Pages

Sunday, December 5, 2010

காங்கிரஸை சுட்டு வீழ்த்துமா--காவித்தோட்டா?


காங்கிரஸை சுட்டு வீழ்த்துமா--காவித்தோட்டா?

என்னுடைய அருமை நண்பர் --பிரபல  ஆங்கிலப் பத்திரிக்கையின் மூத்த நிருபர்----எனக்கு சில கேள்விகள் கொண்ட “மெயில்” அனுப்பி இருந்தார்.அவை கொஞ்சம் நெருடலாக இருந்தாலும் கூட சிந்திக்க வைத்தது..

$ வெறும் 65 கோடி ரூபாய் (போஃபர்ஸ் ) ஊழலிலேயே ராஜீவ் காந்தி ஆட்சி இழந்தார்..ஆட்சி முறையில் மக்களுக்கு பெரும் அதிருப்தி இருந்திருக்கவில்லை.எதிர் கட்சிகளும் ஒன்றும் பெரிதாய் வலுவாக இல்லை.-----ஆனால் இன்றோ.....

$காமன்வெல்த்தில் 70,000 கோடி ஊழல்..

$ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல்..

$2-ஜி..ஸ்பெக்ட்ரம்..1,76,000 கோடி ஊழல்..

$மிகவும் பலவீனமான பிரதமர்----பலவீனமான (மண்வாசனை இல்லா) கட்சித்தலைவி சோனியா

$அரசுக்கு எதிராக மக்களின் கடும் அதிருப்தி---- கடும் விலைவாசி உயர்வு

எதிர்கட்சிகளுக்கு இவ்வளவு சாதகமான சூழ்நிலை இருந்தும் கூட..மிகவும் பலவீனமான எதிர்கட்சிகள்.
அடிக்கடி “இளசு” என்னும் பெயரில் “புதுசை” கொண்டுவரும் பிஜேபி..

$சென்ற ஆண்டுவரை நிதின் கட்கரியை யார் என்று  பலருக்கு தெரியாது...

$சென்ற ஆண்டுவரை முன்னணியில் இருந்த அத்வானி இன்று பின்னணியில்...

$காங்கிரஸிலும் திமுகவிலும் தலமை தெளிவாக இருக்கிறது..

$அடிக்கடி தலைமையை மாற்றுவதில் பா.ஜவும் அதிமுகவும் ஒன்றுதான்

$ இப்போது சோனியாவை வீழ்த்த முடியவில்லை என்றால் எப்போது வீழ்த்துவது.


பி.ஜேபியின் வலிமை
இப்போது பிஹாராம்..நாளை..டெல்லியாம்

$உலர்ந்த மருந்தை தோட்டாக்களில் நிரப்பத்தான்   “தாமரை யாத்திரை”யாம்

$ மார்ச் மாதம் நடக்கும் தேர்தல் “காமன்வெல்த்தில்”...காவித்தோட்டா..குறிதவறாமல்..காங்கிரஸ்..திமுகவை வீழ்த்துமாம்...

இதுதான்.....கமலாலயதில் கிடைத்த செய்தி

No comments: