Pages

Sunday, January 24, 2016

ஏன் ஏன் ஏன்


 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது ஏன்?
 ‘தூத்துக்குடி, சென்னை, திருச்செந்தூர் கடற்கரைகளில் 10-12 அடி நீளமும் 1-2 டன் எடையுமிருந்த 100 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின’ என்ற செய்தி பலருக்கு வியப்பாகவும் புதிராகவும் இருந்தது.
 இரவு நேரத்தில் கரை ஒதுங்கியதை காலையில் கண்ட மீனவர்களும் பொதுமக்களும் சேர்ந்து அதை படகில் ஏற்றி நடுக்கடலுக்குள் கொண்டுவிட்டனர். உதவி சென்று அடைவதற்குள் பாதி குட்டித் திமிங்கிலங்கள் உயிரை விட்டன என்பது மனதை வருத்தியது.
 திடீரென திமிங்கிலங்கள் ஏன் கரை ஒதுங்கின?
 கடல்வாழ் உயிரினங்கள் பற்றி, குறிப்பாக திமிங்கிலங்கள் சிறப்பு நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். அவர்களது கருத்தை தெரிந்து கொள்வதற்கு முன் திமிங்கிலம் பற்றி...
  திமிங்கிலம் என்னும் கடல்வாழ் உயிரினம், குட்டி போட்டு பால் கொடுக்கும் வகையைச் சேர்ந்தது.
  ஒன்றிலிருந்து மூன்று ஆண்டுக்கொருமுறையே பெண் திமிங்கிலங்கள் இனப்பெருக்கம் செய்யும்! தனது குழந்தையை ஒருவயது வரை பாலூட்டி பக்கத்திலேயே வைத்துக் கொண்டு பாதுகாக்கும்!
 இவை தண்ணீருக்குள் இருந்தாலும் வெளியிலுள்ள காற்றை சுவாசிக்கும்.
   ஒரு வகை திமிங்கிலம் ‘சத்தத்தை’ வைத்து தனது பயணத்தை நடத்துகிறது. மற்றொருவகை ‘வாசனை’ நுகர்ந்து நீந்தி செல்கிறது.
  திமிங்கிலங்கள் குழுகுழுவாக செல்லும். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு ‘தலைவன்’ இருப்பான். அவன் காட்டும் வழியிலேயே குழு செல்லும். அது தவறாக இருந்தாலும் ‘தலைவன் பின் செல்லும்’. எதிர்த்துக் கேள்வி கேட்டு தடம் மாறாது. கோஷ்டி மாறாது!
 சரி விஷயத்திற்கு வருகிறேன். ஒலியை, வாசனையை, வழி தொடர்ந்து செல்லும் திமிங்கிலங்கள், கப்பல்களில் இருந்து வரும் மின்காந்த சக்தியால், ஒலிகிரகிக்கும் சக்தி இழந்து (அதாவது செல்போன் பேசி நம் காது கேட்கும் திறன் குறைந்தது போல), திசைமாறி, கடற்கரைகளில் ஒதுங்கியிருக்கலாம் என்று ஒரு வாதமும் ‘குழுத்தலைவன்’ வழிகாட்டிவந்தபோது, அதற்கு ஏதாவது ஒன்றுஆகி, தலைவனில்லாமல், தடம் மாறி இருக்கலாம் என்று மற்றொரு வாதமும் வைக்கப்படுகிறது. எதுவாயினும், இயற்கைக்கு முரணாக ஏதோ நடக்கிறது!
 2004ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது இது போன்றே திமிங்கிலங்கள் தற்கொலை இந்தியக் கடலில் ஏற்பட்டது. அதுபோன்ற மற்றொரு நிகழ்வு ஏற்படுமோ என்ற அச்சம் பலரின் மத்தியில் இதனால் ஏற்பட்டுள்ளது.

 இருதாரம் உள்ளவர்களை ஒதுக்கியது ஏன்?
 மாஜ்வாதி கட்சி ஆட்சி செய்யும் உ.பியில் அதன் முதல்வர் அகிலேஷ் யாதவ் 3,500 உருது ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஒரு அறிவிப்பு வெளியிட்டார். இந்த ஆசிரியர் அறிவிப்பில் புதுமை என்னவென்றால், இதற்கு விண்ணப்பிக்கும் ஆண்கள், இருதாரம் மணம் செய்திருந்தால் விண்ணப்பிக்க வேண்டாமாம். பெண் விண்ணப்பதாரருக்கு ஒரு கண்டிஷன் - பலதார மனைவிகளில் ஒருவராக இருந்தால் விண்ணப்பிக்க வேண்டாமாம்.
 இதை முஸ்லிம் பர்சனல் லா போர்டு வன்மையாக கண்டித்திருக்கிறது. இது முஸ்லிம்களின் தனிப்பட்ட ஷரியத் சட்டத்தில் கை வைப்பதாகும் என அவர்கள் அகிலேஷ் யாதவ் அரசுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார்கள். இது எப்படி இருக்கு?
 இதற்கு மேலாக முகமது அன்வர் என்கிற விண்ணப்பதாரர், ‘எங்கள் மதம் 4 பெண்களை திருமணம் செய்ய எங்களை அனுமதிக்கிறது... எங்களை கேட்க இவர்கள் யார்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்!
 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு படி முஸ்லிம் ஜனத்தொகையில் 47 சதவீதம் 20 வயதுக்குள்ளே இருக்கிறார்கள் என்பது குழந்தை குட்டிகளின் கூடாரமாக அச்சமூகம் ஆக்கப்பட்டிருக்கிறது! முலாயம் அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் ஒரு தாரத்திற்கு மேல் திருமணம் செய்யக்கூடாது என்றோ, குழந்தைகளை பெற்றுக் தள்ளக்கூடாது என்றோ கவலை இல்லை. தேர்ந்தெடுக்கப்படும் முஸ்லிம் ஆண் அல்லது பெண், அவருக்கு பிறகு அவரின் ‘பென்ஷன்’ வாரிசாக யாரை நியமிக்க முடியும் என்கிற சட்டசிக்கல்தான்! இந்த அறிவிப்பின் காரணம்!
 ஒன்று மட்டும் தெரிகிறது! ஷரியத் சட்டம் என்ன சொன்னாலும், பொது சிவில் சட்டம் இதுவரை வராவிட்டாலும், இப்போதிருக்கும் சட்டத்தின்படியே, முஸ்லிம்களின் பலதார திருமணம், அவர்களுக்கு இடைஞ்சல் என்பது அவர்களுக்கு ஏன் புரியவில்லை என்பதே கேள்வி!
 குடித்துச் சாவதை அரசு தடுக்காதது ஏன்?
 ‘த ஹிந்து’ நாளிதழ்கள் - ஆங்கிலம் - தமிழ் இரண்டு ஹிந்து விரோதிகள் - ஹிந்து கலாச்சாரம் - பண்பாட்டை தீவைத்து கொளுத்தும் தீய கட்டுரைகளின் சங்கமம் இவைகள்! ஆயினும் டி.எல். சஞ்சீவ் குமார் என்பவர் எழுதிய ‘மெல்லத் தமிழன் இனி....’ என்ற சிறப்பான ஒரு தொடர் கட்டுரை புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.
 1975ல் இந்திரா காந்தியின் கொடுங்கோல் சட்டம் அவசரநிலை என்கிற ஜனநாயக படுகொலையை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். மட்டுமே களப்பணி ஆற்றியது. தி.மு.கவினர் கருப்பு-சிவப்பு கரைவேட்டியை ‘கட் பண்ணி’ வெள்ளை வேட்டியாக்கி ஊரைவிட்டு மறைந்தனர். கம்யூனிஸ்டுகளும் - அதிமுகவினரும் ஆர்.எஸ்.எஸ்.-ஜனசங்ககாரர்களை காட்டிக் கொடுத்து சர்வாதிகாரிக்கு உதவினார்கள்.
 ஆர்.எஸ்.எஸ்ஸில் ஏற்கனவே திட்டமிட்ட அவசரநிலை எதிர்த்த போராட்டம் வாராவாரம் சத்தியாகிரகம் செய்து கைதாவது வரை நடந்தது. அதில் மதுரையில் என் தலைமையில், ஹரிஹர கோபாலன், மோகன், மதுரைவீரன், ஸ்ரீதர் ஆகியோர் கைதாகி சிறை சென்றோம்.
 மாணவராக இருந்தபோதே தன் முதலாண்டு பி.ஈ. படிப்பை பற்றி கவலைப்படாத, பின்னாளில் ஆர்.எஸ்.எஸ்ஸில் சென்னை மாநகர பொறுப்பிலிருந்த இன்ஜினீயர் மோகன் என்னிடம் இந்த புத்தகத்தை கொடுத்தார். அதை முழுவதும் படித்தேன்!
 குடி எத்தனை பேரை, குடும்பங்களை, நாசமாக்கி வருகிறது என்கிற சஞ்சீவ் குமாரின் நேரடி ஆய்வில் வந்த உண்மைகள் நெஞ்சை பதபதைக்க வைக்கிறது.
 வக்கப்பட்டி போல எத்தனை எத்தனை கிராமங்கள் மதுவில் மூழ்கி எமனிடம் போய்க்கொண்டிருக்கிறது என்பது போன்ற அதிர்ச்சி தரும் செய்திகளை சஞ்சீவ் குமார் எழுதியிருக்கிறார். ஒரு ஊரே 30 வயது இளம் விதவைகளின் கூடரமாக உள்ளதாம்.
 அரசு எப்படியும் போகட்டும். அது திருந்தப்போவதில்லை. மதுக்கடைகளை மூடப்போவதில்லை. ஆனால் சமூக ஆர்வலர்கள், இயக்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஊடகங்கள் மூலமாக மது அரக்கனை விரட்டும் போராட்டத்தை நாம் செய்தாக வேண்டும்.
 புத்தகம் எழுதிய சஞ்சீவ் குமாருக்கும், அதை பயன்படுத்தி தொண்டாற்றும் மோகனுக்கும் நல்லதை பாராட்டும் சமூகம் நன்றி சொல்லட்டும்.  

No comments: