Pages

Monday, June 13, 2011

எரிந்தபின் இன்று அழுதென்ன லாபம்

ஒரு சாமியார்     உண்ணாவிரதமிருந்தார்
ஊரே      திமிலோகப்பட்டது
சாமியாருக்கும்     ஏழைக்கும்
உண்ணாவிரதம்    இயல்புதானே
இதிலென்ன   திமிலோகம்...அமர்க்களம்..

உண்ணாவிரதம்     காரணமல்ல
உணமைதான்   காரணம்

ஊழலை    ஒழிப்பாராம்
கருப்புப் பணத்தை    கண்டுபிடிப்பாராம்

இரண்டையும்    ஒழிப்பதும்
காங்கிரஸை     ஒழிப்பதும்
ஒன்றுதானே...விடுவார்களா
தடி  அடி  நடத்தினார்கள்

அடிவாங்கினர்   மக்கள்
தப்பித்தார்    சாமியார்

வந்தவர்கள்   யாரும் ஊழல்    செய்யவில்லை
ஊழலுக்கும்   இவர்களுக்கும்    ஒருகாத  தூரம்
ஓட்டுப்போடும்   முன்    சிந்தித்திருந்தால்
“ராம்லீலாவில்”  சிதறியிருக்க    வேண்டாமே

கண்கெட்ட   பிறகு   சூரியநமஸ்காரமா
சூரியனும்   கைய்யும்    சும்மாவா விடும்
அணைப்பதுபோல   அழைத்து   எரித்து முடித்தது
எரிந்தபின்    இன்று    அழுதென்ன லாபம்

1 comment:

Yaathoramani.blogspot.com said...

இன்றுதான் தங்கள் பதிவுக்குள் நுழைந்தேன்
அத்தனையும் அட்டகாசம்
விஷயங்களை ஆதாரப்பூர்வமாகவும்
உணர்ச்சிப்பெருக்கோடும் எழுதிச் செல்வது
என் மனங்கவர்ந்தது
தொடர்ந்து வருவேன்
தொடர வாழ்த்துக்கள்