Pages

Wednesday, August 25, 2010

கடுகைக்கொண்டு பேயை விரட்டும் திட்டம்

                                    

மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டம் கலைஞரின் 100 நாள் வேலைத்திட்டமானது--ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் மளிகை சாமான் பாக்கட்டில் மளிகை சாமான்களை விட பெர்ர்ர்ரிய--- கலைஞர் படம் ---ஏதோ அவர் வீட்டு காசை எடுத்து இலவசமாய் மக்களுக்கு கொடுப்பது போன்ற தோரணை --””எல்லாப்புகழும் கலைஞருக்குத்தாந் “”என்கிறது-- திமுக கோஷம். தற்போது தொடங்கப்பட்ட சினிமாக்காரர்களுக்கான நகரம் கூட “”கலைஞர் சினிமா நகரமாம்--மருத்துவ காப்பீட்டு திட்டமும் கலைஞர்காப்பீட்டு திட்டமாம் “”---இப்படிப்பட்ட கூத்துக்கள்  தமிழ் நாடு தவிர வேறு எங்கு நடக்கும்?  . பெருமைகள் எல்லாம் இவர்களுக்காம்--சிறுமைகளை சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது.---உடனே வயதை காரணம் காட்டி கலைஞர் கடிதம் எழுத ஆரம்பித்து விடுகிறார்.

இந்த 100 நாள் வேலைத்திட்டதில் ஊழலோ--- ஊழல் ....தினசரி பேப்பர்களில் பல செய்திகள்--சொன்னவை குறைவு--சொல்லாமல் விட்டதே அதிகம்--

100 நாள் வேலைத்திட்டதில் ஊழல்--திமுக  பஞ்சாயத்து தலைவர் கைது---100 ரூபாய்க்கு 50 தான் தருகிறார்கள்..மீதி எங்கே?--100 நாள்வேலைத்திட்டதில் போட்ட சாலைகள்--பாலங்கள்--ஒரே மழையில் அவுட்--தண்ணிரில் கரைந்து போனது----இப்படி செய்திகள்பேப்பர்களை நிறைத்து வந்துகொண்டிருக்கிறது
பரம்பரை விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்கவில்லை--அரைகுறை வேலையும்--அரைநாள் வேலையும் செய்தே பழக்கப் பட்டுவிட்டதால், விவசாய வேலை செய்வது கூலிகளுக்கு இஷ்டமில்லாமல் போய்விட்டது.

இத்திட்டதின் நதி மூலம்---
ஜீன் டிரிஸ்   என்கிற பெல்ஜியம் நாட்டுக்காரர்--டெல்லி ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸில் வேலை பார்த்த பொருளாதரா நிபுணர் இவர்---இவரிடமிருந்து மார்க்ஸிஸ்டுகள் இறக்குமதி செய்து .மூ.கூட்டணியில் இருக்கும்போது காங்கிரஸை பிரஷர் கொடுத்து கொண்டுவந்த திட்டம்.

எப்போதும் போல காங்கிரஸ் இதற்கு “”மஹாத்மா காந்தி கிராமப்புர வேலை உறுதித் திட்டம் “” என நாமகரணம் சூட்டி சுருட்டலை துவக்கியது.

2007--08 இல் 11,000/= கோடி ரூபாயுடன் 593 மாவட்டங்களில் அமுல் படுத்த துவங்கி--- 2009-10 இல்-- 39,100/---கோடியென இப்போது கஜானாவுக்கு பெரும் கலக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.

இத்திட்டதில் சொல்லப்பட்ட எந்தவொரு விதிமுறையும் கடைபிடிக்கப்படுவதில்லை.  --””பாப்பாத்தியம்மா--மாடு வந்துடிச்சு--கட்டுன்னா..கட்டு--””என்பதுபோல--””எரிகின்ற வீட்டில் பிடிங்கிய வரை ஆதாயம் “” என்பதுபோல-- சுருட்டல் மட்டுமே நடக்கும் திட்டமாக  இன்று இது இருக்கிறது.

திட்டம்---
இத்திட்டதிற்கான பயனாளிகளை தேர்ந்தெடுக்க பல் வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். பயன் வேண்டுவோர் ஒவ்வொறு கிராமத்திலேயும் உள்ள கிராம பஞ்சாயத்தில் தங்களுடைய பெயர்--முகவரி--புகைப்படம்--இவற்றுடன் எழுத்துபூர்வமாக விண்ணப்பம் தரவேண்டும். அதை பஞ்சாயத்துக்கள் பரிசீலித்து--சரிபார்த்து--அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும். அட்டை கிடைத்த 15 நாளுக்குள் வேலை கிடைக்காவிட்டால், முழுச்சம்பளமும் இலவசமாக வழங்கப்படும்.

வேலைகள்-----

இப்போது--ஒருகல்லை இங்கிருந்து எடுத்து அங்கு போடுவதும் --ரோட்டோரம் புல் பிடுங்குவதும்---அரை நேரம் மம்மட்டியுடன் அலைந்த பிறகு மதியத்திற்குமேல் “”டாஸ்க்மாக் “”சென்று குவாட்டர் அடித்து காசில்லாமல் வீடு திரும்புவதும்--முதல்வர்--துணை முதல்வர் பொதுக்கூட்டதிற்கு கூட்டம்காட்ட செல்வதுமே -- இத்திட்டதின் வேலைகளாக இருக்கிறது. ..

ரி குளங்களை தூர் வார்வது---புதிய ஏரி--கண்மாய்--குளங்களை வெட்டுவது,--கிராமப்புர சாலைகள்--மற்றும் புதிய இணைப்புசாலைகள் அமைப்பது---புதிய செக்--டாம் அமைப்பது---காடுகளை வளர்ப்பது--பயிர் அறுவடை செய்வது---வெள்ளத்தடுப்பு மற்றும்பாதுகாப்பு-- போன்ற ஆக்கபூர்வ பணிகளை செய்வதே-- இத்திட்டதில் சொல்லப்பட்டவை  ..ஆனால் இவை எங்கே நடக்கிறது--நல்லவை  நடக்கவில்லை எனபதை நாடறியும்.

கிராமப் பஞ்சாயத்துகள் இத்திட்டதின் பயனாளிகளை கண்டறிந்து அதற்கான பட்ஜட்டை தயார் செய்து அனுப்பினால் அக்கிராமத்தில் வேலை இருந்தாலும் இல்லாவிட்டலும் முழுநிதி ஒதிக்கீடு செய்யப்படுகிறது என்பதால்---- திமுக காட்டில் அடை மழை பெய்கிறது. இதில் வேலை செய்வோறுக்கு நிர்ணயித்த 100 ரூபாய் கிடைப்பதில்லை எனபது மட்டுமல்ல 50 கிடைப்பதே அரிதாக உள்ளது. திட்டம் நிர்ணயித்த வேலைகளில் 40 சதவீதம் கூட செய்யப்படுவதில்லை என்பதை பொதுக் கணக்குக் தணிக்கை குழு பலமுறை சுட்டிக்காட்டியும் அரசும் அதிகாரிகளும் திருந்திய பாடில்லை.

2,லட்சம் அடயாள அட்டைகள் வழங்கப்பட்ட பகுதியில் 50 ஆயிரம் பேர்களுக்குக் கூட வேலை தரப்படுவதில்லை.
என ஒரு ஆய்வு சொல்கிறது. ஆனால் முழு ஒதிக்கீடான 118 கோடி ரூபாயும் எப்படி செலவு செய்யப்பட்டது என்றுதான் தெரியவில்லை.அது ஆளூம் திமுக காரர்கள் பையை நிரப்பியது மட்டுமே உணமை.

திமுகவினர் யார் கண்ணிலும் மண்ணை தூவுவதில் கைகாரர்கள். ஆறு மாதத்திற்க்கொருமுறை 2 மாவட்டதிலுள்ள-- 2 கிராமதிலுள்ள 2 திட்டங்களை தேர்வு செய்துஅதில் 5 விவசாயிகளை நேரடியாக விசாரிக்க பார்வையாளர்களை மத்திய அரசு நியமிக்க வேண்டும் நியமிக்கப்படுபவர்கள்—திமுக மற்றும் காங்கிரஸ் காரர்கள். அப்போ இத்திட்டம் எந்த லக்‌ஷணதில் செயல் படுகிறது என்பது  தெரிகிறதல்லவா?

இத்திட்டத்தினால் விவசாயி பெயரில் ஆளும் கட்சிக்காரகளுக்கு கைநிறய காசு.---

இந்த 5 ஆண்டுகளாக -- பாரம்பரிய விவசாயம் பாழ்பட்டுபோனது. விளைச்சல் சுருங்கிப்போனது.விளை நிலம் கருகிப் போனது..கிளை, வட்டச் செயலாளர்கள் வீடுகட்டிக் கொண்டார்கள்—பஞ்சாயத்து உறுப்பினர்கள் பெரும் பணமுதலைகள் ஆனார்கள்—எற்கனவே மழை பொய்த்து—காவிரி வற்றி—மூணு போகம் இரண்டாகி—ஒன்றானது—அதற்கும் விவசாய கூலிகள் கிடைக்காததால் அதுவும் இன்று உருகுலைகிறது..

இன்னும் ஐந்து ஆண்டுகளில் உணவு தானியங்கள்—ஏன் காய்கறிகள் கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட இத்திட்டம் பெரும் பாடுபடுகிறது

ஒரு வீட்டில் ஒரு பேய் புகுந்துகொண்டது.பேயைவிரட்ட மந்திரவாதி வரவழைக்கப்பட்டான். அவன் சொன்னான்-நான் பேயை கண்டுபிடித்துவிட்டேன் -- பக்கதிலுள்ள கல்லறைக்கு நாளைகாலை சென்று ஒரு கடுகு பொட்டலத்தை புதைதுவிடு--.பேய் வராது-- என்றான். . அவர்களும் அவ்வாறே செய்தனர்..அன்றிரவு பேய் வரவில்லை. மந்திரவாதியிடம் காரணம் கேட்டனர். அவன் சொன்னான்-- -ராத்திரி வெளியே கிளம்பும் பேய் கடுகு பொட்டலத்திலுள்ள கடுகை ஒவ்வொன்றாக எண்ண ஆரம்பிக்கும்—எண்ணி முடியும்போது பொழுது விடிந்துவிடும்—அதனால் பேய் வரவில்லை.. தினசரி இதையே தான் செய்யும் –கவலைபடாதீர்—என்றான்.

அதுபோல வேலையில்லா திண்டாட்டம்-போக்க---விவசாயம் வளர்ச்சிபெற --எதுவும் செய்யாத கைய்யாலாகாத இந்த அரசு 100நாள் வேலைத்திட்டம் என்ற உதவாக்கரை திட்டத்தை கொண்டுவந்து அரைகுறை வேலைகொடுத்து பேயை திசைதிருப்ப முயல்கிறது—இந்த கடுகு என்று முளைக்கப்போகிறதோ—பேய் என்று வெளியே வரப்போகிறதோ? கையும் சூரியனும் மறையப்போகிறதோ?

Saturday, August 21, 2010

மர்மமாகிப்போன கலைஞரின் வேகம்


””மாநில அரசின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கும் மத்திய அரசின் செயல் வருத்தம்  அளிக்கிறது””.--இது முதல்வர் கருணாநிதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய பேச்சு.

கருணாநிதிக்கு என்ன ஆனது------அவரா இப்படி பேசினார்-----எப்போது அவர் ஸ்டேட்ஸ்மென் ஆனார்------எப்படி அவருக்கு இந்த அரசியல் முதிர்ச்சி வந்தது-----இது திமுக பாணி இல்லையே-----இது கலைஞர் ஸ்டைல் இல்லையே-----இப்படியெலொலாம் பலர் நினைக்கிறார்கள்.

யாரவது ஒரு பத்திரிக்கைகாரன் இவரயோ--இவர் குடும்பத்தினரையோ லேசாக விமர்சித்துவிட்டாலே---- போனைப்போட்டு ஆசிரியரை மிரட்டுவது இவர் பழக்கமாயிற்றே--””தொட்டுப்பார்-
-பேசிப்பார்--முடிந்துபோவாய்--தொலைத்துவிடுவேன்””  -----என சவாலும் ராவடி அரசியலும் செய்யும் திமுக--””-மாநில சுயாட்சியே உயிர் மூச்சாக கொண்ட திமுக ””--””ஐய்யா--சாமி”””--- என காங்கிரஸை  கெஞ்சும் நிலை வந்ததற்கு என்ன காரணம் --
இதுவரை எங்களுக்கு ஆட்சியில் பங்கில்லையா--அரசில் பங்கில்லையா----உரிய மரியாதை இல்லையா---உங்கள் திட்டமெல்லாம் மத்திய அரசின் மாநிலத்திலேயேதான் நடக்கிறது---என்று மட்டும் பேசிவந்த இளங்கோவன்---காங்கிரஸ் நட்பு வட்டம் என்னும் அமைப்பின் உண்ணாவிரத்தை முடித்துவைத்து பேசும் போது “’சென்னை பொது மருத்துவமனைக்கு “”ராஜிவ் காந்தி” பேரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளர். ""நாளையே   கூட்டணி   மாறலாம் "" என  திமுக விற்கு “”பேதி மாத்திரை “”கொடுத்துள்ளார்.

இந்தியா முழுவது ராஜிவ் காந்தி பெயரி.ல் பலதிட்டங்கள்--கட்டிடங்கள்--ரோ
டுகள்--இருக்கின்றன--அப்புறம் ஒரு ஆஸ்பத்திரிக்கு அவர் பெயரை வைக்கலன்னா காங்கிரஸுக்கு என்ன பெரிய பாதிப்பு வந்துடப்போவுது.
”அவரை விடச்சொல்லு --நா--வீட்டுடறேன்---என இளங்கோவன் ஏன் கலைஞருடன் மல்லுக்கட்டுகிறார்.

ஒருவேளை அவருடைய அப்பா ஈ.வீ.கே. சம்பத்தை அநியாயமா திமுகவிலிருந்து தூக்கி எறிய கலைஞர்தான் காரணம் என்று இளங்கோவன் நினைக்கிறாரோ--
திமுக அடுத்த தலைவர் தம்பி சம்பத்துதான் என அண்ணாவால் அடயாளம் காட்டப்பட்ட தன் அப்பாவை அநியாயமாய் டிஸ்மிஸ் செய்த கலைஞரை ஒரு “”கை ‘”பார்ப்போம் என “”கை “ கட்சியில் சேர்ந்து இளங்கோவன் செய்யும் கலாட்டாவா இது.

அல்லது அம்மா சுலோச்சனா தூண்டுதலில் அதிமுக கூட்டுக்காக கலைஞரை கலைக்கிறாறா----

ஆனால் ஒன்றுமட்டும் வருத்தமாக இருக்கிறது--சீறீக்கொண்டிருந்த கலைஞர் சிங்கத்தை இப்படி “”முனகும் படி “” வைத்துவிட்டதே காங்கிரஸ். காஷ்மீருக்கு சுயாட்சி என வாய்தவரி அறிவித்த மன்மோகன் சிங்--அந்த அறிவிப்பை வைத்துக்கொண்டு காங்கிரஸை கலைஞர் என்ன பாடு படுத்தி இருப்பார்.இந்நேரம். அப்படி எல்லாம் இந்த வயசான காலத்துல செய்யவிடாமல் வாயக்கட்டி போட்டுரிப்பது வருத்தமாக உள்ளது.

ஆனாலும் நம்ம தமிழின தலைவரில்லையா--அவரை காங்கிரஸ் சீ ண்டுவது ஏற்றுக்கொள்ள முடியாததுதான்.

திமுக ஆட்சியை அகற்றவேண்டும் என குரல் கொடுக்கும் பாஜக---அதற்கு எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என கேட்டுக்கொள்ளும் பாஜக---தேஜ..கூட்டணியில் திமுகவை எவ்வளவு மரியாதையோடு நடத்தியது.

கோட்டைக்குள் ஏதோ குத்து வெட்டு நடக்குது---கூட்டணிக்குள் எதோ சத்தமில்லாமல் நடக்குது. என்னதான் எதிரணியில் இருந்தாலும் மூத்த தலைவர் கலைஞரை காங்கிரஸ் அவமதிப்பது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதுதான்

Friday, August 20, 2010

விமான கடத்தலுக்கு மரண தண்டனை--பார்லி...அட்டாக்குக்கு மன்னிப்பு---வித்யாசமான நாடு

விமான கடத்தலுக்கு மரண தண்டனையாம் --புதிய சட்டம் வருகிறதாம்.
பாக்கிஸ்தானிலிருந்து கடல் வழியாக வந்து மும்பையை தாக்கி நாசம் செய்தவர்கள்
பார்லிமெண்ட்டை தாக்கியவர்கள்-- இந்திய இறையாண்மைக்கு சவால் விட்டவர்களுக்கு---- 10 ஆண்டு சிறை அல்லது--மன்னிப்பு என்பன.

விமானத்தில் பயணம் செய்பவர்கள் உயிர் உயர்ந்தது--மற்றவர்கள் உயிர் தாழ்ந்தது.அதைவிட நாட்டின் தன்மானம் மிகத் தாழ்ந்தது. ஆம் இப்போதைய ஆட்சியாளர்கள் அப்படித்தன் நினைக்கிறார்கள். 

பாக்கிஸ்தானில் வெள்ளம்--இந்தியா 5 மில்லியன் டாலர் நிதியுதவி--இது மனிதாபிமானம்--சரி--இந்தப் பணம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தான் போகிறது எனபது என்ன நிச்சயம்-- இலங்கை ராஜபக்‌ஷே மாதிரி தமிழர்களுக்கு நாம் கொடுத்த பணத்தை தமிழர்களை கொல்ல பயன்படுத்திய மாதிரி--5 மில்லியன் டாலரை நமகெதிராக குண்டுவைக்க பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. பயன்படுத்தாது என்பது என்ன நிச்சயம்.  இப்போதைய ஆட்சியாளர்களின் விவேகமற்ற சிந்னைக்கு இது மேலும் ஒரு உதாரணம்

எப்போ--- எம்.பி---- ஆகப்போறீங்க ?

ஒழைப்புக்கேத்த கூலி--வேலைகேத்த சம்பளம்-----இது பழய--புதிய --மொழி

இன்னிக்கி பார்லிமெண்ட்ல அல்லா எம்.பிக்களும் கட்சி பேதமின்றி சம்பள உயர்வுக்கு கூச்சல் குழப்பம் செய்திருக்கிறார்கள்.

சாதரணமாக நமக்கு தெரிந்து நல்ல வேலை செஞ்சால்--நெறையா வேல செஞ்சால்--நிறய--நிறைவாய்--சம்
பளம் கேக்கலாம்--கொடுக்கலாம்.

இவங்க பாதி நாள் பார்லிமெண்டுக்கு வர்ரதே கிடயாது--வர்ர நாளும் கூச்சல்--குழப்பம்--பார்லிமண்னட  நடத்தவிட்ரதே கெடையாது

இந்த ஒலகத்திலெ வேல செய்யாமலே சம்பள உயர்வு கேப்பது கம்யூனிஸ்ட்களுக்கு அடுத்து நம்ம எம்பிக்கள்தான்.

அதனால தான் எனக்கு ரொம்ப ஆசஆசயா இருக்கு நாமளும் எம்பி ஆனா என்னன்னு-- நீங்களும் வர்ரீங்களா? ரெண்டு பேரும் ஆவம்.

Tuesday, August 17, 2010

ஓட்டு--நோட்டு-- கலைஞரின் டாப் சீக்ரட்””துன்பம் வரும் வேளையிலே சிரிங்க --வள்ளுவனுக்கு நன்றி----6800 கோடி ரூபாய். 15 லக்‌ஷம் மின்மோட்டார்
கள்--எத்தனை கமிஷனோ -எத்தனை ஊழலோ----இப்படி திட்டம் போட எத்தனை புத்தி வேண்டும் ---இது தமிழ் நாட்டுக்கு துன்ப வேளை--அதாவது சிரிக்கும் வேளை.

போலீஸ் ஸ்டஷன்களில் திருடர்கள் ( பெரிய இடத்துகாரர்கள் என்றால் மரியாதையாக சொல்ல வேண்டுமல்லவா? ) ரெக்கார்ட் இருக்கும்.ஒவ்வொரு திருடருக்கும் (மறுபடியும் மரியாதை ) ஒரு டெக்னிக்------------”பீரோ புல்லிங் “” திருடர் ----------வீடு திறந்திருந்தாலும் வீட்டுகுள் வரமாட்டான். அவனுக்கு ஜன்னல் வழியே திருடியே பழக்கம்.

பிட் பாக்கெட்----------உள்ளாடையில் காசு வைத்திருந்தாலும்--அடிச்சிடுவா
். நகைத் திருடன்------ “”டாக்குமெண்ட்களை எடுக்கமாட்டான் -உண்டியல் திருடன்------ சில்லரையை தொடமாட்டன், நோட்டைமட்டும் எடுத்துகொள்வான். வெள்ளியமட்டும் திருடும் “சில்வர் சீனிவாசன்”” மாதிரி திருடர்களும் உண்டு .

திமுக ரொம்ப கௌரவமான கட்சி------மக்கள் பணத்தை நேரடியாக “சுட “மாட்டார்கள். நல்ல நல்ல திட்டங்களை போட்டு “”அள்ளி க் “”கொள்வார்கள்.

மேலே சொன்ன திருடர்களுக்கும் இவர்களுக்கும் நீங்கள் தயவு செய்து முடிச்சு போடாதீர்கள்

மக்களுக்கு இவர்கள் செய்யும் நன்மைகளை பார்த்து---- ----ஏதோ தொழில் அதிபர்கள் சும்மா----- 1000-------2000 கோடி டிப்ஸ் கொடுக்கிறார்கள். அதை வேண்டாவெறுப்பாக இவர்கள் பெற்றுக்கோள்கிறார்கள்.

இப்பகூட விவசாயிகளுக்கு நன்மை செய்ய 15 லட்சம் மின் மோட்டார் கொடுக்க போகிறார். இந்த காலத்துல யார் இப்படி கொடுப்பாங்க. கொஞ்ச நஞ்ச பணமா?-------6800 கோடி-------தொழிலதிபர் களெல்லாம் இவ்வளவு செலவு செய்யும் கலைஞருக்கு நாம ஏதாவது திருப்பி செய்யணுமேன்னு--------ஏதோ அவங்களால முடிஞ்சது------- ஒரு 1700 கோடி ( வெறும் 25 % தான் ) சபை மரியாதை ----திருப்பி செய்றாங்க------விவசாயியெல்லாம் மனங்குளிர்ந்து ஓட்டுப்போடலாமென்றால்---எதிர்க்கட்சியெல்லாம் பொய்பிரச்சாரம் செய்றாங்க--

கொடுக்கப்போற மோட்டார்ல பாதி ----போலி-----மீதி பழசு------கட்சிக்காரங்களும் அதிகாரிகளும் ஆளாளுக்கு காசடிப்பாங்க--””கரண்டே இல்ல--வெறும் மோட்டார வெச்சுக்கிட்டு என்ன பண்றது--------இப்படி வேண்டாத “கமண்ட் “ எல்லாம் அடிக்கிறாங்க.

இப்பிடித்தான் -இலவச டி.வி.க்கும் கமண்ட் அடிச்சாங்க------டி.வி. இங்கே--கரண்ட் எங்கேன்னு------பல கிராமங்கள்ள கேக்கிறாங்கன்னு----- பல பத்திரிக்கைல எழுதினாங்க.

ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தார் கலைஞர்------மக்கள் சதோஷமானாங்க.---- கட்சிக்காரங்க சந்தோஷமடைய வேண்டாமா? கேரளால அரிசி இல்லாம ஜனங்களெல்லாம் கஷ்ட பட்றாங்க -- நாம அவ்ங்களுக்கு அரிசி கொடுப்போம்னு--- லாரி லாரியா உடன் பிறப்புக்கள் எடுத்துகிட்டு போனாங்க. இந்த நல்லெண்ணத்த புரிஞ்சுகிட்ட போலிஸ் “”அரிசி கடத்தல் அது இதுன்னு “”அவங்க மேல அனாவசியமா “ வழக்கு போடல்ல. இதப்போய் ஜெயலலிதா ஏன் பெரிசு பண்றாங்கன்னு தெரியல்ல.

தேர்தலுக்கு முன்னால இன்னும் பல பெரிய திட்டங்கள் கலைஞர் வசம் உள்ளது-
அதற்காக குஷ்புவுடன் கலைஞர் அவசர ஆலோசனை நடத்தவுள்ளார்.
-விரைவில் அறிவுப்புகள் வரும்

மீண்டும் இலவசம்--குஷ்புவுடன் கலைஞர் அவசர ஆலோசனை
விவசாயிகளுக்கு இலவச மின் மோட்டார் வழங்கிய பிறகு --மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்த கலைஞர்--தன் ஆட்சி முடிவதற்குள் இன்னும் என்னென்ன இலவசங்கள் கொடுக்கலாம் என்பதற்கு ஆலோசனைக் கூட்டம் கூட்டினார்.

சிறப்பு அழைப்பாளர்கள்---நடிகை குஷ்பூ--துரைமுருகன் -பொன்முடி--கவியரசு வைரமுத்து-- கனிமொழி--ஸ்டாலின் ---அழகிரி

கலைஞர்----திருக்குவளையில் பிறந்து “”குவளை “ தண்ணிருக்கு ஏங்கிய நான் இன்று ஏழை விவசாயிக்கு தண்ணீர் கிடைக்க இலவச மின் மோட்டார் தருகிறேன். அண்ணா........ கனவில்...... பெரியார் சொன்னதை..... நான் நிறைவேற்றுகிறேன்.

ஆற்காட்டார்----------தலைவரே... கரண்டே இல்லாதபோது--மோட்டார் கொடுத்தா --இருக்கற ஏத்து போதாதுன்னு --மேலும் ஏத்து எனக்குதான ---அதுக்கு---- என்ன ...பேசாம... வீட்டுக்கு அனிப்பிடலாம்--

கலைஞர்-------(மனசுக்குள் )--ஒன்ன வீட்டுக்கு அனுப்ப தான்யா இந்த திட்டம்--
சரி--சரி---மக்களுக்கு சேவை செய்ய “”பெர்ர்ரிய திட்டமா” இருந்தால் சொல்லுங்கயா--

வைரமுத்து------கலைஞருக்கு எவ்வளவு பெரிய மனது
இந்த பெரிய மனிதரின் பெரிய மனது
இல்லை--இல்லை--பெரியார் மனது---

துரைமுருகன் பொன்முடி காதில்---- --தலைவர் எவ்வளவு குஷியாயிட்டார் பாருங்க------வைரமுத்து கவிதைய கேட்டு---என கிசுகிசுக்கிறார்.------அதுக்கு
த்தான வைரமுத்துவ தலைவர் கூப்பிட்டு இருக்கிறார்.என அன்பழகன் பொன் முடிகாதில் மீண்டும் கிசுகிசுக்கிறார்.

கலைஞர்.........ஏம்மா..குஷ்பு..நீங்க என்ன சொல்றீங்க...

குஷ்பு.......அய்யா.. நீங்க வசனமெழுதி--தளபதியும் நானும் ஜோடியா நடிக்கிற படமொண்ணு தேர்தலப்ப --------------என -குஷ்பு முடிப்பதற்கு முன் அழகிரி கோபத்துடன் எழுந்திருக்கிறார்-----உடனே நிலமை மோசமாவதை உணர்ந்த கலைஞர்---குஷ்புவைப் பார்த்து உக்காரு---உக்காரு--என்கிறார்.

அன்பழகன்.........வீட்டுக்கொரு....அலைபேசி கொடுத்தாலென்ன.....

துரைமுருகன் ------விசுக்கென்று எழுந்து---தலைவரே--நோக்கியா--சாம்சங்--எல்லாம் என் எரியால தான் இருக்கு தலைவரே..

கலைஞர்.....................(மனசுக்குள் )அப்பிடின்னா--கம்பேனிய மாத்திட வேண்டியதுதான் - ---இல்லாட்டி கமிஷன் கைக்கு வந்த மாதிரிதான் ---அதுசரி--ஒரு செல்போன் 1000-----1500தான வரும் ---மின் மோட்டர்போல நல்ல வெய்ட்டான பொருளா பாருங்கைய்யா-----

கனிமொழி......டெல்லில காமன் வெல்த் கேம பாருங்க---ஏசி--7லக்‌ஷம்---டிரெட் மில் 30 லக்‌ஷம்---எப்பிடி சூப்பரா --வெயிட்டா பில் போட்டு பொருள் வாங்கியிருக்காங்க

எ.வ.வேலு.......தலைவரே---வீட்டுகொரு குவாட்டர் பாட்டில் கொடுக்கலாம்---

கலைஞர்..........முகம் சிவக்கிறது--சீனியர் மந்திரிகள் பயந்தபடியே பார்த்திருக்க---கலைஞர் மதுவிலக்கு கொண்டுவருவாரோ--ஏதோ தப்பா சொல்லிவிட்டோமோ என வேலு நடுங்க----

கலைஞர்.....நீயெல்லாம் என்ன மந்திரிய்யா.....ஒரு பிசுக்கோத்தும் தெரியல்ல...குவாட்டருக்குத்தான் நாம கப்பம் முழுசா வசூலிச்சுடரமில்ல்ல--பிறகு மறுபடியும் நமக்கேது லாபம்--ஏற்கனவே கஜானா ஒரு லச்சம் கோடி கடன்ல ஓடுது---குவாட்டர் நமக்கு பொன்முட்டை-- இதுகூட தெரியாத கூமுட்டைய்யா நீ--

அழகிரி.......தமிழ் நாட்ல மொத்தம் 6 கோடிபேர்--அதுல 3 கோடி இளைஞர்---வீட்டுகொரு பைக் கொடுக்கலாம்---

ஸ்டாலின் ----------எல்லாதொகுதிக்கும் சமமா கொடுக்கணும்----

அழகிரி-----------------தென்மண்டலத்துக்கு அதிகமா வேணும்--நான் யார்ட்டேயும் கேக்கமாட்டேன் -நானே எடுத்துக்குவேன்.

அன்பழகன் -----------தம்பி அழகிரி யோசனைதான் சூப்பர்---பிரேக் இல்லாத பைக்கா வாங்கி கொடுத்தா கலைஞர் காப்பீட்டு திட்டமும் வெற்றியாகும்--ஆஸ்பத்திரியும் நிரம்பி வழியும்

குஷ்பு எழுந்து --அய்யா நானும் ஸ்டாலினும் நடிக்கும் சினிமா பிராஜக்ட் என்னானது-----என்று முடிப்பதற்குள் --------

அழகிரியும் கனிமொழியும் -குஷ்புவை நோக்கி ஓடுகிறார்கள்---------

-துரைமுருகனும் பொன்முடியும் தடுக்க எழுகிறார்கள்---------

--கூட்டம் பாதியிலேயே முடிகிறது.

Thursday, August 12, 2010

காஷ்மீருக்கு “சுயாட்சி “” மண்டுமோகன் போட்ட குண்டுஒரு திரைப்படத்தில் தற்கொலை செய்துகொள்ள முயல்பவரை பஸ்கண்டக்டர் வடிவேலு காப்பாற்ற போவார்.

அந்த உரையாடல-----

கீழே குதிச்சு தற்கொலை பண்ணிக்குவேன்

அப்ப---- சாகலைன்னா---------

இதோ கைல வச்சுருக்கிற கைறுல தூக்கு போட்டு செத்துருவேன்

அப்பிடியும் சாகலைன்னா----------

இந்த பாட்டில்ல உள்ள வெஷத்த குடிச்சு செத்துருவேன்

அப்பிடியும் சாகலைன்னா---------

இந்த கத்தியால கழுத்த கரகரன்னு அறுத்துகிட்டு செத்துருவேன்---------

உரையாடல் இப்படி போகும்—

அதுபோல—நம் பிரதமர் அப்பாவி மண்டு மோகன் சிங்கும்—என்ன கேள்வி கேட்டாலும் —வடிவேலு காமடி அடிப்பதுபோல் வழக்கமாய் உள்ளது.

ஆனால் இன்று காஷ்மீர் பற்றிய அவர் காமடிதான் “”ஈரக்குலை நடுங்க “”செய்கிறது---

அவரது “”கிளிப்பிள்ளை “”பதில்கள்---

விலைவாசி எப்போது குறையும்

விரைவில்

மாவோயிஸ்டுகள் பிரச்சினை எப்போது தீர்க்கப்படும்

விரைவில்

மும்பை துறைமுகத்தில் ஆயில் கசிவு எப்போது கட்டுக்குள் கொண்டுவரப்படும்

அறிக்கை கேட்டுரிக்கிறேன்-விரைவில்

சுரேஷ் கல்மாடி எப்போது நீக்கப்படுவார்—பதிலில்லை—மௌனம்

தெலுங்கானா தனி மாநிலமாக்கப்படுமா

விரைவில் முடிவு செய்யப்படும்

காஷ்மீரில் எப்போது இயல்புநிலை திரும்பும்—

அவர்களுக்கு “”சுயாட்சி “பரிசீலிக்கப்படும் காஷ்மீருக்கு மட்டுமல்ல—மன்மோகன் சிங் யாருக்கு வாக்கு (அவருடைய மனைவி தவிர )கொடுத்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியாது.

பற்றி எரியும் காஷ்மீரில் இப்படி “”சுயாட்சி “”ஆறுதலை கொளுத்திப் போட்டுவிட்டாரே மண்டு மோகன் சிங்—இது மேலும் எரியுமா?—இல்லை காங்கிரஸ் ----- சொல்லும்--- சொல்வதோடு சரி--- செய்-------யா====து—என்பது காஷ்மீர் மக்களுக்கு தெரிந்து அடங்கி விடுவார்களா?—தெரியவில்லையே?

Wednesday, August 11, 2010

ஒரு நாள் கூட காந்தியை நினைக்கவிடாத கலைஞர் ஐய்யாவே

ஒரு நாள் கூட காந்தியை நினைக்கவிடாத
கலைஞர் ஐய்யாவே

“ சைமன் கமிஷனை “ அகில இந்தியாவும் புறக்கணித்த போது அதை வரவேற்று “”ராஜோபஜாரம் “செய்தவர்கள் உங்கள் கட்சியினர் ( நீதிக் கட்சி )

எதிலேயும் வித்தியாசமானவர்தான் ” நீங்கள்.

ஒங்க ஆதரவு காங்கிரஸுக்கு கட்டாயம் தேவை என்பதால், டெல்லிக்கு பறந்து –அங்கு “டேரா போட்டு “”கூடை நிறையா 10 மந்திரிகளை அள்ளிகிட்டு வந்தவர் நீங்கள்.

45 கோடி ரூபாயாக இருந்த “”கள்ளக் குடி கொண்டான் கடை “(டாஸ்மாக் ) வியாபாரத்தை 16,000 கோடி ரூபாயாக பெருக்கிய புண்ணீயவான் நீங்கள்.

அதேப்படி---அவ்வளவு வேகம்—அவ்வளவு அலர்ட்----உங்க கடைக்கார் (டாஸ்க்மாக்)-- ---””ஸ்டிரைக் –என்றவுடனே தள்ளுவண்டியிலிருந்து துள்ளிக்குதித்து _--வந்து—ஸ்டிரைக்கை உடைத்தீர்கள்.

“”ஒரு நாள் வியாபாரம் போச்சுன்னா—ஒரு நாள் கமிஷன் போச்சுல்ல---ஒங்கப்பனா குடுப்பான்-என உங்கள் குடும்பத்தினர் புலம்புவது காதில் விழுகிறது.

முதல் நாளே அதிகாரி வந்து—கடைகடையாய் ஏறி இறங்கி—ஒரு பூட்டுக்கு ரெண்டு சாவியை தேடி----------------------------கடையை பூட்டிக்கொண்டு போனால் திறக்கவாம்—

வேறு கடையிலிருந்து மாற்றுப் பணியாளரை நியமித்து-----------என்ன பொறுப்பு----------என்ன கரிசனம்.

எல்லா “கள்ளக் குடி கொண்டான் கடை “”வாசலிலும் போலிஸ் ஜீப்—குடிகாரர்களுக்கு --எவ்வளவு பாதுகாப்பு—அவர்கள் மீது எவ்வளவு கரிசனம்.

இந்த “”அலர்ட்னஸை””--விலைவாசியை குறைப்பதில் காண்பிக்கலாமே—

பள்ளி—கல்லூரி கட்டணம்—பெட்ரோல்—டீசல் விலை உயர்வை குறைப்பதில் காண்பிக்கலாமே

போய்யா—போய்யா—போக்கத்த ஆளே—அவருக்கென்ன வேல—வெட்டி இல்லையா—””கமிஷன்”” போச்சுன்னா—அடுத்த தேர்தலே போச்சு—----ஒனக்கு என்ன தெரியும்----- என உடன் பிறப்பு சொல்வது காதில் விழுகிறது.

எது எப்படியோ—”கள்ளக் குடி கொண்டான் கடை “மூடியிருந்தால் ஒருநாளாவது மதுவை ஒழிக்க பாடுபட்ட மஹாத்மா காந்தியை நினைத்துப் பார்த்திருக்கலாம்—அதுக்குக்கூட தமிழக மக்களுக்கு “”கொடுப்பனை “இல்லையே?

Monday, August 9, 2010

திரிசங்கு சொர்க்கத்தில் --கருணாநிதி

திரிசங்கு சொர்க்கத்தில் --கருணாநிதி
மதுரையில் நடத்திய கக்கன் நூற்றாண்டு விழாவில் காங்கிரஸாருக்கு புதிய தெம்பு பிறந்துள்ளது. “”கோஷ்டி கானம் “”தற்காலிகமாக நிறுத்த்ப்பட்டு “”நவக்கிரக நாயகர்கள் “”ஒன்று சேர்ந்து ஒரே மேடையில் ஒன்றாக காட்சி தந்தது --தொண்டர்கள் மத்தியில் மேலும் உற்சாகத்தை அதிகப் படுத்தியுள்ளது கவனிக்கத் தக்கது.

எப்போதும் “”வலியுண்டாக்கும் “”அதிரடிப் பேச்சாளர் ஈரோடு இளங்கோவன் மதுரையில் மிகச் சாதுவாகவே தன் கருத்தை கூறியுங்கூட தாங்க முடியாத முதல்வர் கலைஞர்--”” வலியுறுத்துங்கள்--வலியுண்டாக்காதீர்கள் “--என காங்கிரஸின் அடிப்படை உரிமையைக் கூட அங்கீகரிக்க மறுத்திறுக்கிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக கலைஞரின் பிடியிலிருந்து காங்கிரஸ் நழுவி வருகிறது.இளங்கோவன் மீண்டும் ஆக்ரோஷமாக கலைஞனருக்கு பதில் தந்திருப்பது பலரின் புருவங்களை உயர்தியிருக்கிறது.

வருகின்ற 2011 பொதுத் தேர்தலில் திமுகவின் கூட்டை காங்கிரஸ் விரும்பவில்லை என்பதற்கு அதன் பல “ உள்ளடி வேலைகளை “” அரசியல் நோக்கர்கள் ஆதாரமாக காண்பிக்கிறார்கள்.

சென்னை வழியாக சென்ற ராகுல் காந்தி கலைஞரின் பிறந்த நாளில் கலந்து கொள்ளாதது மட்டுமின்றி வாழ்த்துகூட சொல்லாதது---. தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞரணி தலைவர்களிடம் ராகுல் டெல்லியில் ரகசிய ஆலோசனை நடத்தியது-- விஜயகாந்திடம் கூட்டணி நோக்கோடு நெருக்கமாக இருப்பது--என்பனெல்லாம் இதில் அடங்கும்.

மாவோயிஸ்ட் பிரச்சினையில் உள்துறை மந்திரி சிதம்பரத்தை தாக்கி காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் அறிக்கை வெளியிட்டதற்கு சோனியா காந்தியிடமிருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. மேலிட ஆசிகளுடன்தான் இந்த அறிக்கை தரப்பட்டுறிக்கிரது என்பதற்கு இது சாக்‌ஷி. இளங்கோவனின் தீவிர ஆவேச பேச்சுக்களும் மத்திய தலைமையால் இதுவரை கண்டிக்கப் படவில்லை .கருணாநிதியின் “”திமுக.காங்கிரஸ் “தலைவர் தங்கபாலு மட்டும் ஏதோ “”மருந்துக்கு “”பொத்தாம் பொதுவாக அறிக்கை விட்டது மட்டுமே நடந்துள்ளது.

செம்மொழி மாநாட்டின் வெற்றிக்குப் பிறகு “”தெனாவெட்டோடு “” இருந்த திமுக தலைமை இப்பபோது அதிச்சியில் உறைந்துள்ளது. காங்கிரஸை விமர்சித்த திமுகவின் “”சாதாரண “” பேச்சாளர் ஒருவரை கட்சிவிட்டு நீக்கி காங்கிரஸ் விஸ்வாசத்தை காண்பிக்க வேண்டிய கட்டாயம் கலைஞருக்கு வந்துள்ளது.

“”சந்தடி சாக்கில் “” மருத்துவர் ஐய்யாவும் காடுவெட்டி குருவை உசுப்பிவிட்டுள்ளார். வன்னியர் இட ஒதுக்கீட்டில் 20 சதம் வேண்டுமென அவரும் இப்போது கலைஞரை தாறுமாறாக பேசிவருகிறார்.

காமன் வெல்த் விளையாட்டு ஊழலோடு ராசாவின் ஊழலையும் சிபிஐயால் தூசி தட்ட காங்கிரஸ் நினைத்திருப்பதாக முதல்வர் அச்சப்படும் நிலையை காங்கிரஸ் உருவாக்கிவருகிறது.

அதனால்தான் “”தெருமுனை கூட்டங்களும்--பொதுக்கூட்டங்களும் “ வருகின்ற 15 நாட்களுக்கு நடத்த முதல்வர் ஆணை இட்டுரிக்கிறார். இவைகளில் திமுக பேச்சாளர்கள் என்ன பேசப் போகிறார்கள் என்பதை பொறுத்தே திமுகவின் பலம் வெளிப்படும்.

ஒரு பக்கம் திமுகவோடு ஒட்டப்பார்த்தாலும் அம்மாவோடு ரகசிய உறவை ராமதாஸ் விட்டதாக தெரியவில்லை.

உத்திரப்பிரதேசதில் ஆட்சியை பிடிக்க அதிக கவனம் செலுத்தும் ராகுல் காந்தி --தமிழ்நாட்டிலும் காங்கிரஸின் “”தனி ஆட்சிக்காக “”பல்வேறு பார்மூலாக்களை “” வைத்து செயல்படுவது வெட்டவெளிச்சமாகிவிட்டது.

திருப்பூர் கோவிந்தசாமியை “”பிள்ளை பிடிப்பவனைப் போல “”பிடித்துகொண்டுபோன திமுக மீது கம்யூனிஸ்ட்கள் காட்டமாகவே இருக்கின்ற்னர். தா.பாண்டியன் “”அம்மா பாண்டியனாகவே “” தொடர்ந்து இருப்பதும் திமுகவின் போதாத காலம் தான்.

2006 இல் வலுவான கூட்டணி அமைத்த கலைஞர் இன்று “”கூட்டணிக் கட்டு “ கழன்று போவதால் கவலையில் உள்ளார். மீண்டும் ஆட்சியை கைப்பற்றி மகன் கையில் ஒப்படைக்கும் அவர் கனவு தகர்ந்து வருகிறது.

“”கை “”இவரிடமிருந்து கழன்று போகும் நிலையில் கருணாநிதியின் இன்றய நிலை “”திரிசங்கு சொர்க்கம் தான் “””

Sunday, August 8, 2010

நுகர்வோரிஸம் என்பது கெட்டவார்த்தையா?பொருளாதாரம் பற்றிய ஒரு புள்ளிவிபரம் இந்தியாவை உலகின் சூப்பர்பவர் ஆக்கப்போவது யார் என்னும் கேள்விக்கு ஆச்சரியமான பதிலை சொல்கிறது

அந்த யார்?-----------------------------------------------யார்?

ஷாசாத் மிடில் கிளாஸ் தான்-அதுவும் 2020 க்குள்

பொருளாதாரம் ஒரு சஞ்கிலித் தொடர்--உற்பத்தி--விற்பனை--லாபம்--செலவு--மறுபடியும் உற்பத்தி ---என இச்சஞ்கிலித்தொடர் அறுகாமல் தொடர்ந்தால்--பொறுளாதாரம் மேம்படும்.

திரிஷா--ஐஷ்வர்யா ராய் அணியும் உடைகளை தன் மகளுக்கு போட்டு அழகு பார்க்கும் மிடில் கிளாஸ்---விளம்பர மாயையில் விலைபோய்--300 லிட்டர் பிரிட்ஜ்--2.5 டன் ஏ.சி மிஷின்-என தேவைக்கதிகமாக ---மேல் மட்டத்தை பார்த்து வாங்கி--- சூடு போட்டுக்கொள்ளும்--மிடில் கிளாஸ்.

தேவைக்கதிகமான நுகர்தலும் --அளவுக்கதிகமான நுகர்தலும் ஆபத்தானவை.

காலையில் ரோட்டோரம் “பிளாஸ்டிக் “ கவரில் ரெடிமேட் சட்டை போட்டு வியாபாரம் செய்பவனிடம் ஒரே கூட்டம்.ஏனென்று பார்த்தால், ஒரு சட்டை 20 ரூபாயாம் .தேவைக்காகவா வாங்குகிறோம்? இல்லை விலை குறைவு--ஒரு சட்டை எடுத்தால் என்ன? என்னும் மனப்பாங்கு

“ அக்‌ஷ்ய திருதியைக்கும் நகை வாங்குவதற்கும் “ என்ன சம்பந்தம்?--ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே ஒரே விளம்பர மயம்--அந்த தினத்தன்று நகைக் கடைகளில் “ஜே--ஜே--என்று கூட்டம்.போலிஸ் பந்தோபஸ்து வேறு--

ஆடித்தள்ளுபடிக்கும் புடவை வாங்குவதற்கும் என்ன சம்பந்தம்?-
-உயர்த்திய விலையை குறைத்துக் காட்டி விளம்பர மழையில் வியாபார யுக்தி.
தீபாவளிக்கும் அதே விலைதான்
-மக்களை மயக்கும் மாயப் பிரச்சாரம்.

கேப்பையில் நெய்வடிகிரதென்றால்--கேட்பவனுக்கு எங்கே புத்தி போனது.

இவையெல்லம் சட்ட பூர்வ “ எக்ஸ்ப்ளாய்டேஷன்”

அப்படியானால் : நுகர்வோரிஸம் “” தவறா?

தவறாக்கப்பட்டிருக்கிறது
இதயம் கனக்கிறதே--இவ்வளவு பெண்களா?

தகவல் அறியும் சட்டதின் கீழ் பெறப்பட்ட ஒரு தமிழ்நாடு புள்ளிவிபரம்.

தமிழகதிலுள்ள அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கடிதம் மூலம் கிடைத்தது இவை.

2008--09--10-- ஆகிய மூன்று ஆண்டு நிலவரம் இவை.

கள்ளக்காதலில் கொலை செய்யப்பட்ட ஆண்----143---பெண்-----120

திருட்டு குற்றம் புரிந்த பெண்கள்----583

கொலைக் குற்றம் புரிந்த பெண்கள்---142

பணம் பறித்தல் போன்றவை-பெண்கள்---82

பெண் குற்ற வாளிகள் மாவட்டம் வாரியாக முண்ணணி
1.திருநெல்வேலி----150 (டவுன்-79 )
2.மதுரை-------------------148 (டவுன்-79 )
3.தஞ்சை-------------------135
4.திருச்சி--------89 (டவுன்-69 )
5.சேலம்---------54

கள்ளக்காதல் கொலைகளில்-- முதலிடம் வகிக்கும் மாவட்டம்
1.தர்மபுரி------38
2. கிருஷ்ணகிரி---27
3.நாகப் பட்டிணம்---23
4.வேலுர்--20
5.தேனி---14

இந்த புள்ளி விபரங்கள் --
பெண்களிடையே குற்றம் புரியும் எண்ணம் பெருகிவிட்டது--என்று சொல்கிறதா?
ஆணுக்கு சரிநிகர்-- சமானமான-- பெண்களின் முன்னேற்றம் இதுதானா?
“கள்ளக் காதல் கொலைகள் “--என்ற புதிய குற்றம் உருவாகியுள்ளதே---இது பெண்ணாலா?

இந்த புள்ளிவிபரங்கள் “ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனநிலையை பிரதி பலிக்கிறதா?”

தேர்தலில் தோற்ற பிறகு திமுக தலைவர் கருணாநிதியும்--கம்யூனிஸ்ட்களும்--புள்ளிவிபரங்களை அள்ளீவிட்டு “---தங்கள் மீசையில் மண் ஒட்டவில்லை ” எனபார்கள்--இந்த புள்ளி விபரங்கள் அந்த வகையில் சேர்த்துவிடலாமா? ( புள்ளிவிவரம் என்ன சொன்னாலும் பெண்களை குற்றப் பட்டியலில் சேர்க்க உள்மனம் ஒப்புக் கொள்ள மறுக்கிறதே )

கள்ளக் காதல் கொலைகளில்--மருத்துவர் ஐய்யா--ராமதாஸ்ஸின் தருமபுரியும்--கிருஷ்ணகிரியும் தான் முன்னணியில் இருக்கிறது--கலைஞரின் நாகை மூன்றாவது இடத்தில் இருக்கிறது---திமுகவோடு கூட்டுசேர ராமதாஸுக்கு இது “பார்கெய்னிங் “பாயிண்ட்.

ஒன்று மட்டும் நிச்சயம்--மருத்துவ கண்டுபிடிப்புகளில் புதுப்புது நோய்கள் உருவாகி பெயர் வைக்கப் படுவதுபோல்-- ‘ கள்ளக் காதல் கொலைகள் “--என்ற புதிய நோய் உறுவாகிவருவது சமுகத்து ஆபத்து என்பது மட்டும் தெரிகிறது

Friday, August 6, 2010

சரக்குக்கு புதுப்பெயர் தா தலைவா

பெறுனர்:-

முதல்வர் கலைஞர்.,
தலைமை செயலகம்.,
சென்னை

ஐயா.,
செம்மொழி மாநாடு நடத்துனீங்க..
எங்கும் தமிழ்., எதிலும் தமிழ்னு
சொன்னீங்க...ஆனா ஒரு இடத்துல மட்டும்
சுத்தமா தமிழ் இல்லைங்களே..
அங்கிட்டு எல்லாமே இங்கிலீஷ்ல
தாங்க இருக்கு..


நீங்கதான் சீக்கிரம் இதுக்கு
ஒரு நல்ல முடிவா எடுக்கணும்..

அந்த இடம் - நம்ம டாஸ்மாக்

அங்கே இருக்கிற சரக்குக்கு
எல்லாம் தமிழ்ல பேர் வெச்சி
தமிழை வளர்க்கணும்க..

நானே சில பேர் யோசிச்சி
வெச்சிருக்கேன்..

உங்களுக்கு திருப்தி இல்லைன்னா
ஒரு குழு அமைச்சி நல்ல., நல்ல
பேரா வைங்க..

மிடாஸ் கோல்ட் - தங்க மகன்

நெப்போலியன் - ராஜராஜ சோழன்

கோல்கொண்டா - கங்கைகொண்டான்

வின்டேஜ் - அறுவடை தீர்த்தம்

ஆபீஸ்ர்ஸ் சாய்ஸ் - அதிகாரிகள் ஆசை

சிக்னேச்சர் - கையொப்பம்

ஓல்டு மாங்க் - மகா முனி

ஜானி வாக்கர் - வெளியே வா

கார்டினல் - பொதுக் குழு

மானிட்டர் - உளவுத் துறை

மேன்சன் ஹவுஸ் - உறுப்பினர் விடுதி

ராயல் சேலஞ்ச் - நாற்பதும் நமதே

ஹோவர்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000

நம்ம டாஸ்மாக்க விட்டுட்டோமே----கள்ளக் குடி கொண்டான் கடை

Thursday, August 5, 2010

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள் !!

ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

'' தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

'' தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

'' அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள் !!
----------------------------------------------------------------

நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது
நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!!

Tuesday, August 3, 2010

புரட்சித் துறவி - இராமானுஜர்

கட்டுரையின் தலைப்பே வித்யாசமாக இருக்கிறதல்லவா? கட்டுரையின் நாயகனும் வித்யாசமானவர்தான்.

4.4.1017ம் ஆண்டு, இன்றைக்கு 1,000 ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீபெரும்புதூர் என்னும் தலத்தில் அவதரித்த மகான் இராமானுஜர். ஆசாரமான, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய பிராமண குடும்பத்தில் பிறந்தார். புத்திர காமேஷ்ஷ யாகம் நடத்தி பெற்ற அருந்தவப் புதல்வர் இராமானுஜர். பிற்காலத்தில் பிரபலமான ஆங்கில ”எண் கணித சாஸ்திரப்படி கூட” இராமானுஜரின் பிறந்த எண்கள் ”உலகின் குருவாக” பிறந்தவரின் எண்களாக இருந்தது.

இன்றைக்கும் நாம் போராடிக் கொண்டிருக்கின்ற தீண்டாமை ஒழிப்பு - தமிழ் மொழி வளர்ப்பு - தாழ்த்தப்பட்ட சகோதரர்களின் முன்னேற்றம் இவைகளுக்கெல்லாம் முன்னோடி இராமானுஜர்தான்.

70 ஆண்டுகளுக்கு முன் அரிசனங்களை ஆலயப் பிரவேசம் செய்ய வைத்தார் மகாத்மா காந்தி. பின்னாளில் இதே பணியில் மதுரை வைத்தியநாத அய்யர் - முத்துராமலிங்கத் தேவர் - ராஜாஜி மற்றும் ஈ.வெ.ரா.வின் பங்களிப்பும் இருந்தது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமை தறிகெட்டு நின்ற காலத்தில் - ”தொழுமின் - தொடுமின் - கொள்மின்” என்றபடி இராமானுஜர், மாலை கட்டுபவர், பந்தல் போடுபவர், சலவைத் தொழிலாளி மண்பாண்டம் செய்வோர் - பல்லக்கு தூக்கிகள், மரமேறி, இளநீர் கொடுப்போர், மேளக்காரர், வேதம் ஓதுவோர், அமுது செய்வோர், அர்ச்சகர் என்று பேதமின்றி அத்தனை பேரையும் ஆலயத்துக்குள் அழைத்துச் சென்று சமமாக நடத்திய உண்மையான புரட்சியாளர்.

ஆலயங்களின் கதவை அன்னைத் தமிழுக்கு அன்றே திறந்து விட்டவர் இராமானுஜர்தான். வடமொழி வேதங்களை படித்து அதில் மிகப்பெரும் நாவன்மையும், ஞானமும் பெற்ற இராமானுஜர் தமிழ் மீது கொண்ட காதலால், திருவாய்மொழி, திவ்யப் பிரபந்தம் போன்ற தமிழ் மறைகளை கற்று தேர்ந்து அவைகளை ஆலயங்களில் பாடவேண்டுமென கட்டாயமாக்கினார்.

தமிழகத்தில் சாதி வேறுபாடுகளை களைய நடந்த போராட்டம் தாழ்த்தப்பட்ட சமூகத்தை உயர்த்த வேண்டும் என்பதை விட வேறு சமூகத்தினர் மீதிருந்த காழ்ப்புணர்வே காரணமாக இருந்தது. போராட்டம் நடத்தியோரும், தங்கள் தனிப்பட்ட வாழ்வின் சமூகத்திற்கு உண்மையாக இருந்தனரா என்பதும் சர்ச்சைக்குரியது. ஆனால் உயர்ந்த வேதம் ஓதும் பிராமணர் குடும்பத்தில் பிறந்த இராமானுஜர் அக்காலத்தில் தாழ்ந்த குலம் என்று கருதப்பட்ட குலத்தை சேர்ந்த ”திருக்கச்சி நம்பியை” குருவாக ஏற்றார்.

”பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை - கல்வியில் சிறந்தவரே உயர்ந்தவர் - தவம், கல்வி, ஆள்வினை இவற்றால் ஆவதே குலம்” என்றார் இராமானுஜர்.

திருவங்கரத்து ஆளவந்தார் இராமானுஜரின் மானசீக குரு. ஆளவந்தாரின் மாணவர் பெரிய நம்பியின் நண்பர் மாறனேரி நம்பி. இவர் பிறப்பால் ஆதி திராவிடர். மாறனேரி நம்பி இறந்தவுடன் அவருக்கான இறுதி சடங்குகளை செய்தவர் பெரிய நம்பி. ஒரு ஆதி திராவிடனுக்கு பிராமணன் இறுதி சடங்கு செய்யலாமா? என திருவரங்கத்து பிராமணர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது அதை முறியடித்தவர் இராமானுஜர்.

தனது செயல்பாடுகளால் தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டவர் இராமானுஜர். ஆற்றுக்கு குளிக்கப் போகும்போது நம்பியாண்டான், கூரத்தாழ்வான் என்ற மேல்குலத்து சீடர்களோடு தோள்மீது கைபோட்டு செல்லுவார். குளித்து திரும்பும்போது வில்லிதாசன் என்னும் ஆதிதிராவிட சகோதரனின் தோளில் கை போட்டு திரும்புவார். இராமானுஜரின் இச்செயலை உயர்சாதிக்காரர்கள் விமர்சித்தபோது, ”வில்லிதாசனை தொடுவதால்தான் நான் மேலும் சுத்தமாகிறேன்,” என்பார்.

மகாபாரதத்தின் ”விஸ்வரூப தரிசனம்” அர்ச்சுனன் மூலமாக ஆண்டவன் உலகுக்கு பல செய்திகள் சொன்னதுபோல, நவீன காலத்தில் விவேகானந்தரின் ”சிகாகோ நகர உரைபோல” இராமானுஜரின் திருகோஷ்ட்டியூர் கோவில் மீது நின்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சொர்க்கத்துக்கு செல்லும் ”நாராயண மந்திர” விளக்கமும் உரையும் உலகப்பிரசித்து பெற்றது.

திருகோஷ்டியூர் நம்பி என்னும் குருவிடம் ஸ்ரீபெரும்புதூருக்கும் - திருகோஷ்டியூருக்கும் உண்டான 100க்கும் அதிகமான கிலோமீட்டர் தூரத்தை, 18 முறைக்கு மேல் கால் கடுக்க நடந்து ஒரு மாத காலம் முழு உண்ணாநோன்பிருந்த கற்ற எட்டெழுத்து மந்திரத்தை உலகத்திற்கு சொல்லி தான் நரகத்திற்கு போனாலும் பரவாயில்லை, தாழ்த்தப்பட்ட மக்கள் சொர்க்கம் செல்லவேண்டும் என்று நினைத்து அதன்படி செய்த இராமானுஜர்தான் உண்மையான புரட்சித் துறவி.

இவரது வாழ்க்கை வரலாற்றை இன்றைய மாணவர்களுக்காக பள்ளிக் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். பல்கலைக் கழகங்களும், தனியார் அறக்கட்டளைகளும் இவரது புத்தகங்களை இளைய தலைமுறைகளிடம் பிரபலப்படுத்தவேண்டும். இராமானுஜர் வாழ்க்கை வரலாறும் தீண்டாமை ஒழிப்பு - தமிழ்மொழி வளர்ப்பு என்பன ஒன்றோடு ஒன்றிணைந்தது. அவரை போற்றுவோம். அவர் வழி நடப்போம். (ஏப்ரல் 20 - இராமானுஜர் ஜெயந்தி)
கருத்துக்களம்
சமூக ஒழுக்கம்

First Published : 14 Jun 2010 02:57:04 AM IST

தினமணி-----எஸ்.ஆர்.சேகர்.

லைலா புயலால் நல்ல மழை. காலனியில் முழங்கால் மட்டும் வெள்ளம். சாக்கடை கால்வாய் மூலம் நீர் வடிந்த பாடில்லை. மாநகராட்சி அதிகாரிகளுக்கு போன்மேல் போன் போட்டு எந்தப் பலனும் இல்லை. நானே தீர்மானித்து கம்பால் நீர் அடைப்புகளைச் சரி செய்து வந்தேன். ஓரிடத்தில் பெரும் அடைப்பு- அங்கு கையில் கிடைத்தது இரண்டு லிட்டர் பெட் பாட்டில். இந்த அடைப்புக்கு யார் காரணம் பாட்டிலை போட்டவரா? அல்லது மழைக்கு முன்னே வடிகாலில் கிடந்ததைப் பார்த்தும் எடுத்துப் போடாதவரா?

நம் வீட்டு பாத் ரூம் என்றால் உபயோகித்த பின் தண்ணீரை கொட்டி சுத்தம் செய்கிறோம். அதுவே பொதுக் கழிப்பிடம், கல்யாண மண்டபம், அரசு அலுவலக கழிப்பிடமென்றால் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஒரு குவளை தண்ணீர் கூட விடுவதில்லை ஏனிந்த மனப்பான்மை- எப்படி நம்மிடம் வந்தது?.

÷யார் வீடு கட்டினாலும் மணல், ஜல்லி, செங்கல், கம்பிகளுக்கு ஸ்டோர் ரூம் நடுத்தெருதான்- போக்குவரத்துக்கு இடையூறு, சைக்கிள், ஸ்கூட்டரில் போவார் சறுக்கி விழும் அபாயம் இதைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு கவலை இல்லை. கம்பிகளை அடித்து அடித்து சாலைகளை நொறுக்கும் பண்பாடு- ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி வீட்டு சாக்கடை நீரை வெளியேற்ற சாலையைத் தோண்டிப்போடும் அவலம்.

பொதுச் சொத்து பொதுவான இடம் என்றால் பொறுப்பற்ற நம் பழக்க, வழக்கங்கள் கட்டுப்பாடற்ற நம் செயல்முறை, ஆண்டாண்டு காலமாக தொடர்கிறதே. ஆட்சிகள் மாறினாலும் இக் காட்சிகள் என்றும் மாறுவதில்லையே.

காரில் போவோர் பழத்தோலை வெளியே வீசுவதும்-நம் வீட்டுக் குப்பையை எதிர் வீட்டு வாசலில் போடுவதும் டிராபிக் சிக்னலில் சிவப்பு நிறம் விழுந்தவுடன்- போலீஸ் இல்லையென்றால் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு விர்ரென பறப்பதும் இது என்ன பழக்கம்.

சட்டங்கள் நமக்காக, விதிகள் வகுத்தது நமக்காக, இந்த எண்ணம் ஏன் நமக்கு இல்லை? வீட்டுக்குள் இருக்கும் கட்டுப்பாடு வீதியிலும் இல்லாதது ஏன்?

தனி மனித ஒழுக்கத்தை பொது இடத்திலும் கடைப்பிடிக்காதது ஏன்? சமூக ஒழுக்கம் சரிந்து போனது ஏன்?

ரயில்களில் மூன்றடுக்கு தூங்கும் வசதி பெட்டியில் இரவு ஒரே துர்நாற்றம் மூக்கை பொத்திக் கொண்டு அனைவரும் படுத்திருந்தனர். டி-டி உள்பட யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. உள்ளே போனவர்கள் தண்ணீர் ஊற்றி இருக்க வேண்டும். அல்லது அடுத்து போனவராவது அதைச் செய்திருக்க வேண்டும். யாரும் செய்யாததால் அதை நான் செய்தேன். எவ்வளவு நாளைக்கு- எவ்வளவு இடத்தில்- எவ்வளவு முறை- அதை நாம் செய்ய முடியும். இது தீர்வில்லையே.

÷பல்லாவரம் மேம்பாலத்தில் நடந்த விபத்து போல் பல இடங்களில் விபத்து நடந்த வண்ணம் உள்ளன. பல்லாவரம் பாலத்தில் இரு பிரிவுகளை இணைக்காமல் அப்படியே விட்டிருந்ததனர். பாலத்தை மூடாமல் திறந்து வைத்திருந்ததால் வேகமாக வந்த கார் ரயில் தண்டவாளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதே போல் பல விபத்துகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. யாரைத் தண்டிப்பது- அரசையா? பொதுப்பணித் துறையையா? மாநகராட்சியையா யாரைத் திருத்துவது? அரசு அதிகாரிகளையா?

÷தனிமனித ஒழுக்கம் அரசின் தலையீடு இல்லாததால் இன்னும் நன்றாக உள்ளது. ஆனால் சமூக ஒழுக்கம் அரசின் பிடியால் சின்னா பின்னமாகி கிடக்கிறது. அமெரிக்காவில் தனிமனித சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடில்லை. தனிமனித ஒழுக்கத்துக்கும் உத்தரவாதமும் இல்லை. அங்கு தனிமனித ஒழுக்கத்தில் பின்தங்கியவர்கள் கூட சமூக ஒழுக்கத்தில் சிறந்தவராக இருக்கிறார்கள். இங்கு அதுவே தலை கீழாக மாறி இருக்கிறது. தனிமனித ஒழுக்கத்தில் சிறந்து விளங்குகிறவர் கூட இங்கு சமூக ஒழுக்கத்தில் தேறாதவராக இருக்கிறார்.

÷நம் நாட்டில் சமூக ஒழுக்கத்தை சிதைத்ததில் பெரும் பங்கு பிரிட்டிஷ் ஆட்சிக்கே உண்டு. குறிப்பாக "மெகாலே கல்வி' முறையின் சாபக்கேடு- நிறந்தாலும் தோலாலும் இந்தியன்- மனதாலும் செயலாலும் கொத்தடிமை என்பது பலித்ததனால் வந்த ஒழுக்கக் குறைபாடு. பிரிட்டிஷ்காரர்கள் வருவதற்கு முன் சாலை சீரமைப்பு, நீர்நிலைகள், தூர்வாரல், கல்விக்கூடப் பராமரிப்பு- என அனைத்தும் ஊர் மக்களிடம் தான் இருந்தது. இவற்றை பேணிப் பாதுகாக்கும் பொறுப்பும் மக்கள் குழுமத்திடம் இருந்தது. இதை ஆராய்ச்சிக் குறிப்பொன்று தெரிவிக்கிறது.

÷1830 முதல் 1834 வரை இந்தியாவில் இருந்த லார்ட் மெக்காலே ஆங்கில ஆதிக்கத்தை இந்தியாவில் வலுப்படுத்த எண்ணினார். இந்திய மொழிகளின் ஆதிக்கமே இந்திய கலாசாரத்தை வலுப்படுத்துகிறது என்று நினைத்தார். எனவே உள்ளூர் மொழிகளின் ஆதிக்கத்தை ஒழிக்க ஆங்கில மொழியை போதிப்பதே ஒரே வழி என முடிவு செய்தார். அதன் விளைவே- "மெக்காலே கல்வித் திட்டம்'

÷இந்தியரை சுயசார்புக்கு இட்டு செல்வது அவர்களது கலாசாரம்தான். கலாசாரத்தை உள்ளூர் மொழிகள் காத்து நிற்கின்றன. ஆங்கில போதனையை நாம் புகுத்துவதே இதை உடைக்க ஒரே வழி- ஆங்கில போதனையே இந்தியனை நிறத்தால் இந்தியனாக- சிந்தனையால், செயலால் பிரிட்டிஷ் அடிமைகளாக வைத்திருக்க வல்லது என்று அவர் எழுதிய புத்தகத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதன் தாக்கம் இன்றும் கண்கூடாக பார்க்கிறோம். வீடு நமது- ரோடு நமது அல்ல என்ற மனோபாவம் தொடர்கிறது.

÷இந்தத் தாக்குதல் நூற்றாண்டு காலமாக தொடர்வதால் நம் பழக்க வழக்கங்களிலும் சீர்குலைவு தொடர்கிறது. சமூக ஒழுக்கம் சட்டத்தால் சீர்படாது மனப்பான்மையில் மாற்றம் வேண்டும் பள்ளியில் தொடங்கி கல்லூரிகள் வரை கட்டாய போதனைகள் வேண்டும். மக்களுக்கு நல்ல பயிற்சிகளை அளிக்க வேண்டும். தனிமனித பங்கேற்பு, பங்களிப்புதான் சமூக ஒழுக்கத்துக்கான உரம். அதனால் அரசின் பிடியிலிருந்து பொது விஷயங்களை விடுவிக்க வேண்டும்

ஆஞ்சியோ-- அனுபவம்--
கவுளிபிரவுன் ரோட்டில் வந்துகொண்டிருக்கும் போது இரவு மணி 8 .௦௦.--இடதுகை வலிக்கிறமாதிரி இருந்தது. டாக்டர்.விஜயராகவன் கிளினிக்-- ஈ.சி.ஜி.-- மூடியிருக்கும் என்பதால், ஒரு ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் கிளினிக்கில் உள்ள-- ஈ.சி.ஜி.--யை தேடி கண்டுபிடித்து, படம் எடுத்தேன். நாமதான் பாதி டாக்டராச்சே.-- 9 .30 -- க்கு விஜியிடம் காண்பித்தபோது -""ஒண்ணுமில்லை"--நாளைக்கு காலை மீண்டும் ஒன்னு எடுத்து "ரீ-செக்"-- செய்வோம் என்றார்.

அடுத்த நாள் எடுத்த-- ஈ.சி.ஜி.--யும்" டவுட்" கொடுக்க- டாக்டர்.பாலாஜியிடம் போ, போன்பண்ணி சொல்லியிருக்கேன் --5 நிமிடத்தில் வந்துவிடலாம். என்றார்.
ராமகிருஷ்ணா ஆஸ்பத்திரியில், பாலாஜியிடம்- 12 - மணிக்கு போய்- 'எக்கோ"-- டி.எம்" -எல்லாம் எடுத்து முடித்து,- 3 .30 -,மணிக்குதான் கன்சல்டேஷன் முடிந்தது.
இங்கேயும் மீண்டும் "டவுட்". உடனே "ஆஞ்சியோ " எடு -- என்றார். அதுவரை சாப்பிட 500 ரூபாய்க்கு மருந்து எழுதி கொடுத்தார்.

ஒரே மூச்சில் எல்லா டெஸ்டும் முடிந்தது, என சந்தோஷப்பட முடியவில்லை. மீண்டும் ஒரு டெஸ்ட். அதுவும் "ஆஞ்சியோ" ...எதற்கும் ஒரு--"ரெண்டு லக்ஷம் கையில் வைத்திரு" என்றார் விஜி.

சனிக்கிழமை ஆஞ்சியோ.--வியாழனிலிருந்து ஒரே பட படப்பு. நான் ஒரு விஜிடேரியன்--டிரிங்க்ஸ் இல்லை--வீட்டில் நாலுபேர் குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு லிட்டர் எண்ணெய் கூட செலவாகாது--. டெய்லி வாக்கிங்--சுகர் அண்டர் கண்ட்ரோல். பின் ஏன் விஜி ரெண்டு லக்ஷம் தயாராய் வைத்திரு --என்றார். கொஞ்சம் குழப்பம்.

என்ன விஞ்ஞான பூர்வ விளக்கம் கொடுத்தாலும் மனம் ஏற்க மறுத்தது. பயம்தான் மேலோங்கி நின்றது. அடுத்தவருக்கு செய்யும் "கவுன்சலிங்" எல்லாம் எனக்கு வொர்க் அவுட் ஆகவில்லை. சனிக்கிழமையும் வந்தது.

காலை- 6 00 -.மணிக்கு வெறும் வயித்தில் ஆஸ்பத்ரிக்கு போய் வரிசையில் நின்று , பணத்தைக்கட்டி ,பாலாஜியை பார்த்தபோது மணி 8 .00 . பிளட் டெஸ்ட் செய்து 'கார்டியோ கதீடர்-- ஐ.சி.யு 'குள் நுழையும் போது மணி 9 .00

-- 15 பெட் இருந்த அந்த ஐ.சி.யு.வில்- 14 -பேர் எல்லா மெஷினும் -வயர்களும் மாட்டி- மானிட்டர் சத்தம் அதிர நர்ஸ் --டாக்டர் புடை சூழ ரொம்ப பிசியாக இருந்தனர். வெட்ட இருக்கும் ஆடு போல பேந்த-பேந்த முழித்து கொண்டு நான் மட்டுமே தனியாக...... பெட்டில்.

கல்லு மாதிரி இருக்கானே--இவனுக்கென்ன ஐ.சி.யு வில் வேலை--என எல்லாரும் என்னை கேட்பது போல பிரமை.. நல்ல வேளை கதவைத்திறந்து ஒரு தலை எட்டிப் பார்த்தது .அது டாக்டர் .விஜி.

அவருக்குப் பின்னால் முகத்தில் மிரட்சியுடன் என் மனைவி. ஏதோ இடம் தெரியாத--- மொழி தெரியாத-- பிராந்தியத்தில் மாட்டிகொண்ட மனுஷி மாதிரி இருந்தாள்.டாக்டர் . விஜி எனக்கு நம்பிக்கை கொடுக்கவும் "திணிக்கப்படும் ட்ரீட்மென்ட் களை" தவிர்ப்பதர்க்காகவும் வந்திருந்தார்.

அவர் கையில் இரண்டு காகித பண்டல்கள்.-100x 1000 - என எழுதியிருந்தது. அதை என் மனைவியிடம் கொடுத்தார். இதை பார்த்ததும் எனக்கு பட படப்பு மேலும் அதிகரித்தது. சரி-நிச்சயமாக ப்ளாக்தான்--ஆஞ்சியோ --பிளாஸ்ட் தான். என கவலை--கற்பனையில் சிறகடித்தது..

பாலாஜி உள்ளே வந்தார்.. ஆபரேஷன் தியேட்டருக்கு உண்டான பேஷண்டாக என்னை தயார் செய்து --அழைத்துபோய் --ஆஞ்சியோ --டேபிள் மீது படுக்கவைத்தனர். பாலாஜியும் விஜியும் "ரேடியேஷன் ரெசிஸ்ட்டண்ட்" கோட்டை மாட்டிக்கொண்டனர். தியேட்டரில் ஏற்கனவே ஒரு பெண் மயக்க டாக்டர் மற்றும் 5 ,6 --அசிஸ்ட்டண்ட்கள் இருந்தனர். என் வலது கையில் "சாவலான்" தடவப்பட்டு இடதுகை தலைக்குமேல் கொண்டுவரப்பட்டது. நெஞ்சுக்குமேல் ஆஞ்சியோ-- மெஷின் நின்றது.

லேசா --ஊசி போடுவோம்--அது மறக்கிறதுக்கு--என்ன சரியா- என்றார் பாலாஜி--நான் தடுத்தா நிறுத்தவா போகிறார் பர்மிஷன் கேட்க --இது ஒரு பார்மாலிட்டி என தெரியும். அடுத்து ஒரு ஊசி--கொஞ்சம் விர்ர்ருன்னு-- இருக்கும் என்றார். பத்துநிமிஷமாக மேலே மாட்டியிருந்த 3 கம்ப்யூடர் ஸ்கிரீனில் என் ஹார்ட் துடித்து கொண்டிருந்தது. பார்க்க பயந்து கண்ணை மூடிக்கொண்டேன்.

பூ--இவ்வளவுதானா? இப்போது கொஞ்சம் பயம் விலகி இருந்தது. டெஸ்ட் முடியப்போகிறது என பாலாஜி அறிவித்த ஒரு நிமிடத்திற்குள் கையில் கனமான பிளாஸ்டர் போடப்பட்டது. இரண்டு நர்ஸ்கள் கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு ஐ.சி.யு. வார்ட் பெட்டில் படுக்கவைத்தனர். நான் நல்லாதானே இருக்கேன்--ஏன்இந்த கை தாங்கல்?

தண்ணீர் நிறைய குடி--இன்ஜெக்ட் செய்த டை எல்லாம் வெளியேற வேண்டும் என்றார்கள். வலது கையை--அழுத்த--ஆட்ட --வேண்டாம் என்றனர். வெய்ன் பிரேக் ஆகி பிளட் ஊஸ் ஆக வாய்ப்பு உண்டாக்க வேண்டாம் என்றனர்.

பக்கத்துக்கு பெட்டில்-- 66 - வயது வெள்ளியங்கிரி--மூச்சு விட சிரமம்.- 3 --பிளாக் இருக்காம். ஆனால் அவருக்கு சொல்லலை. அவர் மகனிடம் மட்டும் சொன்னார்கள். எனக்கு என்னவென்று சொல்லவில்லை. ஒருவேளை நானும் வெள்ளியங்கிரி கேஸ் தானோ? ஏன் மனைவியிடம் சொல்லியிருப்பார்களோ? மனது ஆஞ்சியோவுக்கு பின்னும் படபடத்தது .


ஆஞ்சியோ முடிந்தவுடன் விஜி --- என் மனைவி காதில் எதோ கிசுகிசுத்து விட்டு வேகமாக விடை பெற்றுக்கொண்டிருந்தார். இதுவும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.
"நல்ல டாக்டர்கள் பேஷண்டை பயமுறுத்துவதில்லை" . உறவினர்களிடமே விஷயத்தை சொல்வார்கள். எங்கள் விஜி அப்படிப்பட்டவர்.
ஐ.சி யு. அமர்க்கள பட்டுகொண்டிருந்தது.. முழுவதும் பெண்கள் ராஜ்ஜியம். நிர்வாகத்தில் குளறுபடியில்லை. சின்சியாரிட்டி அதிகம் இருந்தது.-- நேர்த்தி --இன்னும் கற்றுக்கொள்ள வேண்டி இருந்தது.
மணி 3 ஆச்சு--4 ஆச்சு --பாலாஜியைக் காணும். தியேட்டரில் இருப்பதாக சொன்னார்கள். 5 மணிக்கு வந்தார். --சார் உங்களுக்கு ஒண்ணும் இல்லை. இந்த ரெண்டு மாத்திரையும் ஒரு மாசம் சாபிடுங்கள் . ஆயில்--பாட் (கொழுப்பு ) வேண்டாம்.-- சொல்லிவிட்டு விர்ர்ரென பறந்தார். --

ஒரு நொடி பயங்கர சந்தோசம் .ரெண்டு லக்ஷத்தோடு --ஆஸ்பத்திரி வந்துநேரடி கவனம் கொடுத்த விஜிக்கு மனம் நன்றி சொன்னது. என்னை "அறுக்காமல்" காப்பாற்றிய " அம்மா மதுரகாளியை "மனம் வணங்கியது .--இவ்வளவு டென்ஷனையும் தாங்கிக்கொண்டு வெளியில் தனியாக எட்டுமணி நேரம் இருந்த மனைவிக்கு மனம் நன்றி சொன்னது. வெளிப்படையாக சொல்லியிருக்கலாம்.அது பழக்கமில்லையே.

ஐ.சி.யு. வை விட்டு வெளியே வந்தோம். வாட்ச் மேன் --உமா --உமா என்று கூப்பிட்டு கொண்டிருந்தான்.--மூன்று பேர் --அதில் இரண்டு பெண்கள்-- அவர்கள் உமாவின் உறவினர்கள் போல. பதட்டத்துடன் வந்தார்கள். டாக்டர் அந்த பையனை மட்டும் உள்ளே வர சொன்னார். வெளியே வந்த பையனின் முகத்தில் பயங்கர சோக ரேகை--ஒரு பெண் அக்கா போல. என்ன என கேட்கும் முன் எதோ நடந்து விட்டதை உணர்ந்து ஹோ-வென அழுதார். இன்னொரு பெண் மீது தலை புதைத்து கதறினார்.

ஒன்று புரிந்தது. உடலை வளர்த்தேன்--உயிர் வளர்த்தேனே--நமக்கு நோய் என்றால் நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு எவ்வளவு கஷ்டம்--நாம் படும் கஷ்டம் வேறு. ஆரோக்கியம் பாதுகாக்க வேண்டும். வந்தபின் அழுவதில் அர்த்தமில்லை.-எல்லாவற்றுக்கும் மருந்து உள்ளதுபோல் நோய்களும் பெருகிவிட்டது .விழிப்புணர்வோடு இல்லாவிட்டால் உமாவைபோல அண்ணன் --தம்பி--அப்பா-அம்மா-மனைவி -மக்களை கவலைக்குள்ளாக்க நேரிடும். இது நியாமா--சரியா என நினைத்தால் நோயிலிருந்து விலகி இருக்கலாம்.

புதைக்கப்படும் புலனாய்வுத் துறை : உரத்த சிந்தனை: எஸ்.ஆர்.சேகர்

ஜூலை 4, 2010-தினமலர்

மத்திய புலனாய்வுத் துறை – சி.பி.ஐ., என்றாலே, ஒரு பெருமிதம், மிடுக்கு, கம்பீரம். இப்படித் தான் சிலகாலம் வரை, நம் அனைவர் மனதிலும் சி.பி.ஐ., நின்றது. இப்போது அது பழங்கதை. இன்று சி.பி.ஐ., என்பது பபூனாக, மத்தியில் ஆட்சி செலுத்தும் கட்சியின் கையாளாக, ஏவலாளாக… புரியும்படி சொன்னால், ஆளும் கட்சியின் அடியாளாக செயல்படும் அவலம் தான் இன்றைய நிஜம். அவ்வப்போதும், சமீபகாலமாகவும், குறிப்பாக ஐ.மு.கூ., ஆட்சி 2004 துவங்கியது முதல், சி.பி.ஐ., ஆளும் கட்சியின் ஏவலாளாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. சட்ட நெறிமுறைகள், தர்ம நெறிமுறைகளெல்லாம் தூக்கி எறியப்பட்டு, அரசின் நிர்பந்தத்தால், வழக்குகளை பாதியிலேயே வாபஸ் பெறுவது போன்ற, புதிய கலாசாரத்தை சி.பி.ஐ., பின்பற்றத் துவங்கி விட்டது.

ஐ.மு.கூ., அரசு பதவி ஏற்று ஓராண்டு காலம் வரை, சி.பி.ஐ., தொந்தரவு செய்யப்படவில்லை. 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம், பெட்ரோல் பங்க் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு முடியும் தறுவாயில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சதீஷ் சர்மா வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்கப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்டிருந்த 15 வழக்குகளும், சி.பி.ஐ.,யால் வாபஸ் பெறப்பட்டன. இது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் என்பது மட்டுமல்ல, சி.பி.ஐ.,யை அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டது ஆளும்கட்சி என்பது வெட்டவெளிச்சமானது. சத்திஸ்கர் மாநில ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், பெரும்பான்மையை நிரூபிக்கவும், எம்.எல்.ஏ.,க் களை விலைக்கு வாங்கிய வழக்கில், முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி மீதிருந்த வழக்குகளை சி.பி.ஐ., கோர்ட்டில் திரும்பப் பெற்று, ஆளும் கட்சியின் ஏவலாள் எனும் அவப்பெயருக்குள்ளாயிற்று.

கடந்த 1984ல், சீக்கியர்களை கொன்று குவித்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீஷ் டைட்லர், வலுவான ஆதாரங்களோடு, கிட்டத்தட்ட குற்றவாளி என அறிவிக்கப்படுவார் என்னும் சூழலில், அவர் மீதிருந்த அத்தனை வழக்குகளும் மார்ச் 2009ல் திரும்பப் பெறப்பட்டன. இதன் முக்கிய காரணம், அடுத்த இரண்டு வாரங்களில் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது. போபர்ஸ் வழக்கில், பல்வேறு தடைகளை மீறி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் எனும் நிலை ஒரு சமயம் வந்தது. மே 2009ல் ஐ.மு.கூ., மீண்டும் ஆட்சியை பிடித்தவுடன், அதே ஆண்டு அக்டோபரில், தேடப்படும் குற்றவாளி பட்டியலிலிருந்து சோனியாவின் குடும்ப நண்பர், இத்தாலியின் ஒட்டவோ குட்ரோச்சியை சி.பி.ஐ., விடுவித்தது. அவரது லண்டன் வங்கியில் அதுவரை சி.பி.ஐ., முடக்கி வைத்திருந்த பிரச்னைக்குரிய 21 கோடி ரூபாய் பணம் முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது. விளைவு, ஒரே நாளில் அவர் பணத்தை எடுத்துக் கொண்டார். இப்படி சி.பி.ஐ., ஆளும்கட்சி பிரமுகர்களுக்கு கொத்தடிமையாக செயல்பட்டது அதிர்ச்சிக்குரிய சம்பவம்.

ஜூன் 22, 2008ல், சோனியா அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அரசு தோற்கடிக்கப்படும் எனும் சூழலில், முலாயம் சிங்குக்கு வலை வீசப்பட்டது. வலையாக மாறிய சி.பி.ஐ., அமர்சிங்கிடம் பேரம் படிந்தது. இதற்கு கைமாறாக, சமாஜ்வாடி எம்.பி.,க்களின் ஓட்டுக்களால், ஐ.மு.கூ., அரசு காப்பாற்றப்பட்டது. பிரதிபலனாக சி.பி.ஐ., டிச., 2008ல் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கிலிருந்து முலாயம் சிங்கை விடுவித்து வழக்குகளை வாபஸ் பெற்றது. மார்ச் 30, 2010ல், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் மீது, பாட்னா ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டிய சி.பி.ஐ., அதை செய்யாமல் தவிர்த்தது. இந்த பேரத்தில், அரசுக்கு ஆதரவாக தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லாலு வெளிநடப்பு செய்தார். தாஜ் ஓட்டல் வழக்கு மற்றும் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில், உ.பி., முதல்வர் மாயாவதிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வேண்டிய சி.பி.ஐ., ஏப்., 23, 2010ல் அவகாசம் கேட்டது. அதற்கு விலையாக லோக்சபாவில் வெட்டுத்தீர்மானத்தில் அவரது கட்சி எம்.பி.,க்கள் 21 பேர் அரசுக்கு ஆதரவு ஓட்டளித்தனர். கொடுக்க வேண்டியதை கொடுத்து, சி.பி.ஐ., மூலம் பெற வேண்டியதை மன்மோகன் அரசு பெற்றது. இப்படி, தன் கட்சித் தலைவர்களை விடுவிக்கவும், தன்னுடைய ஆட்சியை காப்பாற்ற எதிர்க்கட்சிகளை மிரட்டி பணிய வைக்கவும் சி.பி.ஐ.,யை மத்திய அரசு தனது அடியாளாக பயன்படுத்தியது.

போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தொடுத்த வழக்கில் மனு ஐ.பி.சி., 304(2) பிரிவில் தண்டனை பெற்றுத்தர தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.ஐ.,யின் சாட்சியங்கள் வலுவாக இல்லாததால், பின்னாளில் வழக்கு ஐ.பி.சி., 304(எ) பிரிவுக்கு மாற்றப்பட்டு, வழக்கு நீர்த்துப் போனது. இடைக்காலத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு எதிராக வலுவான சாட்சியங்கள் திரட்டப்படும். சி.பி.ஐ., அரசியல் காரணங்களுக்காக, “ரெவ்யு பெட்டிஷன்’ போடவில்லை. அவ்வாறு செய்திருந்தால், இன்று குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்திருக்கும். ஆட்சியாளர்களின் பிடியில் சி.பி.ஐ., இருந்ததால்தான் வழக்கின் முடிவு, பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகப் போனது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக, கையாளாக செயல்படத் தான் சி.பி.ஐ.,யை உருவாக்கியவர்கள் தொடங்கினரா? “ஸ்பெஷல் போலீஸ் எஸ்டாபிலிஸ்மென்ட்’ என்பது, 1941ல் இரண்டாம் உலகப் போரில், சப்ளை மற்றும் சர்வீசை கண்காணிக்க உருவாக்கப்பட்டது. 1962ல் அமைக்கப்பட்ட சந்தானம் கமிட்டி, இதன் செம்மைப்படுத்தப்பட்ட,”சென்ட்ரல் பியூரோ ஆப் இன்வெஸ்டிகேஷனை’ ஏற்படுத்தியது.

அமெரிக்காவிலுள்ள எப்.பி.ஐ., போல், சி.பி.ஐ., இருக்க வேண்டுமென்பது உருவாக்கியவர்களின் உள்ளக்கிடக்கை. இன்றும் கூட இன்டர்போலின் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அமைப்பு சி.பி.ஐ., மத்திய உள்துறை அமைச்சகத்தின் பார்லிமென்ட் தீர்மானத்தின் அடிப்படையில், ஜூன் 1, 1963ம் ஆண்டு சி.பி.ஐ., நிறுவப்பட்டது. இதன் பெருமைகளைச் சொன்னால், இதன் இன்றைய சிறுமைகளைக் கண்டு நம் நெஞ்சு வெதும்பும். இத்தனை பெருமைகளை உடைய சி.பி.ஐ., பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள மக்கள் குறைதீர்ப்பு மற்றும் தனிப்பயிற்சித்துறை அமைச்சரின் கீழ் செயல்படுகிறது. ஆகவே, அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் இந்த அமைச்சர் தான் சி.பி.ஐ.,யின் எஜமான். இப்படி மந்திரி, “பாஸ்’ ஆக இருந்தால், ஆளும் கட்சிக்கு சொல்லவா வேண்டும். சி.பி.ஐ.,யை தங்கள் எடுபிடியாக்கினர்.

பிரியதர்ஷினி மட்டூ கொலை வழக்கில், 22 வயது சட்டக்கல்லூரி மாணவர் சந்தோஷ் குமார் சிங் முதலில் விடுவிக்கப்பட்டார். “சி.பி.ஐ., சரியாக செயல்படவில்லை’ என்று நீதிபதி, சி.பி.ஐ.,க்கு குட்டு வைத்தார். குற்றவாளி ஐ.பி.எஸ்., அதிகாரியின் மகன் என்பதால், சி.பி.ஐ., சுணக்கம் காட்டியது. பிறகு மீண்டும் வழக்கை எடுத்து 2006ம் ஆண்டு, மரண தண்டனை பெற்றுத் தந்தது. கடந்த 1991ல், ஹவாலா வழக்கில் வினீத் நாராயணன் விடுவிக்கப்பட்டதை கண்டித்த சுப்ரீம் கோர்ட், “சி.பி.ஐ., – சி.வி.சி.,யின் மேற்பார்வையில் செயல்பட வேண்டும்’ எனக் கூறியது சி.பி.ஐ.,க்கு ஒரு நெருடல். இப்படி சொதப்பல், அவமானப்படுதல், அரசியல் தலையீட்டுக்கு அடி பணிதல் என, பலவேறு குறைகள் இருந்தாலும், கடந்த இரண்டாண்டில் சி.பி.ஐ., வழக்கில் வெற்றி பெற்ற சதவீதம் 62க்கு மேல். எந்த ஒரு அமைப்பையும், எவ்வளவு வலுவாக ஏற்படுத்தினாலும், அதை தவறாக பயன்படுத்தும் குழுக்கள், எல்லா இடத்திலும் இருக்கத் தான் செய்கின்றன. அதற்கான தடுப்பும், பாதுகாப்பும், அதன் கட்டமைப்பிலும், சட்டத் திட்டத்திலும் இருந்தாலும், மேலும் மேலும் அவ்வப்போது அதை வலுப்படுத்துவது காலத்தின் கட்டாயம்.
அமித் ஷா கைது --காங்கிரஸின் ஊரறிந்த ரகசிய திட்டம்.


குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷா சி.பி.ஐ ஆல் கைது செய்யப்பட்டது காங்கிரசின் முகத்திரையை கிழித்து விட்டது.பா.ஜ.கவை பழி வாங்க வேண்டும்--நரேந்திர மோடி ஆட்சியை அகற்ற வேண்டும் என்பது எல்லாம் காங்கிரசின் "ஊரறிந்த ரகசியங்களில் " ஒன்று.என்பது நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

ஆனால் ஐந்து ஆண்டுகாளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இவ்வழக்கை இப்போது சி.பி.ஐ.ஏன் தூசி தட்டி எடுத்தது. விவரம் இல்லாமல் இல்லை

.பார்லிமென்ட் இந்த வாரம் கூடுகிறது. விலைவாசி விண்ணை முட்டுகிறது. பெட்ரோல் டீசல் விலை மீண்டும் ஏற்றியாகிவிட்டது. கூட்டாளி திமுக வின் ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழல்--- பார்லிமெண்டில் புயலைகிளப்பபோகிறது.

. ஏற்கனவே இவைகளை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளுடன்,-- கம்யூனிஸ்ட்டையும் சேர்த்துக்கொண்டு "பாரத் பந்த்தை " வெற்றிகரமாக--- பா.ஜ.நடத்தி விட்டது. எனவே பார்லிமென்ட் உள்ளே இந்த கூட்டணி மீண்டும் சேர்ந்தால், காங்கிரஸ் உரித்த கோழியாகிவிடும். எனவே தான்” மதவாத சாயம் பூசும் வழக்குகளை”-- எடுப்போம்--பாஜகவை தனிமைப்படுத்துவோம் --என்ற காங்கிரசின் "சகுனி வேலையின் ஒரு பகுதி”-- அமித் ஷா கைது.

இரண்டாவது--பீகார் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் வருகிறது. பீகார் வாக்களர்களில் 10 சதவீதம் முஸ்லிம்கள் --அவர்களை பா.ஜ.கூட்டணிக்கு ஒட்டுபோடவிடாமல் செய்ய பா.ஜ.வை மதவாதி என சித்தரிக்க--இக்கைது நாடகம்காங்கிரஸுக்கு பக்கபலமாக இருக்கும் என்று காங்கிரஸ் நம்புகிறது.

பாவம் சி.பி.ஐ.----ஏற்கனவே- எம்.எல்.ஏக்களை விலைக்கிவாங்கிய வழக்கில் ---அஜித் ஜோகி மீது குற்றம் ருசுவான பிரகும் கூட கேசை வாபஸ் வாங்கியது--பெட்ரோல் பங்க் ஊழல் சதீஷ் ஷர்மா கேஸை காலாவதியாகவிட்டது--சீக்கியர்களை கொன்று குவித்த-- ஜகதீஷ் டைட்லர் கேசை வாபஸ் பெற்றது --மாயாவதிக்கு பல்லக்கு தூக்கியது--முலயாமுக்கு பல்லைக் காட்டியது --போஃபர்ஸ் ஊழல் புகழ் குவட்ரோச்சியை தப்பவிட்டது----என காங்கிரசால் அவமானப் பட்டுக்கொண்டிருக்கும் சி.பி. ஐ இப்போது மீண்டும் காங்கிரசின் ஏவலாளாக செயல் பட்டு மீண்டும்--- மாபெரும் அவமானத்தை சந்திக்கப் போகிறது. எவ்வளவு ஜோடிச்சாலும் இந்த பொய் வழக்கு நிக்காது என்பது தெரிந்தே சி.பி.ஐ. இதில் இறங்கி உள்ளது.

சரி -அமித் ஷா யார்--இவரை ஏன் காங்கிரஸ் கண் வைத்தது--மீடியாக்கள் போட்டிபோட்டுக்கொண்டு ஏன் அமித் ஷா மீது மண்ணை வாரி இறைக்கிறார்கள். குஜராத்தில் அவருக்கு அப்படி என்ன செல்வாக்கு--

அமித் ஷா விஸ்வ ஹிந்து பரிஷித் இருந்து வந்தவர்--மிக பெரிய பணக்கார குடும்பத்தை சார்ந்தவர்-

-ஊழல் விஷயங்களில் சிக்காதவர்-- 24 மணிநேரமும் உழைப்பவர்--இந்துத்வாவை வ்ற்றிகரமாக அமுல் படுத்திக் கொண்டிருப்பவர்.---பயங்கரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர்--மோடியின் வலதுகரம்--அத்வானியின் தேர்தல்களுக்கு இரண்டுமுறை இவரே முழுப்பொறுப்பாளர்-- குஜராத் போலிஸ் ஸ்டேஷன்கள் எல்லாம் மார்பிள் கற்களால் இழைக்கப்பட்டிருக்கும் வண்ணம் சுத்தம்--சுகாதாரம்--சட்டம் ஒழுங்கை பாதுகாப்பவர்.

இவரது தொகுதியான ஆமதாபாத் அருகிலுள்ள ”சர்கெஜ் தொகுதியை” போய் பார்த்தால் ஒவ்வொரு தெருவும் இவர் எப்படிப்பட்ட திறமையான நிர்வாகி என பாடம் சொல்லும்.மன்மோகன் சிங்கின் பொருளாதார சீர்திருத்தம் எல்லாம் இவர் செய்திருக்கும் வளர்சிக்குமுன் தூசி.


இவர் தொகுதியின் வஸ்த்ரபூர்-- மக்கள் பிரிதி நிதிகள் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கான " முன்மாதிரி ஊர் ""-- இனி பாஜகவை குஜராத்தில் எத்தனை தேர்தல் வந்தாலும் வீழ்த்த முடியாது ---என்று பயந்து போன காங்கிரஸ் அமித் ஷாவை கைது செய்ய சி.பி.ஐயை பயன்படுத்துகிறது..-\\\\\\

-நிச்சயம்--- எப்போதும் போல--- நீதி லேட்டாக ஜெயிப்பதும்-- அநீதி லேட்டாக தோற்பதும் இம்முறை நடக்காது-

சி.பி.ஐயை சுய லாபத்துக்கு இயக்குபவர்கள்--சீக்கிரம் --இயக்கமில்லாமல் போகப்போகிறார்கள்
.
" களவானி " களுக்கு பாடம் தந்த 'கார்கில் போர்-- வெற்றி தினம்--ஜூலை- 26
இந்தியா இனி எப்போதும் வெற்றி பெற சபதமேற்போம்.


47 இல் சுதந்திரம் பெற்று ஆசுவாச படுத்திக் கொள்வதற்க் குள்ளாகவே அதுவரை நம்மிடம் இருந்த நம் முன்னாள் சகோதரர்கள் ( புதிய வார்த்தையாக இருக்கிறதல்லவா? ) பாகிஸ்தான் நம்மீது உடனடியாக போர் தொடுத்தது. காஷ்மீரத்தின் ஒரு பகுதியை அபகரித்து கொண்டார்கள். சரித்திரம் என்பது நடந்த உண்மைதானே--மாற்றி எழுத முடியாதுதானே--அதனால் இதை எழுதினால் மதவாதம் என சொல்லமுடியாதுதானே--அபகரிக்கப் பட்ட நமது பகுதி அன்றைய பல் வேறு அரசியல் காரணங்களால் --மீட்கப்படும் பல்வேறு வாய்ப்பு கிடைத்தும் மீட்கப்படாமல் போனது. அதற்க்கு இன்றைய நமது பெயர் பி.ஒ .கே --பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர். பழைய சகோதரன் பாக்கிஸ்தான் வைத்த பெயர் "ஆசாத் காஷ்மீர் " --விடுதலை பெற்ற காஷ்மீராம்.

இதற்குப் பிறகு சீனா நம் மீது திடிரென படையெடுத்து இமயமலைப் பகுதியில் 16000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நமது தேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. 1966 இல் மீண்டும் பாகிஸ்தானுடனான போரில் லாகூரை நாம் பிடித்துவிடுவோம் என்னும் தருணத்தில், போர் நிறுத்தம் நம்மீது திணிக்கப்பட்டது. 1971 இல் பங்களா தேஷ் என்னும் புதிய நாட்டை ஏற்ப்படுத்தி அவர்களிடமே கொடுத்தோம். இப்படி நடந்த போர்களில் நம் பகுதியை காப்பாற்றிக் கொள்ளவோ-- எதிரி ஆக்கிரமித்த நம் பகுதியை மீட்கவோ செய்யவில்லை.

ஆனால் 1999 அடல் பிஹாரி வாஜ்பாய் என்னும் மாமனிதன் தலைமையில் இந்திய அரசு முதன்முதலாக பாக்கிஸ்தான் நம்மிடம் இருந்து ஆக்கிரமித்த பகுதியை மீட்டது.அதோடு அவர்கள் படையை ஒடோட விரட்டியடித்தது. பாக்கிஸ்தான் படைக்கு பெரும் சேதத்தை ஏற்ப்படுத்தியது .வெற்றி நம் பக்கம் குவியும் நேரம் மீண்டும் கட்டாய போர் திணிப்புக்கு முயன்ற அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் விடுத்த கட்டளையை தூக்கிஎரிந்தார் வாஜ்பாய் அவர்கள் . இது வல்லவன் வாஜ்பாயின் "பேராண்மைக்கு "--சான்று .

இப்படி சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளில் வெற்றிகளை குவித்த முதல் போர் என்னும் பெருமை "கார்கில் " போருக்கே சொந்தம். அதே ஆண்டில் இந்த வெற்றி ""அணுஆயுத தேசம் " நியுக்கிளியர் நேஷன் " என்னும் பெருமையை அணுகுண்டு வெடித்ததன் மூலம் பெற்று தந்தது.

அரசின் திட்டங்களால் கிடைத்த வெற்றியை அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலில் வெற்றிபெற தேர்தல் அறிக்கைகளாக தருவது வழக்கம். ஆனால் வாஜ்பாய் ஆட்சியின் வெற்றிகள் வரலாற்றில் இடம் பெரும் வெற்றிகள். தேசத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட " தேசத்தின் வெற்றிகள் "

அனைவருக்கும் கல்வி--என்ற "சர்வ சிக்ஷா அப்பியான்" இந்தியாவை கல்வி அறிவுள்ள நாடாக மாற்றும் பணியில் வெற்றி. தங்க நாற்க்கர சாலை--தேசத்தை சாலை வழியில் இணைக்கும் பணியில் வெற்றி. இந்த வெற்றிகள் தொடர நினைத்த போது மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் அமர்த்த பட்டதால், வறுமை==விலைவாசி உயர்வு--வேலை இன்மை --என்னும் நோய்களால்--மீண்டும் தொய்வு.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரு குறிக்கோள் இருக்கும். அந்த குறிக்கோளை அடைய அவன் சபதமேர்ப்பதும் உண்டு. அதற்காக அவன் , அவனது பிறந்த நாள், திருமண நாள், மற்றும் அவனுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் ஏதாவது ஒரு நாளில் மீண்டும் மீண்டும் சபதமேர்ப்பது நடந்து வருகிறது.

கார்கில் போர் வெற்றி தினம் --இந்த தேசத்தின் தன் மானம் காத்த நாள். அது தொடங்கி வைத்த வெற்றிகள் ஏராளம். அதே தினம் ஒவ்வொரு மனிதனுக்கும் புத்துணாச்சி ஊட்டும் தினம் தனிப்பட்ட நம் வாழ்வின் வெற்றிக்கும்--தேசத்தின் புதிய மறுமலர்ச்சிக்கும் --இந்தியாவை மீண்டும் உலகின் குருவாக்கவும். . . இந்நாளில் மீண்டும் சபதமேற்ப்போம்.
நமது தேசத்தின் அதிசயங்கள்


அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.


பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.


வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.


பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட அம்புலன்சும், தீயனைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!
நாம் அணியும் ஊள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கற்களும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர்
இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.


கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள்.
கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.
கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை
அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!
இந்த மாதிரி அதிசயங்கள் நமக்கு தேவையா ?

தூங்கும் பாரதமக்களை எழுப்ப வேண்டுமே!