Pages

Monday, December 1, 2014

ஹெச்.ராஜா..பேசியது..சரியா?

அடிப்பது குற்றம் இல்லை--அழுவதுதான் குற்றம் என்றால் --ராஜா பேசியது தவறுதான்..

கூட்டணிக்காக தன்மானத்தை விட்டுத்தருவது சரி என்றால்-- ராஜா பேசியது தவறுதான்..

ஒரு கட்சியின் தலைவரும்... நீண்ட அரசியல் அனுபவமுள்ள “வைகோ”--- தீப்பொறி ஆறுமுகம் ரேஞ்சுக்கு இறங்கி வந்து பேசியது சரி என்றால்-- ராஜா பேசியது தவறுதான்.. 
பேச்சில் எது சரி?--எது தவறூ ? என்று யார் தீர்மானிப்பது?தமிழருவி மணியனா?--ஜி.ராமகிருஷ்ணனா? 
அரசியல் நாகரீகம் என்பது என்ன?--அதையும் யார் நிர்ணயிப்பது?--ஈ.வி.கே.எஸ். இளங்கோவ்னா? 
போதை மருந்து கடத்தல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட 8 மீனவர்களில், ஐவர் இந்தியர்--மூவர் இலங்கையை சேர்ந்தவர்கள்..தண்டனை அறிவிக்கப்பட்ட 18 ஆம் நாள் அவர்கள் ( 5வர்) பொது மன்னிப்பு வழங்கப்பட்டு இந்திய மண்ணில் “சுதந்திரமாக” 
இறங்கினர்.. 
இது எப்படி சாத்தியமாயிற்று?--யாரால் விடுதலை கிடைத்தது?--
காத்மாண்டு நகரில், “சார்க்க்” மாநாட்டில், இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே --மோடி அவர்களின் வேண்டுகோலினால்தான் விடுதலை செய்தேன்..என்று சொல்லியுள்ளார்.. 
இதற்கு கருணாநிதி உட்பட அனைத்து அரசியல் கட்சிதலைவர்களும் மோடிக்கு நன்றி சொல்லும் போது கூட்டணியில் உள்ள “வைகோ” மட்டும் விடுதலையை” நாடகம்”-- என்று சொல்லுவது எந்த ”அரசியல்”--”கூட்டணி”--”நியாயம்”-”-தர்மம்”-- என்று அவர்கள் கட்சிக்காரர்களே சொல்லட்டும்.. 
வைகோ இதை நாடகம் என்று சொன்னதை புரிந்து கொள்ள முடிகிறது ..காரணம் “இலங்கை பிரச்சனை “ வைகோவிற்கு வியாபாரம்--என்று அநாகரீகமாக சொல்லமாட்டேன்..வாழ்வாதாரம்..மோ--டியால் அது ”முடியும் நிலைக்கு”- வந்துவிட்டதால் ஏற்பட்ட “குமுறல்”..அதன் வெளிப்பாடே இந்த “வார்த்தை பிறழல்கள்”--அல்லது தடித்த வார்த்தைகள்.. 
இலங்கை வடக்கு மாகாண முதல்வர் திரு. விக்னேஸ்வரன்...”இலங்கை தமிழர் விஷயத்தில் இந்திய கட்சிகள், தயவு செய்து வாயை மூடிக்கொள்ளுங்கள்--உதவியும் வேண்டாம்--உபத்திரமும் வேண்டாம்”--நாங்கள் இலங்கை அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டே தீர்வை செய்து கொள்கிறோம்..” என்ற பிறகும்-- வைகோ--”வாக்கெடுப்பு நடத்த கோருவதும்”--அதற்காக ”காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்த  இந்தியா தயங்குவதால்தான்..இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை” என தேசதுரோக பேச்சை பேசுவதும்- நமக்கு ஆச்சரியமான விஷயமில்லை.. 
காரணம்...இவரும் இவரது மாஜி தலைவர் கலைஞரும், அரசியல் சட்டத்தை எரித்த வழக்கில் தண்டனைக்கு பயந்து கோர்ட்டில் “ அரசியல் சட்டம் என எழுதி--வெறும் காகிதத்தைத்தான் எரித்தோம்” என்று ஜகா வாங்கி  விடுதலை பெற்றார்கள்.. 
“அடைந்தால் திராவிட நாடு--இல்லையேல் சுடுகாடு” என்ற கோஷத்தையும் தீயிட்டு எரித்த நிகழ்வுகள் நமக்கு இன்னும் அடக்கமுடியா சிரிப்பை வரவழைத்து கொண்டுதான் இருக்கிறது. 
எனவே இவை திராவிட கட்சிகளின் “ஸ்டைலான” “போர் முழக்கம்”-- 
இது வடிவேலுவின் மிரட்டல் காமெடி..ஆனால் வடிவேலு மத்திய உள்துறை அமைச்சரையும், நாட்டின் பிரதமரையும் ஒருமையில் அழைத்தால், “வா--போ---வாடா--போடா”--என கைத்தட்டலுக்காக பேசினாலும், சட்டங்களும் போலிசும் ந்டவடிக்கை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அது நம்  கவலை இல்லை....,  
ஆனால், ஒரு கட்சியின் தலைவனையும் , உலகநாடுகளில் இந்தியாவின் மதிப்பை உச்சத்திற்கு கொண்டு சென்ற மோடி அவர்களையும், இழித்து..பழித்து பேசுவதை யார் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்கள்?
 
அப்படிப்பட்ட “ஜடமாக” பாஜகவினர் வளர்க்கப்பட வில்லை.. 
சகதி எடுத்து வீசி--துர்நாற்றநீரை உமிழ்ந்தவர் வைகோ---அதை நவம்பர் 12 சென்னை செயற்குழுவிலேயே கண்டித்தோம்..வைகோ அடங்கவில்லை..தொடர்ந்து அவரின் அநாகரீகம் தொடர்கிறது.. 
நவம்பர் 27 சென்னை பொதுக்கூட்டத்தில், மீண்டும் அவர் பேசிய விதம், விஷயம், அனைத்து அரசியல் கட்சிகளாலும் கண்டித்திருக்கப்பட வேண்டிய விஷயம்.. 
மாறாக-- பலமுறை எச்சரித்தும், எல்லை மீறிய வைகோவை, அவருக்கு புரியும் மொழியில், ராஜா எச்சரித்தது தான் தவறா? 
ஜி.ராமகிருஷ்ணனும், இளங்கோவனும், மணியனும் வைகோவிற்கு வக்காலத்து வாங்குவதற்கு காரணம், அவர்களுடைய “தோலின் சென்சிவிட்டி”--அவ்வள்வுதான்.. 
இன்னும் நிறைய பாஜக எதிர்ப்பு கட்சிகள் வைகோவிற்கு ஆதரவு தெரிவிக்கலாம்..

தலைவனை காக்க  வேறு வழியில்லாமல் அவரது தொண்டர்கள் சிலரும் ராஜா வீட்டை முற்றுகை இட்டு பரபரபேற்றலாம்..

ஆனால் ஒன்று..வைகோ உணர்ச்சிவயப்படுதலிலேயே காலத்தை ஓட்டுபவர்..தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வரும் வைகோவிற்கு, இப்போது பாஜக கூட்டணி-- சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கனியை பறிக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கி தந்துள்ளது.

வைகோ எப்போதும் “அதிர்ஷ்ட்ட கட்டை” என்பார்கள்..இந்த சனிப்பெயர்ச்சி வைகோவிற்கு சரியில்லை போலும்..அதனால்தான் அவர்து “நாக்கில் நர்தனமாடி” இப்படி சனி ஊறு விளைவிக்கிறான்..

எதுவாயினும், 70 வயதை கடந்துவிட்ட வைகோவிற்கு இனி எதிர்காலம் எப்படி இருந்தால் என்ன?

என்னுடைய கவலை எல்லாம் அவரையே நம்பி இருக்கும்..திறமை மிக்க நல்லுள்ளம் கொண்ட பல ஆயிரம் தொண்டர்களை பற்றியதுதான்..

போகிற போக்கில் என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போக முடியாது வைகோ--புரிஞ்சுக்குங்க---

.