Pages

Thursday, August 25, 2016

ஒலிம்பிக்--ஆசை மட்டும் போதாது...”திறனும்” ‘ஸ்கில்’லும் வேண்டும்


இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போதுஇந்தியாவிற்கு ஒரு ஆறுதல்சிந்து பாட்மிட்டனில்வெள்ளிப் பதக்கம் வென்றார்மல்யுத்தத்தில்   பெண்கள்பிரிவில் ஹரியானாவை சேர்ந்த சாக்ஷி மாலிக் என்ற 23வயது பெண் வெண்கலப் பதக்கம் பெற்றார் என்பதைத்தவிர நம்பிக்கையை துளிர்க்க வைக்கும் வேறுசெய்திகள் இல்லை.

110 பேர் கொண்ட இந்திய ஒலிம்பிக் குழுஅதில் வரும்,இதில் வரும் என எதிர்பார்த்து முதல் 11 நாளில் எந்தபதக்கமும் வெல்லாமல் எதிர்பார்த்த பெருந்தலைகள்எல்லாம் ஒவ்வொன்றாக வீழ்ந்து போக இந்தியாவின்பதக்க நம்பிக்கைகள் சாய்ந்து போனது!

பத்துக்கும் 35க்கும் இடைப்பட்ட வயதில் இருக்கும் 40கோடி இளைஞர்களை கொண்ட இந்திய நாட்டுக்கும்ஒலிம்பிக்கில் ஏன் இப்படி ஒரு சோதனைபதக்கம்இல்லாமல் வேதனை!
கடந்த 2012-17ம் ஆண்டுக்கான ஐந்தாண்டு திட்டத்தில்விளையாட்டுக்கென பல திட்டங்களைதீட்டியிருக்கிறார்கள். 2012ல் 6 பதக்கமும் 2016ல் 20பதக்கமும் 2020ல் 30 பதக்கமும் பெற வேண்டும் என்றஇலக்குடன் திட்டம் போடப்பட்டதுஏதோ பதக்கம்வெல்வது அரசு திட்டமிடுதலால் தான் முடியும்என்பதுபோல உள்ளதல்லவாஇதை ஆமோதிக்காமல் பிரதமர் மோடி அடுத்த ஒலிம்பிக்கிற்கு ஒவ்வொருமாவட்டத்திலிருந்தும் வீரர்கள் செல்வார்கள் என்றுதிட்டமிடுதலை உள்ளூர் வசம் ஒப்படைத்திருக்கிறார்!

எனக்கென்னவோ ஒரு அரசு மட்டும் திட்டமிட்டால்ஒலிம்பிக்கிற்கு ஏராளமானவரை அனுப்பி பதக்கம்பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை இல்லைஅரசுதிட்டமிடலாம்செயல்பாடுகளை ஒருக்கிணைக்கலாம்,வீரர்களுக்கு ஆதரவு தரலாம்அவ்வளவே!

ஒலிம்பிக் போட்டிகளில் 1900 தொடங்கி 2016 வரைநடந்துள்ள போட்டிகளில் 22 தடவைகள் இந்தியா பங்குகொண்டுள்ளது. 1928 முதல் 1964 வரையான காலம் இந்தியஹாக்கி விளையாட்டின் பொற்காலம்சுமார் 8 முறைதங்கமும் 1முறை வெள்ளி 1 முறை வெண்கலமும்இந்தியா வென்றுள்ளது

யோகாவை ஐக்கிய நாடுகள்சபை அங்கீகரித்ததுஜூன் 21 உலக யோகா நாளாகஅறிவிக்கப்பட்டதுஇப்படிப்பட்ட நாம் விளையாட்டில்பின்தங்கி இருப்பது ஏற்க முடியாதது.

பள்ளிப் பாடங்கள் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுவிளையாட்டுக்குஉடற்பயிற்சிக்கு கொடுத்திடவேண்டும்அரசுடைய விளையாட்டு பயிற்சி மையங்கள்மட்டும் நம்பியிருந்தால் நமது கனவு நனவாக முடியாது.என்.ஜி.ஓக்கள்கார்ப்பரேட்  நிறுவனங்கள்காலனிகுடியிருப்புகள்ஊராட்சிநகராட்சிகள் என நாட்டின்ஒவ்வொரு பகுதியும் இதில் தனிக்கவனம் செலுத்ததுவங்க வேண்டும்.

வில் வித்தைவாள் வீச்சுமல்யுத்தம்கபடிஈட்டி எறிதல்,ஷாட்புட் போன்ற விளையாட்டுகளின் தாயகம் இந்தியாதான்ஹாக்கிகால்பந்து உள்ளிட்டவற்றை கூர் தீட்டி 2020ஒலிம்பிக்கில் இந்தியா முதல் 5 உலக நாடுகளில் இருக்கவேண்டும்.

 திட்டமிடுவோம்செயல்படுவோம்வெற்றிபெறுவோம்பதக்கமும்தான்!

No comments: