Pages

Friday, September 26, 2014

பிலாவலின் பேச்சு--மிரட்டலா?--"சும்மாவா?"



அரசியலில் அம்மாவும் பாட்டியும் கொள்ளு தாத்தாவும் பதவி சுகம் கண்டார்கள் என்பதால் பேரனும் “பவிஷாக பதவியை” அனுபவிக்க போட்டி போடுவது இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தனிலும் உள்ளது. 

தாத்தா ஜீல்பிகர் அலி பூட்டோ, யாஹயாகானுடன் சேர்ந்து கொண்டு காஷ்மீரை பிரிக்க முயற்ச்சி செய்து கிழக்கு பாகிஸ்தானாக இருந்த கிழக்கு வங்கத்தை (வங்காள தேசம்)  1971-ல் இழந்தார்கள்.

அம்மா பெனசீர் பூட்டோவும், அப்பா சர்தாரியும், பதவி அனுபவித்த்தோடு முடித்துக் கொண்டார்கள். சண்டை போட அவர்களுக்கு நேரமில்லை! ஆம்! அவர்களது பதவியை காப்பாற்றிக் கொள்ளவே நேரம் போதவில்லை!

இன்னிலையில் தான் பெனசீர் பூட்டோ-சர்தாரி தம்பதியரின் அன்பு மகனும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான “பிலாவல் பூட்டோ” என்கிற 24 வயது “வாரிசு ” இந்தியாவிற்கு எச்சரிக்கை விட்டிருக்கிறது !

ஆம்! பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் “முல்த்தான்” பகுதியில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய “பிலாவல்” “காஷ்மீரின் ஒவ்வொரு அங்குலத்தையும்” இந்தியாவிடம் இருந்து மீட்பேன் என வீராவேசமாக பேசியுள்ளார்.

பிலாவின் இந்த பேச்சுக்கு இரண்டு காரணம் உள்ளது. (1) அவர் பேசிய “முல்த்தான்” - தாலிபன்களின் ஆதிக்கத்தில் உள்ள பகுதி! அங்கு ஆவேச பேச்சுக்களே எடுபடும் (2) நவாஸ் செரீப்பின் கட்சிக்கு மாற்றாக இப்போது இம்ரான்கானின்  கட்சியே வேகமாக வளர்ந்து வருகிறது. இம்முறை தேர்தலில் PPP மரண அடி வாங்கியுள்ளது. எனவே கட்சியை தூக்கி நிறுத்த ஒரு அசத்தலான, ஆர்ப்பாட்டமான புல்லரிக்கும் பேச்சு தேவைப்பட்டது. அதன் விளைவே இந்த ஆக்ரோஷம்!

இரண்டாவது பாகிஸ்தானில், இந்தியாவை பற்றி 14 சதவீதம் மக்களே நடு நிலை கருத்துக்களை  கொண்டுள்ளனர். 53 சத மக்கள்  இந்திய எதிர்ப்பு கொள்கையே கொண்டவராக உள்ளனர். பாக் ராணுவமும் ISI-யும் தாலிபான்களும் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டில்தான் உள்ளனர்.

யார் ஆட்சிக்கு வந்தாலும், எவ்வளவு மெஜாரிட்டியுடன் வந்தாலும், பாகிஸ்தானில் ராணுவம் வைத்தது தான் சட்டம் இதை மீற பாக், கோர்ட், பார்லிமெண்ட் மற்றும் அரசால் ஒன்றும் செய்ய முடியாது. பிலாவலின் தாத்தா பூட்டோவை தூக்கில் போட்டவர், நவாப் ஷெரிப்பை   பர்வேஷ் முஷ்ரப்...ன்கிற  ராணுவ தளபதி நாடு கடத்தினார்.

இப்படி உள்ள நாட்டில், இந்திய எதிர்ப்பு கருத்தை பேசினாலேயே “பிழைக்க முடியும்” என்று பிலாவல் கருதியதால் வந்த விளைவு தான் காஷ்மீர் பேச்சு.

அது மட்டுமல்ல காஷ்மீரை துண்டாட வேண்டும் என்கிற, காஷ்மீருக்குள் உள்ள யாசின் மாலிக், கிலாணி போன்ற தேச விரோத சக்திகள், பாகிஸ்தானுடன் நேரடி தொடர்பில்  உள்ளது. காந்தஹார் விமானகடத்தல், மும்பை குண்டு வெடிப்புக்கு மூளையாக இருந்த ரசூல் மசூத்தை பாகிஸ்தனில் அடிக்கடி இவர்கள் சந்திக்கின்ற்னர். மும்பை குண்டு வெடிப்பில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அஜ்மல் கசாப்பின் முதலாமாண்டு நினைவு அஞ்சலியில் பாகிஸ்தானில் யாசின் மாலிக் கலந்து கொண்டார்.

இது மாதிரி இந்தியாவை “சீண்டும்” பல விஷயங்களை இந்த தீவிரவாதிகள் செய்து வருகின்றனர். பிலாவலின் இந்த “காஷ்மீரை கைபற்றும்” பேச்சு தனி காஷ்மீர் கேட்கும் பிரிவினைவாதிகளுக்கு ஒரு டானிக் தான் இதனால் அவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகமாக “மார் தட்ட முடியும்”

இந்த இரண்டு கருத்து தவிர மூன்றாவது ஒரு கருத்தும் பரவலாக பேசப்படுகிறது!

பிலாவலுக்கு அரசியல் முதிர்ச்சி கிடையது அவர் ஒரு “பிளே பாய்” அதனால்தான் தன்னை விட 20 வயது மூத்த மூன்று குழந்தைகளுக்கு தாயான முன்னாள் வெளியுறவு மந்திரி திருமதி  ரப்பானியுடன் தகாத உறவு வைத்திருந்தார் என்பது மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

புதிய அரசு தன்னை கைது செய்து விடுமோ என்ற அச்சத்தில் அதிகமாக துபாயிலும், லண்டனிலும் வசித்து வருகிறார் பிலாவல்.

பிலாவல் பாகிஸ்தானின் “ராகுல் காந்தி” --எந்த ”கமிட் மொண்டும்;” கிடையாது --ராகுலின் கொள்ளுத்தாத்தா, பாட்டி, அப்பா  பிரதம மந்திரியாக இருந்தது போல, பிலாவலின் தாத்தா, அம்மா, அப்பா, பிரதமர் மற்றும் ஜனாதிபதியாக இருந்துள்ளனர் வருகின்ற 2017 தேர்தலில் போட்டி பிரதமர் ஆவேன் என்கிறார்.பிலாவல் பூட்டோ 

இப்படி பட்ட பாரம்பரியத்தில் வந்த பிலாவனின் பேச்சை சாதாரண பேச்சு என்று “ஒதுக்கித்தள்ள முடியாது”

சரி! "காஷ்மீரின்  ஒரு அங்குலத்தை கூட விட்டுத்தர மாட்டேன்"-- என்று சொல்லும் பிலாவலின் “ஸ்டேட்மொண்ட்” எவ்வளவு வீரியம்  இருக்கிறது? காஷ்மீர் பாகிஸ்தானுக்குத்தான் சொந்தமா? காஷ்மீர் பிரிவினைவாதிகள் தவிர நடுலை காஷ்மீர் மக்கள் என்ன விரும்புகிறார்கள்? என்ற கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில்!

முதலில் ஒரு சிறிய “பிளாஷ் பேக்”கிற்கு போவோம்! தொடர்ந்து எத்தனையோ “கருத்தரங்களிலும் களிலும் பல்வேறு புத்தக்ங்களிலும், " காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கமுடியாத ஒரு பகுதி "--என்றாலும் மீண்டும் இதை  மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி என்பதற்கு சுருக்கமாக மூன்றே மூன்று ‘பாயிண்டுகள் மட்டும்” வைக்கிறேன்.

1. 1947 - ல் இந்திய - பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றபோது, இந்த இரண்டு நாடுகளிடமும் சேராமல் தனியாக “ஒதுங்கி நின்றது” காஷ்மீர் --பாகிஸ்தான் நேரடியாகவும், பழங்குடியினரை தூண்டிவிட்டும்  , காஷ்மீரை கொள்ளையடிக்க வைத்தும் --- மறைமுகமாகவும்-- காஷ்மீர் மீது படையெடுத்தது.

ராஜா ஹரிசிங், பிரதமர் நேருவுக்கு ஓலை அனுப்பி, ”இந்தியாவுடன் இணைவதாக” கையொப்பமிட்டு உறுதி மொழி பத்திரம் அனுப்பினார்-- இது சாட்சி ஒன்று

கலகம் ஓய்ந்த பிறகு  “வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” என்ற கோரிக்கைக்கு பதிலாக காஷ்மீருக்கு “சிறப்பு அந்தஸ்த்து Article 370 மூலம் கொடுக்கப்பட்டு ஷேக் அப்துல்லா பிரதமரானார் எனவே “வாக்கெடுப்பு மறக்கப்பட்டது---” Article 370ன் ஒரு அம்சமே ARTICLE 1 ன்   பகுதியான “இந்திய யூனியனின் ஒரு மாநிலமான காஷ்மீருக்கு” என்று தான் தொடங்குகிறது. எனவே காஷ்மீர் இந்தியாவின் பகுதிதான் இது சாட்சி 2.

1952 முதல் 2014 வரை சட்ட சபை /பாராளுமன்ற தேர்தலில் காஷ்மீர் மக்கள் பெருமளவில் கலந்து வாக்களித்ததன் மூலம் அங்கு “வாக்கெடுப்பு” வேண்டாம் என்பதும் , காஷ்மீர் இந்தியாவின் பகுதிதான் என்பதும்  புலனாகிறது.

ஆக இந்தியவிற்குள், இந்திய மண்ணை தின்று பொன்னை அணிந்துவரும், சில தேச விரோதிகள், காஷ்மீர் பிரிவனைவாதிகளுடன் சேர்ந்து கொண்டு, காஷ்மீர் பிரிவினைக்கு ஆதரவாக பேசும் எந்த பேச்சுக்கும் துரும்பளவு கூட ஆதாரமில்லை என்பதை உணர வேண்டும்.

இதற்கெல்லாம் முன்பாகவே, சட்டமேதை, அம்பேத்கர்  ARTICLE 370-ஐ எதிர்த்தார் அவரோடு சேர்ந்து அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர் ”மெனலானா ஹஸ்ரத் மொகானியும்” எதிர்த்தனர். ஜனசங்கத்தின் ஸ்தாபகர் டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி, காஷ்மீரில் சிறையில் அடைக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதற்கெல்லாம் மேலாக, புதிய பிரதமர் 370 காஷ்மீரின் வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.!
காஷ்மீரில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்படவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. சமூக நீதியாளர்கள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்!


காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவின் சகோதரி, காங்கிரஸ் எம்.பி. சச்சின் பைலட்டை திருமணம் செய்து கொண்டதால் தனது சொத்துரிமையை இழந்தார்! 

ஆக திருமணமாகி வெளி மாநிலத்திற்கு செல்லும் பெண்கள் சொத்துரிமை இழக்கிறார்கள். இதற்கு “பெண்ணுரிமைவாதிகள்” என்ன தீர்வு சொல்லப்போகிறர்கள்!

டெல்லி" நிர்பயா" “பாலியல் கொலைக்கு பிறகு “பாலியல் வன் கொடுமை சட்டம் ” திருத்தப்பட்டுள்ளது. இது காஷ்மீரத்தில் செல்லுபடி  ஆகாது. இதனால் “ரேப்” கேசில் குற்றம் புரிந்த காஷ்மீர் மந்திரி ஒருவர் மீது வழக்கு தொடர முடியவில்லை! இதற்கு சமூக சிந்தனையாளர்கள் என்ன கூறப் போகிறார்கள்.

ஆக காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என்று ஆன பின்பும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக சிலர் குரல் எழுப்புகிறார்க்ளே! அவர்களை எந்த சட்டத்தில் தண்டிப்பது ?

இவ்வளவும் 370 ஐ நீக்கச் சொல்பவர்கள் உண்மையிலேயே காஷ்மீர் மக்களுக்கு நன்மை செய்பவர்கள் தானா?

பிலாவல் பூட்டோவின் “சிறுபிள்ளைத்தனமான” காஷ்மீர் பற்றிய பேச்சு “பெரிய மனிதத்தனமாக” நாம்  காஷ்மீரைப் பற்றி விரிவாக சிந்திக்க சந்தர்ப்பம் கொடுத்தது என்பது கெட்ட விஷயத்தி லும் ஒரு நல்ல செய்தியாகும்.

No comments: