்மையில் இந்த லிஸ்டில் இல்லாத --மனமும்--குணமும்தான் -மையினாரிட்டி ஆக உள்ளது..

இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் மைனாரிட்டி--மெஜாரிட்டி---பிரிவினை--உலகில் எந்த நாட்டிலும் இருப்பதாக தெரியவில்லை--
நம் இந்திய அரசியலார்கள் உலகின் மிகச் சிறந்த தலைவர்கள்--இதற்குமேல் இந்திய மக்களை ஜாதி--மொழி --மதத்தால் பிரிக்க முடியுமா--என உலகிற்கு சவால் விடுபவர்கள்.அவ்வளவு ஜாதி---அவ்வளவு மதம்--அவ்வளவு மொழிப் பிரிவினைகள்--நாளுக்கு நாள் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே வருகிறது.

காஷ்மீரத்து மக்கள் நான் இந்தியன் இல்லை என்கிறார்கள்--அதை  ஆதரித்து ஒரு கூட்டம் குரல் எழுப்புகிறது--இது தேச விரோதம் என்கின்றனர் நல்லவர்கள்--நடுநிலையாளர்கள்--அரசியல் சட்டமுமே அப்படித்தான் சொல்கிறது--இல்லை..இல்லை --இது பேச்சுரிமை---எங்களை யாரும் தடுக்கமுடியாது என்கிறது ஒரு கூட்டம்--
தேசம் எனபது ஒரு வரையறுக்கப்பட்ட “”நிலப்பரப்பு”--இது மற்ற நாடுகளுக்கு-----நம்மைப் பொறுத்தமட்டில்--நம் தேசம் எனபது “நிலப்பரப்பு “”மட்டுமல்ல--
அது அத்தனை ஆன்மாக்களின் சங்கமம்.
இதயங்களின் பூஞ்சோலை--எண்ணங்களின் மலர்ப்படுகை---
ஆங்கிலத்திலே ஒரு அழகான வாக்கியம் உண்டு..
””house is built by bricks--home is built by HEARTS '--என்பார்கள்-- 
INDIA IS BUILT BY HEARTS --

நாம் காஷ்மீரத்துக்கு செய்ததெல்லம் சொன்னால் அது கணக்கிலடங்காது---சொல்லிக்காட்டுவதும் நமது இயல்பு அல்ல--

ஒரு சிலர் தூண்டி விடுகிறார்கள்--ஒரு சிலர் தூபம் போடுகிறார்கள்--ஒரு” சில பேச்சுரிமை வாதிகள்”---எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுகிறார்கள்--

இந்திய கலாச்சாரதையும்--பண்பாட்டையும் --கட்டிக்காத்து--இத்தேசத்தை புனர் நிர்மாணம் செய்யும் பணியில் தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஒரு மகா புருஷர் சொன்னர்--

””முஸ்லீம் கிருஸ்தவர்கள்--வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல--நம் சொந்த சகோதரர்கள்---கொஞ்சம் காலத்திற்கு முன்பு ஏதோ காரணத்திற்காக மதம் மாறியவர்கள்--அவர்களை ஒதிக்கி வைத்து விட்டு நாட்டை ஆளுவது எனபது அறியாமைதான் --”-நாமும் இந்த நாட்டின் மூதாதையர்கள்--என்ற எண்ணத்துடன் இரண்டர கலக்க வேண்டியதும்” அவர்களுடைய கடமைதான் ”--என்றார் அந்த பெரியவர்..
அப்படிப் பார்த்தால் இங்கு ஏது--மைனாரிட்டி--மெஜாரிட்டி--எல்லாரும் இந்நாட்டவர்தானே-
வேற்று நாட்டிலிருந்து இங்கு வந்தவரே உண்மையில் மையினாரிட்டி
--

2 comments:

மதுரை சரவணன் said...

அருமை. பெரியவருக்கு ஏற்பட்ட உணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும்... அப்படி உணர்வு இரு தரப்பினருக்கும் மாற வேண்டும்... பக்ரிவுக்கு வாழ்த்துக்கள்

தமிழ்மலர் said...

கோவையில் இருந்து தற்போது வெள்ளிக்கிழமை தோறும் வெளிவரும் தமிழ்மலர் வாரசெய்தி இதழ், வரும் தை திங்கள் முதல் நாளிதழாக வெளிவர உள்ளது.

தமிழ்மலர் நாளிதழுக்காக செய்தியாளர்கள், படைப்பாளிகள், புகைப்பட நிருபர்களை தெரிவுசெய்து வருகிறோம்.

இணையத்தில் தங்கள் படைப்புகளை திறமையாக வெளிப்படுத்தி வரும் வலைப்பதிவர்கள், அச்சு ஊடகம் வழியாகவும் திறமைகளை வெளிப்படுத்த முடியும்.

கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம், வால்பாறை, மேட்டுபாளையம், ஊட்டி, பல்லடம், பாலக்காடு உட்பட கோவையின் சுற்றுவட்ட பகுதியில் உள்ள வலைப்பதிவர்கள் தமிழ்மலர் செய்தித்தாளில் இணைந்து பணியாற்றலாம்.

பத்திரிக்கை துறையில் பணியாற்ற விருப்பம் உள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்.

தமிழ்மலர்
116 - 2 வீதி தொடர்ச்சி
100 அடி ரோடு, காந்திபுரம்
கோவை - 12.
0422 - 3042804

9787678939
.........................
211 , நஞ்சப்பா ரோடு
கோவை - 18
0422 - 4364545
.................................
tamilmalarnews@gmail.com , http://tamilmalarnews.com/