Pages

Monday, July 4, 2011

ஜெ யின் அடிக்கடி மாற்றங்கள் அசத்தலா..?சொதப்பலா.?……




இதுதான் நிர்வாகத் திறமையா?...50 நாளில் 12 மந்திகளின் இலாகா மாற்றம்…ஒரு மந்திரி டிஸ்மிஸ்..

சிறந்த நிர்வாகத்தை தரவே ஜெ இப்படி செய்கிறார்..இதுதான் ஜெ ஸ்டைல்…இப்படித்தான் “சோ”…மாதிரி “ஜெ” கோஷ்டியினர்..”நடுநிலை “ கமண்ட் அடிக்கின்றனர்.

அதிகாரிகள் மாற்றமாவது ஆட்சி மாறியதும் செய்யும் முதல் சடங்கு என ஜீரணித்துக் கொள்ளலாம்..ஆனால் ஒவ்வொரு அதிகாரியும் இன்னைக்கு தாங்கள் “போஸ்டில்”..உள்ளோமா…என்பதை தெரிந்து கொள்ள தினசரி டி.வி. முன்னாலேயே இருக்கவேண்டும் போலிருக்கிறதே…இது சரியான சூழலா?

ஆட்சி அமைக்கும் போதே மந்திரிகளின் “பயோ டேட்டா”  தெரியாதா?...ஜெ யிடம் பயோடேட்டா விற்கு வேலையேது?...”ஜாதகம்” மட்டுமே ”இவர்களுக்கு”.. தேவை…மந்திரியின் ஜாதகம் “இவர்கள்” ஜாதகத்தோடு பொருந்தி வருமா என்பதே முதல் தகுதி..” பொட்டிகள் பிரிக்காமல் போயஸ் தோட்டத்திற்கு வந்து சேருமா?” எனபது இர்ண்டாம் தகுதி.

இசக்கி சுப்பையாவிற்கு இதில் எது குறைந்தது என தெரியவில்லை..கட்சியில் அவர் முன்னணியில் இருந்ததாகவும் குறிப்பில்லை..பல சீனியர்களையும்..தகுதியானவர்களையும் புரக்கணித்து விட்டு “பாராசூட்டில்” இவரை இறக்குமதி செய்தது ஏன்?...

திமுக விட்டுச்சென்ற கடனிலிருந்து மீளவும்…நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யவும்..ஒருவலுவான “டீம்” வேண்டாமா?..இது மிகப்பெரிய சவால் இல்லையா..?..இதில் கோட்டையே முன்பின் பார்த்திராதவையும்..அனுபவமில்லாத 30 முகங்களையும் மந்திரியாக்கியதின் பின்னணி என்ன?”..ஜெ க்கு பின்னணியில் உள்ளவரின் முன்னணி முடிவா இது?  அல்லது ஆட்சியை “சீரியஸாக” எடுத்துக்கொள்ளவில்லையா?’”

மேலே எழுதியதில் நான் “திறமை” என்று எங்கேயும் குறிப்பிடவில்லை..”ஜெ” க்கு “சைபர்கள்’” மட்டுமே வேண்டும்..அதற்கு மேலுள்ள எண்களை அவர் விரும்புவதில்லை..

அதனால்தான்..பொள்ளச்சி ஜெயராமன்..நைனார் நாகேந்திரன்..வளர்மதி போன்றோர் கைவிடப்பட்டனர்..திருநவுக்கரசர்..பண்ருட்டியார்…செல்வகணபதி..ஈரோடு முத்துசாமி..சென்னை சேகர்பாபு..போன்றோர் விரட்டி அடிக்கப்பட்டனர்..இவர்கள் பெரிய திறமை சாலி இல்லாவிட்டாலும்..அனுபவசாலிகள்.பொன்..வைக்கும் இடத்தில் “பூ”வாவது வைப்பார்கள்..

அதிகாரிகளையே வைத்து ஆட்சி செய்துவிடலாம்..எனபது நடக்குமா?..அல்லது கானல் நீரா?..

நீக்கப்பட்ட…….. இன்று மந்திரி………...நாளை மந்திரிகள்……….இலாகா மாற்றங்கள்…..எதை வைத்து செய்யப்பட்டது…

இவர்களது “பெர்ஃபார்மன்ஸ்”..செயல்பாடு எதை வைத்து தீர்மானிக்கப்பட்டது..
புலனாய்வு அறிக்கை அடிப்படையில் இவர்கள் நீக்கப்பட்டார்கள் என்றால் அது அபத்தமாக தெரியவில்லையா?.

மந்திரிகளையும் அதிகாரிகளையுமே சரியாக தேர்ந்தெடுக்க தெரியாதவருக்கு பேர்தான் திறமையான முதல்வரோ?

1 comment:

Yaathoramani.blogspot.com said...

ஒருவரியில் சொல்வதானால்
சரியான சொதப்பல்தான்
மின்சார அமைச்சர் வீராச்சாமியை
துறையை அவ்வளவு கேவலமான துறையாக
மாற்றிய போதும் கடைசிவரையில் மாற்றாமல் இருந்தது
அவர் செய்த சொதப்பல் என்றால்
இப்படி மந்திரி என்றால் என்ன என அறிந்து கொள்வதற்குள்
மந்திரியை மாற்றுவது இவர் செய்யும் சொதப்பல்
எப்படியோ யார் வந்தாலும் தமிழ் நாடு சொதப்பல் மயம்தான்