Pages

Wednesday, November 24, 2010

“”PLASTIC””---பிளாஸ்டிக்..பவ்யம்

“”PLASTIC””---பிளாஸ்டிக்..பவ்யம்

சைக்காலஜியில்----..இந்திரன்..சந்திரன்..என்று இல்லாததையும்..பொல்லாததையும்..புகழ்வதை.--.”பிளாஸ்டிக்..
ஸ்டோரோக்”---என்பார்கள்..

நாம் விரும்பாதவர் காலில் விழும்போதும்..கும்பிடும்போதும் செய்வதும்தான்..”பிளாஸ்டிக்..பவ்யம்”
பொதுவாக காலில் விழுந்து நாம்  வணங்குவது --நம்மைவிட பெரியவர்கள்..சாமியார்கள்…குடும்ப முக்கியஸ்தர்கள்..என்பது நம் பண்பாடு..

இதை இந்து பண்பாடு எனலாம்..
தமிழர் நாகரீகம் எனலாம்
திராவிட கலாசாரம் எனலாம்…
இந்தியப் பண்பு எனலாம்..

வார்த்தைகள் என்ன உபயோகித்தாலும் நாமும்..நம் நாடும்..ஏற்றுக்கொண்ட பாரம்பரியம் இது..

இன்று திரு.ஸ்டாலின் அவர்கள்..புட்டபர்த்தி ஸ்ரீசாய்பாபா காலருகில் பணிந்து வணங்குவதுமே……(தினமலரில் படம் ) மேற்சொன்னவைதான்..

இது சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இந்து வாக்களர்களை வீழ்த்த செய்ததாக தெரியவில்லை..
திமுக இந்து ஓட்டை நம்பி என்றும் இருந்ததில்லை.இந்துக்களும் “ஒட்டுமொத்தமாக” ஓட்டுப்போடப்போவதில்லை..மேலும் இந்தப் படத்தைப் பார்த்து மாறப்போவதுமில்லை.

நான்கூட காவி கட்டிய சில சாமியார்கள் காலில் வேண்டாவெறுப்பாகத்தான் வீழ்ந்திருக்கிறேன்..அவர்களை பிடிக்காவிட்டாலும்…காவிக்காக..

என்னுடைய உறவினர்கள் சிலரது காலிலும்----..அவர்களை பிடிக்காவிட்டாலும்… வயதில் பெரியவர்கள்..என்பதால்..

கொள்கை ரீதியாக “நாத்தீகம்” பேசினாலும் ஸ்டாலினிக்கு..சாய்பாபா..”குணசீலன்”---ஆரோக்கியம் மட்டுமல்ல—ஆட்சியை பிடிக்க அவரது ஆசிகள் உதவும் என்பதாலும் இருக்கலாம்..

அந்தவகையில் “ஜெ”..காலில் விழுபவர்கள் அத்தனைபேரும் “பிளாஸ்டிக்..பவ்யம் “தான்..
பெருசு..சிறுசு.—என வயசு வித்தியாசமில்லமல்..விழுகிறார்களே…இது சரியா..
தன்னைவிட வயதில் பெரியவர்கள் தன் காலில் விழுந்தால்….நாம் சேர்த்துவைத்த புண்ணியமெல்லாம்..புஸ்வாணமாகிவிடுமாமே…..

 “ஜெ” சேர்த்த புண்ணியம் தொலைந்ததால்..புது புண்ணியத்துக்காகத்தான்..--கோயில்..கோயிலாக அலைகிறாறோ..

--



No comments: