Pages

Monday, March 26, 2018

தமிழகத்தின் ஆபத்தான அசிங்க அரசியல்

தமிழ்நாட்டில்கோவை பா.ஜ.க அலுவலகத்தின் மீது மார்ச் 7ந் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பா.ஜ.கவை தவிர எந்த அரசியல் கட்சியும் இதைக் கண்டிக்கவில்லை.
மார்ச் 9ம் தேதி சேலம் சங்கரமடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கதவுகள் உடைக்கப்படுகிறது. யாரும் இதை கண்டிக்கவில்லை பா.ஜ.க தவிர.

மார்ச் 21ந் தேதி கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் சி.ஆர்.நந்தகுமார் இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு கார் எரிந்து போகிறது! எந்த கட்சியும் கண்டிக்கவில்லை.

சென்ற ஆண்டு கோவை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட போது பா.ஜ.க அதை கண்டித்தது. 

எங்கோ வடக்கே வி.ஹெச்.பி தலைவர், கருணாநிதி நாக்கை அறுப்பேன் /என சொன்னதற்கு தி.மு.க காலிகளால் சென்னை பா.ஜ.க கட்சி தலைமையகம் கமலாலயம் தாக்கப்பட்டது. 

எந்த கட்சியும் கண்டனமும் தெரிவிக்கவில்லை, அறிக்கையும் வெளியிடவில்லை.


கடந்த காலத்தில் நடந்தவைகள் எல்லாம் ஒருபுறம் நாம் மறந்து விட்டாலும், தற்போது, ஒரு அரசியல் கட்சியின் அதுவும் ஆளும் கட்சியின் அலுவலகமும், மாவட்டத் தலைவர் வீடும் காரணமின்றி தாக்கப்பட்டதற்கு ஒரு கண்டனமும் இல்லை என்பது எவ்வளவு பெரிய அரசியல் அநாகரிகம்!


ஹெச்.ராஜா டிவிட்டர் பக்கத்தில் எழுதியமைக்கு -Ôமை காயும் முன்னேÕ வருத்தமும் மன்னிப்பும் கோரிய பின்பும் அது இன்னும் டி.விக்களில் விவாதிக்கப்படுகிறது. அரசியலாக்கப்படுகிறது. வீரவசனங்களை பேசப்படுகிறது. 

ஹெச்.ராஜா இன்னும் மற்ற கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார். இது ஒரு நியாயமாக இருந்தால். கோவை பா.ஜ.க அலுவலகம் குண்டு வீசி தாக்கப்பட்டதற்கு  கண்டனம் தெரிவிக்க வேண்டியது மற்றொரு நியாயம் தானே! அது ஏன் செய்யப்படவில்லை.


ஆக தமிழகத்தில் அரசியல் ஒரு அசிங்க அரசியலாக, பா.ஜ.க வெறுப்பு அரசியலாக, ஆபத்தான ஜனநாயக விரோத அரசியலாக, இந்துக்களின் மீது காழ்ப்புணர்வு அரசியலாக, இந்திராகாந்தி இருந்தபோது இருந்த, மதவாத, ஓட்டுப் பொறுக்கி அரசியலாக மாறி வருவது கண்டனத்திற்குறியது.


இந்த தாக்குதல்களும், இதற்கு சொல்லி வைத்த மாதிரி சேர்ந்து கொண்டு பா.ஜ.க எதிர்ப்பில் ஓரணியாக மாறிவிட்ட மற்ற அரசியல் கூட்டணிகளும் சாதாரண நிகழ்வுகள் அல்ல.


இது அரசியல் லாபம் மட்டும் கருதி  இருந்தால் நாம் அதைப் பற்றி கவலைப்பட போவதில்லை. பொருந்தாத கூட்டணிகள் எவ்வளவோ, பல காலங்களில் கூடி, உருவாகி, உடைந்து பின்பு  காணாமல் போயிருக்கிறது! அதுபோல ஒரு நிகழ்வாக இதைப் பார்க்க இயலவில்லை.


பா.ஜ.கவின் 22 மாநிலங்களில் மாபெரும்  வெற்றி எதிரிகள் நிலை குலையச் செய்து விட்டது. தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற வேறுன்ற முடியாது என்று கீறல் வி-ழுந்த ரெகார்டு வார்த்தைகளை  சொல்லி வந்தவர்களுக்கு திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா வெற்றிக்குப் பிறகு மரண பயம் வந்து விட்டது.


வெறும் 1.6 சதம் ஓட்டு, எம்.பி., & எம்.எல்.ஏ.,  & கவுன்சிலர் கூட இல்லாத மாநிலமாக இருந்த திரிபுராவில்  பா.ஜ.கவின் வெற்றி நாடு முழுவதும் எதிர்கட்சிகள் மரண பயத்துக்கு இட்டுச் சென்று விட்டது?

இதில் தமிழகத்தில் தி.மு.க & அ.தி.மு.க மாறி மாறி ஜெயித்து வந்த நிலையை ÔஜெÕ  உடைத் தெறிந்த பிறகு, ஸ்டாலின் குழுமம் தனது ஒரிஜினல் தேச விரோத முகத்தை காட்ட ஆரம்பித்து விட்டது.

 அதன் வெளிப்பாடு  தான் ராமராஜ்ய ரத  யாத்திரைக்கு ஸ்டாலின் ஒவர் ரியாக்ஷன், தமிமுன் அன்சாரியின் சட்டசபை டான்ஸ். ஜவாஹிருல்லாவின் புது அவதாரம்! முதலியன.


ஏற்கெனவே தமிழகத்தில் தேசிய சக்திகள் அடக்கி வாசிப்பதும், தேச விரோத சக்திகள் ஆட்டம் போடுவதும் வழக்கம். இப்போது  தேச விரோதா, மைனாரிட்டி சக்தி ஒன்று சேர்ந்துள்ளன.

மோடியை வீழ்த்த வேண்டுமென்ற ஒரு சிஷீனீனீஷீஸீ கிரீமீஸீபீணீ மட்டுமே காங்கிரசைக் கூட இக்குழுமத்தில் ஈர்த்திருக்கிறது. 


துரதிருஷ்டவசமாக கழகங்களிலிருந்து வெளியேறி பலர் இன்று காங்கிரசில் பொறுப்பு வகிப்பது இதற்கு காரணம்.
வேல்முருகன், தனியரசு, போன்றோர் தேச விரோத கும்பலின் றிணீவீபீ றீவீst  ல் இருக்கலாம். 

திருமா ஏற்கெனவே சர்ச்சுகளின் சம்பள பட்டியலில்  உள்ளார். தமிமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா  போன்றோர் மிஷிமிஷி ன் இந்திய ஏஜண்டுகள் இவர்களின் ஹிட் லிஸ்டில் மோடி உள்ளதால், இவர்களின் கைத்தடிகள் வேலைபார்க்கும் மீடியாக்கள் தேசவிரோத குரலாக தமிழகத்திறீ தினசரி ஒலிக்கிறது!


கோவை பா.ஜ.க அலுவலம், தலைவர் வீடு மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் ஒரு சாதாரணமான விஷயமா? இது ஏன் டி.வி விவாதங்களில் விவாதிக்கபடவில்லை? ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று எந்த மாற்றுக் கட்சி தலைவர்களிடம் டிவி காரர்கள் Òமைக்கைÕÕ நீட்டி கேள்வி கேட்கவில்லை?


எந்தப் பத்திரிகையும், தமிழ் பத்திரிகை நடுவு ந¤லையாளர்கள் உட்பட தலையங்கங்கள் எழுதவில்லை. இதுதான் ஒரு மிகப்பெரிய கான்ஸ்பிரசி & இஸ்லாமிய கிறிஸ்தவ கம்யூனிஸ்ட், இந்து விரோதிகளின் கூட்டுச் சதி.


ஏதோ ஆராய்ச்சிக் கட்டுரை மாதிரி பெரிய பெரிய வார்த்தைகளெல்லாம் எழுதுகிறீர்கள் என்கிற முணுமுணுப்பும் கேட்கிறது.

தி.மு.கவிற்கு அரசியல் நாகரீகம் என்றும் இருந்ததில்லை. இன்று மற்ற கட்சிகளிடம் அரசியல் நாகரீகம், மனிதாபிமானம் போன்றவை ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்கிற அதீத ஆசையால் தேச விரோதிகளின் சசித் திட்டத்தில் பலியாகி விட்டது.

உதாரணத்திற்கான சொல்கிறேன். கொங்கு ஈஸ்வன், தா.மா.கா வாசன் போன்றோர்கள் கூட கண்டனம் தெரிவிக்க பயப்படுகிறார்கள்.


ஆக தமிழகத்தில் தற்போது இரு துருவ அரசியல் வந்து விட்டதை பா.ஜ.க வரவேற்கிறது. 

சபாஷ் இச்சவாலை நெஞ்சு நிமிர்ந்து  பா.ஜ.க ஏற்கிறது. ஒன்றுமே இல்லாத  கட்சிக்காக எல்லாம் வைத்திருப்பவர்கள் ஒன்று கூடி எதிர்க்கிறார்கள் என்று மகிழ்ச்சியான சவால்!


தேசம் முழுவதும் மோடிக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்

. அது புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் மாதம் ஒரு மாநிலம் என அவரது வெற்றி வேட்டை  தொடர்வதால் ஏற்பட்ட அச்சம்!
தமிழகத்தில் தான் பா.ஜ.க இல்லையே. இப்படித்தானே அவர்கள் டி.விக்களில்  கூறுகிறார்கள். பின் ஏன் இப்படி என்றால் அதுதான் மரண பயம்?


ஒன்று மட்டும் நிச்சயம்! 

அசிங்கமான ஆபாசமான அநியாயமான, ஆபத்தான அரசியலை முன்னெடுத்து செல்லும் தமிழக அரசியல் கட்சிகளின் சகாப்தம் திரிபுரா, நாகலாந்து போல  எண்ணி 12 மாதத்திற்குள் முடியப் போவது நிச்சயம்!             

No comments: