Pages

Saturday, December 4, 2010

மைசூர் ஆமை--திருவாரூர் பச்சோந்தி--இத்தாலி நாரை--தமிழ்நாடு தவளை--கதை

ஒரே  ஒரு காட்டில, ஒரே ஒரு கிணறாம்... அந்த கிணற்றுக்குள்ள எக்கச்சக்கமான தவைளகளாம்!தங்களுக்கு என ஒரு ராஜாவைத் தேர்ந்தடுப்போம் என்று முடிவு செய்தனவாம் அந்தத் தவைளகள். அதே  கிணற்றில் இருந்த ஓர் மைசூர்---ஆமைக்குப் பட்டம் சூட்டி கோஷம் போட்டனவாம்.

ஆமை, தவைளகளின் நன்மைக்காக உருப்படியாக எதுவும் செய்யாமல்,சோம்பேறித்தனமாகவே இருக்க... கொஞ்ச நாளிலேயே தவைளகளுக்குச் சலித்துவிட்டதாம்.


''சுறுசுறுப்பான ஒரு ராஜாதான் நமக்கு வேண்டும்'' என்று முடிவு எடுத்து, ஒருதிருவாரூர் --பச்சோந்தியைப் பதவியில் அமர்த்தினவாம்.நிமிடத்துக்கு ஒரு வண்ணத்துக்கு மாறி, தவைளகளுக்கு நன்றாகவே பொழுதுபோக்கு காட்டிய பச்சோந்தி, அந்தத் தவைளகள் அசந்த நேரம் பார்த்து, அவற்றுக்கு இரையாக வேண்டிய பூச்சிகைள எல்லாம் தானே பிடித்துத் தின்ன ஆரம்பித்துவிட்டதாம்.

பட்டினியில் துடித்த பாவப்பட்ட தவைளகள்,''பூச்சிக்கு ஆசைப்படாத பெரிய ஜீவராசியாகத் தேர்ந்தெடுத்துஅதிகாரத்தை அவர் கையில் கொடுப்போம்'' என்று வானத்தைப் பார்த்துப் பலமாக யோசித்தனவாம்

 அந்த நேரம் பார்த்து, ஜிவ்வென்று வந்து அங்கே இறங்கியதாம் ஒரு இத்தாலி நாரை. ''ஆஹா, இவர்தான் எத்தனை வெள்ளை! இவர் அலகுதான் எத்தனை உறுதி! சிறகுதான் எத்தைன அகலம்! தூய்மையும், பலமும், அசாத்திய திறைமயும் கொண்ட இவரை ராஜாவாக்கினால், நமக்கு விடிவுக்காலம் வந்துவிடும்!'' என்று நம்பிக்கையோடு நாரையைத் தேர்ந்தெடுத்தன அந்த கிணற்றுத் தவைளகள்!

இந்த முறை அசாத்திய மாற்றம்! தவைளகளுக்குப் போட்டியாக பூச்சிகைள யாரும் தின்னவில்லை. அதேசமயம், நாளுக்கு நாள் தவைளகளின் எண்ணிக்கையே குறைய ஆரம்பித்தன!

''சும்மா கிடந்த ஆமை ராஜா, தங்கள் இரையப் பிடுங்கித் தின்ற பச்சோந்தி ராஜா... தங்கைளேய தின்கிற நாரை ராஜா... இவர்களுக்கு அடுத்தபடியாக எந்த புது ராஜாவைத் தேடுவது?'' என்று மிச்சம் மீதியிருந்த தவைளகள் கவைலேயாடு கூடி உட்கார்ந்து, மறுபடி யோசிக்க ஆரம்பித்தனவாம்


நீதி:    கதரோ  ,.. கதிரவனோ , இலையோ  ... ராஜாக்களை மாற்றிக்கொண்டே இருந்தாலும், தவைளகளின் --(தமிழ்ர்களின் ) தலைவிதி மட்டும் மாறுவதே இல்லை!
இது 2011 லும் தொடருமா?

No comments: