Pages

Tuesday, July 17, 2012

டெசொ..பிசுபிசுத்த கதை

கிராமத்தில் யாரவது இறந்து போனால்..விட்டுக்கு துக்கம் கேட்க வருவோரெல்லாம்,  “ ஒப்பாரியில் “ கலந்து கொண்டு ஓலவமிடுவர்.
ஊருக்குள் வரும் வழிப்போக்கனும்..அந்த முகம்  தெரியாத இறந்தவருக்கு “ஒப்பாரி ‘ இடுவதை திரைப்படங்களில் கூட பார்த்திருக்கிறோம்.
கருணா நிதி ஈழத்தமிழருக்காக இடும் ஒப்பாரியும் இந்த வகையை சேர்ந்ததுதான்.

2009 ஜூலை 1ந்தேதி..(ஆதாரம் ..டைம்ஸ் ஆஃப் இந்தியா)தமிழ்நாடு சட்டமன்றத்தில் கருணாநிதி ஒலித்த ஒப்பாரியின் வடிவம் இதுதான்..
“தமிழ் ஈழம் சாத்தியமில்லை..சிங்களரை எதிர்த்து பேசாமல்..அவர்கள் கோபத்தை தூண்டாமல்,…அவர்களோடு இணக்கமாக வாழ தமிழர்கள், கற்றுக்கொள்ள வேண்டும்..உங்கள் உரிமைகளுக்காக போராடுங்கள்.””

இப்படி அடக்கி வாசித்த கருணாநிதி ,,ஆட்சியை இழந்துவிட்டால் ஒலிக்கும் ஒப்பாரியின் சத்தமே வித்தியாசமாக இருக்கும்,,.
ஏப்ரல் 20ந்தேதி..தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்புக்கூட்டம்…
ஜூன் 3ந்தேதி “டேசோ” மாநாடு அறிவிப்பு
ஜூலை 16ந்தேதி தமிழ் ஈழ அறிவிப்பை இழுத்து மூடி…வெறும் “இலங்கை தமிழர்களுக்கு அதிக உரிமைக்கான  அறைகூவல்”  மாநாடாக மாற்றம்

இப்படியாக கருணாநிதியின்  “தமிழ் ஈழ பரிணாம வளர்ச்சி….தமிழ் ஈழ பரிணாம வீழ்ச்சியாக”” மாற என்ன காரணம் என்பதை பார்ப்போமா?

இலங்கைக்கு சமீபத்தில் சென்று வந்து…அங்குள்ள தமிழர்களுக்கு அதிக உரிமை தரவேண்டுமென கோரிய..பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறியது போல,,,இலங்கையிலுள்ள தமிழ் தேசிய கூட்டணி கூட ( I.N.A.)தனி நாடு கோரவில்லை..மாறாக அதிக உரிமை ..ஆட்சியில் பங்கு…என்பன அவர்கள் கோரிக்கைகளில் சில…

தமிழ் ஈழத்திற்கு “வாய்ஸ் “ கொடுக்கும் வைக்கோவும் நெடுமாறனும் கூட கருணாநிதியின் டெசோ வில் கலந்து கொள்ள தயாரில்லை..

மத்தியில் ஆட்சியில் பங்குள்ள கருனாநிதி…தடை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தவரை..மாநாட்டுக்கு அழைப்பதை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது..அதன் ரகசிய தூதுதான்..”ப.சிதம்பரம்…சிதம்பரம் ரகசியமாக கருணாநிதியை “ சந்தித்தது..

கருனாநிதியின் தமிழீழ ஆதரவை விட “ஜெ”வின் இலங்கை தமிழர் ஆதரவு செயல்பாடுகள்…தமிழ் மக்களிடையே வரவேற்பை பெற்று வருவதால், சோர்ந்து போன கருணாநிதி…”டெசோ “ விற்கு மூடுவிழா நடத்த முடிவு செய்து..”வெறும் ஈழத்தமிழர் இழந்த உரிமை மீட்பு” குரலோடு மாநாடு கூடிக்கலையும் கூட்டமாக மாற்ற இருக்கிறார்..

திமுக ஆட்சியின் போது இலங்கை தமிழர்களுக்காக நடத்தப்பட்ட ஆதரவு பேரணிகள்,,மனித சங்கிலிகள்…பொதுக்கூட்டங்கள்…மாநாடுகள்…இவற்றிக்காக செய்யப்பட்ட செலவுத்தொகையை…இலங்கையிலுள்ள தமிழர்களின் நல்வாழ்வு நிதிக்கு அனுப்பியிருந்தால்…அவர்கள் இன்று “வீடு வாசலுடன் “ மூன்று வேளையும் சாப்பிடும் நிலை ஏற்பட்டிருக்கும்.

மாறாக “ஜெ” ஆட்சியில்..அகதிமுகாம் களில் வாடும் இலங்கை தமிழர்களுக்கு ஒதிக்கிய நிதியால்,,அவர்களின் அல்லல்கள் பெரும்பாலும் களையப்பட்டு வருகிரது..

பெருகி வரும் மின்தட்டுப்பாடு..விலைவாசி உயர்வு..வேலையின்மை…இவைகளை எதிர்த்து போரிட்டு வரும் தமிழ் நாட்டு மக்களுக்கு..வழிகாட்டவேண்டிய கருணாநிதி..தமிழீழ பூச்சாண்டி காட்டுவதை தமிழ்நாட்டு மக்கள் ரசிக்கவில்லை..

ராஜபக்‌ஷே மீது கருணாநிதியின் கூட்டாளிகள், சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும்,  தங்களது வலுவான கரங்களை பதித்திருந்தால்,,ராஜபக்‌ஷெ தமிழர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியிருக்க முடியாது..

கருணாநிதியின் கூட்டாளி காங்கிரஸின் தவறான கொள்கையால்,,விளைந்த ஈழத்தமிழர்களின் அவலநிலையை மாற்றும் உயரிய நோக்கில் “டேசொ” மாநாடு கூட்டப்படவில்லை.

ஆதாயம் இல்லாமல் கருனாநிதி “ஆத்தோடு “ போக மாட்டார்..என்றாலும்….

இம்முறை “கூட்டல் “ பலன் தராது….கூடுதல் பலம் பெறாது..

இம்முறை கருணாநிதிக்கு ஆதாயம் ….”கழித்தல்தான்”…காங்கிரஸில் இருந்து ”கழிதல்தான்”…பாவம்..

2 comments:

sakthi said...

10 நிமிசத்துல உண்ணாவிரதம் இருந்து இலங்கை போர் நிறுத்தம் செய்தவர்தானே அண்ணன் .அப்போ இல்லாத ஞானோதயம் இப்போ எங்க இருந்து வந்தது .குழந்தைகளை மனிதர்களை இரக்கம் இல்லாமல் கொன்றார்களே அப்போ எங்க போச்சு தமிழ் ஈழம் பற்றிய அறிவிப்பு .ஹ்ஹும் மனிதனை விட பதவியும் ,பணமுமே முக்கியம் .!!!

மனசாட்சி™ said...

அட போங்க சார் எனக்கு வடிவேலு காமடி (ஏ... நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான்) நினைவுக்கு வந்துருச்சி உங்க பதிவை படித்ததும்.....