Pages

Thursday, February 19, 2015

எல்லா மதத்தினருக்கும் சம உரிமை......... மோடியின் வாக்குறுதி புதிதா?


“நாட்டில் வெறுப்புணர்வை தூண்டிவிட எந்தஒரு மதக்குழுவையும் அரசு அனுமதிக்காது”.....

“பெரும்பான்மையினரோ, சிறுபான்மையினரோ, பிறர்மீது வெறுப்புணர்வை தூண்டிவிடும் செயலை அனுமதிக்கமாட்டேன்”

“யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் தாங்கள் விரும்பும் மதத்தை பின்பற்றுவதற்கான மறுக்கமுடியாத உரிமையை, மதசுதந்திரத்தை என் அரசு உறுதி செய்கிறது”

இப்படி ஒரு உரையை டெல்லியில் நடைபெற்ற கத்தோலிக்ககிறிஸ்தவ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நிகழ்த்தியிருக்கிறார்.

இந்த உரையை முழுவதும் படித்துப் பார்த்தால் கிறிஸ்தவ, முஸ்லீம் அமைப்புகள், தங்களுக்கு சாதகமாக இருப்பது போலவும், இந்து அமைப்புக்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பது போலவும், அனுமானித்துக் கொள்ளலாம்.

டெல்லி சர்ச் தாக்குதல்களுக்கு வாயே திறக்காத மோடி, கடைசியில் இப்போது வாய்திறந்து விட்டார் என்று காங்கிரஸ் கட்சி “கமெண்ட்” அடித்துள்ளார். இடதுசாரி பத்திரிக்கைகளும் அப்படித்தான் எழுதியுள்ளன.

மோடி அவர்களின் பேச்சில் எந்த புதுமையும் இல்லை. அவர் பேச்சு பொதுவாகத்தான் இருந்தது. எடுத்துக் கொள்பவர்களை பொறுத்து அதன் சாதக பாதகங்கள் அமையலாம்.

ஆனால் இந்தியா வந்தோரை வாழவைக்கும் நாடு. இங்கு மத சகிப்புத்தன்மை இந்நாட்டு மக்களின் ரத்த நாளங்களிலேயே பரம்பரை பரம்பரையாக உள்ளது. மதசார்பற்ற தன்மையை எங்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டாம்... மதத்தை பின்பற்றுங்கள் ... ஆனால் மதமாற்றத்தை கைவிடுங்கள்... என்பவைதான் அவர் பேச்சின் உள்அர்த்தம்......

இந்த கருத்துக்கள் ஏதோ புதிது என தனக்குத்தானே தீர்மானித்துக் கொள்ளும் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் நடுபக்க “கார்ட்டூன் மூலம்--- “மோடி” புத்தகத்தை தூசிதட்டி எடுத்து, வாஜ்பாய் அவர்களின் “ராஜதர்மத்தை” “ஃபாலோ” செய்யப்போவதாக... அதாவது மனம் மாறியதாக.... தன் கருத்தை வெளியிட்டுள்ளது.

2002 கோத்ரா சம்பவத்தில்  மாநில நிலமையை நேரில் கண்டரிய பிரதமர் வாஜ்பாயை குஜராத் வந்து பிறகு நடந்த “பிரஸ் மீட்டில்” ”ஜாதி, மதம், மொழி, அரசியல் கட்சி பேதமின்றி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசும் ராஜ தர்மப்படி செயல்பட வேண்டும். மோடியின் அரசும் ராஜதர்மப்படி செயல்படுவதாக நான் நினைக்கிறேன்” என்றார் வாஜ்பாய்--

 இச்செய்தி ஏப்ரல் 4 2002 இந்து நாளிதழில் பிரசுரமாகி உள்ளது.

இக்கருத்தை மோடி எதிர்ப்பாளராகள் தங்களுக்கு ஆதரவாக எடுத்துக் கொண்டார்கள். ஆனால் உண்மை அதுவல்ல!

 சாஷிமகராஜ் 4 பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியதை “இந்து” தமிழ் நாளிதழ் தனக்கு செளகரியமான முறையில் செய்தியாக வெளியிட்டது.

ஒரு குழந்தை நாட்டுக்கு, ஒரு குழந்தை ஆன்மீகத்துக்கு ,உங்களுக்கு ஒரு ஆண், பெண் என, 4- குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்” என்பதே சாஷிமகராஜ் சொன்னது. இதை முழுதும் பிரசுரிக்காத பெரும்பாலான பத்திரிக்கைகள், சாஷி மகராசை குற்றம் கூறின.

அதுபோல ”தான்”- வெளியிட்ட வாஜ்பாயின் ராஜதர்ம” செய்தியை மாற்றி... மோடிக்கெதிராக தொடர்ந்து திரித்து கூறுவதையே ‘இந்துவும்’ மற்ற இடதுசாரிகளும் தொடர்ந்து செய்து வருவதின் தொடர்ச்சிதான் இந்த கார்ட்டூனும்.

மோடியின் கிறிஸ்தவர்களின் மத்தியிலான பேச்சு மைனாரிட்டிகள் மீது, மோடி பற்றி திணிக்கப்பட்ட பல பொய் வாதங்களுக்கு பதிலாக அமைந்துள்ளது.

125 கோடி மக்களையும் ஒரே  தராசில் வைத்து சமமாக கருதி செயல்பட்டு வரும் மோடி அரசு, மைனாரிட்டி, மெஜாரிட்டி என பிரித்தாண்ட கங்கிரஸ் ஆட்சி போல் அல்லாமல், நடுவு நிலையோடு ஆட்சி செய்து வருகிறது. என்பதை மோடியின் டெல்லி பேச்சு உறுதி செய்துள்ளது!

 இது “போலி மத சார்பற்றவர்களுக்கு” இப்போது தான் புரிந்துள்ளது..........

1 comment:

Anonymous said...

அய்யா நல்லவரே! உங்க காக்கி டவுசர் பளீர்னு தெரியுது.
ஒரு வேட்டிய கட்டி மறைக்கிற வழியை பாருங்க.
கொஞ்சம் உங்க அட்ரஸ் தெரிஞ்சா அக்கம்பக்கம் இருக்கிற
பாய் மாறுங்கள,கிறிஸ்டியங்கல உசாரா இருக்க சொல்லலாம்.