Pages

Sunday, July 1, 2012

கிருமியை ஒழிக்க கிருமிநாசினியை ஒழிப்போம்..

ஆல்கஹால்
ஒரு வேதியியல் பொருள்..ஒரு சமுதாயத்தை..ஒரு நாட்டை..படுத்துகின்ற பாட்டை பார்த்தீர்களா?

சிற்றூர்களையெல்லாம் என் கார் கடக்கின்ற போது, சிறைக்கூண்டுக்குள் அடைந்து கிடக்கும் ஒருவரிடம்…நூற்றுக்கணக்கானவர்கள்” ”பாட்டில்” வாங்க முண்டியடிக்கும்..காட்சியை காணத்தவறியதில்லை.

1971 வரை கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகள் ..”தண்ணியை” தொட்டுப்பார்க்கமல் இருந்த தமிழ்நாட்டின் சரித்திரத்தை ..மாற்றியமைத்த புண்ணியம் கருணாநிதிக்கே போய்ச் சேரும்.

காலையில் பணிவாக பேசும் என் டிரைவர்  மாலை 6 மணிக்குமேல் போன் எடுத்தால்,,பேசும் அரசியலும் சித்தாந்தமும் ..உதிர்க்கும் பொன் மொழிகளும் ..அப்பப்பா..அவன் பேசவில்லை..அவன் ”உள்ளே  இரக்கிய சரக்கு”. பேச வைக்கிறது.திரப்படம் ஒன்றி வடிவேலுவின் காலையில் நல்லவன்..மாலையில் குடிகாரன் பாத்திரம் ..இவனைப்போன்றவர்களை பார்த்துத்தான் சித்தரிக்கப்பட்டதோ..

இந்த போதை தரும் வஸ்துவின் பெயர்தான் ஆல்கஹால்..வேதியியலில் இதை ரத்தின சுருக்கமாக எத்தனால் அல்லது எதில் (C2H5OH) ஆல்கஹால்  என்பர்..இது கரும்பு சர்க்கரை கழிவு “மொலாசசில்” இருந்து தயாரிக்கப்படுகிறது..

தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமுலில் இருந்த காலகட்டத்தில், பட்டை சாராயம் என்னும் உள்ளூர் சரக்குக்கள் பேட்டரிகள் ஊரவைத்த நொதித்தலில் இருந்து தயாரிக்கப்பட்டது.

இயற்கை மது அல்லது தென்னம் பால் அல்லது பனம்பால் எனப்படும் “கள்ளும் “ குடித்தவர்களை  ஜொள்ளு விட வைப்பதும் உண்டு..
நான் மும்பைக்கு பயிற்சிக்குப்போன 1985 ஆம் ஆண்டு “பாங்” என்ற “தத்தூரா” என்ற நம்மூர் ஊமத்தை விதையை அரைத்த பாலை என் தம்பி வாங்கிக்கொடுக்க ..நான் குடித்துப்பட்ட அவஸ்தை பத்து பக்கம் எழுதலாம்.

சட்டம் படித்த போது “தத்தூரா பாய்சனிங் “ என்னும் “ரெஃபெரென்ஸ்” கொலை வழக்குகள் நினைவுக்கு வந்ததால், “ பாங் “ ..கிக் ஏற்றுவதற்கு பதிலாக பயத்தைதான் ஏற்றியதுதான் மிச்சம்.

ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் “ஒரு செயின் “ மாற்றிப்போட்டால் வேறு ஒரு பொருள் ஆகிவிடும்..
அப்படி எத்தில் ஆல்கஹாலில் இருந்து சிறிது வேறு பட்டதுதான் மெதில் ஆல்கஹால் (CH3OH).இதற்கு “வுட் ஆல்கஹால் “ என்ற பெயரும் உண்டு.ஆனால் சிறிய மாற்றம் என்றாலும் குணத்தில் மிகப்பெரிய மாற்றம் உண்டு.

ஆம் இது கொடிய விஷமாகும்.பத்து மிலி குடித்தாலே கண் போய்விடும்..30 மிலி குடித்தால் உயிர் போய்விடும்..இந்த வுட் ஆல்கஹாலை குடித்தால் நம்மை “கட்டையிலே “ போக வைத்துவிடும்.

ஆனால் எதில் ஆல்கஹால் ஒரு “ஃபுல்” அடித்தாலும் “ஸ்ட்ரைட்டாக “ நிற்கலாமாம் ...

பத்தாம் நூற்றாண்டில் பெரிஷியாவிலிருந்து ஒரு வேதியியல் விஞ்ஞானி “அல்-ரியாஸ்” தான் குடிமகன்களுக்கு “கொள்ளுத்தாத்தா “ ஆவார்..அவர் கண்டுபிடித்த எதில் ஆல்கஹால்தான் இன்றைய சரக்கிற்கு மூல முதற்பொருள்..முழுப்பொருள்..

அராபிய மொழியில் அல் என்றால் ”பொருள்”..குஹுல் என்றால் கண்ணுக்கான “மை” என்று பொருள்.இன்று அந்த “மை” அதை குடிப்பவர்களை கண்ணை மூட வைத்து மண்ணுக்குள்ளே அனுப்பி வருகிறது.

தண்ணீர் எப்படி எல்லா பொருட்களையும் கரைக்கும் திரவமாக பயன் படுகிறதோ அது போல,தண்ணீருக்கு அடுத்த “கரைப்பான் “ ஆல்கஹால்தான்.

அது மட்டுமல்ல ஆல்கஹால் தண்ணிரில் சிறப்பாக கரையும் என்பதும், அதை அருந்தியவர்களையும் கரைத்து, அவர்களது அஸ்தியை ஆற்றில் கரைக்க வைத்து விடும் என்பதும்,நாம் பார்க்கின்ற உண்மைகள்.

மதுவில் போட்ட பூச்சி மாண்டு போவதாகவும், மது குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சி மாண்டு போகும் எனவும் ஒரு ஜோக் சொல்லப்படுவதுண்டு.உண்மையில் ஆல்கஹால் ஒரு சிறந்த “கிருமிநாசினி”..பல புகழ்பெற்ற கிருமிநாசினி தயாரிப்புகளில் ஆல்கஹால் பெரும் பங்கு வகிக்கிறது.

குடியும் குடிகாரனும் சமூகத்தின் கிருமி..இந்த கிருமிகளை உருவாக்குவதே இந்த “கிருமிநாசினிதான்”கிருமியை உருவாக்கும் ஒரே கிருமிநாசினி ஆல்கஹால்தான்..
கிருமியை ஒழிக்க கிருமிநாசினியை ஒழிப்போம்..

1 comment:

sakthi said...

அசத்தலான வேதியியல் விளக்கங்கள் அண்ணா ,
" குடி குடியை கெடுக்கும் "
எல்லோரும் தெருஞ்சு தான் குடிக்கிறாங்க அண்ணா !
நம் நாடு எங்கே செல்கிறது !
அரசுக்கு பணம் கிடைகிறது என்பதற்காக போதை என்ற வஸ்துவால் கொலை செய்வது போலாகாதா ?
குடியால் எத்தனை குடும்பம் சீரழிகிறது !
யாயாயாயாயார்ரர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர் தடுப்பார் ??????????????

ஆதங்கத்துடன் ,
கோவை சக்தி