Pages

Monday, October 14, 2013

பேப்பரை கிழித்து சட்டத்தை காப்பாற்றிய பலவான் --ராகுல் காந்தி



நமக்கெல்லாம் தெரியும்--உழல் வாதிகளை காப்பாற்றும் அவசர சட்டத்தை ராகுல்காந்தி எப்படி தாக்கல் நிலையிலேயே தாக்கி அழித்தார் என்பது....

"பேப்பரை கிழிப்பேன் " என்கிற ஒரே ஒரு வாசகமும், "நான் சென்ஸ்" என்கிற அவரது ஒரே ஒரு வார்த்தையும், மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய மந்திரிசபை, கூடி விவாதித்து, எடுத்த, முடிவை மாற்றக்கூடிய வல்லமை பெற்று இருக்கிறது என்றால், ராகுல் காந்தி ஒரு " ராம்போ" தானே..

இதே மாதிரி ஒருசில பேப்பரை கிழித்து போட்டால், 2 ஜி முடிந்தது--ஆதர்ஸ் ஒழிந்தது--நிலக்கரி ஊழல்  போயே .."போயிந்தி"--அல்லவா..

சி.பி.ஐ டைரக்டர் சும்மா உட்கார்ந்திருப்பார்..சி.பி.ஐ. கோர்ட்டுகள் விடுமுறையில் பூட்டியிருக்கும்..சுப்ரீம் கோர்ட்டுக்கு ஊழல்களில் தலையிட்டு தீர்ப்புவ்ழங்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது...கஷ்ட்டப்பட்
டு பிரதமர் செய்யவேண்டிய வேலைகள் எல்லாம், ராகுல், ஒரேநாளில் முடித்து விட்டுரிப்பார் அல்லவா?
ராகுல்ஜி உங்களுடைய இவ்வளவு பெரிய பலத்தை இவ்வளவு நாள்--வருடங்கள்-- ஏன் மூடி மரைத்திர்கள்?--உங்களிடம் ஒரே ஒரு கேள்வி ராகுல்..இவ்வளவு நாள்  இந்த பலத்தை எங்கு மறைத்தி  வைத்திருந்திர்கள்,என்ற ரகசியத்தை சொல்விர்களா...ராகுல்ஜி..

இன்னொரு உபகெள்வி ராகுல்ஜி ...இந்த பலத்தை மன்மோகன் சிங்கை மிரட்ட மட்டும்தான் பயன் படுத்துவிர்களா?---அல்லது உங்கள் மச்சான் ராபர்ட் வதேராவுக்கு, எதிராகவும் பயன்படுத்தும் "தகிரியம் "--உங்களுக்கு உண்டா ராகுல்ஜி..

ஏதாவது தப்பா கேட்டிருந்தா...வருத்தப்படாதீங்
க ராகுல்ஜி..இன்னும் 6 மாதத்தில் நீங்கள் பிரதமர் ஆகிவிடுவீங்க ராகுல்ஜி...இத்தாலிக்கா?--இல்ல..வேறு வெளினாட்டுக்கா..என்பதை அப்புறம் சொல்றேன் ராகுல்ஜி...

No comments: