Pages

Tuesday, November 24, 2015

சோனியா மருமகனின் நிஜ முகம்---அவரே ஒப்புக்கொண்டது


சோனியா காந்தியின் மருமகனும் ராகுல் காந்தியின் மச்சானுமான ராபட் வத்ரா..பி.டி.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியின் பதிலும்  அதற்கு நம் கேள்வியும்..


1--ரா..வ..பதில்--விமர்சனம் என்பது “மைல்ட் ஆக” இருக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்..

நம் கேள்வி .--.”மரண வியாபாரி”என்றீர்கள்..--மோடி தலையை கொண்டுவருவேன்..--கொலைகாரன் மோடி:”--என்றெல்லாம் சொன்னீர்கள்..இதுதான்---”மைல்ட்” விமர்சனங்களா?

உங்களுக்கு வந்தால் ரத்தம்..எங்களுக்கு வந்தால் அது தக்காளி சட்டினியா?


2- ரா.வ --தொழில் செய்கிற எல்லா சாதரணமக்களை போல் என்னை ‘பாவிக்கவில்லை”-- என்னை அரசியல் ரீதியாக பழி வாங்குகின்றனர்.
.
நாம்---எல்லா சாதாரண மக்களை போல் தான் நீங்கள் தொழில்
செய்தீர்களா?..ஹரியானா..ராஜஸ்தான்..டெல்லி அரசுகளின் அதிகாரத்தை முழுவதும் துஷ்பிரயோகம் செய்து அரசின் புறம்போக்கு  “நிலத்தை கபளீகரம் “ செய்து மக்கள் வரிப்பணத்தை கோடி கோடியாக சுருட்டிணிர்கள் எனபது குற்றச்சாட்டு..--
இதை சாதரண மக்கள் செய்ய முடியுமா? பிறகு உங்களை சாதரண மக்கள் போல் பாவிக்க வேண்டும் என கருதுவது எப்படி நியாயமாகும்?

--அதனால்தான் “ஸ்பெஷல் டிரீட்மெண்ட்”

சாதாரண மக்களுக்கு விமானநிலயங்களில் “செக்கிங் இல்லாமல் “ உள்ளே அனுமதி கிடைக்குமா?
“எந்த பதவியிலும் இல்லாத உங்களை சோனியாவின் மருமகன் என்ற காரணத்தால் மட்டுமே ” செக்கிங் இல்லாமல்-”--வி.ஐ.பி.” அந்தஸ்து கொடுக்க பட்டது..மந்திரி அந்தஸ்தில் உள்ளே அனுமதிக்கப்பட்டது..இது சாதரண மக்களால்  முடியுமா?

அதை ஏற்றுகொண்ட நீங்கள்--அந்த பயனை அனுபவவித்த நீங்கள் இப்போது சாதரண மக்களோடு உங்களை ஒப்புநோக்கி ஒப்பாரி வைப்பது என்ன நியாயம்?

3--ரா.வ-- நான் நிலம் விற்ற காலத்தில் எல்லோரும் அடைந்த லாபத்தைத்தானே நானும் பெற்றேன்-மற்றவர்களை விட்டுவிட்டு என்னைமட்டும் எல்லோரும் ஏன் விமர்சிக்கிறார்கள்?

நாம்--மார்கட் விலை ஒன்றுதான்..எல்லோருக்கும் கிடத்த லாபம்--ஒன்றுதான்...ஆனால் ம்ற்றவர்கள் வெறும் ஒரு லட்சம் ரூபாய் கனரா வங்கியில் இருப்பு வைத்துவிட்டு..  60 கோடி ரூபாய்க்காகன காசோலை கொடுத்துவிட்டு ”இருப்பே இல்லாமல்” அரசு நிலத்தை வாங்கவில்லையே..அவர்களுக்கு மாநில காங்கிரஸ் முதல்வர்கள் காசே இல்லாமல் நிலம் வாங்கித்தரும் “புரோக்கர்களாக” செயல்படவில்லையே?

பாஜக ஆட்சியின் நிலகம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்க்கும் நீங்கள்--அதை “நில அபகரிப்பு சட்டம் என திரித்துக்கூறினீர்கள்..உண்மையில் --விவசாயிகளிடம் இருந்து நிலத்தை அடிமாட்டு விலைக்கு அபகரித்த்து நீங்கள் தானே..இதை ஏன் மறைக்கிறீர்கள்? நீங்கள்தான் விவசாயிகளின் பாதுகாவலனா?


4--நான் பைஜாமா..குர்த்தா--காலில் வெரும் சப்பல்--மட்டும் அணிந்திருந்தால்--என் நிலமை வேறு..நான் மாறாமல்  கோட்டு --சூட்டு --டை அணிந்து என் தனித்தன்மையை காத்தது தவறா?

நாம்--இது போல ஆதங்கம் உங்களுக்கு ஒன்று இருக்கிறதா?--இது இல்லாமலே நீங்கள் படுத்திய பாடு போதாதா?..

ஒருவேளை ராகுல் காந்தியை மறைமுகமாக நீங்கள் தாக்குகிறீர்களா?--அவர் வீட்டுக்குள் ஒரு வேஷம்..வெளிநாட்டில் தன் “கேர்ல் பிரண்ட்” களோடு ஒரு வேஷம், போடுவதை குறிப்பிடுகிறீர்களா?குடும்பத்துக்குள்ளேயே இப்படி ஒரு “குத்துவெட்டு” இருக்கிறதா?

எது எப்படி இருந்தாலும் “ராபர்ட்”--நீகள் அடித்த “லூட்டிக்கு” கொஞ்சம் வருஷம் “உள்ளே” கஞ்சி குடித்து “பைஜாமா--குர்த்தா--சப்பலோடு” இருக்க வேண்டியது கட்டாயம் என்பது “ஜாதகத்தில்” இருக்கிறது..இதை மாற்றமுடியாது ராபர்ட் வத்ரா ..

No comments: