Pages

Wednesday, November 24, 2010

எல்லாமே “”பல்க்””தான்

எல்லாமே “”பல்க்””தான்

கடந்த ஒருவாரத்தில் அச்சுவெல்லம் ரூ.20ம்..உருண்டைவெல்லம் ரூ..12 ம்..கிலோவுக்கு ஏறிப்போச்சு..ரூ.22 வித்த வெங்காயம்..ரூ.40 க்கு தாவிடுச்சு..
மூணு மாசத்தில் தங்கம்…கிராமுக்கு..ரூ..1300….1500…1800…..ன்னு ஏறிக்கிட்டே இருக்கு..

என்னன்னு தெரில்ல..எல்லாமே ஏறிக்கிட்டே இருக்கு…எக்கச்சக்கமா..ஏறுது…கிலோவுக்கு 10 பைசா..20 பைசா ஏறுன காலம்போய்…1 ரூவா..2 ரூவா..ஏறுனது மாறி…இப்ப 10 ரூவா..20 ரூவா ஏறுற காலமாயிடுச்சு..இறங்குறது மட்டும் இன்னும் பழயகாலம் தான்..

முன்ன ஸ்டாக் மார்க்கட்..50..60..புள்ளி ஏறினாலே அதிசயம்..
இப்ப 500 ..ஏறினா…1000…எறங்குது…

சாலைவிபத்துக்கள் கூட எல்லாமே “பல்க்” தான்..கொத்து கொத்தா..சாகுராங்க..காரும்..காரும்..மோதினா..5 பேர்…பஸ்ஸும்..பஸ்ஸும்..மோதினா..25 பேர்.
.பலிகள் இப்போது பல்கில் தான்

ஊழலும் அப்படித்தான்..ராஜிவ் காந்தி அந்தகாலத்தில் வெறும்.. ரூ.65 கோடி பீரங்கி ஊழல் புரிந்து மாட்டிக்கொண்டார்..
இன்னிக்கி..சுரேஷ் கல்மாடி..70,000 கோடி….ஆ.ராசா…1,76,000.கோடி….மீண்டும் எல்லாம் “பல்க்”தான்…மெகாதான்…

கலிமுத்திப்போச்சா….முத்திக்கிட்டு..இருக்கா……..இல்ல எளசுலயே இப்பிடியா  ?..ஆய்வாளர்கள்..கொஞ்சம் விளக்குங்களே

No comments: