Pages

Tuesday, December 10, 2013

பாஜக திமுகவோடு கூட்டணியா?தமிழக பாஜக சரித்திரத்தில் எத்தனையோ பிரசித்தி பெற்ற மாநில செயற்குழுக்கள் நடைபெற்றுள்ளன..அதில் நவம்பர் 27—28 ந்தேதி பரமக்குடியில் நடந்த மாநில செயற்குழு வித்தியாசமானது.

அங்கு மூன்று வகை வித்தியாசங்களை என்னால் பார்க்கமுடிந்தது..
1 “.பாராளுமன்ற தேர்தலை நாம் எப்படி அணுகவேண்டும்?—கூட்டணி என்று வைத்துக்கொண்டால் அது யாரோடு?---உங்கள் மனந்திறந்த கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.”.—என்று மாநிலத்தலைவர் திரு.பொன்னார் அவர்கள் அழைத்தவுடன் வந்திருந்த செயற்குழு உறுப்பினர்களில் பாதிக்குமேல் கருத்து சொன்ன ஆர்வம்.

.2. நம் லட்சியத்தோடும் கொள்கையோடும் என்றும் ஒத்துப்போகாத ..நமக்கு என்றுமே ஒத்துவராத..திமுகவோடு கூட கூட்டணி வைத்துக்கொள்ளலாம்..என நம்மில் சிலரே சொன்ன “ஆச்சரியமான---அதிர்ச்சிகரமான ” கருத்துக்கள்..

3.” வல்லபாய் பட்டேலின் ஒற்றுமை ஓட்டம்—மற்றும் கிராம யாத்திரை” பற்றிய விரிவான விபரமான ஆழமான கருத்து பரிமாற்றம் வழங்கிய திருமதி வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் கருப்பு முருகானந்தத்தின் விளக்கங்கள்..

செயற்குழுவன்று காலை “தினமலரில்” திமுக கூட்டணிக்கு ஆதரவான முடிவில் பாஜக இருப்பதாக வந்த கட்டுரையும், செயற்குழு முடிந்த அடுத்த நாட்களில், அதே அர்த்தத்தில், வேறு சில பத்திரிக்கைகள் எழுதிய கட்டுரைகளும், என்னைப்போன்ற பாஜக தொண்டனையே உலுக்கியது என்பது உண்மைதான்..

இச்செய்தி பாஜகவின் தொண்டனையும், நமது இயக்க ஆதரவாளர்களையும் பெரும் அதிச்சியில் ஆழ்த்தி வருகிறது என்பதை “முகநூலிலும்” நேரில் என்னிடம் பார்க்கும் நண்பர்கள் தெரிவிக்கும் கருத்துக்களிலிருந்தும், மேலும் உறுதியாகிறது..

செயற்குழுவின் நிறைவுரையில், முதலில் பேசிய திரு எல்.ஜி. அவர்கள், “ஒரே கூட்டணியில் இரண்டு பிரதமர் வேட்பாளர்கள் “ இருக்க முடியாது என்பதையும், அடுத்த கூட்டணி..( திமுக பாஜக கூட்டணி)—யின் ரசாயனம் ( கெமிஸ்ட்ரி)..வீழ்படிவுகளைத்தான் (பிரிசிபிடேட்)..உண்டாக்கும் என்பதையும் அழகாக..சிலேடையாக சொல்லி நம் “அதிர்ச்சிக்கு “ முற்றுப்புள்ளி வைத்தார்.

நிறைவுரை ஆற்றிய திரு.பொன்னார் அவர்கள், “ மதுரை தாமரை சங்கமத்தின் மூலம், தமிழகத்தில் பாஜக இருக்கிறது என்று காட்டினோம்..எங்கே இருக்கிறது? என்று கேட்டவர்களுக்கு,..திருச்சி “இளந்தாமரை “ மாநாட்டின் மூலம் “தமிழகம் எங்கும் இருக்கிறது” என்று நிரூபித்தோம்..நாம் கூட்டணிகளை தேடிப்போன காலம் போய் கூட்டணிகள நம்மைத்தேடி வரும் காலம் வந்துகொண்டிருக்கிறது.”.

“ .கூட்டணி அமைந்தால் அது நம் தலைமையிலேயே அமையும்..அதற்க்குள் நம் வலிமையை நாம் பெருக்கிக்கொள்வோம்..12500 கிராமங்களிலும் யாத்திரை செய்து மக்களை சந்தித்து புதிய பாஜக கிளைகளை உருவாக்குவோம்..சர்தார் வல்லபாய் பட்டேலின் “ஒற்றுமை ஓட்டத்தை “ பள்ளி கல்லூரி மாணவர்களை திரட்டி நடத்துவோம்.” என்று தெளிவாக தொண்டர்களுக்கு செய்தி சொன்னார்..

தற்போது சில ஊடகங்களும், பத்திரிக்கைகளும், “தெளிவான பாஜக தொண்டனையும்” குழப்பத்தில் ஆழ்த்தும் கூட்டணிகளை உருவாக்கி வருகிறது..இதை நம்பிய ஒருசில தொண்டர்களும், ஆதரவாளர்களும், “ தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை தாக்கிய சண்டாளர்களுடனா கூட்டு?—நாம் சூடு சொரணையை இழந்து விட்டோமா? “என்றவகையில் “முகநூலில்” கொதிப்பதை பார்க்க முடிகிறது..

இப்படி பதட்டப்படவோ இம்மாதிரியான கூட்டணி செய்திகளை நம்புவதோ அவசியமற்றது..நமது தலைவர்கள் தெளிவானவர்கள்…அவர்கள் காங்கிரஸ் கட்சியைப்போல மேலிருந்து திணிகப்பட்டவர்கள் அல்ல..நம்மில் ஒருவராக இருந்து உயர்ந்தவர்கள்தான்…நம் உணர்வுகளை மட்டுமல்ல நாட்டின் சூழ்நிலைகளையும் தெளிவாக புரிந்தவர்கள்..நம் லட்சியம்—கொள்கைக்கு என்றும் வலுசேர்ப்பவர்கள்...

பொய்ச்செய்திகளை படித்து நம்மை நாமே குழப்பிக்கொள்வதை தவிர்ப்போம்..வல்லபாய் பட்டேல் ஒற்றுமை ஓட்டத்தை மாபெரும் வெற்றியுடன் நடத்தி, மக்கள் ஆதரவை திரட்டுவோம்..கிராமங்கள் தோறும் பாதயாத்திரை நடத்தி, பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே, ஆயிரக்கணக்கான புதிய கிளைகளையும், லட்சக்கணக்கான புதிய உறுப்பினர்களையும் சேர்த்து, மேலும் வலு பெற்ற தமிழக பாஜகவை உருவாக்குவோம்..

நம் லட்சியம் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து 20+ எம்.பி.க்களை அனுப்பி மோடி அவர்களை பிரதமராக்குவது மட்டுமல்ல..2016 சட்டமன்ற தேர்தலில்..ஆட்சியை பிடிக்கும் வலுப்பெற்ற கட்சியாக மாறுவதும் ஆகும்…

இதை நிறைவேற்ற… உடனே புறப்படுவோம்..
ஒற்றுமை ஓட்டத்தில் கிராமம் தோறும் செல்வோம்.. .  

2 comments:

Anonymous said...

பாரதிய ஜனதா தமிழகத்தில் வளர்வதற்கான சூழ்ல் அரும்பிஉள்ளது. வசீகரிக்கக்கூடிய ஒரு இளம் தலைமுறையை கட்சி தலைவராக்கி, கட்சியை வளர்க்க முனைய வேண்டும்..கூட்டணியை தவிர்ப்பது கூட நல்லது.

Avargal Unmaigal said...

பா ஜா தொண்டர்களுக்கு மட்டுமல்ல அந்த செய்தியை கேட்ட நடுநிலைமையோடு அரசியல் கட்சிகளை எந்த வலைத்தளத்தில் விவாதிக்கும் எனக்கே திமுகவுடன் கூட்டு என்றவுடன் அதிர்ச்சியாகத்தான் இருந்ததுங்க