Pages

Monday, June 13, 2011

" குடி “....குடிகளை கெடுத்தது..

வெளியே “வேலைக்கு பெண்கள் தேவை “ என போர்ட் “..வைத்திருந்தேன்..

என்னுடைய நிறுவனத்திற்கு வேலைகேட்டு...கடந்த இரண்டு மாதங்களில் மூன்று பெண்கள் .வந்தனர்.

அவர்களிடம் வேலைக்கு சேர்க்கும் முன் செய்யும் “கேள்விக் கணைகளை”--தொடுத்த படலத்தில் கிடைத்த தகவலகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் .....

ஒருவர் கீதா...வயது 30 இருக்கும்...கணவர் திருப்பூரில் பனியன் வியாபாரம் ...5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரே மகன்...”ஜாலிக்காக “குடித்த கணவன்..” ஜோலியே” குடிகாரனான்..தினசரி..அடி,தடி..சண்டை..சச்சரவு...கொஞ்சம் கொஞ்சமாக தொழில் மூடப்பட்டது.. இரவு படுக்கைக்கு மட்டுமே வீடு..

மாமியார் ஓவு பெற்ற ஆசிரியை..அதில் கொஞ்சம் பென்ஷன்...வரும் ஒரே வருவாயும் பையன்மீது வைத்த “மோசமான பாசத்தால் “குடிக்கவே” போனது..
வாழ வழிதெரியாமல் கோவை அரசினர் மகளிர் காப்பகத்தில் தஞ்சம்...வடிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு,  மகனை எங்காவது ஹாஸ்டலில் சேர்த்துவிடவும்.. தனக்கு வேலை கேட்டும் மன்றாடினாள்..

இரண்டாவது ..மாலா. வயது 24..தான்...சொந்த ஊர்..மதுரை...2.  .4..வயதில் இரண்டு  மகன்கள்..ஸாரி..கைக்குழந்தைகள்..இவள் கணவனும் குடிக்கடிமை...வீட்டை உதரி எரிந்துவிட்டு ஹோமில் தஞ்சம்...எப்படியாவது வேலை கொடுங்கள்..குழந்தைகளை கரைதேற்றும் வரை நிச்சயம் வேலையில் இருப்பேன் என உறுதி தந்தாள்..

மூன்றவது ..கலா...சேலத்துப் பெண்...இவள் கணவனும் வீட்டைவிட்டு “டாஸ்மாக்கிலேயே “ தஞ்சமிருந்தான்..
3 குழந்தைகள்...10..6...3..வயது..மூன்றாவது பெண்...”இனி அவர் திருந்தவே வாய்ப்பில்லை...வீட்டுக்கு போவதில் அர்த்தமில்லை...விசுவாசமாக வேலை செய்வேன்..வேலை கொடுங்கள்..””இப்படி சொன்னாள்..கலா..

இவை கண்ணுக்குத்தெரிந்த சம்பவங்கள்...கண்ணுக்குத்தெரியாமல்...கிராமம்..நகரம் தோறும் எத்தனை..கலா....மாலா..கீதாக்களோ...

“ குடி” உயர..அரசின் வருவாய் உயரும்......”குடி “ உயர..கலாக்களின்..எண்ணிக்கையும் உயருகிறதே...

இலங்கை இனப்படுகொலையில் தமிழர்களில்...  தந்தையை இழந்த “”தளிர்கள் ‘ஏராளம்..தமிழ் நாட்டில் டாஸ்மாக் நடத்தும் படுகொலையால்...தந்தை இருந்தும் குடும்பத்தை இழந்து நிற்கும் “ தளிர்கள் “..பெருகிவருகிறதே....

நேற்று...சென்னையில் ஆட்டோவில்   சென்ற போது டிரைவரிடம் கேட்டேன் ....அம்மா..ஆட்சி எப்படி என்று..--....இப்பல்லாம்..டாஸ்மாக்குல..அடிதடி கிடையாதுங்க..க்யூல நின்னுதான் வாங்கணும் என்றான்...

எவ்வளவு..இம்ப்ரூவ்மெண்ட்...ஆமாம்..அம்மாவுடைய “மிடாஸ் “ ( தொட்டதெல்லாம் பொன்னாகணும்னு.. வரங்கேட்ட புண்ணியவான் பேர்  ).....( பேராசையின் புதுப்பெயர் ) கம்பெனி கருணாநிதியளவு சம்பாதிக்க வேண்டாமா?...

குடியால் 30..40..வயதிலேயே “ சிவலோகப் பிராப்தி “ கிட்டும் இளைஞர்கள் பெருகிவருகிறார்கள்...இனி 5ஆம் வகுப்பு 6 ஆம் வகுப்பு படிக்கும் போதே பள்ளி டி.ஸி.யில்..அப்பா பெயருக்குமுன்  “”லேட் “..என்று போடும் மாணவர்கள் பெருகும் அபாயம் வரப்போவது... மிகுந்த கவலை அளிக்கிறது..

1 comment:

Yaathoramani.blogspot.com said...

அரசின் கல்லா நிறைவதற்க்காக
எத்தனை கலா மாலா கீதாக்கள்
சாலையில் தூக்கி எறிியப் படுகிறார்கள்
மனம் கனக்கச் செய்து போகும் பதிவு
உங்கள் எழுத்து நடை
சொல்லிச் செல்லும் விதம் அருமையாக உள்ளது
தொடர வாழ்த்துக்கள்