Pages

Thursday, March 22, 2012

இந்தியாவில் 75 கோடி “குபேரர்கள் “—திட்டக்கமிஷன் அறிக்கை




உனக்கு என்ன “மரை கழன்று விட்டதா?’ என சிரிக்காதீர்கள்..மர கழன்றது உண்மைதான்..ஆனால் எனக்கல்ல..திட்டக்கமிஷன் துணைத்தலைவர் மாண்டேக்சிக் அலுவாலியாவிற்கும் அவரது தலைவர் “மண்” மோகன் சிங்கிற்கும்தான்.

இந்தியா ஏழைநாடு இல்லைதான்..பண்பாட்டில்..கலாச்சாரத்தில்..ஆன்மீகத்தில்..விஞ்ஞானத்தில் இந்தியா பணக்கார நாடுதான்.ஆனால் ஏழைகளே இல்லாத நாடில்லையே..
“மண்”மோகன் சிங் ஆட்சியில் மண்மூடிப்போன பொருளாதாரம் 65 சத இந்திய மக்களை வறுமை கோட்டிற்கு கீழ் கொண்டுபோனது…அந்த வறுமைக்கோடு எங்கே போடப்பட்டது தெரியுமா?
ஒரு நாளைக்கு நகர்வாசி ரூ.28 ம்..கிராம வாசி ரூ.22. ம் சம்பாதித்தால் அவன் வறுமை கோட்டிற்கு மேலாம்..இதுதான் “மண்” மோகன் சிங்கின் புதிய பொருளாதார கொள்கை.
நாள் பூரா 4 டீ சாப்பிட்டால் ( ஒரு டீ ரூ.7/=) பசி தீர்ந்துவிடுமாம்..சோனியவுக்கும் ராகுலுக்கும்..திக்விஜய் சிங்குக்கும்..கபில் சிபலுக்கும்..ப.சிதம்பரத்திற்கும் ஒரு நாளைக்கு ரூ 28/= கொடுத்துப்பார்ப்போம்..ஒரு வாரத்தில் இல்லை இல்லை..4 நாளில் செத்துப்போவார்கள்..இந்த ரூபாய்க்கு சாப்பிட்டால் பல் இடுக்கில்தான் போய் ஒட்டிக்கொள்ளும்.

நாம் வறுமையை குறை என்கிறோம் ..காங்கிரஸோ வறுமை கோட்டை குறைக்கிறேன் என்கிறது.
ஹய்யாம்..ஜாலி..ஜாலி…காங்கிரஸ் கணக்குப்படி நம்நாட்டில் 75 கோடி பேர் பணக்காரகள்..
அதான் தினசரி கூலி ரூபாய் 22 சம்பாதிப்பவர்கள்..

No comments: