Pages

Tuesday, December 21, 2010

ஃபுஜிமோரி...சோனியாவும்---பவர்புரோக்கர்--பர்க்கா தத்தும்

ஃபுஜிமோரி...சோனியாவும்---பவர்புரோக்கர்--பர்க்கா தத்தும்


”நீரா ராடியா”---டேப்....பாட்டு டேப்புக்களையும்...பலான டேப்புக்களையும் பின்னுக்குத்தள்ளி...உலக மொத்த ஊடகமும் தினசரி(பாடும்) பிரசுரிக்கும் டேப்பாகிவிட்டது.

800 டேப்புக்கள்---அத்தனையும் இந்தியாவின் மந்திரிசபையை தீர்மானிக்கும் பேச்சுக்கள்---பேசியவர்களில் ஒருவருக்குகூட அந்த அதிகாரம் இல்லை---நாட்டை வழிநடத்துபவர்களின் தலை எழுத்தை யார் யாரோ தீர்மானிக்கும் அதிசயம் சோனியாவின் ஆட்சியில்....


மன்மோகன் சின்கை முன்னாள் பிரதமராகவும்--- கருணாவை முன்னாள் முதல்வராகவும்-- ஆக்கப்போகும் டேப் இது--கோபாலபுரத்தில் எத்தனை கோஷ்டிகள்--திராவிட கடலுக்குள் எத்தனை இடத்தில் பூகம்பம்--என்பதை ரிக்ட்டர் அளவுகளில் குறித்துக்காட்டிய டேப் இது.

2-ஜி அலைக்கற்றை கொள்ளையில் அடித்த பணத்தில் பெரும் பங்கை பெற்றவர் நாட்டின் நம்பர் ஒன் பெண்மணி என்பதும் --அந்த பணம் அவரது சொந்த ஊரான “வாட்டிகன்” இருக்கும் நாட்டுக்கு--சர்வதேச பயங்கரவாதிகளின் “ஹவாலா” பரிவர்த்தையில் கொண்டு செல்லப்பட்டுவிட்டது என்பதை சொல்லிய டேப் இது.

யார் இந்த நீரா ராடியா?--ஒரு அன்னி பெஸண்ட்டா?--ஒரு சரோஜினி நாயுடுவா?---இல்லை--இல்லை-- இவர் ஒரு சிவகாசி ஜயலக்‌ஷுமி---கென்யாவில் பிறந்து ஒரு பிரிட்டன் காரனை கட்டிக்கொண்டு “பவர் புரோக்கிங்” நடத்திய நங்கை---9 லக்‌ஷ்த்தை 300 கோடியாக்கி வருமானவரித்துறைக்கு டிமிக்கி கொடுத்தபோது பொறி வைக்கப்பட்டார்.

மாடி வீட்டு ஏழை என்பார்கள்--ஏழை எப்படி மாடிவீட்டில் இருப்பான்?---மாடி வீட்டு ஏழை என்று சந்திரபாபு ஒரு சினிமா எடுத்தார்--போண்டியானது வேறு கதை--”ஒயிட் காலர் கிரிமினல் “ என்பது தற்போது பிரபலமாகிவருகிறது--அப்படி ஒரு கிரிமினல் ஆதிக்கம் இன்று ஒரு சில பத்திரிக்கையாளர் உருவில் வருகிறது..

அரசியல் ஒரு சாக்கடை--சரி---.சினிமா என்பது ஒரு கூவம் --சரி---பத்திரிக்கை என்பது  இன்று கூவத்துக்குள் ஓடும் சாக்கடை---பர்க்கா தத்தும்--வீர் சங்க்வியும்---பத்திரிக்கை துறையை மீளாத கூவத்து  சாக்கடை ஆக்கிவிட்டார்கள்.

“தன் செய்தி நல்ல கவரேஜில் “ வரவேண்டும் என்பதற்காக --அரசியல் வாதிகள் பத்திரிக்கையாளர்களோடு நட்பாக இருப்பது வழக்கம்..ஆனால் இப்பழக்கம் “மந்திரிசபையை நிர்ணயிப்பது வரை “போனதுதான் தூரதிர்ஷ்ட்டம்.

என்.டி.டி.வியின் பர்க்கா தத்--பார்லிமெண்ட் ஓட்டுக்கு பண புகழ்..ராஜ்தீப் சர்தேசாய்---வாக் த டாக்..சேகர் குப்தா---சர்வதேச பொருளாதார பயங்கரவாதி..நீரா ராடியா- டேப் புகழ்..வீர் சங்வி---வீரப்பன் புகழ் நக்கீரன் கோபால்--காமராஜ்-”-செய்திகளை முந்தித்தந்தவர்கள்--இன்று முந்திக்கொண்டு “செய்தி “ஆனார்கள்”..

கார்கில் போரில் எல்லையில் பர்க்கா தத் “கட்டுப்பாடில்லாமல்”-- ஷூட் செய்த வீடியோக்களால்--கட்டுப்பாடான நம் வீரர்கள்--பாக்கிஸ்தானியரால் “ஷூட்” செய்ய்யப்பட்டு மாண்ட கொடுமை---
26/11 மும்பை தாக்குதலில் இந்த பெண்மணி செய்த “அகராதித்தனமான “ வீடியோ ஷூட்டிங்” ட்ரைடண்ட் ஓட்டலிலும்--பாராஸூட்டில் இறங்கிய நம் வீரர்களையும் பயங்கரவாதிகள் --சுட்டு வீழ்த்திய அவலம்..
கோத்ரா படுகொலை சம்பவத்திற்கு பிறகு குஜராத் கலவரத்தில் இவரது “கவரேஜ்”--காங்கிரஸால் இவர் எப்படி “கவர் செய்யப்பட்டார்” என்பதற்கு உதாரணம்.

இதற்கு பாவ மன்னிப்பு பெறாமலே..இந்திய நாட்டின் மந்திரிசபையை தீர்மானிப்பதில் இந்த அம்மணி பேசிய பேச்சுக்கள் “ராடியா டேப்புக்களில் “ சந்தி சிரிக்கிறது...

மந்திரிசபை அமைப்பது மன்மோகன் கையில் இல்லை என்பது ஊரறிந்த ரகசியம்--கங்கிரஸ் கைய்யிலும் அது இல்லை என்பதே வெட்ககரமான விஷயம்...

டெஹல்கா--என்னும் சித்தரிக்கப்பட்ட --கற்பனையான ஊழலை--”ஸ்டிங்க்..ஆப்பரேஷன்” என்னும் பெயரில்---10--15 எம்.பிக்களை டி.வியில் காட்டி--- நாடு முழுதும் அசிங்கப்படுத்தினார்களே---இப்போது திரைமறைவில் இவர்கள் பேசி-- சர்வதேச பயங்கரவாதிகள்பங்குதாரர்களாக உள்ள  பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளவர்களை மந்திரியாக்க முயன்றது  ஊழலினும் கொடுமையான தேச துரோகமல்லவா?--

சுதந்திரம் பெற்றதில் இருந்து பத்திரிக்கைகள் பெரும்பாலும் (ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு )காங்கிரஸை ஆதரித்தே வந்துள்ளது.(இந்த விஷயத்தில் காங்கிரஸ் என்றும் கில்லாடிதான்  ).இம்முறை மன்மோகன் சிங்க் என்ற பிரதமர்--இல்லை..இல்லை..மண்டு--மக்கு---ரப்பர் ஸ்டாம்ப்---ஊர்க்காரன் பெற்றதற்கெல்லாம் தான் தகப்பன் என்பது போல ---யார் யாரோ நியமித்து இவர் கையெழுத்து போட்டு மந்திரியாக்கும் அவமானம் நடந்தேறியிருக்கிறது..

“”ஆல்பர்ட்டோ ஃபுஜிமோரி”---எனபவன் -தென் அமெரிக்க நாடான பெருவின் அதிபராக 1990 இல் பதவியேற்றான்..அடிப்படையில் ஜப்பானில் இருந்து பெருவில் குடியேறிய அகதி அவன்.---பத்தே ஆண்டில் பெருவைச் சுரண்டி--மக்களை வாட்டியெடுத்து---சர்வாதிகாரி ஆனான்.. நாட்டையே கொள்ளையடித்து அத்தனை சொத்துக்களையும் தன் தாய்நாடான ஜப்பான் உட்பட பலநாடுகளில் முதலீடு செய்தான். இன்று-- நாட்டைவிட்டு தப்பியோடிய அவனை துரத்திப்பிடித்து--25 ஆண்டு சிறைதண்டனை கொடுத்திருக்கிறார்கள் பெரு மக்கள்-- என்பது வேறு விஷயம் ..

இந்தியாவின் “ஃபுஜிமோரி”--சோனியா கும்பல்--மன்மோகன் என்ற “மக்கு பிளாஸ்திரியை”--கையில் வைத்துக்கொண்டு சர்வதேச பயங்கரவாதிகள் பங்குதாரர்களாக உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் 2-ஜி..ஸ்கேம்--நடத்தி---லட்சம் கோடிகளை இத்தாலிக்கு கடத்துகிறது..இந்தியா என்னும் “பெரு”மை மிக்க நாடு இன்று “பெரு” நாடு அடைந்த அவமானநிலையில் இருக்கிறது. .

இதில் ஆறுதலான விஷயம் என்னவென்றால் “இந்திய ஃபுஜிமோரிக்கு”--துணைபோகும் பன்னாட்டு பயங்கரவாதி--நீரா ராடியா---பத்திரிக்கையுலக “பவர் புரோக்கர்கள்”--பர்க்கா தத்---வீர்சங்க்வி----போன்றோறை அவர்கள் சார்ந்திருக்கும் பத்திரிக்கைகள் உலகமே சாடி வருகிறது--என்பதுதான்.

2 comments:

R VENKATESH said...

புர்க்கா'தத்,சங்கவி ஆகியோர் மட்டுமே இன்று வெளியில் தெரிந்துள்ளனர்.மேலும் பலபேர் சிக்குவார்கள். பத்திரிக்கை நடுத்துவதாகச் சொல்லி புரோக்கர் வேலை பல பேர்களில் இவர்களும் உள்ளனர்.நான்காவது தூண் உலைக்கையாக மாறிவிட்டது.

எஸ்.ஆர்.சேகர் said...

”உலக்கை”--சரியான காமெண்ட்