Pages

Wednesday, October 13, 2010

சிலி மீட்பு பணி--நம்மனித வலிமையின் வெளிப்பாடு
ஆகஸ்ட் மாதம் 5ந்தேதி அதிகாலை—சிலி நாட்டின் வடபகுதியில் உள்ள “”காப்பியாபோ””நகரத்தின் ‘’தங்கம் மற்றும் தாமிர சுரங்கம்” திடிரென மூடிக்கொண்டது. பூமியிலிருந்து அரை மையில் ஆழதில் 33 தொழிலாளிகள் சிக்கிகொண்டனர். விபத்து நடந்து 17 நாட்களுக்கு பின்னரே அவர்கள் உயுருடன் இருப்பது தெரியவந்தது.

இதற்கு பின்னர் நடந்ததுதான் உலகசரித்திரத்தின் மிகமிக முக்கியமான பக்கங்கள். அமெரிக்க விண்வெளி நிலயம் “நாசாவின் “’உதவியுடன் சுரங்கத்தொழிலாளரகள் இருப்பிடம் கண்டுபிடிக்கப் பட்டு சிறு குழாய்கள்மூலம் அவர்களுக்கு ஆக்ஸிஜன் -உணவு –மின்சாரம் முதலியன அனுப்பப்பட்டன.
அவர்களோடு பேசுவதற்கான கருவிகள், டி.வி.நிகழ்ச்சிகள் பார்க்க வசதிகள் உண்டாக்கபட்டன. தொழிலாளர்களின் உறவினர்களோடு பேசவைக்கபட்டனர்.

இதற்குள் சிலி கடற்படை தயாரித்த மீட்பு இயந்திரங்கள் 40 லாரிகளில் கொண்டுவரப்பட்டன. ஒரு கால்பந்து மைதானம் அளவு கான்கிரீட் தளம் போடப்பட்டு அதில் இரண்டடிக்கும் சற்று கூடுதலான அகலத்துக்கு –668 மீட்டர்—சுமார் 2200 அடி ஆழத்துக்கு ஆழ்துளை போடும் பணி துவக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானத்தில் துளை போட்டுக்கொண்டிருந்த அமெரிக்கர்—அமெரிக்காவில் பணியிலிருந்த சுரங்க நிறுவனங்கள்—வரவழைக்கப்பட்டு—பணியை மேற்கொண்டனர்.

முதலில்—சிக்கிகொண்ட தொழிலாளர்களை நெருங்க 2 மாதம் ஆகும் என கணக்கிடப்பட்டது—ஆனால் பணி துவக்கப்பட்ட உடனேயே துளையிடும் கருவியின் வேகத்தினால்—45 நாளில் முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.   ஒன்றில் பிரச்சினை ஏற்பட்டாலும் மற்ற இரண்டு காப்பாற்றும் என்பதால் ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் துளை போடும் பணி துவங்கியது.

சிக்கிய தொழிலாளியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்—உள்ளே இருப்பவர்களுக்கும்—மற்றும் துளைபோடும் மீட்பு குழுவினருக்கும்—உற்சாகம் கொடுக்க மீட்பு பகுதியில் திரண்டனர். 24 மணிநேரமும்—ஆட்டம்—பாட்டம் –கொண்டாட்டம்—என உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

அக்டோபர் மாதம் 9ந்தேதி  66 ஆம் நாள் –ஆழ் துளை குழாய் சுரங்கத்தில் சிக்கியவர்கள் அருகே சென்றடந்துவிட்டது. 13 ந்தேதி---- முதல் தொழிலாளி-- மீட்கப்பட்டு விடுவார்.

சிலி நாடு உலகின் வரைபடத்தில் கடுகளவே உள்ளது. 1989இல் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர்—அந்நாடு உலகுக்கு தெரிவது இந்த சுரங்க விபத்து மூலம் தான் .
தங்கம் மற்றும் தாமிர சுரங்கம்—பழ ஒயின் -இதுதவிர சிலியில் சொல்லிக்கொள்ளும் படியாக ஒன்றும் இல்லை. “”நம் நாட்டுக்கு ஒரு கால் பந்து அணி இல்லையே—கொலம்பியா--”ஷகிரா”’--போன்ற ஒரு பாப் பாடகி இல்லையே-- என்பது சிலி மக்கள் வருத்தம்.

ஆனால் இந்த சுரங்க விபத்தின் ஒற்றுமை நாட்டு மக்களுக்கு அந்த வருத்தத்தை போக்கிவிட்டது.ஒவ்வொரு வீட்டின் முன்பும் “நம் வலிமையை காண்பிப்போம் “”என்கிற வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. சுரங்கத்துக்குள் செல்லும் மீட்பு குடுவைக்கு அவர்கள் வைத்துருக்கும் பெயர் “”ஃபோனிக்ஸ்”—பீனிக்ஸ் பறவையின் பெயர்—எரித்து சாம்பலானாலும் மீண்டும் உயிர்த்தெழும் பறவையின் பெயர் சிலி மக்களின் மனத்திடத்தின் அடையாளம்.

முதலில் 4 வலிமையான –திடகாத்திரமானவர்கள் மீட்கப்படுவர்—சுழன்று மேல்நோக்கிவரும் குடுவையின் 20 நிமிட பயணத்தை தாக்கு பிடித்து –மற்றவர்களுக்கு நம்பிக்கை உண்டாக்கவே இந்த பலசாலிகள்—அடுத்து 10 சீக்காளிகள்—கடைசியாகவே 33 பேரின் மூத்த அதிகாரி—நம்மூர் என்றால் தலைவன் தானே முதலில் வருவான்…

இந்த சுரங்க மீட்பு “ஆப்பரேஷன்””உலக வரலாற்றில் மிகமிக அதிசயம்—ஒரு பக்கம் மீட்புப் பணி—மறு பக்கம் சுரங்கத்துக்குள் சிக்கியவர்களுக்கு “”நம்பிக்கை கொடுக்கும் பணி”’—மூன்றாம் பக்கம் வெளியே உள்ள மக்களின் அசாத்திய ஒத்துழைப்பு—ஒற்றுமை—பிரார்த்தனை.—சிக்கிகொண்ட தொழிலாளர்கள் அத்தனை பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்கள் குடும்பத்துடன் ஒன்றுசேர நாம் இந்தியர்களும் பிரார்த்தனை செய்வோம்—

சிலி நாட்டு மக்களின் ஒற்றுமை போல —ராமர் கோயில் விஷயத்தில் இந்திய நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது அல்லவா…   

1 comment:

இளைய அப்துல்லாஹ் said...

மிக நல்ல கட்டுரை நாங்கள் பி பி ஸி இல் லைவ்வாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்