Pages

Friday, August 6, 2010

சரக்குக்கு புதுப்பெயர் தா தலைவா

பெறுனர்:-

முதல்வர் கலைஞர்.,
தலைமை செயலகம்.,
சென்னை

ஐயா.,
செம்மொழி மாநாடு நடத்துனீங்க..
எங்கும் தமிழ்., எதிலும் தமிழ்னு
சொன்னீங்க...ஆனா ஒரு இடத்துல மட்டும்
சுத்தமா தமிழ் இல்லைங்களே..
அங்கிட்டு எல்லாமே இங்கிலீஷ்ல
தாங்க இருக்கு..


நீங்கதான் சீக்கிரம் இதுக்கு
ஒரு நல்ல முடிவா எடுக்கணும்..

அந்த இடம் - நம்ம டாஸ்மாக்

அங்கே இருக்கிற சரக்குக்கு
எல்லாம் தமிழ்ல பேர் வெச்சி
தமிழை வளர்க்கணும்க..

நானே சில பேர் யோசிச்சி
வெச்சிருக்கேன்..

உங்களுக்கு திருப்தி இல்லைன்னா
ஒரு குழு அமைச்சி நல்ல., நல்ல
பேரா வைங்க..

மிடாஸ் கோல்ட் - தங்க மகன்

நெப்போலியன் - ராஜராஜ சோழன்

கோல்கொண்டா - கங்கைகொண்டான்

வின்டேஜ் - அறுவடை தீர்த்தம்

ஆபீஸ்ர்ஸ் சாய்ஸ் - அதிகாரிகள் ஆசை

சிக்னேச்சர் - கையொப்பம்

ஓல்டு மாங்க் - மகா முனி

ஜானி வாக்கர் - வெளியே வா

கார்டினல் - பொதுக் குழு

மானிட்டர் - உளவுத் துறை

மேன்சன் ஹவுஸ் - உறுப்பினர் விடுதி

ராயல் சேலஞ்ச் - நாற்பதும் நமதே

ஹோவர்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000

நம்ம டாஸ்மாக்க விட்டுட்டோமே----கள்ளக் குடி கொண்டான் கடை

3 comments:

Anonymous said...

உங்கள் வலைப்பூ உங்களைப் போலவே மணக்கிறது. மென்மேலும் ரோஜாப்பூவாக மணக்க எனது மனப்பூர்வமான வாழ்த்துகள் .
ஆர் .வெங்கடேஷ்

எஸ்.ஆர்.சேகர் said...

கள்ளக் குடி கொண்டான் கடை பற்றிய செய்தி தான் நம் கடை சரக்கு வியாபாரத்தில் முன்னிலை

ramalingam said...

அற்புதம் உங்கள் விமர்சனம். கள்ளுக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே.