Pages

Wednesday, November 3, 2010

சாலைக்கொலைகள்

                                                                         சாலைக்கொலைகள்


வாஜ்பாயின் கனவுத்திட்டமான “தங்க நாற்கரசாலை”திட்டதின் மூலம் இந்தியாவின் நான்கு திசைகளையும் சாலை மூலம் இணைத்தார்.--

சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் எடுத்த சினிமாவில் பார்த்த சாலைகளை... சேலத்துக்கும்--பெங்களூருக்கும்
--சென்னைக்கும் செல்லும் போது நம்மால் பார்க்க முடிந்தது

ஆனாலும் பயன் என்ன..சாலை விபத்துக்கள் குறைந்தபாடில்லை---மாறாக மிகவும் பெருகிவருகிறது--ஆண்டுக்கு 15000 பேர் சாலை விபத்து என்னும் பெயரில் “கொல்லப்படுகிறார்கள்””--அப்பாவிகள்--குழந்தை குட்டிகள்--பெரிய..பெரிய..தொழிலதிபர்கள்....விஞ்ஞானிகள்--கலஞைர்கள்.என---.எல்லா உயிரும் சமம்தான்.. இருப்பினும்... விலைமதிப்பற்ற உயிர்கள் “”கண்மூடி கண்திறப்பதிற்குள்”மறைந்து விடுகிறது..இவைகள் தவிற்க முடிந்தவையே..

மாறிவரும் சூழ்நிலையில்....ரயில் மற்றும் நீர் வழிப் போக்குவரத்தை அதிகமாக பயன்படுத்தினால்--இதனால் போக்குவரத்து... நெரிசலை குறைக்கலாம்--விபத்தையும் குறைக்கலாம்..

கடந்த 20 ஆ.ண்டுகளில் சீனா போட்ட ரயில் பாதையின் நீளம்--10,000 கி.மீ--இதே காலகட்டதில் இந்தியா போட்ட ரயில் பாதையின் நீளம்..950 கி.மீ--வருகின்ற் 20 ஆஅண்டுகளில் சீனா போட உத்தேசித்திருக்கிற ரயில் பாதையின் நீளம் 40,000 கி.மீ. நமது திட்டமோ மிகவும் புரட்சிகரமானவை--வெறும் 2500 கி.மீதான்....

நமது நாட்டில் ரயில் பாதைகள் மிகவும் "under utilised"--கோவை ..மேட்டுப்பாளையம் பாதையில் தினசரி--காலை ஒரு டிரிப்--மாலை ஒரு டிரிப் தான் ரயில் போக்குவரத்து... போராடிப் போராடி இப்பதான் ரெண்டு டிரிப் பாசஞ்சர் ரயில் பெற்றுரிக்கிரோம்--இதேமாதிரி ரூட்டுகள் இந்தியாவில் ஏராளம்..

லாலுவையும் ..மம்தாவையும் வைத்துக்கொண்டு இந்திய ரயில்வே எப்படி சிறப்பாக செயல்படும்---மந்திரியை நியமிக்கும் ..போதே அரசுக்கு அத்துறை மீது எவ்வளவு அக்கறை இருக்கிறது எனபது புரிந்து விடுகிறதே..

சென்னை துறைமுக பொறுப்புக்கழகத்தின் "trustee"--ஆக பணியாற்றியபோது தெரிந்தது--நீர் வழிப் போக்குவரத்து நம் நாட்டில் பயன் படுத்த நிறைய வாய்ப்பிருக்கிறது என்று...

சென்னைக்கும்..தூத்துக்குடிக்கும்---சென்னைக்கும் விசாகப்பட்டினத்துக்கும்---சென்னைக்கும் ரமேஸ்வரத்துக்கும் நீர்வழிப் போக்குவரத்து சாத்தியம் என்பதும் அது பயன் படுத்தப்படாமல் இருக்கிறது எனபதும் தெரிந்தது..

சாலைகள் விரிவாக்கத்தைவிட புதிய ரயில் பாதைகள் நமக்கு செலவு குறைவு--பராமரிப்பும் குறைவு--அதிகம் பேர் பயணிக்கலாம்--விரைவாக--நிறைவாகவும் பயணீக்கலாம் 

பின் இதை ஏன் ஆட்சியாளர்கள் சிந்திக்க மாட்டேன் என்கிறார்கள்--இறைவனுக்கே வெளிச்சம்

No comments: