Pages

Friday, May 31, 2013

மன்மோகன் சிங்கை தூங்கவைத்த ஐ.பி.எல்.சீனிவாசன்


கடந்த ஒருவாரகாலமாக மன்மோகன் சிக்கும் சோனியா கந்தியும் நன்றாக தூங்குகிறார்களாம்..
”தேங்க்ஸ் கோஸ் டூ பி.சி.சி.ஐ”--.தலைவர் இண்டியா சிமெண்ட் சீனுவாசன்.

நிலக்கரி ஒதிக்கீட்டு வழக்கில் திக்குமுக்காடிய காங்கிரஸ், சோனியா, மன்மோகன் சிங்குக்கு ஒருவாரகாலமாக ஓய்வு..இவர்களை துரத்திய மீடியாவுக்கு இவர்களது ஏவலாள், சி.பி.ஐ, போட்ட பிஸ்கட் தான் ”ஐ.பி.எல், ஸ்பாட் ஃபிக்சிங் மற்றும் மேட்ச் ஃபிக்சிங்...”

இந்த பிஸ்கட்டுகளை சி.பி.ஐ. மெதுவாக நிதானமாக, ஒவ்வொன்றாக, போடுவதால், மீடியாக்களும் “லபக்--லபக்” என்று பிடித்து ஏமாளி சீனுவாசனை ஒரு “கை” பார்க்கிரது,

பி.சி.சி.ஐ. சேர்மன் பதவியில் இருந்து துரத்தப்பட்ட சர்த்பவாரில் இருந்து...எல்லா அரசியல், அரசியல் அல்லாதவாதிகளும், மீடியாவும் ஒன்று சேர்ந்து சீனுவாசன் மீது கங்கணம் கட்டி, இப்ப்ரச்சனையை எவ்வளவுநாள் இழுக்கமுடியுமோ அவ்வளவுநாள் இழுத்து காங்கிரசுக்கு ஊழல்புகார்களிலிருந்து மூச்சுவிட “டைம்” தந்து கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரசிடம் கப்பம் வாங்கிவரும் மீடியாக்களும், தங்கள் எஜமான விசுவாசத்தைக் காட்ட தினசரி ஒரு “லைவ்” கவரேஜ் போட்டு டி.வி. பார்க்கவே விடாமல் மக்களை   வெறுப்பேற்றிக்கொண்டிருக்கீரார்கள்.

விடாப்பிடியாக சேர்மன் நாற்காலியை பிடித்துக்கொண்டு, தனி ஆளாக..மீடியாக்கள் கண்ணில் விரல் விட்டு ஆட்டிவரும்..பி.சி.சி.ஐ. சேர்மன் சீனுவை உள்ளபடியே பாராட்டுகிறேன்..

ஆனால் அவரது மருமகன் செயல்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..ஒருகோடி ரூபாயை பிடிக்கிறேன் என சி.பி.ஐ விரித்தவலையில் விழுந்துவிட்டாரே...சோனியா மருமகன் ராபர்ட் வத்ரா மாட்டிக்கொள்ளாமல் ரியல் எஸ்டேட் சூதாட்டத்தில்11000 கோடி ரூபாய் சம்பாத்திதாரே “@@@”
ராபர்ட் வத்ரா பற்றிய செய்திகளை குருநாத் மெய்யப்பன் படிக்கவில்லையோ..

சி.பி.ஐ. கையில் இருப்பது காங்கிரஸ் “கை”க்கு எவ்வளவு நன்மை பார்த்தீர்களா?..குருநாத் மெய்யப்பன், ஐ.பி.எல்.சீனு என்ற குட்டியோண்டு மீனை பிடித்துவிட்டு, சோனியா, வத்ரா என்கிற பெரிய திமிலங்களை தப்பவிட்டு, மீடியாமூலம் நாட்டை திசை திருப்புவதை பார்த்தீர்களா?

நான் கேட்பது இதுதான்..
1. சீனுவாசனை ராஜினாமா செய்யச்சொல்பவர்கள், நிலக்கரி ஊழலுக்கு மன்மோகன்சிங்கிடமும் ராஜினாமா கேட்பார்களா?
2..ஒரு கோடி ரூபாய்க்கு குருநாத் மெய்யப்பனிடம் விசாரணை கோருபவர்கள் 11000 கோடி ஏய்த்த ராபர்ட் வத்ராவிடமும் விசாரணை கோருவார்களா?
3.ஸ்ரீசாந்த்தையும், அனில் சவுஹானையும் கைது செய்தவர்கள், அஸ்வினிகுமாரையும், பன்சாலையும் கைது செய்வார்களா?


”முதலில் அவனை நிறுத்தச்சொல்லு---பிறகு நான் நிறுத்துகிறேன் “ எனபது நாயகன் திரைப்பட வசனம்

“ முதலில் காங்கிரஸ்காரனை கைது செய்--பிறகு கிரிக்கட் காரங்களை கைது செய்யலாம் “ இது பொதுஜனம் பேசும் வசனம்..

@@@--விளக்கம்
வீடுபுகுந்து திருடினால்..அது திருட்டு

ரோட்டில் வருபவனிடம் திருடினால் அது வழிப்பறி

வங்கியில் புகுந்து திருடினால் அது கொள்ளை

அரசியலில் சேர்ந்து திருடினால்...அது “சம்பாத்யமாம்”

தாகூரும் இடதுசாரிகளும்ரஷ்ய புரட்சி ஏற்பட்டு ஜார் மன்னர் தூக்கி எறியப்பட்டு "போல்ஷ்விக்குகள்" என்ற கம்யுனிஸ்ட்கள் புகழ் பரவத்துவங்கிய நேரம்..
ரவீந்திர நாத் தாகூர் ரஷ்யாவிற்கு சென்றார்..அங்கு நடந்த ரஷ்ய புரட்சியின் தாக்கத்தை கண்ணுற்றார் ..

உலகமே ஒரு புதிய சித்தாந்தத்தை பார்த்து வாய்பிளந்து நின்ற போது  தாகூர் அதை வேறுவிதமாக பார்த்தார்..

தாகூர் எழுதினார்..

1..கருத்துசொல்லும் சுதந்திரமும் உரிமையும் பறிக்கப்பட்டபோது ஜார்மன்னர் தூக்கி எறியப்பட்டார்.கம்யுனிச்ட்களும் தங்களுக்கு எதிரான கருத்துக்களின்  குரல்வளையை நசுக்கும்போது இதே விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்...

2..ஜார்மன்னர் போன்று அரசே கட்டவிழ்த்துவிடும் வன்முறையையும், சர்வாதிகாரத்தையும், இந்த புரட்சியாளர்கள் செய்ய வாய்ப்புள்ளது..அப்போது இவர்களுக்கும் ஜார்மன்னருக்கு ஏற்பட்டகதிதான் ஏற்படும் ..

தாகூருக்கு என்னே ஒரு தீர்க்கதரிசனம்..உலகம் முழுவதும் வளைத்துபோடவேண்டும் என்ற ஆசையோடு வன்முறையில் பரவிய கம்யுனிசம், அது தொடங்கிய  நாட்டிலேயே 70 ஆண்டுகளுக்குள் முடிந்தது.

தகவல் தொடர்புத்துறையில் 20 ஆண்டுகள் பின்னோக்கி இருக்கும் இந்திய கம்யுனிஸ்ட்களுக்கு இது எப்போது தெரியுமோ..தெரியவில்லை..

"டிரேட்யூனியன்" வசூலிக்கும் சந்தாவும் --கோடிக்கணக்கான அசையா சொத்துக்களும், 80 வயது சூபர்சீனியர் சிடிசன் " காம்றேடுக்களும்தான் இந்தியாவில் கம்யுனிஸ்ட்கள் இருந்ததற்கான கடைசி ஆதாரங்கள்.

Wednesday, May 29, 2013

மாவோயிஸ்டுகள்..வர்க்கப் போராளிகளா?—தேசவிரோதிகளா?---பயங்கரவாதிகளா?
மே மாதம் 25 ந்தேதி சட்டீஸ்கர் மாநிலம், பஸ்தார் ஜில்லாவில் “பரிவர்த்தன் யாத்திரை “ சென்று கொண்டிருந்த காங்கிரஸ் பிரச்சார குழு மீது , நக்சலட்டுகள் தாக்குதல் நடத்தி 27 பேரை கொன்றனர்..அவர்களில் முக்கியமானவர்கள், மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல், அவரது மகன், எதிர்கட்சி தலைவர் மகேந்திரகர்மா, மற்றும் உயிருக்கு போராடிவரும் மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவர் வி.சி.சுக்லா அடங்குவர்.

இந்த கொடூர தாக்குதல் நமக்கு பல முக்கிய விஷயங்களை வெளிப்படுத்துகிரது..

1.சுக்மா மாவட்ட தமிழ் கலக்டரை கடத்திய பின்பு நக்சலைட்டுகள் மறுபடியும், “ஒன்று கூடிவிட்டார்கள்” என்பது புரிந்தது.

2..”வர்க்க விரோதி” என தாங்கள் அடையாளப்படுத்திய காங்கிரசின் தலைவர்கள்..”நந்தகுமார் படேல், மற்றும் மகேந்திர கர்மா” ஆகியோரை தனிமைப்படுத்தி கொன்றிருக்கிறார்கள்.

3...மிகவும் ஆபத்தான நக்சலைட்டுகள் நடமாடும் பகுதியில், பெரிய விளம்பர தம்பட்டம் அடித்துக்கொண்டு, தங்கள் வருகையை காங்கிரஸ்  முன்கூட்டியே தெரிவித்தது, நக்சலைட்டுகளுக்கு வசதியாய் போய்விட்டது..

4..மாநில உளவுப்பிரிவு போலிசாரின் தோல்விகள் என்ன…பாதுகாப்பில் ஓட்டைகள் எங்கெங்கு..என்பதை கண்டுபிடிக்க கமிஷன் அமைத்து, தைரியமாக ..வெளிப்படையாக அறிவித்த சத்தீஷ்கர் முதல்வர் ராமன் மாறுபட்டவர்..

5..இவைகள் ஒருபக்கம் இருந்தாலும், “இதை அரசியல் ஆக்கவேண்டாம்…” என்ற கோரிக்கையோடு, காங்கிரஸ் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட முதல்வர் ராமன் சிங்..அவரது கட்சிதலைவர் ராஜ்நாத் சிங் ஒருபடி மேலே போய் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளுக்கு சென்று இரங்கல் கேட்டது நம் தமிழ்நாட்டு அரசியலை உற்றுப்பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது..

மறு பக்கம், சரியான பாதுகாப்பு தராததால்தான் தங்களது தலைவர்கள் கொல்லப்பட்டனர், என்ற கோஷத்தோடு, சட்டீச்கர், ம.பி.யில் பந்த் நடத்திய காங்கிர்ஸ்..சோக மூஞ்சியோடு பத்திரிக்கைகளில் வெளிவந்த ராகுல், சோனியா படங்கள்,  என வருந்துதலுக்குறிய நிகழ்வுகள்..

நக்சலைட்டுகளின் இந்த திடீர் எழுச்சிக்கு காரணம் என்ன?
மலை வளங்களியே நம்பியிருக்கும், மலைவாழ் மக்களுக்கு கடந்த 60 ஆண்டுக்ளாக ஆட்சிபுரியும் காங்கிரஸ் அர்சு செய்யத்தவறிய முன்னேற்ற திட்டங்களால் நக்சலைட்டுகள் கிராமங்களை கைய்யிலெடுத்துள்ளனர்.

மலைகளிலும் காடுகளிலும் கொழிக்கும் இயற்கை வளங்கள், தாதுக்கள், இரும்பு, தாமிரம், அலுமினியம், நிலக்கரி, போன்றவற்ரை, ஏகபோகமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கி, காடுகளையே நம்பி இருக்கும், வனவாசிகளை வஞ்சிக்கும், ஆளும் அரசின் செயல்களே,”” நக்சலைட்டுகளை வளர்த்திவிடும்” “மய்யங்கள்”..

மலைவாழ் மக்களை ஒரு சிறு புழு அளவுக்குக்கூட ஆளும் அரசு மதிக்காத காரணத்தால், அவர்கள் ”நக்சல்கள் “பாதையில் பயணிக்க “ சம்மதிக்கின்றனர்..

இந்த 2013 ஆம் ஆண்டில்,ஆயுதம் ஏந்திய போராட்டத்தால், ஆட்சிமாற்ரம் செய்யமுடியும், என்ற தத்துவத்தை உலகின் எந்த நாடும், எந்த பகுதியும் ஏற்றுக்கொள்ளவில்லை..என்பதே இன்றைய சூழல்..

1920 இல், ரஷ்யாவில் தோன்றிய கம்யூனிசம், அது தோன்றிய நாட்டிலேயே அது அழிந்துவிட்டது..அதை தீவிரமாக அனுசரித்த, சீனாவிலும் அது நீர்த்துப்போய்விட்டது..அதனாலேயே சீனா உலகின் வளர்ச்சியடைந்த முதல்நிலை நாடாகிவருகிரது..

மாற்ரத்தை வரவேற்கும் இந்தியாவில், உலகம் ஏற்கமறுத்த “ஆயுத புரட்சி தீவிரவாத கம்யூனிசம்” இன்னும் இந்திய காடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிரது..அதற்கு காரணம் இதுவரை இந்தியாவை ஆண்ட—ஆளும் கட்சிதான்..

“இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்பேன்” என்ற திராவிட இயக்கங்களின் கோஷம் தோற்றுவிட்டது…ஆனால் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆட்சியில் இருக்கும் வரை, நக்சல்பாரிகளும், மாவோயிஸ்டுகளும், நம் காடுகளில் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்..


1962 ஆம் ஆண்டு இந்தியா—சீனா போரில் இந்திய பக்கம் நின்ற கம்யூனிஸ்டுகள் ஒருபுரம்

சீனாவின் பக்கம் நின்ற கம்யூனிஸ்டுகள் மறுபுரம்
இந்த கொள்கை போரில் கம்யூனிஸ்ட்கட்சி சிதருண்டு…சி.பி.ஐ---சி.பி.எம்..என இரண்டாக பிளந்தது..

1967 இல் சி.பி.எம் உடைந்து, சி.பி.ஐ.எம் எல் ஆனார்கள்..அதாவது மார்க்சிஸ்ட் என ஆனது.

2004 இல் மர்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் உடன் மக்கள் போர்க்குழுவும் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் செண்டரும் இணைந்து மாவோயிஸ்ட்—லெனினிஸ்ட்—மார்க்சிஸ்ட்…என்ர “மாவோயிஸ்ட்” பிறந்தது..

இந்திய அரசு நக்சல்பாரிகள் மற்றும் மாவோயிஸ்ட்களை டஹ்டை செய்துள்லது..பி.வி.ரமணா என்னும் ஆராய்ச்சியாளர்..கணக்குபடி. தற்போது இந்தியாவில் 9000 முதல் 10,000- நக்சல்பாரிகள் இருக்கிறார்கள்..ஆனால் இந்திய உளவுப்பிரிவு கணக்குபடி சுமார் 20,000- ஆயுதம் எந்திய நக்சல்களும், 9 மாநிலத்தின் 85 ஜில்லாக்களின் பரவி உள்லனர்..

பாராளுமன்ற ஜனநாயகம் பொய்யானது..ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் மூலம் அடையும் ஆட்சியே வர்க்கபேதத்தை அகற்றும் “ என்பது இவர்களது நம்பிக்கை..ஆனால் எல்.டி.டி.ஈ போல இவர்களும், “காட்டிக்கொடுப்பவர்கள்”—”வர்க்க எதிரிகள்”—என்று பெயர் சூட்டி சிரச்சேதம் செய்வதும் நடந்து வருகிரது.

இவர்களது கொள்கை குளறுபடிகளில் வேடிக்கையான விஷயங்களும் உண்டு..கடவுளுக்கும் மதங்களுக்கும் விரோதிகளான இவர்கள், “இஸ்லாத்தின் வளர்ச்சி” என்பது காலனி ஆதிக்கத்துக்கு எதிரான தேசிய விடுதலையெ தவிர மனித நாகரீகத்துக்கு இடையேயான சச்சரவல்ல”—என்பது விந்தை—வேடிக்கை வினோதமான நிலப்ப்பாடுகளின் கோர்வையும் உண்டு.

இயக்க வளர்ச்சிக்கான பணம் ஆள் கடத்தல் ஆயுதகடத்தல், வெளிநாட்டு கள்ள நோட்டை புழக்கத்தில் விடுதல், கஞ்சா, அபின், போதைப்பயிர் விவசாயம் செய்தல் என்பன என்றாலும் இவர்கள் இதை முழுதும் பறுக்கிறார்கள்.
 மாவொயிஸ்டுகள்…
நக்சல் வர்க்கத்தின் போராளிகளா?
ஆயுதம் வாங்க –பொருள்-சேர்க்க..ஐ.எஸ்.ஐ..மற்றும் சீனாவுடன் கைகோர்க்கும் தேசவிரோதிகளா?
வர்க்க போராட்டத்தில்..வர்க்க எதிரிகளை அழிக்க தன் வர்க்கத்தையெ அழிக்கும் பயங்கரவாதிகளா?

பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்..  

Thursday, May 9, 2013

கர்னாடகாவில் காங்கிரசுக்கு வெற்றியா?

தொலைக்காட்சி ஒன்றின் மைக்கை கையில் வாங்கி திடீர் நிருபரான ப.சிதம்பரம் பாஜக வின் மூத்த தலைவர் திரு ஜஸ்வந்த் சிங்கிடம் கர்நாடகாவில் பாஜகவின் தோல்விக்கு காரணம் என்ன என்று கேட்டார் ..

அதற்க்கு ஜஸ்வந்த் சிங் " அரசு ஆட்சி நடத்தவேண்டும் ..அது இல்லாவிட்டால் இப்படித்தான் முடிவு இருக்கும்" என்றார்...இது யார்க்கும் பொருந்துமல்லவா?..காங்கிரசும் இதற்க்கு உட்பட்டதுதானே?..இதை அறிந்தும் அறியாத ப.சிதம்பரம் ..ஜாஸ்வந்தை "ஜென்டில் மென் " என்றார்..

உண்மையை ஒத்துக்கொள்வதும்--ஏற்றுக்கொள்
வதும், பாஜகவிற்கு எந்த தயக்கமும் எப்போதும் இல்லை.

முதலில் கர்நாடக மக்கள் காங்கிரசுக்கு ஆதரவாக ஒட்டு போடவில்லை.. அப்படியென்றால்...பி.ஜே பி ஆட்சியை எதிர்த்து ஒட்டு போட்டார்களா/--இருக்காது.காரணம் காங்கிரசின் மன்மோகன் சிங் அரசாலேயே 40 அவார்டுகள் கொடுத்து பி.ஜே பி. சிறப்பாக ஆளுவதாக பட்டயம் தந்திருக்கிறார்களே..
இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத "விவசாயத்திற்கு தனி பட்ஜெட் --அதுவும் மொத்த பட்ஜெட்டில் 21 சதவீதம் நிதி ஒதிக்கி " போட்டிருக்கிறார்களே..காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எல்லாம் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் பொது, கர்நாடகத்தில் விவாசாயிகள் தற்கொலையே இல்லை என்னும் நிலையை உருவாக்கினார்களே..

அப்படியானால் ..ஒன்றே ஒன்றுதான் இருக்கமுடியும்..அதுதான் சகோதர யுத்தம்..
அன்று ... சகோதர யுத்தம் கவுரவர்களை அழித்து
நேற்று...... சகோதர யுத்தம் இலங்கை தமிழனை கொன்று குவித்து ராஜபக்ஷே விற்கு மகுடம் சூட்டி மகிழ்ந்தது..
இன்று ....சகோதர யுத்தம் கர்நாடகாவை காங்கிரசுக்கு தாரை வார்த்து கொடுத்து ..2014 வரை காங்கிரசுக்கு உயிர்பிச்சை அளித்தது..
ஆம் காங்கிரசை பற்றி மக்களுக்கு தெரியும், அவர்கள் குற்ற பரம்பரையினர்--குடுமிபிடி சண்டைகாரர்கள்--நாட்டை அடமானம் வைக்கும் சண்டாளர்கள் என்று..
பாஜகவிடம் மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள்..அவர்களுக்குள் சகோதர சண்டையை  மக்கள் விரும்பவில்லை..கோபப்பட்டு, பாடம் புகட்ட்டியிருக்கிரார்கள் ..
1977 லும் இப்படித்தான்..ஜனதாகட்சி ஆட்சி ஒரு சிறந்த நிர்வாகத்தை கொடுத்தது..ரேஷனில் அரிசி, சர்க்கரை, மண்எணெய் விலை யைவிட பொது மார்க்கெட்டில் விலை குறைவாக விற்றது ஆனால் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டதால், மொரார்ஜி தேசாய், ஜகஜீவன்ராம், வாஜ்பாய் போன்ற தலைவர்கள் இருந்தும், 3 ஆண்டுகளிலேயே -- மக்கள் ஜனதா கட்சிக்கு  எதிராக வாக்களித்தனர் ..இத்தனைக்கும், அவசரநிலை பிறப்பித்து ஒருலட்சம் பேரை விசாரணை இன்றி 22 மாதங்கள் இந்திராகாந்தி சிறையில் தள்ளியதையும் மறந்து, மன்னித்து, இந்திராவையே மக்கள் மீண்டும் தேர்ந்தெடுத்தனர்....
காரணம் ஜனதா கட்சியிடம் மக்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது..இதை நிறைவேற்றாததால், காங்கிரசுக்கு யோகம் அடித்தது..அதேநிலைதான் இன்று கர்நாடகாவில் நடந்தேறியுள்ளது..

இதை சம்பந்த பட்ட சகோதரர்கள் புரிந்து கொண்டால் சரி.

கர்நாடகா வெற்றி கான்கிரசின் முகத்தில்  கடைசி புன்னகை..சோனியாவின் அரசியல் வரலாற்றில் கடைசி வெற்றி..இனி சோனியாவும் சரி..காங்கிரசும் சரி..இத்தாலிக்கு மூட்டைகட்ட வேண்டியதுதான்..

Sunday, May 5, 2013

அடேங்கப்பா--சி.பி.ஐ.க்கு என்ன ஆச்சு?

பவன் குமார் பன்சால் ..முன்னாள் பாராளுமன்ற விவகார இணை அமைச்சர்..இன்னாள் ரயில் மந்திரி...
அவருடைய முன்னாள் உதவியாளரும்..உறவினருமான..விஜய் சிங்கலா என்பவர், ரயில்வே போர்ட் உறுப்பினர் மகேஷ்குமார் என்பவரிடமிருந்து பதவி உயர்வு கொடுக்க ரூ.90 லட்சம் லஞ்சமாக பெற்றுக்கொண்டார்..என்று சி.பி.ஐ.அவரை கைது செய்துள்ளது.மகேஷ்குமார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
நல்ல “பசையுள்ள பதவி பெற “ மகேஷ்குமார்-- திரு.சிங்கலாவிடம் 10 கோடி பேசி--அதை ரெண்டுகோடியாக குறைத்து, ரூ.90 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கும்போது சி.பி.ஐ.பிடித்ததாம்..
கடந்த 24 ஆம் தேதி, சட்ட அமைச்சரிடம் சுப்ரீம் கோர்ட்டின் “நிலக்கரி பேர ஊழல் “ ஆவணங்களை காட்டி, திருத்தம் செய்ததாக சி.பி.ஐ.யை, சுப்ரீம் கோர்ட் கடுமையாக கண்டித்தது நமக்கு நியாபகம் இருக்கும் என நம்புகிறேன்.
அதே சி.பி.ஐ., சட்ட அமைச்சரிடம் ஆவணங்களை காட்டி, தவறு செய்ததற்கு பரிகாரமாக, சுப்ரீம் கோர்ட்டிடம் தன் தவறை ஒத்துக்கொண்டிருக்கிறது..
இதோடுகூட ஒரு ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்திருக்கிறது.”.தான் சுதந்திரமான அமைப்பல்ல.---.அரசின் அங்கம்---ஆவணங்களை காட்டியது தவறில்லை”--எனவும், ஆனாலும், சுப்ரீம் கோர்ட் என்ன சொல்கிறதோ, அதற்கு கட்டுப்படுகிறேன் எனவும், அந்தர் பல்டி, ஆகாச பல்டி அடித்திருக்கிறது.
இடையில், மத்திய மந்திரி பவன்குமார் பன்சால் உறவினரை லஞ்ச வழக்கில் பிடித்து, “தன் அதீத கடமை உணர்ச்சியை” சி.பி.ஐ.ஏன் காட்டிக்கொண்டது, என்று என் மண்டையை குடைகிறது.
ஆஹா..சி.பி.ஐ.மாறிவிட்டது என்பதா?--”எவ்வளவு நாளைக்குத்தான் பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது?--வயசுக்கு வந்துட்டா பொறுப்பு தானா வந்துடும் “ என்பார்களே அதுபோல, சி.பி.ஐ. வயசுக்கு வந்துடுச்சா>--பொறுப்பு வந்துட்டுதா?
அப்படியெல்லாம் சந்தோஷப்படுவதற்கு அவசியமில்லை..சம்பவம் நடந்தது உண்மைதான்..சி.பி.ஐ. கைய்யும் களவுமாக பிடித்ததும் உண்மைதான்..பிடித்ததற்க்கான காரணம் தான் வேறு.
இன்றுவரை “நிலக்கரி ஊழலில்” மன்மோகன் சிங்தான் முதல் குற்றவாளி..அவரை காப்பாற்றப் போய்தான் சட்ட அமைச்சர் அஸ்வினி குமார் மாட்டிக்கொண்டார்.இந்த இருவரையும் காப்பாற்ற சி பி ஐ வீசிய வலையில் சிக்கிய மீன்தான் பவன்குமார் பன்சால் உறவினர் சிங்க்லா..
இப்ப புரியுதா..மன்மோகன் சிங் விவகாரத்தை திசைதிருப்ப, காங்கிரஸ் அரங்கேற்றிய புதிய காட்சிதான் .பவன்குமார் பன்சால்.உறவினர் கைது...
சி.பி ஐ வயசுக்கும் வரல..சி.பி.ஐக்கு புத்தியும் தெளியலை..

பொறுப்பு மட்டும் எப்பவும் உண்டு...அதுவும் காங்கிரசை காப்பாற்றும் பொறுப்பு சி.பி.ஐ.க்கு எப்பவுமே ரொம்ப அதிகம் தான்..
அடேங்கப்பா...சி.பி.ஐ.க்கு என்ன ஆச்சு..ஒண்ணும் ஆகலை.நமக்கு எதுவும் ஆகாமல் இருந்தால் சரிதான்....