Pages

Sunday, November 29, 2015

ஆனந்தவிகடனும்--”அம்மா--அய்யா”--”விகடமும்”

ஆனந்த விகடன் பத்திரிக்கையின் “ஜாதகத்தில்” ஆளும் கட்சியால் குறிப்பாக அ.தி.மு.க வால்..அடிக்கடி “அல்லலுறவேண்டும்” என்று இருக்கிறது போலும்..

அன்று எம்ஜியார் அவர்கள் ஒரு “கார்ட்டூனுக்காக” உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவந்து ஆசிரியர் பாலசுப்ரமணியம் அவர்களை உள்ளே தள்ளீனார்..உய்ர்நீதி மன்றம் அதை தள்ளுபடி செய்து வெளியே கோண்டுவந்தது வேறு கதை..

இன்று அம்மாவின் விசுவாசிகள்..அம்மா பாசத்தால் மறுபடியும் ஆனந்த விகடனின் “ஆனந்தத்தை அவதிக்கு உள்ளாக்கியுள்ளனர்..

சிறைச்சாலை..கோர்ட்டு..வழக்கு
கள்...இவைகள் அரசியல் வாதிகளின் பொதுச்சொத்து என்பது போய்..இன்று பத்திரிக்கைகளும் அதை பங்குபோடும் நிலை வந்துள்ளது..
இன்று அதிகமாக் பேசப்படும் “சகிப்பின்மை” “இண்ட்டாலரன்ஸ்”..அம்மாவுக்குத்
தான் அதிகமாக உள்ளது என்பது இப்போது புரிகிறது..
அரசை விமர்சிக்கும் உரிமை ஊடகங்களுக்கு உள்ளது என்பது உலகறிந்த உண்மை..அதை ஏற்பதும் மறுப்பதும் அரசின் உரிமை--அல்லது ஆட்சியாளரின் உரிமை..

”நாங்கள் விமர்சனத்திற்கு அப்பார்பட்டவர்கள்”--இந்திரலோ
கத்தின் “இம்யூனிடி” முத்திரை பத்திரம்  வைத்துள்ளோம் “-என்று எவரும் சொல்லமுடியாது அதிமுக உட்பட..
தனது அரசியல் எதிரிகளை “கோர்ட்--கோர்ட்டாக” ஏறி இறங்க வைப்பது அம்மாவிற்கு கைவந்தகலை..தன்னை ஊழல் குற்றச்சாட்டில் கோர்ட் தண்டித்தாலும் நீதிபதியை விமர்சித்து தீர்மானம் போடுவது அதிமுகவின் நிலை..

இந்தியாவில் “ஊடகச் சுதந்திரத்தை” ஊற்றி மூடி--”கல்லரையில் “ போட்டு கட்டடம் கட்டிய பெருமை காங்கிரசுக்கே சேரும்..1975 அவசரநிலை காலத்தில் அத்தனை ஊடகங்களையும் சிறச்சலைக்குள் பூட்ட்டிய “கொடுங்கோன்மையை” காங்கிரசே செய்தது..
சமீபத்தில் அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்களின் பேரன்..மதிப்பிற்குறிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள், ஒரு தொலைகாட்சியில் பேசிக்கொண்டிருக்கும் போதே அதன் கேள்விகளை பொறுக்க முடியாமல் வெளிநடப்பு செய்தது மட்டுமல்லாமல், அவர்களுக்கு மிரட்டல் விடுத்ததோடு அதை ”இன்கம் டாக்ஸ்”துறை மூலம் “ரெய்ட்” விட்டு செய்தும் காட்டினார்..

இடையே இடையே புகுந்து “எரிந்த வீட்டில் பிடுங்குவது “ என்பதே கலைஞருக்கு கைவந்த கலை..பல நேரங்களில் அதுவே அவருக்கு எதிராக திரும்புவதும் அவரின் துர்பாகிய நிலை..

