Pages

Saturday, June 18, 2016

பா.ஜ.க.--வார் ரூம் ரகசியம்-2

தேர்தலை சந்திக்க போடப்பட்ட 38 துறைகளில் மீடியா ஒரு துறை. ஆனால் 38ல் இரண்டு துறைகள் தவிர மற்ற அனைத்து துறைகளின் பணிகளும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பே நிறைவு பெற்று விடுகிறது.

கடைசி 25 நாள் தேர்தல் பணியின் களப்போர் யுத்திகள் ஆயுதங்கள் மீடியா துறை கையிலே இருக்கிறது. மற்றொன்று டூர்ஸ் அண்டு டிராவல்ஸ். இது தலைவர்களின் சுற்றுப் பயணத்தை முழுவதுமாக நிர்வகிக்கிறது.

மாநிலம் முழுவதும் தினசரி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவது அதற்கு தலைவர்களுக்கு தாக்குதல்களைக் கொடுக்கும் குறிப்புகளை எழுதித் தருவது  மீடியாவின் ஒரு பணி.

அதிமுக திமுக இரண்டு கட்சிகளையும் சமதூரத்தில் வைப்பது என்று முடிவுசெய்து தாக்குதலை தொடங்கினோம். அதிமுகவிற்கு மாற்று திமுக இல்லை என்றுதான் தாக்குதலில் மையக்கரு. ஆனால் இதன் பலன் முழுதும் அதிமுகவிற்கு போய்விடும் என்ற அச்சம் ஏற்பட்டவுடன் அதிமுக மீதும் தாக்குதலை நேரடியாக தொடங்கினோம்.

முதலில் ஃபேஸ் புக் அடுத்து பிரஸ் மீட். இதோடு மேடைகளிலும் என தாக்குதல் தொடர்ந்தது. அதிமுக ஆடிப் போனது. ஆனாலும் ரியாக்ட் பண்ணவில்லை. குறிப்பாக நான் தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக மீது தொடுத்த அதிரடி நேரடி தாக்குதல்களுக்கு சி.ஆர். சரஸ்வதியும் ஆவடி குமாரும்  எதிர்வினை புரியாமல் வாய்மூடி மௌனியாக இருந்தார். அதிமுகவின் இந்த யுக்தி அதற்கு தேர்தலில் பலன் கொடுத்தது. பாஜக ஆதரவு ஓட்டு அதிமுக பக்கம் சாய்ந்தது.

மத்திய அமைச்சர் ப்யூஷ் கோயலின் அம்மா நாட் ரீச்சபிள்" பேச்சை மையமாக எடுத்து நான் தினமலரில் கட்டுரை எழுதினேன். ஜாவ்டேகர் தமிழ்நாடு அரசு செயல்படவில்லை என்றார். தலைப்பு செய்திகளாக மாறியது. ஏப்ரல் 22ம் தேதிக்கு பிறகு நம்மை 5வது இடத்துக்குத் தள்ளி செய்தி இருட்டடிப்பு செய்த மீடியா இந்த ரக பேச்சுகளுக்கு பின் முன்னணிக்கு நம்மை கொண்டு வந்தது.

மே 3ம் தேதி முதல் 16ம் தேதி வரை 3 பகுதிகளாக பேப்பர் விளம்பரங்களை உருவாக்கினோம். தமிழகத்தின் இன்றைய நிலைக்கு காரணம் திராவிட கட்சிகளின் ஆட்சி. இதற்கு தீர்வு பாஜகவே! ஒரு ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழல் அல்ல!
மாற்றத்துக்கான தேடல் இன்றுடன் முடிவடைந்தது. பாஜகவே தீர்வு என்பது கடைசிநாள் விளம்பரம் என்ற வரிசையில் விளம்பரங்களை உருவாக்கினோம்.

திமுக அதிமுகவிடம் சரக்கே இல்லாமல் விளம்பரங்கள் - தனி மனித தாக்குதல்கள் - அந்த விளம்பரங்கள் வாந்தி எடுக்க வைத்தது.
திமுகவின் அனைத்து வேட்பாளர்கள் கையொப்பமிட்ட முதல் பக்க விளம்பரம் என்று வந்தது. வித்தியாசமாக இருக்கிறதே என பிரித்துப் பார்த்தால் தொகுதியில் தான் இருப்பேன் - லஞ்சம் வாங்க மாட்டேன் என்ற எம்.எல்.ஏவின் அடிப்படை சடமைகளையே வாக்குறுதியாக போட்ட வினோதத்தை மக்கள் விமர்சிப்பதை கேட்க முடிந்தது!

அதிமுகவின் விளம்பரங்கள் Professional ஆக இருந்தது. பாமகவுடையது குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது. மதிமுக காங்கிரஸ் வாசனுடைய விளம்பரங்கள் பொதுக்கூட்ட விளம்பரங்கள் போலிருந்தது. பாஜகவுடையது மட்டுமே Pசழகநளளழையெட ஆக நேர்மையாக அழுத்தமாக புதுமையாக இருந்தது என்ற விமர்சனங்களை கேட்க முடிந்தது. இதன் சூத்ரதாரி ராமப்ரியன். கர்நாடக தேர்தல் பணிக்குழுவின் சேர்மனாக கடந்த 10 ஆண்டுகளாக இருக்கிறார். அவர் சொன்ன கருத்துக்களை தமிழ் மண்வாசனையோடு இணைத்தேன். எனக்கு உதவியாக கரிகாலனும் இருந்தார்.

நாம் விநியோகிக்கும் நோட்டீசை பொதுமக்கள் வீசி எறியாமல் கட்டாயம் பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு சரக்கும் நடையும் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் நோட்டீஸ் தயாரிக்க முடிவு செய்தோம். 3½ நிமிட நோட்டீஸ் தம்பி ராணாவும் பிரதமரின் வேண்டுகோளை நானும் சாதனைகளை கரிகாலனும் தயார் செய்தோம். ஒரு இளம் டிசைனர் கார்த்தியை ராமப்ரியன் கண்டு பிடித்தார். அனைவரும் உட்கார்ந்து தங்கத்துக்கு பாலிஷ் போடுவது போல தேய்த்துத் தேய்த்து டிசைனை உருவாக்கினோம். இதே போல 30 வாசகங்கள் அடங்கிய 300 ஹோர்டிங் தயாரித்து தமிழ்நாடு முழுதும் கட்டினோம். எந்த அரசியல் கட்சியும் செய்யாத முயற்சியை பாஜக மட்டுமே செய்தது.

இந்த நேரத்தில் அகில இந்திய இணை அமைப்புப் பொதுச் செயலாளர் சந்தோஷ்ஜியை நினைவு கூராவிட்டால் இந்த எழுத்துக்களுக்கு  எந்த அர்த்தமும் இருக்காது.பணி செய்ய ஊக்கம் ஆதரவு ஆனால் கண்டிப்பு திட்டங்களுக்கான பணம் Resource person பல நேரம் idea என விரைந்து முடிவெடுக்கும் அவரது திறன் ஏற்கனவே பேசியதை ஒன்றுவிடாமல் சொல்லும் ஞாபகசக்தி என ஒரு பிரமிப்பான மனிதர் அவர். அவரது வழிகாட்டுதல் தேர்தலை சரியான திசையில் விரைவாக கொண்டு சென்றது.

ராமப்ரியனுடைய Election Management-- highly professional ஆக இருந்தது. இதற்கு காரணம் சந்தோஷ்ஜி. கர்நாட்காவில் தேர்தல் பணி-- கட்சி நிதி நிர்வாகம்-- இவற்றிற்கான ஒரு மிகப் பெரும் நிரந்தர-- முழுமையான குழுவையே சந்தோஷ் ஜி உருவாக்கியிருக்கிறார். மற்ற கட்சிகளின் நிர்வாகத்தை விட இவர்கள் மிகவும் கடைந்தெடுத்த சிங்கரர்களாக இருந்தார்கள். அவர்கள் வழிகாட்டியும் நாம் ஏன் ஜெயிக்கவில்லை என்கிறீர்களா?
என்ன வழிகாட்டினாலும் execution நாம் தானே! இன்னும் ஆள் பலமும் தந்திரமும் நமக்கு தேவைப்படுகிறது.

கோவை தெற்கு, வேதாரண்யம், இரன்டு தொகுதிகளை நாம் உறுதியாக பிடித்துவிடுவோம் என நினைத்தோம். அதற்கான micro management ஐ செயல்படுத்தினோம். ஆனாலும் பெரும்பணம் கொடுத்து இரண்டு திராவிட கட்சிகளும் தங்கள் வாக்கை சிதறாமல் பார்த்துக் கொண்டது.

சென்னையில் இரண்டு தொகுதிகள் நம் ’தாக்குதல் திட்டத்தில்” இருந்தது. ’இடைவெளி அதிகமாக” இருந்ததால் ’’ஏவுகணைகள் ”இலக்கை” அடைய முடியவில்லை. கன்யாகுமரி முழுக்க முழுக்க மத அடிப்படை வாக்கு என்பதால் நமது ’தனித்துப்” போட்டிக்கு ’விடை” இவ்வளவுதான்.

தினத்தந்தியின் சிந்துபாத் கதை போல கூட்டணி பேச்சுவார்த்தைகள் எந்த முடிவும் இல்லாதபடி தொடர்ந்தபோதும்  நம் ஆதரவாளர்களே நம்மை விமர்சிக்கும் நிலை ஏற்பட்டபோதும் தைரியமாக நாம் தனியாகச் செல்வோம் என லட்சக்கணக்கான தொண்டர்களின் எண்ணத்தை பிரதிபலித்தார் கேசவ வினாயகம் ஜி.

உடனடியாக பிரசுரம் அடிக்க உத்தரவு. அரசின் Red-tapism மாதிரி அனைத்துக்கும் முட்டுக்கட்டை போடாமல் உடனடி முடிவுகள், பணியை கொடுத்து விட்டால் முழு நம்பிக்கை, அதனால் முழு சுதந்திரம், என்ற இவரது பாணியால் பல முக்கிய விஷயங்களை அலைபேசியிலேயே விவாதித்து, ஒப்புதல்கள் பெற்றோம்.

ஜிங்கில்ஸ், விளம்பரம் இவற்றின் content ஐ கொண்டு காண்பிக்கும்போதுஇ அவற்றின் மையக்கருவை உள்வாங்கி திராவிட கட்சிகளுக்கு" பஞ்ச்" கொடுக்கும் வண்ணம் மாற்றிக் கொடுத்தார் டாக்டர் தமிழிசை. இவரது விரைவான முடிவு, சுதந்திரம், மீடியா துறையின் வேகத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று.

பட்டாம் பூச்சி போல ஹெலிகாப்டர்கள் பறந்தனவே! அது நமக்கு எந்த வகையிலாவது லாபமா? டெல்லி நம்மிடம் என்ன எதிர்பார்த்தது? அதை நாம் செய்தோமா? அடுத்து பார்ப்போம்.

2 comments:

Ravindran K said...

தயவ செய்து நல்ல கருத்துக்களை குறை கூறுவதாகக் கொள்ளாதீர்கள்.நாடு ஒரு மிகப்பெரிய தலைவரை நமக்குத் தந்துள்ளது.Modiji என்ற மந்திரச் சொல்லுக்கு ஆட்பட்டவன் நான்.நன் டெல்லி தலைமையிடமிருந்து உறுப்பினர் அட்டை பெற்றவன். ஆனால் என் நண்பர்கள் பலர் தமிழகத் தலைமையிடம் missed call கொடுத்து இன்று வரை உறுப்பினர் அட்டை கிடைக்காமல் ஆர்வமின்றி உள்ளனர்.is it impossible to issue membership card sir. War room concept is very important.No vibrant start this time. Social media has been sidelined.No response to queries from top leaders. Many talented persons in social media who r strong supporters of Bjp. Nobody utilized.s.v.sekhar openly talkek against party.No action till date. Please try to respect social media volunteers also.Best of luck next time!

obamadasan said...

BJP யின் தோல்விக்கான காரணங்கள் என் பார்வையில் :
பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கிய ம ந கூ வின் சரிவே பா ஜ க வின் சரிவுக்கு காரணம்.
எப்படி?
தி மு க மற்றும் ம ந கூ வின் வாக்கு வங்கி ஒன்றே ( leftists, atheists, religious minorities, govt employees etc)
அதேபோல் அ தி மு க, பா ஜ க வாக்கு வங்கியும் ஒன்றே (rightists, hindu vote bank, linguistic minorities etc)
ம ந கூ ஒரு வேளை அவர்கள் பொது வாக்கு வங்கியில் பெருவாரியாக பெறக்கூடிய நிலை ஏர்பட்டிருந்தால் பா ஜ க வினர் தாமரைக்கு வாக்களித்து இருப்பார்கள்.
ஆனால் ம ந கூ வின் சரிவு தி மு க விற்கு வலு சேர்த்ததினால் இவர்கள் அ தி மு க வை நோக்கி நகரத் தொடங்கினார்கள்.