Pages

Sunday, October 17, 2010

ஆயுதங்கள் என்னை சிதைக்காது--நான் வெற்றிபெறவே படைக்கப்பட்டவன்.

நான் என்பது அகந்தை—அது வெளியே—நான் என்பது அகமனதின் -வைரம்—வைடூரியம்—வைராக்கியம்—என அடிக்கிக்கொண்டே போகலாம்.

காட்டு விலங்குகளிலே எது பயங்கரமானது?---என்றால் நாம் எதை சொல்வோம்---சிங்கம்—புலி—ஏன் கரடி—நரியைக்கூட சிலர் சொல்வார்கள். –உண்மையிலேயே எப்போது என்ன செய்யும் என சொல்லமுடியாதது ””யானைதான் “”நீங்கள் அருகில் செல்லுங்கள் ஆடாமல் இருக்கும்—உங்களை பார்த்துக்கொண்டே பதவிசாக இருக்கும். எப்போது தாக்கும் என்பதை ஊகிக்க முடியாது.பழக்கிய யானையை பாருங்கள்—இவ்வளவு பெரிய மிருகம்—பூனைக்குட்டியைப் போல—ஒரு நோஞ்சான் பாகனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு எப்படியெல்லாம் உடலை வளைத்து வேலை செய்கிறது.

அதுபோலதான் நம்மனதும்—பழக்கப்படாத மனம் –படிப்பை மட்டுமே அறிந்த மனம்---பதற்றத்திலிருந்து விடுபட படாதபாடு படும். ””மதநீர் “”வழியும் யானைமுன் மாவீரனும் நடுநடுங்கிப் போவான் ---பயம் என்னும் மதநீர்—மனிதனை நிலைகுலையச் செய்யும்—பண்படாத மனதின் இருள்மேகம் தான் பயம்---

நமக்குள்ளே ஒரு இடத்தில் நம்மை தட்டியெழுப்பும் “”நம்பிக்கை “ இருக்கிறது.
அது எங்கிருக்கிறது—எவ்வளவு ஆழத்தில் ஒளிந்திருக்கிறது-----என்பதை கண்டுபிடிக்கும் போது நாம் எழுச்சியுருகிறோம். புகழ்ச்சி பெறுகிறோம்---இகழ்ச்சி அகற்றுகிறோம்----விளைவு மகிழ்ச்சியடைகிறோம்.

ஆப்பிரிக்க காடுகளிலே தன் கூட்டத்தால் கைவிடப்பட்ட---வழிதவரிய சிங்கம்—புலி குட்டிகளை எடுத்து வளர்ப்பார்கள். பெரிதாகும்வரை மாமிச துண்டுகளை இறையாக போடுவார்கள். முழுமிருக உணவை அது பார்த்தே இருக்காது.காட்டில் சென்று விடத்தீர்மானித்த சில நாட்களுக்குமுன் –கொல்லப்பட்ட பிராணியின் முழு உடலை –குளம் குட்டைகளில் மிதக்கவிடுவார்கள்---வளர்ந்த இந்த குட்டிகள் பாய்ந்து சென்று இறந்த அந்த மிருகத்தின் கழுத்தைதான் முதலில் இருக்கி பிடிக்கும்.

எப்படி மறைத்து--- மறத்து வளர்த்து-- மாமிச துண்டுகளையே இறையாக கொடுத்திருந்தாலும்---உணவாகப் போகும் இரையின் கழுத்தை கடித்து உயிரை போக்குவது சிங்கம்—புலியின் ரத்தத்தில் விளந்த குணம்—

மனிதனின் ரத்தத்தில் விளைந்த குணம்—நம்பிக்கை—புதைந்து கிடக்கும் இந்த பொக்கிஷத்தை வெளிக்கொணர தொல்பொருள் ஆராய்ச்சியாளன் தேவையில்லை. வித்தையை கற்றுக்கொடுக்கும் குருவுக்கு –கற்ற சீடனை வெல்ல –அதற்குமேல் வித்தை கைவசம் இருக்கும். அதுபோல நம்பிக்கையை ஒளித்துவைத்த அதே மனத்தால் நம்பிக்கையை வெளிக்கொணரவும் முடியும்.

என்னிடம் +2 படிக்கும் மாணவனை அவனது தந்தை கூட்டிவந்தார். மார்ச் பரிக்‌ஷைக்கு 3 மாதம் தான் இருக்கிறது—பயமாக இருக்கிறது—பரிக்‌ஷைக்கு போகமுடியாது என்கிறான் என் பையன் என மிகவும் வருத்ததுடன் சொன்னார்.

மாணவனுடன் பேச்சு கொடுத்தேன்  --மார்க் பட்டியலை பார்த்தேன் -நல்லமதிப்பெண் பெற்றிருந்தான் ---பின் ஏன் இந்நிலை என்ற போது –””முதல் மதிப்பெண் வாங்காது போய் விடுவேனோ “”என்ற பயம் என்றான்.

இந்த பயம் என்பது நம்பிக்கையின்மையின் வெளித்தோற்றம்—இதற்கான காரணத்தை தேடுவதை விட அம்மாணவன் பெற்ற வெற்றிகளை சுட்டிக்காட்டி “”ஏற்கனவே உள்ள நம்பிக்கை திசுக்களுக்கு “”வலிவூட்டினேன். அவன் பெற்ற அத்தனை மதிப்பெண்களையும் சொல்லச்சொன்னேன்  --அவனது பெற்றோர்—ஆசிரியர்கள்—அவனது  நண்பர்கள்—அவனை பாராட்டியதை—நினைவு கூறச்செய்தேன்  -இத்தனைநாள் எழுதியதை போல இதுவும் ஒரு பரிக்‌ஷயே—இதற்குமேல் இப்பரிக்‌ஷைக்கு ஒரு கொம்பு முளைத்துவிடவில்லை—எனபதையும் சொன்னேன்.

உன்னால் முடியும் என்பதை –ஏற்கனவே  நிரூபித்த விஷயங்களை—வெற்றிகளை—மீண்டும் அசைபோடும்போது மனது ஏற்றுக்கொள்கிறது. –என்பதை புரியவைத்தேன். பரிக்‌ஷை முடிவுகள் மாணவனுக்கு நல்லமதிப்பெண் பெற்றுத்தந்தது---அம்மா அப்பாவை—அலைய வைக்காமல் நல்லகல்லூரியில் இடமும் கிடைத்தது…

“”தூங்கிகிட்டு இருக்கிற இந்த சிங்கத்தை தட்டி எழுப்பிடாத””—என சினிமாவில் வடிவேலுவும் விவேக்கும் ஜோக் அடிப்பார்கள்---ஆம்—அதை தட்டியெழுப்பித்தான் ஆகவேண்டும்---சிங்கம் மாதிரி வலுவான மனதை வைத்துக்கொண்டு தூங்கிகொண்டிருந்தால் என்ன லாபம்.


தன்னம்பிக்கைக்கு உரமேற்றும் பயிற்சிகள் உள்ளன--தினசரி தியானம்--மந்திர உச்சாடனங்கள்போல்---மனதை வளமாக்கும் --வலிவாக்கும் சிந்தனைகளை வளர்க்கவேண்டும்--
" ஆயுதங்கள் என்னை சிதைக்காது---
தோட்டாக்கள் என்னை துளைக்காது--
நெருப்பு என்னை எரிக்காது
நீர் என்னை நனைக்காது
காற்று என்னை உலர்த்தாது
நான் வெற்றிபெறவே படைக்கப்பட்டவன்.
நான் ஞானம் பெற்று படைக்கப்பட்டவன்””

என்ற உச்சாடனங்கள்--மனதுக்கு வலு சேர்க்கும்--ஆழ் மனதிற்குள் புதைந்திருக்கும் நம்பிக்கையை--கேணித்தண்ணியை வாளியால் இறைப்பதுபோல மேலே கொண்டுவரும்.

2 comments:

நிகழ்காலத்தில்... said...

அக்கறையான இடுகை..

வாழ்த்துகள் நண்பரே..

ராம்ஜி_யாஹூ said...

nice inspirational post, thanks for sharing