Pages

Sunday, September 9, 2012

பொய்யை வாந்தி எடுக்கும் ..கபில் சிபலே ராஜினாமா செய்



நிலக்கரி ஒதிக்கீட்டு ஊழலுக்கு காரணம் மாநில அரசுகளின் “ஸ்கீரினிங் கமிட்டிதான் “ எனவே பாஜக ஆளும் மத்திய பிரதேசம்—சத்தீஷ்கர்—ஜார்க்கண்ட் முதல்வர்கள் ராஜினாமா செய்யவேண்டும்---

என்ற புதிய குண்டை இன்று மத்திய “பொய்த் தகவல்துறை “ மந்திரி கபில் சிபல் சொல்லியுள்ளர்..

இவர்தான் ஏற்கனவே 2-ஜி ஊழலில் “சைபர் லாஸ் “ என்றார்.

முதலில் மூன்று விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..

1..மாநில அரசுகளின் “ஸ்கீரினிங் கமிட்டி “ சட்ட அந்தஸ்து இல்லாதது..இதன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்கவேண்டியதில்லை..
இதற்கு ஆதாரம் மகாராஷ்ட்ர காங்கிரஸ் அரசின் கல்வி மந்திரியின் தகப்பனாரும் எம் .பி யுமான விஜெய் தாதா விற்கு ஜார்கண்ட் அரசு நிலக்கரி சுரங்க ஒதிக்கீடு செய்ய மறுத்தது..விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தது.

ஆனால் மத்திய மின்துறை அமைச்சகம் அவருக்கு லைசன்ஸ் கொடுத்தது மட்டுமல்லாமல் நிலக்கரி சுரங்கமும் ஒதிக்கீடு அதே ஜார்கண்ண்டில் செய்தது…மாநில அர்சுக்கு எவ்வளவு “பவர் “ என்பது இதிலிருந்தே தெரிகிறது..கபில் சிபலின் அறிக்கை எவ்வளவு பொய் என்பதற்கு இதுவே சான்று..

2..அன்றைய ராஜஸ்தான் பாஜக முதல்வர் வசுந்தரா..ராஜேவின் ஏப்ரல் 5—2005 ஆம் தேதியிட்ட கடிதத்தில் “ஸ்கீரினிங் கமிட்டி “ தொடர வேண்டும் என்று கோரியுள்ளார் என்பதும் கபில் சிபலின் வாதம்..
ஆனால் ஜூலை 25ந்தேதி..2005 ஆம் ஆண்டு (அதே ஆண்டு )..பிரதம மந்திரி அலுவலகத்தின் முதன்மை செயலாளர்..டி.கே.ஏ.நாயர் அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிதிச் செயலாளர்..மின்துறை செயலாளர்—தொழில்துறை செயலளர் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு…   ”சுரங்க சட்டத்தை திருத்தி ஏலமுறை அமுல் படுத்த காலதாமதம் ஆவதால்..மாநில அரசுகளின் “ஸ்கீரினிங் கம்மீட்டி “   தொடரும் என்று தீர்மானித்திருக்கிறது..இதன் “மினிட்ஸ்” நேற்று எல்லா ஆங்கில நாளேடுகளிலும் வந்துள்ளது..
இதற்கு பின்னரும் இவ்வளவு பெரிய பொய்யை கபில் சிபல் அவிழ்த்துட்டுள்ளார்..என்பதை நாம் புரிந்து கொண்டால் சரி

3..ஊழலின் ஊற்றுக்கண்..கருணாநிதியின் கைத்தடி..ஜகத்ரக்‌ஷகன்..மீதுள்ள நிலக்கரி ஊழலை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு..மத்திய சட்டதுறை மந்திரி..சல்மான் குர்ஷித்..”அவர்மீது புகார் இதுவரை வரவில்லை..அப்படியே வந்தாலும் “ஸ்கீரினிங் கமிட்டி “ முறையாக தீர்மானிக்க வில்லை “ என்ற குற்றச்சாட்டு வந்தால் மட்டுமே விசாரிக்க முடியும் “ என்று கூறியுள்ளார்..

ஆக “ஸ்கீரினிங் கமிட்டியின் “ சூத்திர தாரிகள் காங்கிரசும் மத்திய அரசும் என்பது இதிலிருந்தும் வெட்டவெளிச்சமாகிவிட்டது.

நாம் ஏன் பிரதமரை ராஜினாமா செய்யச்சொல்கிறோம்..

கட்டடமே இல்லாத –ஆபீசே இல்லாத காங்கிரஸ் எம்.பி விஜய் தார்தா வின் கம்பனியின் 10 ரூபாய்..ஷேர் ரூபாய் 8880 க்கு விற்று கொள்ளை அடித்ததும்..

நிலக்கரி துறைக்கு சம்பந்தமே இல்லாத ஜகத்ரக்‌ஷகன்…கம்பனி ஆரம்பித்த 4 நாளில் பாண்டிச்சேரி காங்கிரஸ் அரசின் "பிப்டிக்" உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு “நிலக்கரி லைசன்ஸ்..மற்றும் சுரங்கம் ஒடிசாவில் பெற்றுக்கொண்டு..6 ஏ மாதத்தில் அதன் 51 சதவீத பங்குகளை பல்லாயிரம் கோடிகளுக்கு விற்றதும்…....
 ஊழலில்லை என்கிறார்..பிரதமர்—
சோனியா—காங்கிரஸ் காரர்கள்..
நியாயமா..நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Wednesday, September 5, 2012

”காங்”-ணக்கியமும்---SC/ST—பதவி உயர்வு மசோதாவும்



என் நண்பரின் பேரனிடம் ”கை”.ய்யில் எந்த பொருளை கொடுத்தாலும்..கீழே போட்டு உடைத்து விடுவான்..பொருளின் “வலிமையை” சோதிக்க அவனிடம் கொடுத்தால் போதும்.அவன் “ கை” பட்டு பொருள் உடையவில்லை என்றால் அது ஐ.எஸ்.ஓ.—ஐ.எஸ்.ஐ..சான்றுக்கு மேலானது..

மெஜரிட்டியே இல்லாமல்..ஒரு மைனாரிட்டி சர்க்காரை உயிர்போகாமல் காப்பது எப்படி –(நரசிம்மராவ்..அரசு)…
மாநிலமே(தெலுங்கானா-ஆந்திரா) தீப்பற்றி எரிந்தாலும் ஆட்சி கவிழாமல் இருக்க வைப்பது எப்படி?---

ஆதர்ஷவில் இருந்து 2-ஜி- ஊழல்வரை—எவ்வளவு “ஸ்கேம்கள்” வெளிச்சம் போட்டாலும்” தைரியமாக முகத்தை காட்டிக்கொண்டு வெளியில் நடமாடுவது எப்படி”?

தற்போது வசமாக மாட்டிக்கொண்ட “நிலக்கரி ஒதிக்கீட்டு” ஊழலிலும்..அதனால் பார்லிமெண்ட் முடக்கத்திலிருந்தும் தப்பிப்பது எப்படி ?” என்கிற கலைகளிலும்…புதிய பாடம் எழுதி—புதிய சிலபஸ் உருவாக்கி…பி.ஹெச்.டி—பட்டம் பெருவது எப்படி?---
என உலகிற்கே ஊழலில் வழிகாட்டியாய் இருக்கும் காங்கிரசின் நெகட்டிவ் திறமையை பார்த்து மயிர்கூச்செரிகிறது..

10 நாட்களுக்கு மேலாக பார்லிமெண்ட் நடக்கவில்லை…பிஜெபியின் இந்த அரசியல் வெற்றியை எப்படி முறியடிக்க முடியும்?—என திட்டம் போட்டது காங்கிரஸ்..தனது ஒவ்வொரு பழைய--- பதுக்கி வைத்த பாடங்களை தூசி தட்டி எடுத்தது காங்கிரஸ்..

முதலில் தன் கட்டுபாட்டில் உள்ள சிபிஐ கோர்ட்டின் குஜராத் நரோடா பாட்டியா வழக்கு தீர்ப்பை அவசர அவசரமாக வாசித்து..ஒரு களயபரம் உண்டு பண்ன முயற்சி செய்தது…ஆனால் எதிர்பார்த்த அளவு அதில் வெற்றி பெறவில்லை..

நிலக்கரி ஒதிக்கீடு ஊழலில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் வலியுருத்தியதன் பேரில்தான் “ஸ்டீரிங் கமிட்டி” நடைமுறையை பின்பற்றினோம் என்றது,,

ஆனால் நிலக்கரி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிரது..ஸ்டீயரிங் கமிட்டி சட்டபூர்வ அந்தஸ்து இல்லாதது..அதை மத்திய அரசு “பைபாஸ்” செய்ய முடியும்..என்ற உண்மைகள் வெளிவர ஆரம்பித்தவுடன் காங்கிரசின் ஆட்டம் அடங்கிப்போனது..

ஆனாலும் முழுமையாக அடங்கவில்லை..எந்த விஷயத்தை எடுத்தால் எல்லோரும் “வாய் மூடுவர்—பிஜேபி அடங்கும்”—என “ரூம்” போட்டு யோசித்து—இப்போது  SC/ST அதிகாரிகள் பதவி உயர்வு சட்டத்தை கைய்யில் எடுத்துள்ளது..

எல்லோரும் கேட்கும் கேள்விதான்..காங்கிரசுக்கு இந்த மசோதா மீது திடீரென ஏன் ஆவல்—பாசம்—இது பற்றி இத்தனை ஆண்டுகளாகளில் குறிப்பாக—இந்த ஆண்டில்-- அதிலும் குறிப்பாக  இந்த மழைக்கால கூட்டத்தொடரில்..எந்த பேச்சும் இல்லையே..இப்போது திடீரென ஏன்?..இப்படி?—

2—3—நாட்களாக இந்த “காங்”(சா)-ணக்கிய  கும்பல் ராப்-பகலாக ஒர்க் பண்ணி..இந்த ”ஐயிட்டத்தை”—தேடிப்பிடித்து…இன்று எல்லா கட்சிகளின் காங்—எதிர்ப்பை முடக்கி—அவர்களை திருப்பி முடக்கும் வித்தையை துவக்கி---புதிய விறு விறுப்பை உருவாக்கியுள்ளது..

மக்களுக்கு நல்லாட்சி தர சிந்திக்கும் பாஜக ஒரு பக்கம்—ஆட்சியை பிடிக்க ஆலாய் பறக்கும் மற்ற கட்சிகள்..மறு பக்கம்…

இதில் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதை மட்டுமே செய்யும் காங்கிரசின் மறு பக்கம் மீண்டும் வெளியே தெரிந்து விட்டது..
இதுவும் எத்தனை நாளைக்குத்தான் பார்ப்போமே….

Saturday, September 1, 2012

ஐசக் நியூட்டன் சொன்னால் “விதி”—குஜராத் மக்கள் செய்தால் “சதியா”

அஹமதாபாத் சிறப்புநீதிமன்ற நீதிபதி.திருமதி ஜோத்சனா யாக்னிக்..அளித்த “நரோடாஅ பாட்டியா வழக்கு” தீர்ப்பு---காங்கிரஸுக்கு லாபமா?—மோடிக்கு பின்னடைவா?

மோடியின் மந்திரிசபை முன்னாள் சகா டாக்டர்.மாலாபென்னுக்கு 28 ஆண்டும்—பஜ்ரங்தள் தலைவருக்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டிருக்கிறது..இது சட்டத்தின் ஆட்சியின் வெற்றியா?—மோடியின் முஸ்லீம் விரோத முகத்திரை கிழிக்கப்பட்டுவிட்டதா?

முதலில் கோத்ரா ரயில் நிலயத்தில் 56 அப்பாவி கரசேவகர்கள் உயிரோடு எரிக்கப்பட்டிருக்காவிட்டால்…”நரோடா பாட்டியாவில்”- 97- அப்பாவி முஸ்லீம்கள் பலியாகி இருக்கமாட்டார்கள்..
அப்படியானால் “தூண்டியவன் தூய்மையானவன்…---துடித்தெழுந்தவன் துஷ்டனா?”.---.”அடித்தவன் காந்தியவாதி….அழுதவன் கோட்சேயா?

இரண்டாவது…1984 இல் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்டதற்கு..டெல்லியில் 3000 அப்பாவி சீக்கியர்களை கொன்று குவித்ததே—பலிவாங்கியதே—பழிவாங்கியதே..காங்கிரஸ்..----28 ஆண்டுகள் உருண்டோடியும் வழக்கு இல்லை—தண்டனை இல்லை—கூக்குரல் இல்லை…கொலைகாரர்கள் சஜன் குமாரும் ஜகதீஷ் டைட்லரும் (இன்னொரு குற்றவாளி ஹெச்.கே.எல்.பகத்..காலமானார்)—ராஜநடை போட்டுக்கொண்டிருக்கிறார்களே..
மார்வா கமிஷன்
மிஸ்ரா கமிஷன்
கபூர் மிட்டல் கமிஷன்
ஜெயின் பானர்ஜி கமிஷன்
போட்டி –ரோசா கமிஷன்
ஜெயின் –அகர்வால் கமிஷன்
அகுஜா கமிஷன்
தில்லான் கமிஷன்
நருலா கமிஷன்
நானாவதி கமிஷன்
என போட்ட எல்லா கமிஷனும் ஒன்றுவிடாமல் குற்றவாளி என அறிவித்த காங்கிரசின் எம்.பிக்கள் சஜன் குமாரும் –ஜகதீஷ் டைட்லரும் இன்னும் தண்டிக்கப்படவில்லையே…அவர்களுக்கு பாரளுமன்ற தேர்தலில் டிக்கட் வழங்கவேண்டும் என்பதற்காக.------- முடியும் தருவாயில் இருந்த வழக்குகளை--- சிபிஐ வாபஸ் வாங்கியதே..இது எந்த ஊர்—எந்த நாட்டு---எந்த மதத்து—நியாயம்?..ஓஹோ..இது காங்கிரஸ் கட்சி நியாயமோ?

மாறாக தனது மாநிலத்தில் சர்வ வல்லமை பொருந்தியவராக இருந்தாலும்..தனது மந்திரிசபை முன்னாள் சகா..மாலாபென்னை பதவி நீக்கியது மட்டுமின்றி…நீதிமன்றத்தில் நிறுத்தினாரே மோடி…இதுதான் இந்துக்களின் நியாயமோ..இந்திய நியாயமோ----..பிஜேபி நியாயம்..

மூன்றாவதாக--------நீதிபதி தனது தீர்ப்பில்…” போலீஸ் அசட்டையாக இருந்தது…கலவரக்காரர்களுக்கு துணை போனது…இந்த்..இந்த போலீஸ் அதிகாரிகள் தவறு செய்திருக்கிறார்கள்”--…என ஒரு வரி கூட கூற வில்லையே…இதற்காக தனி அஃபிடவிட் நீதிமன்றத்தில் ..போலீசுக்கு எதிராக தாக்கல் செய்திருந்ததை நீதிபதி தள்ளுபடி செய்திருக்கிறாறே…இது போதாதா..மோடியின் நல்லாட்சிக்கு..நடுவுநிலை தவறாமைக்கு..

மாறாக..டெல்லி சீக்கியர் படுகொலையை காங்கிரஸ் நிகழ்த்திய போது..”போலீஸ் அதிகாரிகள் கண்மூடி இருந்தனர்…போலீஸ் ஸ்டேஷன்கள் பூட்டு போடப்பட்டிருந்தன..கபூர்—மிட்டல் கமிஷன் குற்றம் சுமத்திய 72 போலீஸ் அதிகாரிகள் மீது இன்றுவரை வழக்கில்லை..
காங்கிரஸ் குண்டர்களால் சீக்கிய சகோதரர்கள் தாக்கப்பட்டபோது..வாக்களர்பட்டியலை வைத்துக்கொண்டு…சீக்கியர்களின் வீடுகளை அடையாளம் காட்டியதே-- டெல்லி போலீஸ்.
ஆக இந்தியாவில் உயிருக்கென்று “தனியாக “ மதிப்பில்லை…
யார் தாக்குகிறார்..யாரை தாக்குகிறார்..என்பதை பொருத்தே உயிரின் மதிப்பு கணிக்கப்படுகிறது…இதில் இரு விதி விலக்குகள்…நிரந்தரமாக..
1 இந்துவை யார்தாக்கினாலும் அந்த உயிர் கணக்கில் வராது
2..காங்கிரஸ்காரன் யாரை தாக்கினாலும் அதுவும் கணக்கில் வராது..

இறுதியாக …
இந்த சிறப்பு நீதி மன்றம் ஒரு மாவட்ட நீதிமன்றம் மட்டுமே…இதற்குமேல் உயர்நீதி மன்றம்—உச்சநீதிமன்றம்—உள்ளது…
மாவட்ட நீதிமன்றத்தின் அனேக தீர்ப்புக்கள் உயர் மற்றும் உச்ச நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட சரித்திரம் உண்டு.
இந்த தீர்ப்பு பத்திக்கைகளுக்கு “அவல்”---காங்கிரசின்  “ஆவலுக்கு”—கிடைத்த வைக்கோல்..அத்தனை “ஸ்கேம்”-களினால் மக்களின் “தூற்றல்களிலிருந்து” சிறிது நேரம் இளைப்பார காங்கிரசுக்கு கிடைத்த சிறு “தூரல்”..அவ்வளவுதான்.

“For every action there is an equivalent and opposite reaction “—
இதை ஐசக் நியூட்டன் சொன்னால் “விதி”---
குஜராத் மக்கள் செய்தால் “சதியா”—

ஒருவேளை மோடி திட்டமிட்டு முஸ்லீகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தால்….2002 டிசம்பரில் (கலவரம் நடந்த 10 வது மாதத்தில்)நடந்த தேர்தலில் –உலகத்தின் அத்தனை மீடியாக்களும் வரிந்து கட்டி எதிர்த்த போதும் 3இல் 2 பங்கு பெற்று வெற்றி பெற்றிருக்க முடியுமா?
மோடியின் மீது தூஷணைகள் 2007 இலும் தொடர்ந்தது..வெற்றியும் தொடர்ந்தது..   இப்போது இன்னும் 2012 தேர்தலுக்கு 100 நாளைக்கு முன் வந்த இந்த தீர்ப்பை..”மோடியின் பிரதமர் கனவு கலைகிறது” என தலையங்கம் தீட்டி ஆங்கில பத்திரிகைகள் தங்களை சந்தோஷப்படுத்திக்கொள்கின்றன.

யாருடைய ஆதரவில்லாமல்—எந்த ஆயுதமும்(..பணம்..மீடியா ஆதரவு) இல்லாமல்---உலகுக்கு தான் யார் என்பதே தெரியாமல்-- 2002இல் இருந்த  மோடியையே இவர்களால் ஒன்றும் செய்ய முடிய வில்லை..

இப்போதே உலகே பார்த்து பிரமிக்கும் மோடியை இவர்களால் என்ன செய்ய முடியும்..
கங்கிரசுக்கு போதாத காலம்..
குஜராத் அசெம்பிளியில் காங்கிரசுக்கு ஆளே இல்லமல் போகப்போகிறது..
பாவம்..