Pages

Sunday, August 28, 2011

ராகுலை காணவில்லை--மாமா மன்மோகன் சிங் கதறல்



 

என் சகோதரி சோனியா மேனொ வின் மகனும் என் மருமானுமான ரால் வின்சி என்கிற ராகுல் காந்தியை நேற்று இரவுமுதல் காணவில்லை--அவனை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும் என அவனது தாய் மாமன் டாக்டர் மன்மோகன் சிங் டெல்லி ரேஸ்கோர்ஸ் காவல் நிலய இன்ஸ்பெக்டர் கிரன்பேடியிடம் புகார் கொடுத்தார்--அதன் விவரம் வருமாறு--

நேற்று வெள்ளிக்கிழமை குடும்பத்தில் ஒரு பஞ்சாயத்து...ராகுல் தருதலையாய் சுற்றுவதைக்கண்டு அவன் தாத்தா அண்ணா ஹசாரே சில கட்டுப்பாடுகளை விதித்தார்..பாவம் அப்பா இல்லாத பிள்ளை--40 வயசாயியும் கல்யாணம் கட்டிக்காம ஒருமாதிரி சுற்றுவதை கண்டித்தார்..”ஜன்லோக்”..குங்கிர..”பால்” குடி..நீ சரியாயிடுவ..அப்பிடின்னாரு..அதுக்கு எதிற்பு தெரிவிச்சு..அவனுயடை உருப்படாத பிரண்டுங்க,,மிலிந்த் தியோரா--சச்சின் பைலட்--ஜோதிராதித்ய சிந்தியா--இவங்க பேச்ச கேட்டு..எதோ கையில எழுதிவச்சிருந்தத காட்டுக்கத்தலா கத்திட்டு..வீட்டவிட்டு ஓட்டமும் நடையுமா வெளிய போனான்..இன்னும் வீடு திரும்பல்ல..

இன்னிக்கி கூட தாத்தா அன்னா ஹசாரே “ஜன்லோக்”-பால் டம்பளர்ல எடுத்து வந்தார்.அந்த பால் இவனுக்கு புடிக்காததால இவன் இன்னும் வீட்டு பக்கமே வரல..

இன்னிக்கி அவங்க அத்தை சுஷ்மா வும் கொஞ்சம் ஓவராவே அவனை திட்டிட்டாங்க..கொஞ்சம்கூட பொருப்பில்லாம அலையரானே--வாய்க்கு வந்தபடியெல்லாம் உளரறானேன்னு..அத்தை சுஷ்மா சொன்னதும் அவனுக்கு கோபம்..

அம்மா சோனியா உடம்பு சரியில்லாம அமெரிக்காவுல படுத்திருக்காங்க..அவனுக்கு எல்லாமே நான்தான் -என்ன தவிக்க விட்டு போயிட்டா--பக்கத்து வீட்ல உள்ள சரத் யாதவ்.....சீத்தாரம் எச்சூரி--அருண் ஜேட்லி--இவங்கள்ளாம்--என்ன மெரட்டிகிட்டே இருக்காங்க... பயமா இருக்கு..


 

என்று மாமா மன்மோகன் சிங் கதறி அழுதபடி இருந்தது வருத்தமாக இருந்தது,..

நாமும் ராகுலுக்கு வேண்டுகோள் விடுப்போம்..

தாத்தா அன்னா ஹசாரே “ஜன்லோக்..பால”--அவரே முழுசும் குடுச்சுட்டாரு..அத்தை..சித்தப்பா--மாமாக்கள்லாம் அமைதியாயிட்டாங்க..நீ தைரியமா திரும்பி வரலாம் ..
உன் பிரண்ஸோட  லூட்டி அடிக்கலாம்




Friday, August 26, 2011

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதே ராகுல்

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸுக்கு ஒருதுளியும் விருப்பம் இல்லை. அன்னாவின் கடைசி மூன்று கோரிக்கைகளையும்கூட  ஏற்க காங்கிரஸ் தயாராக இல்லை.

அன்னாவின் கோரிக்கைகளை ஏற்க காங்கிரஸுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது.அப்படி ஏற்றால் பாதி பார்லிமெண்ட்  ஜெயிலுக்குள்தான் கம்பி எண்ண வேண்டியிருக்கும்...முழு காங்கிரஸும் திஹார் ஜெயிலுக்குள்தான் இருக்கும்.சோனியா கனிமொழி அறைக்கு பக்கத்து அறைவாசியாக இருப்பார்..அதனால்தான் அன்னாவின் “ஜன்லோக்பாலுக்கு”--காங்கிரஸ் கடும் எதிற்ப்பு தெரிவிக்கிறது.

11 ஆம் நாள் உண்ணாநோன்பிலும் 74 வயது தாத்தா இளைஞன் போல் அல்லவா இருக்கிறார்.ஒரு பிட் கூட அசரவில்லையே---அவரின் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் நாடே பற்றி எரியுமே..காங்கிரஸுக்கு ஏன் கொஞ்சம்கூட கவலை இல்லை.

இன்று 26.8.2011 வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி திடீரென கவலை பட்டார்..தான் எழுதிவைதிருந்த ( --அம்மா மாதிரி--)சினிமா பாணி முதலைக்கண்ணீர் வசனத்தை ராகுல் பார்லிமெண்டில்  ஒப்பித்தார்....

என்ன வேடிக்கை என்றால்---ஊழலை அறவே ஒழிக்கவேண்டுமாம்---யாரை பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசுகிறார்..ஆதர்ஷ் ஊழல் விலாசராவ் தேஷ்முக்---உர ஊழல் சரத்பவார்---2-ஜி ஊழல் சிதம்பரம்--(ராசா முதலானோர் உள்ளே இருக்கின்றனர் )---இவர்களை வைத்துக்கோண்டு “ நா “கூசாமல் பேசுகிறார்..

ஒவ்வொரு குடிமகனும் முன்னுக்கு வரவேணுமாம்---இதையூம் யாரை பக்கத்தில் வைத்துக்கொண்டு பேசுகிறார்..--அப்பாக்கள் தயவில் மந்திரி ஆன--முரளி தியோரா மகந்-மிலிந்த் தியோரா--மாதவ ராவ் சிந்தியா மகன்..ஜோதிராதித்ய சிந்தியா--ராஜேஷ் பைலட் மகன் சச்சின் பைலட்--இவர்களெல்லாம் காங்கிரஸ் போஸ்டர் ஒட்டி முன்னுக்கு வந்த கீழ்மட்ட தொண்டன்களா ?--அப்படி போஸ்டர் ஒட்டிய தொண்டன்களை யாரையாவது ராகுல் முன்னேற்றி விட்டுருக்கிறாரா?--

ராகுல் சிரிப்பு வெடிகளுக்கு பஞ்சமே இல்லாமல் பல வெடிகளை இன்று பாராளுமன்றத்தில் கொளுத்திப்போட்டார்..--

அரசே தேர்தல் செலவுகளை ஏற்கவேண்டுமாம்---யார் தடுத்தார் இவர்களை--கடந்த 7 ஆண்டுகாலமாக “ராகுல் தர்பார் “--தானே நடக்கிறது..

அரசு வெளிப்படையாக இருக்கவேண்டுமாம்--2-ஜி ஊழல் சந்தி சிரித்தது போதாதா?--எல்லா நடைமுறைகளையும் காற்றி பறக்கவிட்டு விட்டு --மந்திரிகள் குழு நடத்திய ஊழல் நாடகம் இப்போது வெளிவந்திருக்கிறதே ராகுல்--.இன்னும் “முக்காடு போர்த்தாமல் “--காங்கிரஸ் வெளியே நடமாடுகிறதே--இதற்கு என்ன சொல்ல?--

அன்னா ஹாஸாரே --தன் கோரிக்கைகளை ஏற்கச்சொல்லி அரசை நிர்பந்த படுத்துவது...நாட்டின் பன்முகத்தன்மைக்கு ஆபத்தாம்--அதாவது ராகுல் என்ன சொல்லவருகிறார்...ஹஸாரே ஹிந்து--அவர் கோரிக்கைகள் வலுப்பெற்றால் மற்ற முஸ்லிம்--கிறிஸ்தவர்கள் வருத்தப்படுவார்கள்--அதாவது இப்படிச்சொல்லி அவர்களை தூண்டிவிட ராகுல் முயல்கிறார்..இது நல்லதா?--

ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்பட்டதாம்..ஹ்ஸாரேவின் உடல் நிலை கண்டு ராகுல் வருத்தப்படுகிறாராம்..அவர் உண்ணாவிரதமிருக்க எந்த கட்சி--ஆட்சி--காரணம்--எத்தனை முறை பேச்சு வார்த்தைக்கு அழைத்து பட்டை நாமம் போட்டார்கள்--இன்றுகூட உயிருக்கு போராடும் ஹ்ஸாரே மீது எதாவது கரிசனம் இவர்களுக்கு இருக்கிரதா?--

காங்கிரஸே--ஒருமுறை நாட்டை பிளந்தது போதும்...ராகுலை உளரச்சொல்லி மீண்டும் ஒருமுறை முயற்ச்சிக்காதே--அன்னா ஹஸாரேவை அபாண்ட மாக பேசி--வெந்த புண்ணில் வேல்  பாய்ச்சாதே.
.