Pages

Friday, December 31, 2010

அடிமைத்தளத்தின் அத்தியாயமே--புத்தாண்டே வருக


ஆங்கில புத்தாண்டின் மோகமா?--காலனி ஆதிக்கம் நம்மீது பதிந்ததின் தாக்கமா?
------புத்தாண்டு கொண்டாட்டங்கள் எப்போதும் போல விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

வியாபாரிகளூக்கு கொண்டாட்டம்--பொய்யுரைகள்--ஏமாற்று இலவசங்கள்---கிரெடிட் கார்ட் எமன் மூலம் நடுத்தட்டு வர்க்கத்தை “கடனாளியாக்கும்”--டி.வி.--செல்....டிவிடி என ஆடம்பர பொருள் விற்பனைகள்--

பிட்டிஷ்காரன் நம்மீது பதித்த அரசியல் ஆதிக்கத்தை அறிந்திறாத--படித்திறாத---இன்றைய இளைஞர்கள் கூட்டம்--ஆங்கிலேயனின் “சமூக சிதைப்புத் திட்டத்தினால் “ (மெக்காலெ கல்வி முறை )  விட்டில் பூச்சிகளாகி--நடுரோட்டில்---போதையில் நின்று---புத்தாண்டை வரவேற்கப்போகிறார்கள்.

“ஆங்கிலப்புத்தாண்டு நமதல்ல--வரவேற்காதே--””---இப்படியும் ஒரு சிறு குரல்--

கோவில்களில் கூட்டமோ--கூட்டம்----ஆகமவிதிகளை காற்றில் பறக்கவிட்டு---””இறைவனை எழுப்பி”---இரவு 12 மணிக்கு--அருள்பாலிக்க வைக்கும்--”அறம் அழிக்கும் குழு “----

ஆங்கிலப்புத்தாண்டைக் கொண்டாடினால் அறம் அழிந்துவிடுமா?--குடி முழுகி விடுமா?--இப்படியும் குரல்

ஆங்கிலம் தாய்மொழியாக கொள்ளாத நாடுகள்---மக்கள்---கிறிஸ்தவம்  வலுவில்லாத ஊர்களைப் போய்ப் பாருங்கள்--(இந்தியா தவிர )- ஆங்கிலப் புத்தாண்டு ஏதோ ஒரு மூலையில் பூனையாய் சுருண்டு படுத்திருக்கும்.

பின் நம்நாட்டில் ஏன் இவ்வளவு கூட்டம்---- ஆர்ப்பாட்டம்---

இருக்கத்தானே செய்யும் --நம் அனைத்து மொழி--மதத்தினரிடமும்--PRACTICAL--ஆக---ஆங்கிலப்புத்தாண்டு உபயோகமே இருக்கிறது..ஆகவே அவர்கள் சாலையில் திரளுவதும்---கோயிலில் கூடுவதும் இயல்புதானே


என் நண்பர் மாற்று
மொழி ஒன்று கற்றுக்கொள்ளவேண்டும் ---முதலில் ஒரு இந்திய மொழியுடன் ஆரம்பிக்கிறேன் -என்று “இந்தி “ கற்க முயன்றார்--முடியவில்லை--காரணம் கேட்டேன் --என் ஆங்கிலம்தான் என் தடைக்கல்--என்றார்..எப்படி என்றேன்  --எங்கு சென்றாலும் ஆங்கிலத்தை வைத்து சமாளித்து விடுவதால் மாற்று மொழி கற்கும் ஆர்வமே தொடர்வதில்லை--என்றார்.

எதுவாக இருந்தாலும் “மெக்காலே”-----ரொம்பவே "POWERFUL"--ஆன ஆளுதான் ---இத்தனை காலமாக இத்தனை கோடி இந்தியர்களை இறந்தும் -- “அடிமைகளாக “வைத்துள்ளானே..

1 comment:

சமுத்ரா said...

நன்றாக சொன்னீர்கள்!