Pages

Saturday, February 9, 2013

சூரியநல்லி “ரேப் கேசும்” .காங்கிரசின் பி.ஜெ.குரியனும்..




“பள்ளத் ஜோசப் குரியன்”..என்கிற பி.ஜே.குரியன்..பல்வேறு சிறப்பம்சங்களை.கொண்டவர்.

1980 ஆம் ஆண்டுமுதல் கேரளாவிலிருந்து தொடர்ந்து ஆறுமுறை கங்கிரஸ் கட்சியின் சார்பில்  பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்..


2005 ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லி மேல்சபையான ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.


1992 ஆம் ஆண்டுமுதல். 1996 வரை 5 ஆண்டுகாலம்...மத்திய இணை அமைச்சராக இருந்தவர்.


2006 ஆம் ஆண்டுமுதல் ராஜ்யசபா துணைத்தலைவராகவும் செயல் பட்டுக்கொண்டிருப்பவர்.

கடந்த 33 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இல்லாதவர்.


இந்த 72 வயதுக்காரக்கு என்ன வந்தது..


அவருக்கு 55 வயதாக இருக்கும் போது அதாவது சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு..ஒரு 17 வயது பச்சிளம் பாலகியை சிறுமியை…கதறக்கதற கற்பழித்ததாக வழக்கு…அப்போது அவர் மத்திய மந்திரி…


இந்த சம்பவம் தமிழகத்தில் தேக்கடி அருகில் இருக்கும் கேரளவின் இடிக்கி ஜில்லாவை சேர்ந்த “குமுளி கஸ்ட் ஹவுசில்” நடந்த்து..45 நாட்கள்..46 பேர்கள் அந்த சிறுமியை கற்ப்பழித்துள்ளனர்..அந்த 46 இல் ஒருவர்தான் நம்முடைய இந்தியாவின் இன்றைய ராஜ்யசபை துணைத்தலைவர் பி.ஜே குரியன் ஆவார்.


இவருடைய அதிர்ஷ்டம் கேரள உயர்நீதிமன்றம் 2007 இவரை விடுதலை செய்தது.. கேரள கம்யூனிஸ்ட் அரசு உச்சநீதிமன்றத்தில் இவரது விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்ததும் தள்ளுபடி செய்யப்பட்டது.


டெல்லி மாணவி பாலியல் கொலைக்கு பிரகு நம்பிக்கை பெற்ற.. கற்பழிக்கப்பட்டு நியாயம் கிடைக்காத சிறுமியின் வயது முதிர்ந்த தாய் ...மீண்டும் இப்போது ஜனவரி 29 ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கை மறுபடியும் விஜாரிக்க வேண்டும் என கேட்டு மனூ அளித்துள்ளார்.. கோர்ட்டும் மனூவை விசாரிக்க அனுமதித்துள்ளது…


குரியன்..சோனியா வீட்டுக்கதவை தட்டியுள்ளார்..பாவம் சோனியா…கதவை திறந்தால் என்ன ஆகும் என்பது தெரிந்ததால், வாசல் பக்கமே வரவில்லை.


இப்போது நம் முன் உள்ள கேள்வி இதுதான்…

நீதிபதி வர்மா கமிஷன் பாலியல் கொடுமைகளுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.அதை சட்டவடிவில் கொண்டுவர பாளுமன்றத்தில் விவாதம் நடைபெற உள்ளது..


இந்த விவாதம் ராஜ்யசபையில் நடைபெறும்போது பாலியல் கொடுமையை அரங்கேற்றிய குற்றச்சாட்டு உள்ள “திருவாளர் அசுத்தம் “ பி.ஜே குரியன் ராஜ்ய சபாவின் தலைப்பொருப்பை எற்று விவாதத்தை நடத்தலாமா?



காங்கிரசின் லட்சணம் பாரீர்..பாலியல் கொடுமைகளை விசாரிக்கும் கூட்டத்திற்கு பாலியல் வன்கொடுமைக்காரனே ஜட்ஜாம்…

டெல்லி சீக்கியர் “இனப்படுகொலை “ வழக்கிலிருந்து ஜகதீஷ் டைட்லரையும், கமல்நாத்தையும், சஜன் குமாரையும் “ காப்ப்ற்றிய காங்கிரஸ் பி.ஜே.குரியனை என்ன செய்யப்பகிறது என்று பார்ப்போம்....
ாப்பாற்றோவு...குரியையா..
ங்கிரையா...ியாயத்ையா?..பார்ப்போம்


1 comment:

sakthi said...

அண்ணா ,நியாயம் என்றால் இந்த அரசு என்ன விலை என்று கேட்கும் .ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அண்ணா ,கடைசி இரு வரிகள் சரியாக படிக்க இயலவில்லை சரிபார்க்கவும் ,
நன்றி