Pages

Thursday, December 23, 2010

விக்கி லீக்ஸின் --ஜுலியன் அசாஞ்--என்னும் ஆயிரம் பாம்பு

யானை காதுக்குள் எறும்பு போனாலே திண்டாட்டம் தான்--பாம்பு போனால்----போனது--அதுவும் ஆயிரம் பாம்பு--
ஆம்--அமெரிக்கா என்னும் யானையின் காதுக்குள்---

உலகத்தின் --தானாக நியமித்துக்கொண்ட போலிஸ்காரன் ---யாரும் தட்டிக்கேட்க முடியாத தண்டல்காரன் --
--ஆப்கானிஸ்தானத்தை அடித்து நொறுக்கிய அயோக்கியன் ----ஈராக்கின் எண்ணையையும்..மக்களின் ரத்தத்தையும் உறிஞ்சும் ---அமெரிக்கா--என்னும்
ஆக்டோபஸ்

மனித உரிமை என்றாலே கிலோ என்ன விலை என்று கேட்கும் அமெரிக்கா...அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் அது நிலைகுலைந்து போனாலும்---அதன் எஃப்.பி.ஐ அலுவலகம் மற்றும் ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையை ஒன்றும் செய்ய முடியவில்லை...ஆணவம் --அகம்பாவம்--அக்கிரமம்--அனைத்தின் உறைவிடம் அமெரிக்கா--

இரும்புக்கோட்டைக்குள் எலி புகமுடியுமா?--முடியும் என்றான் ஒருவன் ---அதுவும் சுண்டெலி---அரசாங்க ஆதரவில்லா தனிமனிதன் --
ஆஸ்திரேலியாவின்  -ஜூலியன் அசாஞ்---அமெரிக்காவின் அத்தனை அத்துமீறல்களையும்---ஆஃப்கானிஸ்தான் -ஈராக்கில் அதன் அத்தனை மனித உறிமை மீறல்களையும்--புட்டுப் புட்டு வைத்தான் --ஆதாரங்களோடு--நிஜ வீடியோ காட்சிகளோடு----அமெரிக்காவை சந்திக்கு இழுத்தான்

அமெரிக்கா அதிர்ந்தது--மற்றவர்கள் கஷ்ட்டப்படும் போது கைகொட்டி சிரித்த அமெரிக்கவைப் பார்த்து உலகம் கை கொட்டி சிரித்தது--அமெரிக்கா கைகட்டி நின்றது.
“”விக்கி லீக்ஸ்” என்ற இணைய தளத்தின் மூலம்---அமெரிக்கா மட்டுமல்ல உலக நாடுகளின் ஆட்சியாளர்களை--அக்கிரமக்காரர்களை---புரட்டிப்போட்டார் ஜுலியன் அசாஞ்--

இந்தியாவில் ராகுல்--சோனியா கும்பல்--அமெரிக்க தூதரகத்திற்கு சென்று--கைகட்டி வாய்பொத்தி---இந்துத் தீவிரவாதம் பற்றி உளறியதையும் வீக்கிலீக்ஸ்--போட்டுக்கொடுத்து விட்டது..

விக்கிலீக்ஸை முடக்க அமெரிக்கா--ஸ்வீடன் ---மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் முயன்றபோது--உலகெங்கும் பல நாடுகளிலிருந்து 800 இணைய தளத்திலிருந்து விக்கிலீக்ஸ் வெளியானது..பாலியல் குற்றத்துக்காக இங்கிலாந்து அவரை கைது செய்தபோது---உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் குரல் அவருக்கு ஆதரவு தெரிவித்தன..

ராடியா டேப்ஸ்--2-ஜி கொள்ளை--காமன்வெல்த் ஊழல்--என்ற வெளியில் தெரிந்தவைகளையே நம்மால் முழுதும் தெரிந்துகொள்ள முடியவில்லையே---ஜுலியன் அசாஞ் போல இங்கும் ஒரு இண்டியன் அசாஞ் இருந்தால் கொள்ளைகள் வெளிவரும்--நீதி நெஞ்சு நிமிறும்

No comments: