Pages

Monday, August 12, 2013

டெல்லி எப்போது “டெல்லாஸாக”—(அமெரிக்காவின் ஒரு நகரம் ) மாறியது..?

 
விமான பயணங்களை விட விமான பயணிகள் நம்மை—”நாம் வெளிநாட்டில் இருக்கிறோமா”  ? என்ற நினைப்பை உண்டு பண்ணி விடுகிறார்கள்.

நேற்று டில்லி விமான நிலயத்தில் என் ஊருக்கு செல்லும் இண்டிகோ விமானத்திற்காக அரைமணி நேரம் முன்னதாக வந்து காத்திருந்தேன்.

நேரத்தை பிரயோஜனமாக செலவிட “எழுதலாம்” என்று நினைத்த போது பேனாவைத் தேடினேன்..காணவில்லை…எனவே ‘பறவைகள்..வாட்சிங் “—போல..”மனிதர்கள் வாட்சிங்கில்” ஈடுபட்டேன்.

மனிதர்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ..( ஒவ்வொருவரும்..அல்ல.) ஒருவிதம்..என்பது உண்மையாகவே தெரிந்தது..பஞ்சாபி—மராட்டி—தெலுங்கு—அரேபி—அரியானி—என விதவிதமான..மொழிகள்..மனிதர்கள்—உருவங்கள்..ஆடைஅலங்காரங்கள்..

இவர்களில் சில மனிதர்களின்..மனுஷிகளின்.-ஆடைகளும்—உருவங்களும்,,சில வினோதமாகவும்—சில அருவருப்பாகவும் இருந்தது..

பெண்களுக்கு உரிமைகள் வேண்டும்..சுதந்திரம் கட்டாயம் வேண்டும்..அது வீடுகளிலும்,,அலுவலங்களும்—நடையிலும்..மட்டுமே.(.உடையில் அல்ல ) இருக்க வேண்டும்..

அங்கங்களை “அளந்து காட்டும் “உடைகளை அம்மாக்களும், அச்சன்களும், அகத்துக்காரர்களும்,..எப்படி அனுமதிக்கிறார்கள்..சகித்துக்கொள்கிறார்கள்..”இப்படி உடுத்தக்கூடாது” என்று ஆலோசனை சொல்லாமல் இருக்கிறார்கள்..என்பது புரியாத புதிராகவே இருந்தது..

இது நாகரீகம் என்று சொல்லமாட்டேன்…சுதந்திரம் என்ற பெயரில் இந்த அசிங்கங்கள் எப்படி அரங்கேறுகிறது..என்பது எனக்கு புரிய வில்லை..
முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்..உடைகள் மனிதனின்.-மனுஷிகளின் முழுச்சுதந்திரம்..என்பது வாதத்திற்காக மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்..ஒருவேளை ஏற்றுக்கொண்டால் அது வீட்டுக்குள்ளே மட்டுமே செயல் படுத்தமுடியும்..

நாட்டுக்கு நாடு உடைச்சுதந்திரம் வேறு படுகிறது..மேலை நாடுகளில் உடை வழக்கங்கள்..அவர்கள் நாட்டுக்கு ஒத்துவருவது..பழக்கமானது..அதனால் சமூக பாதிப்போ..உடையினால் பெண்கள் மீது பாலியல் வன்முறையோ நிகழ்த்தப்பட்டதில்லை..
தற்போதைய “நம்மூர்” “ஸ்கின் டைட் “ உடைகள்..இது எவ்வளவுஆபாசத்தை உண்டுசெய்கிறது…பெற்றோர்களோ..கணவன்மார்களோ..நினைத்துப்
பார்க்கிறார்களா?

இதை பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது..உங்கள் பார்வை சரியில்லை என்கிற ஒரு குரலும் என் காதில் விழுகிறது..

நம் தேசத்து உடை அலங்காரம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது..உள்ளூர் உடைகள் நாம் எந்த ”சைசில்” இருந்தாலும், நம்மை அசிங்கமாக --அருவ்ருப்பாக-- காண்பிப்பதில்லை..ஜீன்ஸ்களும், டைட்ஸ்களும் இதற்கு நேர் எதிமாராக இருக்கிறது..

இந்த அரிச்சுவடியை ஏற்க ஏன் பெண்ணினம் தயாராக இல்லை…

ஆடைகள் நாகரீகத்தின் அடிப்படை..அது அநாகரீகத்தின் வெளிப்பாடானால், வணங்க வேண்டிய பெண்..சுணங்கிப் போவாள்...ரசிக்கவேண்டிய அழகு--விரசமாகிப்போகும்....இது அபாயமல்லவா?...

5 comments:

Anonymous said...

உடையணிதல் அவரவர் தனிப் பட்ட விருப்பம் எனினும், தாம் வாழும் மாநிலத்தின் வழக்கத்துக்கும், மக்களின் குணங்கள், பழக்கங்கள், ஏற்புடைமைக்கும் அமைய உடுத்தலே நமக்கும் நல்லது, அவங்களுக்கும் நல்லது. பெண் என்றில்லை இது ஆண்களுக்கும் பொருந்தும். நன்றிகள்.

sakthi said...

உண்மை அண்ணா ,
ஆபாசத்தை தூண்டும் வகையில் உடை அணிந்து கொண்டு உணர்சிகளை ஒருவிதமாக தூண்டப்படுவதும் பாலியல் கொடுமைகளுக்கு ஒரு வகை காரணம் .சொன்னால் உன் கண் சரி இல்லை ,உன் மனசு சரி இல்லை என்பார்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

கோமதி அரசு said...

உடையில் கண்ணியம், கிடைக்கும் மதிப்பு, மரியாதை. ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும்.

கோவை நேரம் said...

சரியாக சொல்லி இருக்கிறீர்கள்..ஆடைக்கலாச்சாரம் நம்மை வேற்றுப்பாதைக்கு அழைத்துச்செல்வது உண்மையே..