இப்போதும் அப்படி ஒரு நிலையில்---வலையில் கலைஞர் வீழ்ந்துகிடக்கிறார்..ஆனந்த விகடனுக்கு ஆதரவாக “முரசொலி” கச்சை கட்டிக்கொண்டு முதல் பக்கத்தில் எழுதுகிறது..அம்மாவை திட்ட தீர்க்கிறது..பத்திரிக்கை சுதந்திரத்திற்காக வரிந்துகட்டி எழுந்து நிற்கிறது..

ஆனால் அடுத்த பக்கத்தில் “தந்தி டி.வி.யின் “ “ அராஜகபோக்கை “கண்டித்து கழகத்தின் “பேனலிஸ்ட்” “போராளிகள்” இனி தந்தி டி.வி.யில் பங்குபெற மாட்டார்கள்..என “பாக்ஸ் நியூஸ்” போட்டிருப்பதுதான் விந்தையிலும் விந்தை..

முதல் பக்கத்தில் ஊடகச்சுதந்திரத்தை காப்பதில், தன்னை முதன்நிலை போராளியாக பிரகடன படுத்திக்கொள்கிறார்..மூன்றாவது பக்கத்தில் தன் உண்மை நிலையை காட்டுகிறார்..

இந்த “ஊடக போராளியின்” உண்மை முகம் என்ன?

தான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பத்திர்க்கைகள் கலைஞருக்கு “கப்பம் கட்டும் சிற்றரசர்கள்” போல் தான் நடத்தபட்டு வர்கிறார்கள்..அவ்ருக்கு எதிராக எழுதிய தலையங்கங்களுக்கும், செய்திகளுக்கும் “கோபால புரத்திலிருந்து எத்தனை முறை “--எததனை சுந்தரத்தமிழால் --அர்ச்சனைகளை-- ஊடகங்கள் வாங்கியிருக்கும்..

அவரது குடும்ப உடன் பிறப்புக்கள் எத்தனைமுறை ‘செல்லகுட்டு “ கொட்டியிருப்பார்கள்..ஏன் தன் சொந்த பேரன் கலாநிதியின் “தினகரன்” தாக்குதலில் இரண்டு அப்பாவிகள் கொல்லப்பட்டதும் இவரது சுதந்திர வேட்கையின் சாட்சிகள்தானே..

பத்திரிக்கை சுதந்திரத்து கல்லறை எழுப்பிய காங்கிரசோடு இவர் 20 ஆண்டுகளுக்குமேல் கூட்டணியில் இருந்தாரே..

இப்படி எண்ணற்ற ஊடக சுதந்திர எதிர்ப்பு--கொலை--மிரட்டல் “சர்ட்டிபிகேட்” வாங்கியுள்ள இவருக்கு ஆனந்த விகடன் மேல் பாசம்  வந்துள்ளது பயமாக இருகிறது என்று நினைத்த மாத்திரத்திலேயே” அது சரிதான்”-- என சொல்லும் வகையில் “தினத்தந்தி” புறக்கணிப்பை--முரசொலி வெளியிட்டு பயத்தை உறுதி செய்துள்ளது..

அம்மாவும் அய்யாவும் தாங்கள் ஆட்சியில் இருக்கும் போதுதான் மற்றவரை “நல்லவர் “ ஆக்கிவிடுகிறார்கள்..ஆனால் தினத்தந்தி புறக்கணிப்பு மூலம், தனது உண்மை முகத்தைக்காட்டி “அய்யா” அந்த தற்காலிக நல்லபேரையும் இழந்துவிட்டார்..

ஆனந்த விகடன் மீது தொடுத்த அவதூறு வழக்கு ”இருவரின்”--”விகடத்தையும்”--
வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது..


Tuesday, November 24, 2015

அம்மா--சும்மா--கோபப்படக்கூடாது

குளிர்கால பாராளுமன்ற கூட்டம் வரும் 26ந்தேதி தொடங்குகிறது.அதற்கு தனது கட்சி எம்.பிக்களை வழி அனுப்பி வைக்கும் போது த்மிழக முதல்வர் “ஜெ’ அவர்கள், சொன்ன வார்த்தைகள் குறிப்பிடத்தக்கவை..
“ மத்திய  அரசின் கூட்டணியில் நாம் இல்லை..அந்த அரசுக்கு பிரச்சினைகளின் அடிப்படையில் ஆதரவு அளித்து வருகிறோம்..அதை உணர்ந்து செயல் படுவீர்கள்”--எனச் சொல்லியிருக்கிறார்.
“மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாரமன்..பொன்.ராதாகிருஷ்ணன்..ஆகீயோர் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், பேசி உள்ளனர்..நான் என்ன சொல்லவருகிறென் என்பது உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்”--
இதுதான் அவர் பேச்சின் “ஹை லைட்”--
இதை யார் எப்படி வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்..பத்திரிக்கைகளும் அவரவர் பாணியில் தலைப்பிட்டு எழுதியுள்ளது..
பாஜகவை பொருத்தமட்டில் தமிழ் நாட்டில் வெள்ளப்பாதிப்பு என்றவுடனே அமீத்ஷா அவர்கள், அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன்--பொன். ராதாகிருஷ்ணன் கொண்ட மூவர் குழுவை அமைத்தார்..அடுத்த இரண்டு நாளில், அவர்கள் சென்னையின் பலபகுதிகள் மற்றும் கடலூர் அகியவற்றை பார்வை யிட்டனர்..அவர்களோடு மாநிலத்தலைவர் தமிழிசை மற்றும் , அகிலபாரத பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் ஆகியோரும் சென்றனர்..
அடுத்து நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில்,கண்ணில் “கண்டதை”-விளக்கினர்..”நிவாரன பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை...சாக்கடை நீரும் மழைநீரும், குடிநீரில் கலந்ததால்,சுகாதார சீர்கேடு, மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக அவர்கள் அரசை எச்சரித்தனர்..மாநில அரசின் நிவாரண நிதிஉதவி கோரிக்கை (21.11.15) இன்று வரை மத்திய அரசிடம் வரவில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்தனர்..
இப்படி உண்மைகளை போட்டு உடைத்ததால், அம்மாவுக்கு கோபம் என சில பத்திரிக்கைகள் எழுதின..
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, காங்கிரஸ் போல எந்த மாநில அரசையும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியதில்லை..தமிழக அரசு கோரிக்கை வைத்த (23.11.)உடன் அடுத்த 2 மணி நேரத்தில் ரு.940 கோடி இடைக்கால நிவாரன உதவியை தந்தது..மிதி தொகையை மத்திய நிபுணர் குழு வந்து பார்த்த உடன் தரும்- என மத்திய அரசு அறிவித்துள்ளது..
சென்றமுறை தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு அப்போது ஆண்ட காங்கிரஸ் இடைக்கால  நிவாரணதொகைக்கே 6 மாதம் இழுத்தடித்ததை நாடறியும்..
எம்.பி.க்களுக்கு “ஜெ” கூறிய அறிவுறைகளிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னென்ன?
சரத் குமார் கட்சிபோலவோ--தனியரசு--ஷேக்தாவுது போலவோ..”மழையெ பெய்ய வில்லை--வெள்ளமே வரவில்லை--மக்கள் கஷ்டமெ படவில்லை --என்று பாஜக கூற வேண்டும், என்ற எதிர்பார்ப்பு ஆளும் கட்சியிடம் இருப்பது தெரிகிறது..
மழைக்காலம் வரும் முன் ,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமல்ல, சாதாரண பராமரிப்பு நடவடிக்கையாகவாவது, கால்வாய்களை (உண்மையாக) துர்வாரியும், நீர் செல்லும் பாதைகளின் அதாவது வடிகால்களின் அடைப்புக்களை சரிசெய்தும், இருந்தால், இந்தமழை “சாதுவாக” சும்மா போயிருக்கும்..”அடைத்து வைத்ததால்” வீட்டுக்குள்புகுந்தது,..ரோடுகளின் மீது தேங்கி நாசப்படுத்தியுள்ளது..
இந்த “அடிப்படைகளை “ அம்மாவின் “ஆளும் விசுவாசிகள்” செய்திருந்தால், சென்னை நகரம, தன்னை காத்துக்கொண்டிருக்கும்..கடலூர் பண்ருட்டியில், கால்வாய் சீறி எழுந்து, பலமக்களை பலிவாங்கியிருக்காது..
எங்கள் அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமனும், பொன்.ராதாகிருஷ்ணனும், அவரவ்ர் இலாகா வேலைகளை, செய்து கொண்டு டெல்லியிலேயே இருந்திருப்பர்..
“அம்மா--சும்மா--கோபப்படக்கூடாது

சோனியா மருமகனின் நிஜ முகம்---அவரே ஒப்புக்கொண்டது


சோனியா காந்தியின் மருமகனும் ராகுல் காந்தியின் மச்சானுமான ராபட் வத்ரா..பி.டி.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியின் பதிலும்  அதற்கு நம் கேள்வியும்..


1--ரா..வ..பதில்--விமர்சனம் என்பது “மைல்ட் ஆக” இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்..

நம் கேள்வி .--.”மரண வியாபாரி”என்றீர்கள்..--மோடி தலையை கொண்டுவருவேன்..--கொலைகாரன் மோடி:”--என்றெல்லாம் சொன்னீர்கள்..இதுதான்---”மைல்ட்” விமர்சனங்களா?

உங்களுக்கு வந்தால் ரத்தம்..எங்களுக்கு வந்தால் அது தக்காளி சட்டினியா?


2- ரா.வ --தொழில் செய்கிற எல்லா சாதரணமக்களை போல் என்னை ‘பாவிக்கவில்லை”-- என்னை அரசியல் ரீதியாக பழி வாங்குகின்றனர்.
.
நாம்---எல்லா சாதாரண மக்களை போல் தான் நீங்கள் தொழில்
செய்தீர்களா?..ஹரியானா..ராஜஸ்தான்..டெல்லி அரசுகளின் அதிகாரத்தை முழுவதும் துஷ்பிரயோகம் செய்து அரசின் புறம்போக்கு  “நிலத்தை கபளீகரம் “ செய்து மக்கள் வரிப்பணத்தை கோடி கோடியாக சுருட்டிணிர்கள் எனபது குற்றச்சாட்டு..--
இதை சாதரண மக்கள் செய்ய முடியுமா? பிறகு உங்களை சாதரண மக்கள் போல் பாவிக்க வேண்டும் என கருதுவது எப்படி நியாயமாகும்?

--அதனால்தான் “ஸ்பெஷல் டிரீட்மெண்ட்”

சாதாரண மக்களுக்கு விமானநிலயங்களில் “செக்கிங் இல்லாமல் “ உள்ளே அனுமதி கிடைக்குமா?
“எந்த பதவியிலும் இல்லாத உங்களை சோனியாவின் மருமகன் என்ற காரணத்தால் மட்டுமே ” செக்கிங் இல்லாமல்-”--வி.ஐ.பி.” அந்தஸ்து கொடுக்க பட்டது..மந்திரி அந்தஸ்தில் உள்ளே அனுமதிக்கப்பட்டது..இது சாதரண மக்களால்  முடியுமா?

அதை ஏற்றுகொண்ட நீங்கள்--அந்த பயனை அனுபவவித்த நீங்கள் இப்போது சாதரண மக்களோடு உங்களை ஒப்புநோக்கி ஒப்பாரி வைப்பது என்ன நியாயம்?

3--ரா.வ-- நான் நிலம் விற்ற காலத்தில் எல்லோரும் அடைந்த லாபத்தைத்தானே நானும் பெற்றேன்-மற்றவர்களை விட்டுவிட்டு என்னைமட்டும் எல்லோரும் ஏன் விமர்சிக்கிறார்கள்?

நாம்--மார்கட் விலை ஒன்றுதான்..எல்லோருக்கும் கிடத்த லாபம்--ஒன்றுதான்...ஆனால் ம்ற்றவர்கள் வெறும் ஒரு லட்சம் ரூபாய் கனரா வங்கியில் இருப்பு வைத்துவிட்டு..  60 கோடி ரூபாய்க்காகன காசோலை கொடுத்துவிட்டு ”இருப்பே இல்லாமல்” அரசு நிலத்தை வாங்கவில்லையே..அவர்களுக்கு மாநில காங்கிரஸ் முதல்வர்கள் காசே இல்லாமல் நிலம் வாங்கித்தரும் “புரோக்கர்களாக” செயல்படவில்லையே?

பாஜக ஆட்சியின் நிலகம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்க்கும் நீங்கள்--அதை “நில அபகரிப்பு சட்டம் என திரித்துக்கூறினீர்கள்..உண்மையில் --விவசாயிகளிடம் இருந்து நிலத்தை அடிமாட்டு விலைக்கு அபகரித்த்து நீங்கள் தானே..இதை ஏன் மறைக்கிறீர்கள்? நீங்கள்தான் விவசாயிகளின் பாதுகாவலனா?


4--நான் பைஜாமா..குர்த்தா--காலில் வெரும் சப்பல்--மட்டும் அணிந்திருந்தால்--என் நிலமை வேறு..நான் மாறாமல்  கோட்டு --சூட்டு --டை அணிந்து என் தனித்தன்மையை காத்தது தவறா?

நாம்--இது போல ஆதங்கம் உங்களுக்கு ஒன்று இருக்கிறதா?--இது இல்லாமலே நீங்கள் படுத்திய பாடு போதாதா?..

ஒருவேளை ராகுல் காந்தியை மறைமுகமாக நீங்கள் தாக்குகிறீர்களா?--அவர் வீட்டுக்குள் ஒரு வேஷம்..வெளிநாட்டில் தன் “கேர்ல் பிரண்ட்” களோடு ஒரு வேஷம், போடுவதை குறிப்பிடுகிறீர்களா?குடும்பத்துக்குள்ளேயே இப்படி ஒரு “குத்துவெட்டு” இருக்கிறதா?

எது எப்படி இருந்தாலும் “ராபர்ட்”--நீகள் அடித்த “லூட்டிக்கு” கொஞ்சம் வருஷம் “உள்ளே” கஞ்சி குடித்து “பைஜாமா--குர்த்தா--சப்பலோடு” இருக்க வேண்டியது கட்டாயம் என்பது “ஜாதகத்தில்” இருக்கிறது..இதை மாற்றமுடியாது ராபர்ட் வத்ரா ..

Thursday, November 12, 2015

மெடிகேரி--கொலை --மதசார்பற்ற கொலையா?

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாம்?

கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டம் மடிகேரியில் விஸ்வஹிந்து பரிஷத் மாவட்ட செயலர் டி.சி.குட்டப்பா கொலை...

கொலை செய்தது PFI மற்றும் SDPI..
அதனால்...கண்டித்தது...???? யாருக்கும் தைரியமில்லை..


திப்புசுல்தான்.8000.இந்து கோவில்களை இடித்தான்..100,000 இந்துக்களை கத்திமுனையில் மதமாற்றம் செய்தான்....திப்புவின் வாள் பற்றிய மைசூர் அரன்மணை ஆவணங்களில்..”மாற்றுமத “காஃபீர்களிடமிருந்து” மக்களை காப்பது “மொஹம்மது”தான்” என குறிப்பிடப்பட்டிருக்கிரது..இது சரித்திர ஆய்வாளர்கள் கருத்து..

திப்பு சுல்தான் கிறிஸ்த சர்ச்சூகளை இடித்து தரைமட்டம் ஆக்கிணான்.கிறிஸ்தவர்களை மதம் மாற்றினான்...-இது மங்களூர் கத்தோலிக்க பிஷ்ப்பின் அறிக்கை..

எனவே தீபாவளி திருநாளன்று திப்புவின் பிறந்தநாளுக்கு 10 நாள் முன்னமே ( திப்பு பிறந்தது நவம்பர் 20 ) பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு எதிற்பு தெரிவித்து வெறும் 100 வி.எச்.பி தொண்டர்கள் மடிகேரியில் ஆர்பாட்டம் நடத்திணார்கள்,

திடீரென எங்கிருந்தோ 200 கார்களில் அதுவும் கேரளா ரெஜிஸ்ட்ரேஷனில் 1000 பேர்களுக்குமேல் வந்திரங்கிய எஸ்.டி.பி.ஐ. மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தொண்டர்கள்( குண்டர்கள்) சிமெண்ட் மற்றும் ஜல்லி மிக்ஸ்சில்  ஏற்கனவே தயாரித்து,  மூட்டையில் கொண்டுவந்திருந்த கற்களினால் வி.எச்.பி தொண்டர்களை தாக்கினர்..

உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு தடிகளினால்..வி.எச்.பி.தொண்டர்களை சூழ்ந்துகொண்டு தாக்கியதில் கூர்க் மாவட்ட வி.எச்.பி செயலாள்ர் டி.சி.குட்டப்பா தலை நொறுங்கி முகம் சிதைந்து கொல்லப்பட்டார்..

தாக்கிய கார்கள் நொடிப்பொழுதில் மறைந்தன..போலிஸ் வெறும் பார்வையாளராக இருந்தனர்..அவர்கள் போனபிறகு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வண்ணம், ஏற்கனவே தாக்குதலால் நிலை குலைந்து போயிருந்த ..அப்பாவி வி.எச்.பி. தொண்டர்கள் மீதுப்லீஸ்  கண்மூடித்தனமாக தடியடி பிரயோகம் நடத்தியதை சன் டி,வி காட்டியது..

இப்போது கர்நாடக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாம்..
”தடியடியில் மரணம் “ என திசைதிருப்பும் வகையில் ஊடகம் செய்தி தருகிறது....

எந்த தலைவரும்--எந்த கட்சியும் கண்டிக்கவில்லை

கொலை செய்தவ்ர்கள் எஸ்,டி.பி.ஐ.ஆயிற்றே..
ஆட்சி நடக்கும் மாநிலம் காங்கிரசுடையது ஆயிற்றே..
கொல்லப்பட்டவர் வி.எச்.பி.ஆயிற்றே..
கண்டித்தால் மதசார்பற்ற தன்மை கோபித்துக்கொள்ளுமே..

“சகிப்பு தன்மைக்கு கோஷம் போடுவர்களிடம் ஒரு கேள்வி..
திப்புசுல்தான் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கட்டும்..
அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாதா?
உங்களால் “சகித்துக்கொள்ளமுடியாதா’’?
அதனால் கொலை செய்வீர்களா?

உங்கள் “சகிப்புத்தன்மையின் “ முகமூடி..கொலையா?

சாதி வலையில் வீழ்ந்த பிஹார் மக்கள்

பிஹாரில் பா.ஜ.க.விற்கு தோல்வியா?
வெற்றி..நிதீஷ் குமாருக்கா?
இது பாஜகவிற்கு தோல்வியானால் இதை மோடிக்கு “சூட்டும் முயற்சி” சரியா?
2010 சட்டமன்ற தேர்தலில் நிதீஷ் பெற்ற ஓட்டு சதவீதம் 26.6%
2015சட்டமன்ற  தேர்தலில் நிதீஷ் பெற்ற வாக்கு 16%சதவீதம்
நிதீஷ் வாக்கு 9.4% குறைந்தது ஏன்? நல்லாட்சி என்பதாலா?
2010 தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு 16%சதவீதம்
2015 தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு 25%சதவீதம்
இம்முறை 9% அதிகம் வாக்கு பெற்றால் அது காங்கிரச்  அகராதியில் “தோல்வியா?”
2010 தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு 8.6%சதவீதம்
2015 தேர்தலில் காங் பெற்ற வாக்கு 6.6 %சதவீதம்..
2% குறைவாக வாக்கு பெற்றால் அதற்குப் பெயர்  “வெற்றியா?”
2010 இல் நிதீஷ்குமார் --பாஜக கூட்டணி பெற்ற இடம் 206
2015 இல் நிதீஷ்குமார்--லாலுபிரசாத் யாதவ்--சோனியாகாந்தி இம்மூவ்ரும் சேர்ந்து பெற்ற இடம் 178 ம்ட்டுமே
இது நிதீஷ் குமார் மற்ரும் லாலு பிரசாஅத் கூட்டணிக்கு கிடைத்த வெற்றியா?--தோல்வியா?
2015 தேர்தலில் 1000ம் ஓட்டுக்கு குறைவான வித்தியாசத்தில் பாஜக வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதிகள்..---25--
2000ம் ஓட்டுக்கு குறைவான வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பைஇழந்த தொகுதிகள்--15
ஆக பாஜக கூட்டணி இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் இதில் 35 இடங்களையாவது பிடித்திருக்க முடியும்..
உபேந்திர குஷ்வாகா மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் கட்சிகளுக்கு ஒதுக்கிய 40 மற்ரும் 45 என 85 இடங்களில் அவர்கள்பெற்ற வெற்றி வெறும் 1...இடம்தான்..
இவர்கள் பெற்ற தொகுதிகளை பார்த்து காங்கிரஸ் தன் வேட்பாளர்களை களமிறக்கியது.. விளைவு  காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றது..அவ்ர்களுக்கு இதன்மூலம் கிடைத்த இடங்கள் 27..
இவர்களுக்கு குறைவாக சீட் ஒதுக்கியிருந்தால் பாஜ க அதிக வெற்றி பெற்றிருக்க முடியும்..ஆட்சி அமைத்திருக்க முடியும்
ஆக ”கள்வர்கள்”--”பொய்” ஆட்டம் ஆடி பாஜகவை தோற்கடித்துவிட்டனர்..
இது நிதிஷ்குமார்--லாலுபிரசாத்--ராகுல்காந்தி கூட்டு ஓட்டுக்கு வெற்றி-- அதாவது “அரித்மெட்டுக்கு”- கிடைத்த வெற்றி..
பாஜகவிற்கு கிடைத்த தோல்வி அல்ல..
இந்த தேர்தலில் எந்த தர்மமும் கடை பிடிக்கப்படவில்லை..நித்ஷ்குமாரும் லாலுபிரசாத்தும் நம்ம ஊர் திமுக அதிமுக போல பிஹாரில் எதிர் எதிர் துருவங்கள்..லாலுவின் ஆட்சியை “காட்டாட்சி:” என வர்ணித்ததே நித்திஷ்தான்.ஆனாலும் .நிதீஷ்--லாலு கூட்டு சேர்ந்தனர்
ஊழலுக்கு எதிராக பேசும் ராகுல்காந்தி மாட்டுத்தீவன ஊழலில் 5 ஆண்டு தண்டிக்கப்படு “பெயில்லில்” வெளியே வந்துள்ள இன்னும் 9  ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடதடைவிதிக்கப்பட்ட லாலுவுடன் கூட்டு சேர்ந்த சந்தர்ப்பவாதம் நடந்தது..
ஒரு நாட்டின் பிரதமரை ஒரு மாநிலத்துக்குள் நுழைக்ககூடாது அவர் அந்நியன் என் பிரச்சரம் செய்யப்பட்டது..
ஆன்னால் முடிவுகல் பிரச்சார்த்தின் எந்த பகுதியையும் எடுத்துக்கொள்ளவில்லை..போனமுறை பெற்ர வாக்குக்களை விட இம்முறை நிதீஷும் காங்கிரசும் குறைவாக ஓட்டு பெற்ரனர்--லாலு மட்டும் தன் முந்தை வாக்கை தக்க்க வைத்துக்கோனடார்..
ஆனாலும் இவ்வளவு அதிசயங்களை நிகழ்த்திய த்தேர்தல் மெலும் சில அதிசயங்களை நிகழ்த்தலா.ம்
லாலு 80 இடமும் நிதீஷ் 71 இடங்களையும் பெற்றுள்லதால் லாலு மந்திரிசபையில் தான் விரும்பும் இலாக்களை கேட்களாம் அதிக மந்திரிகளை கேட்டு தொந்தரவு செய்யலாம்..இத்னால் மீண்டும் விரிசல் வரலாம்..
பொறுத்திருந்து பார்ப்போம் இவர்கள் கூட்டணி எத்தனை நாளைக்கென்று? ..