Pages

Thursday, August 9, 2018

மறைந்திருக்கும் கலைஞரின் இணக்கமான பக்கம் |

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் "அந்தப் பக்கம் " ஒவ்வொரு பாஜக வினரும் படித்து தெரிந்து பாலோ செய்தால் அது நமக்கு சாதகமானது என்பதை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன் 

ஊழல்,  சொந்தக்காரர்களுக்கு பதவி கொடுப்பது, குடும்ப ஆட்சி, குடும்ப கட்சி ,இலவசங்கள், சாராயக் கடைகளை திறந்தது,தேர்தல் வாக்குக்கு பணம் கொடுத்தது, என்பதை உலகில் முதல் முதல் தமிழகத்தில் துவக்கியது மறைந்த கருணாநிதி தான். அவர் தலைமை ஏற்ற திமுக தான் என்பது உலகறிந்த உண்மை..

இந்து மத துவேஷம் ,பார்ப்பன எதிர்ப்பு, மாநில சுயாட்சி ,என்பன எல்லாம் கலைஞரின் பொழுதுபோக்கு. வேலை இல்லாத நேரங்களில் அதாவது கட்சியை முன்னெடுக்க ஏதுவான பிரச்சனைகள் கண்டுபிடிக்கமுடியாத காலங்களில் மேற்சொன்னவை கலைஞருக்கு உடனடியாக உதவும் "பாஸ்ட் ஃபுட் " 

இவையெல்லாம் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டுமே. .அரசாங்கம் தன்னிடம் இருக்கும் போது இரண்டாவது பாராவில் எழுதியதை எல்லாம் செயல்படுத்துவார். 

போதும் போதும் ஒருவர் இறந்த பின்பு ஈவு இரக்கமின்றி அவரது கடந்த கால செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கிறீர்கள் இது நியாயமா? என்று கேட்பது என் காதில் விழுகிறது 

வேறு என்ன செய்வது. தேசம் தெய்வம் தர்மம் விரோதி என்பவரை நாம் தூக்கியா பிடிக்க  முடியும்? இருந்தாலும் கருணாநிதியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன. குறிப்பாக இயக்க ரீதியான வளர்ச்சி, "அவர்களுக்கு என்ற திராவிட கட்டுப்பாடு ", அதை கட்டிக் காத்தல், கடுமையான உழைப்பு |சிறந்த எழுத்தாற்றல் | நிறைய வாசிப்பு, என்பன நமக்கு நமது இயக்க வளர்ச்சிக்கு தூண்டுகோலாக எடுத்துக்கொள்ளலாம் . 

நமது இன்றைய கட்டுப்பாடு, திட்டமிடல், கொள்கை ரீதியான ஞானம் | சித்தாந்தத்தில் ஈடுபாடு, இவைகளெல்லாம் ஷாக்கா நமக்கு கற்று கொடுத்தது. நமது வழிகாட்டியாக ஆதர்ச புருசனாக யாராவது ஒரு பிரச்சாரகர் நம் ஒவ்வொருவருக்கும் இருந்திருக்கிறார். இருக்கிறார். நம்முடைய மூல்யங்கள் | பண்புகள் | வளர பிராத்தமிக்சிக்ஷா வர்க மற்றும் சங்க சிக்ஷா வர்க நமக்கு பயிற்சிகள் அளிக்கிறது..... 

 இப்படி நாம் வளர்ந்தோம் .வளர்க்கப்பட்டோம். ஆனால் கருணாநிதிக்கு யார் பயிற்சி கொடுத்தார்.? கேட்டால் நாங்கள் அண்ணாவின் பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தோம். பெரியாரின் குருகுலத்தில் பாடம் பயின்றோம். என்றெல்லாம் வசனங்கள் பேசுவார்கள்... 

கருணாநிதியின் ஆளுமை ,குறிப்பாக தன் கட்சியை தன்னுடன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அதுவும் முதல்வர் ஆக (1969) இருந்தது முதல் இன்று 2018 வரை 49 வருடம் என்பது மிகப் பெரிய சாதனைதான். கருணாநிதியின் ஆளுமையில் நம்மை ஆச்சரியப்பட வைத்த விஷயங்கள் 3 

சி என் அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு அவரது கட்சியும் நாடும் எதிர்பார்த்த விஷயம் கட்சியிலும் ஆட்சியிலும் இரண்டாம் இடத்தில் இருந்த நாவலர் நெடுஞ்செழியன் தான் முதலமைச்சர் ஆவார் என்று . இருந்தது .....

 ஆனால் ஒரே இரவில் அத்தனை எம்எல்ஏக்களும் தன் பக்கம் இழுத்தது மட்டுமல்லாமல் இவருக்கு இணையாக இருந்த மதியழகன் அன்பழகன் ஆகியோரையும் தன் பக்கம் சேர்த்துக் கொண்டது தான் .இதோடு மட்டுமல்லாமல் இரண்டாவது இடத்தில் இருந்த நெடுஞ்செழியனையும் அதே இரண்டாம் இடத்தில் மீண்டும் வைத்துக் கொண்டதுதான் 

1972இல் எம்ஜிஆர்  ஐ கருணாநிதி திமுகவிலிருந்து டிஸ்மிஸ் செய்தார். எம்ஜிஆர்  அதிமுகவை ஆரம்பித்தபோது திமுகவின் ஒரு மாவட்ட செயலாளர், ஒரு மந்திரி கூட எம்ஜிஆருடன் செல்லவில்லை. இரண்டே இரண்டு எம்எல்ஏக்கள் மட்டுமே எம்ஜிஆருடன் போனார்கள். போகுமிடமெல்லாம்மக்கள் வெள்ளத்தில்  எம்ஜிஆர் மிதந்தார். திமுக அழிந்து போகும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் தன் சாதுர்யத்தால் திமுகவை கட்டுகோப்பாக வைத்து கருணாநிதி காப்பாற்றினார். 

இந்த ஆளுமையை கருணாநிதிக்கு எந்த இயக்கம் கற்றுக் கொடுத்தது?. எந்த கல்லூரியில் இந்த பாடம் பயின்றார் ? என்பது எல்லாம் தான் வியக்க வைக்கும் விஷயம். 

இந்திரா காந்தியின் அவசர நிலை காலத்தில் பல திமுக மாவட்ட செயலாளர்களுடன் நான் ரகசிய தொடர்பில் இருந்தேன் .திமுக கலகலத்துப் போனது. பல தலைவர்கள் கருப்பு சிவப்பு கரைவேட்டியை கிழித்துப்போட்டு விட்டு தலைமறைவானார்கள். கருணாநிதி ஜனதாக் கட்சியோடு கூட்டு வைத்துக் கொண்டு சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆரிடம் தோற்றுப்போனார். இதன் பிறகு 13 ஆண்டுகாலம் எம்ஜிஆர் உயிருடன் இருந்தவரை திமுக ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஆனாலும் கட்சி கரைந்து போகாமல் கட்சியை காப்பாற்றியது கருணாநிதிதான்.

 காமராஜர் பக்தவத்சலம் ராஜாஜி எம்ஜிஆர் ஜெயலலிதா என்று எந்த தலைவரையும் நாக்கில் நரம்பில்லாமல் விமர்சிப்பது கருணாநிதியின் இயல்பு .அவர் உபயோகித்த வார்த்தைகள் அச்சில் ஏற்றினால் அச்சம் தரும் வார்த்தைகள் ஆகும்...... 

 தன் கட்சிக்காரன், தான் போட்ட கோட்டைத் தாண்டி போகாமல் பார்த்துக் கொள்ளும் தந்திரமாக இந்த தூசணை வார்த்தைகளை கருணாநிதி உபயோகித்தார். . "நீ எரிந்த கட்சி நான் எரியாத கட்சி " சண்டையில் தொண்டனை மகுடிப் பாம்பாக கட்டுப்படுத்த இப்படியான பேச்சுக்களை கருணாநிதி பேசினார் 

ஆனாலும் அரசியலில் ஆட்சியில் இல்லாமல், அதுவும் ஒரு வெகுஜன மக்கள் தலைவர் எம் ஜி ஆருக்கு எதிரான ஒரு கட்சியை கலையாமல் 13 ஆண்டுகாலம் நடத்திய பெருமை கருணாநிதியையே சாரும் 

இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் நமது பார்வையில் 2 காரணங்களை நான் பார்க்கிறேன் .ஆரம்பம் முதலே கருணாநிதியின் யூஎஸ்பி எனப்படும் unique செல்லிங் பாயிண்ட் "தனித்தன்மை வாய்ந்த சிறப்பம்சம் "  கவர்ச்சிகரமான பேச்சாற்றல் எழுத்தாற்றல் இந்த இரண்டையும் செவ்வனே பயன்படுத்தினார்

 தன் தொண்டர்களுக்கு தன்னுடைய கட்சிப் பத்திரிகையான முரசொலியில் தினசரி ."உடன்பிறப்புக்கு கடிதம் "எழுதினார். கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும் திமுக என்பதற்கு அவர்களிடம் இரண்டு அடையாளம் இருக்கும். ஒன்று கருப்பு சிவப்பு கரை போட்ட வேட்டி கட்டியிருப்பார்.இதை இந்தியாவில் முதன்முதலில் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது திமுகதான் இரண்டாவது முரசொலி பத்திரிக்கை கையில் இருக்கும் ......

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சில் உள்ள அமைப்புச் செயலாளர் பணியை எந்த போதனையும் பயிற்சியும் இல்லாமல் கருணாநிதி முரசொலியில் தன் கடிதத்தின் மூலம் தொண்டர்களுக்கு பயிற்றுவித்தார்......... 

அந்த தினசரி குறிப்புகள் வழிகாட்டுதல்கள் தொண்டனை கருணாநிதியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இன்றைய வாட்ஸ்அப் ஃபேஸ்புக் ட்விட்டரில் உடனுக்குடன் தெளிவுபடுத்தப்படும் விஷயங்களை கருணாநிதி 30, 40 ஆண்டுகளுக்கு முன்பே ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கு ஒரு முறையாக தொண்டனுக்கு எழுதி வகுப்பு நடத்தினார் .இதன் impact மிகப்பெரும் சாதகமாக அவருக்கு அமைந்தது ...

பேச முடியாத எமர்ஜென்சி காலத்திலும் சரி, இப்போதும் சரி, திமுக, திருமணம் முதல் கருமாதி வரை , அனைத்து மக்கள் கூடும் இடங்களையும் தங்கள் கருத்து சொல்ல பயன்படுத்தும் களமாக பயன்படுத்தியது ஃ கருணாநிதி இதை சிறப்பாக செய்தார் ஃ  

கட்சித் தொண்டனோடு தான்  நேரடியாக தொடர்பில் இருக்கும் விஷயத்தை ஆர்எஸ்எஸ் அல்லாத வேறு நபர் செய்தது கருணாநிதி மட்டுமா கத்தான்  இருக்க முடியும் ...... 

மேடைகளில் பேசும்போது protocol படி அனைத்து தொண்டர்களின் பெயரையும் கருணாநிதி குறிப்பிடுவார் ஃ இது தொண்டனுக்கான அங்கீகாரமாக ஒருபுறம்  எடுத்துக் கொண்டாலும் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு தன்னுடைய பெயரை, தலைவரே சொல்லி விட்டார் என்ற பெருமிதம் தொண்டனுக்கு உண்டானது. இதனால் களப்பணியில் அவனது உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.  ...

ஆட்சியில் இருந்தபோது ஒரு பகுதியிலிருந்து ஒரு கோரிக்கை மனு வருகிறது என்றால் அது அந்தப் பகுதி திமுக வட்ட செயலாளர் பரிந்துரைத்தாலே அந்தப் பெட்டிஷன் செயல்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற "முறையை " உருவாக்கினார் கலைஞர் ஃ இப்படி ஒரு அந்தஸ்தை அந்த தொண்டனுக்கு தந்தால் அவன் கருணாநிதியின் கட்டுப்பாட்டை விட்டு எப்படி  வெளியே போவான்..? --. 


"தனக்கு சாதகம், தனக்கு மட்டுமே சாதகமாக, " என்பதே எப்போதுமே கருணாநிதியின் நிலைப்பாடு. அதற்காக "யூ டர்ன் " "அந்தர்பல்டி ""சோமர் சால்ட் || அடிக்க கவலைப்படாதது தான் கருணாநிதி வெற்றியின் சூத்திரம் ....

பாஜககருணாநிதியின் organizational skills பற்றி மட்டும் எடுத்துக்கொள்வோம்.. மற்றவைகள் நம் தேவையில் வரவில்லை ... அப்படியென்றால் கருணாநிதியின் அந்தப்பக்கம் நமக்கு கொஞ்சம் இணக்கம் தான்  


No comments: