Pages

Tuesday, June 3, 2014

அமெரிக்கா ..ஓ..அமெரிக்கா ( 3 + )

முதல் இரண்டு பதிவுகளை படித்த நண்பர்கள் நிறைய கருத்துக்கள் தெரிவித்து இருந்தார்கள்..மீண்டும் சொல்கிறேன்...வரவேற்பு அதிகம் இருப்பதால் மூன்றாம் பதிவு எழுதவில்லை..வரவேற்காவிட்டாலும் எழுதுவேன்..காரணம் இப்பதிவு மிகவும் முக்கியமானது..

நாம் போராடி வரும் சில்லரை வர்த்தகத்தில் அந்நியமுதலீட்டை எதிர்ப்பும், அது சம்பந்தமான அமெரிக்காவின் சில்லரை வர்த்தக முறையும், அவற்றை நான் பார்த்தவிதத்தையும் எழுதுகிறேன்..

அமெரிக்கா என்றாலே “பெரிசுதான்”--நாட்டின் பரப்பளவிலிருந்து, நாட்டு மக்களின் “சைஸ்” வரை..ஆம்!.குண்டு குண்டு மனிதர்கள், மனுஷிகள், குழந்தைகள்,பற்றி அமெரிக்க சுகாதார துறையும் அதிபர் ஓபாமாவும், மிகுந்தஃ கவலைப்படுகிறார்கள்.இங்கு “ஹார்ட் அட்டாக்” அதிகமாம்..உலகின் பல குட்டி நாடுகளுக்கு தன் ஆயுதபலம்,/ படை எடுப்பால், “ஹாட் அட்டாக்” வரவழித்த அமெரிக்காவின் இன்றைய நிலை இதுதான்..

காஃபி ஷாப்பில் காஃபி குடிக்கப்போனால், அரை லிட்டர் “மக்குதான்” அங்கு டம்பளர்..அதுமாதிரி, பழச்சாறு முதல் எந்த ஜூசானாலும் அமெரிக்கர்கள் “மொடாக்குடியர்கள்”..நான் “ஆல்கஹாலை” சொல்லவில்லை--அதுபற்றி “யாமறியோம் பராபரமே”

கார்--வீடு--வாகனங்கள் எல்லாம்.. பெரிசு போல இந்த “ஸ்டொர்ஸ்” களும் (நம்மூர் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் போன்றவை )பெரிசுதான்,,..
நம்மூரில் காலனி சைசில் உள்ள பகுதியை” நகர்” என்று நாம் கூசாமல் அழைப்போமல்லவா?--அதுபோல அவ்ர்களின் “கடைகள் காலனி” அளவு பெரிதாக உள்ளது..

உள்ளே போனால், “இல்லை”--”காணோம்”--”கிடைக்கவில்லை”--”வேறு கடைக்கு போகலாம்”--என சொல்லி வெளியே வரமுடியாது..அம்மா--அப்பாவைத் தவிர அனைத்தும் கிடைக்கும்..

பகுதி பகுதியாக ஒவ்வொரு பொருளையும் பிரித்து வைத்துள்ளனர்..உதாரணத்திற்கு, உணவுப் பொருட்கள், இதில் “நான் வெஜ்ஜும்” அடங்கும்..இதற்காக பிரத்யேகமான பெரிய “உள் அரங்கமே” இருக்கிறது..ஊழியர்கள் கைய்யுறை. காலுறை. தலையுறை. அணிந்து ஆரோக்கியமாக “வெட்டி சாய்க்கிறார்கள்”

வீட்டு உபயோக பொருட்கள், தோட்ட பாராமரிப்பு பொருட்கள், செடிகள், கட்டிட தயாரிப்பு பொருட்கள், (நம்மூரில் ஹார்ட் வேர் ஸ்டோர்..இந்த ஊரில், ஹோம் டிப்போ) குழந்தைகளுக்கான பொருட்கள் என பல பகுதிகள் ஸ்டோரில் இயங்குகின்றன..

இதில் பெட்ரோல் பங்க்கும் அடங்கும்..இது பற்றி சொல்லும்போது ஒரு சுவாரசியமான விஷயம்..பெட்ரோல் பங்க்கில் “செல்ஃப் சர்வீஸ்தான்”..எல்லாமே ஆளில்லா பெட்ரோல் பங்க்க்தான்..கஸ்டமர் தன் காரை நிறுத்தி, கிரெடிட் கார்டை “ஸ்வைப்” செய்து, தானே பெட்ரோல் டாங்க் மூடியை திறந்து, பெட்ரோல் ஃபில் செய்து கொள்ள வேண்டும்..

இறுதியில் எவ்வளவு பெட்ரோல் அடித்துள்ளொமோ அதற்குத்தான் பில் வெளியே வரும் காசும் கழிக்கப்படும்..ஒரே நேரத்தில் 4,5 கார்கள் ஃபில் அப் செய்து கொள்ளலாம்..கார் நிறைந்திருந்தால் மற்றகார்கள் கியூவில் நிற்க வேண்டும்..

காஃபி ஷாப்பில் விசித்திரம்..ஒரு காஃபிக்கு பணம் கொடுத்துவிட்டு, 2, 3 முறைகூட காஃபி குடிக்கலாம்..காரணம் காஃபிக்கான பால் டிக்காஷன் தனிதனி கெட்டிலில் உள்ளது..நமக்கு நாமே தேவையானதை எடுத்துக்கொள்ளலாம்..ரொம்ப நேரம் அரட்டை அடிப்பவர்கள் 2,3 முறை காஃபி குடிக்கிறார்கள்..

பொருட்களை எடுக்க தள்ளுவண்டி வெளியே உள்ளது..நாமும் ஒரு வண்டியை எடுத்து உள்ளே போகலாம்,குழந்தைகளுடன் வருபவர்கள்-- அவர்களையும் ஒரு வண்டியில் உட்கார வைத்து விடுகிறனர்..

எல்லா ஸ்டோர்ஸிலும் கார் பார்க்கிங் பெரிதாக உள்ளது..உடல் ஊனமூற்றவர்களுக்கு வசதியாக ஸ்டோரின் அருகிலேயே இடம் ஒதுக்கியுள்ள்னர்..அது காலியாக இருந்தாலும் அவர்களைதவிர வேறு யாரும் கார் நிறுத்துவதில்லை..

பாதசாரிகளுக்கு மிகப்பெரிய மரியாதை..நடப்பவர்கள் சாலையை கடந்த பின்னரே கார்கள் கடக்கினறன..ஒருவேளை நாம் நின்றால் அவர்கள் “நம்மை கடந்து “செல்லுமாறு சைகை காட்டுகின்றனர்..

சரி! இப்போது நாம் உள்ளே சென்றூ விடுவோம்..பொருட்களை தேர்வு செய்து வண்டியை உருட்டிக்கொண்டு பில் போடுமிடம் வந்தால், (ஏராளமான் கவுண்டர்கள் உள்ளன) கியூ ஜாஸ்தி என நாம் நினைத்தால், “நாமே பே--பண்னும் செல்ஃப் பே” கவுண்டர்களும் உள்ளன..

“செல்ஃப் பே” கவுண்டர்களில் பில் போடாமல் யாராவது ”டிமிக்கி” கொடுக்க முடியாதா? என நம்மூர் காரரின் சந்தேகத்தை கேட்டேன்..

பில் போடாமல் எந்த பொருளை எப்படி “ அமுக்கிக்கொண்டு”வந்தாலும், அதிலுள்ள “பார் கோடிங்” சென்சாரால் காட்டிகொடுக்கப்பட்டு சத்தம் ஓ என்று அலருமாம்.

நான் என் மாப்பிள்ளை டாக்டர் ஆனந்திடம் கேட்டேன்..நான் இதை செக் செய்ய விரும்புகிறென்..ஸ்டோர்சில் அனுமதி கேட்டு பரிசோதிப்போமா? என்றேன்..

டாக்டர்.ஆனந்த் மிகவும் நேர்மையான சட்டதிற்கு பணிந்த இளைஞர்..”அங்கிள் நான் காரில் வேளியே இருக்கிறேன்..சைரன் அலறினால் காரை எடுத்துக்கொண்டு நான் “எஸ்கேப்”--இந்தியா போல இங்கே எந்த செல்வாக்கும் போலீசிடம் செல்லாது 

தயவுசெய்து இப்படி பரிசொதனை செய்து என்னை சங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்”--. என்றார்.நானும் மாப்பிள்ளையின் “அட்வைசை” படி மனதை மாற்றிக்கொண்டேன். 

சரி வாங்கிய பொருட்களில் ஏதாவது தரம் குறைவாக இருந்தால் அதற்கு என்ன தீர்வு?--எடுத்த பொருளை 15 நாட்களுக்குள் பில்லுடன் கொண்டுவந்து கொடுத்தால், அது எவ்வளவு உபயோகித்திருந்தாலும், பாக்கிங் முழுதும் திரந்திருந்தாலும், முழுப்பணத்தையும் கொடுத்து விடுகிறார்கள்..

துணிமணிகளுக்கும் வீட்டு உபயோக பொருட்களுக்கும் இது பொருந்தும்..சட்டையை போட்டு வாஷ் செய்திருந்தாலும், குக்கரை 5 முறை சாதம் வடித்திருந்தாலும், முகம் சுளிக்காமல் திரும்ப எடுத்துக்கொள்வார்களாம்..

திரும்ப பெறுவதற்காகவே எல்லா ஸ்டோர்சிலும் தனி கவுண்டர்கள் உள்ளன..

ஒவ்வொரு பொருளையும் பற்றிய கஸ்டமரின் கருத்துக்கள், ”ரேட்டிங்க்”-- நெட்டில் வெளியாகிறது.இதில் ”சேவை-- தரம் குறைவு” என்று எந்த கஸ்டமராவது கருத்து சொன்னால் அப்பொருளின் ரேட்டிங் குறைந்து விடும்...இதனால் அப்பொருளின் விற்பனை குறைந்துவிடுகிறது...காரணம் இவ்வூர் மக்கள் “ரேட்டிங்கை” பார்த்தே பொருட்களை வாங்க முடிவு செய்கிறார்கள்...

சரி இப்பொருட்களை விற்பனை செய்யும் அமெரிக்காவிலுள்ள பிரம்மாண்டமான ஸ்டோர்ஸ்களை  பார்ப்போம்..இதை நான் எழுதுவதற்கு காரணம் இவை போல இந்தியாவில் கிடையாது என்பதாலேயே

1.காஸ்கோ (COSTCO)---இது ஹோல்சேல் வணிகம்--எது எடுத்தாலும் முழு பேக் மட்டுமே..அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளில் 1000 த்துக்கும் அதிகமான கிளைகள்..94 பில்லியன் டாலர் ஆண்டு வர்த்தகம்..

2..குரோகர் (CROGER)---அமெரிக்காவின் 31 மாகாணங்களில் 2400 கிளைகள்..ஆண்டு வர்த்தகம் 64 பிலியன் டாலர்

3..ஹைச்.ஈ.பி.(H.E.B.)..இது டெக்சாஸ் மாகாணத்தில் மட்டும் 150 கிளைகளுடன் உள்ள ஸ்டோர்ஸ்..

4.ஹோம் டிப்போ..(HOME DEPOT)---ஊசிமுதல் ரயில் என்ஜின் வரையான வீடுகட்டும் அனைத்து பொருட்களும் கிடைக்கும் அற்புதமான ஸ்டோர்ஸ்..அமெரிக்கா சீனா, கனடா உள்ளிட்ட நாடுகளில் நூற்றுக்கணக்கான் கிளைகள்.

5..டாய்ஸ் ஆர்.அஸ் ( TOYS R US )--உயிருள்ள குழந்தையை தவிர குழந்தைகளுக்கான அனைத்துப்பொருட்களும் கிடைக்கும் உலகம்.முழுதும்.35 நாடுகளில் 1887 கிளைகள் 70,000 ஊழியர்கள்..

6..வால்மார்ட்( WALLMART)--உலக சில்லரை வியாபாரிகளின் வில்லன்..அமெரிக்க “ஸ்டோர்ஸ்களே” பயப்படும் எமன்..பயங்கரமான நெட் வொர்க்--கிடைக்காத பொருட்களே இல்லை உலகம் முழுதும், 27 நாடுகளில் 11,000 கிளைகள்..22 லட்சம் ஊழியர்கள்..

இவை அனைத்திலுமுள்ள சிறப்பம்சம்--எட்டாவது “ரோ” நாலாவது வரிசை மூன்றாவது ஷெல்ஃபில் “ஹமாம் சோப்” இருக்கும் என்றால் எல்லா ஊர்கிளைகளிலும் அதே இடத்தில் இருக்கும்..கஸ்டமர்கள் தேட வேண்டாம்.

நாம் இவற்றிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது ஏதாவது உள்ளதா?.

ஆம்..தரம் கஸ்டமர்--சேவை--குறைந்தபட்ச கடை பராமரிப்பு மற்றும் வியாபார ஒழுக்கம்..

நம் கடைகளை 3 வகையாக பிரிக்கலாம்..
1.பெட்டிக்கடை..2..அண்ணாச்சி கடை--அதாவது நடுத்தரம்--3..டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்.

எந்தக் கடையாயினும் தரம் சேவை--வியாபார ஒழுக்கம் இவற்றில் “நோ காம்ப்ரமைஸ்”---பராமரிப்பை உயர்த்தி கடையை அழகு படுத்துவது வியாபாரத்தை ஈர்க்கும்..நமக்கு மதிப்பை தரும்.நம் கடைக்காரர்கள் இதை செய்யலாமே?.

நல்லவை எங்கிருந்தாலும் எடுத்துக்கொள்ளலாமே..என்ன சரிதானே?

No comments: