Pages

Saturday, October 29, 2011

கடவுள்..( “ஜெ” )..சாட்சியாகநம் மக்கள் இம்முறையும் “  EXTREME " ஆக முடிவு எடுத்துள்ளார்கள்..ஏப்ரல் சட்டமன்ற தேர்தலில் ஒரேடியாக திமுகவை தண்டித்தது போல..6 மாதம் கழித்து இந்த அக்டோபரிலும் அதே முடிவை மீண்டும் உறுதி செய்துள்ளனர்..

திமுகவி தண்டனை உறுதி செய்யபட்டது என்போர் சிலர்..அதிமுக ஆட்சிக்கு கிடைத்த நற்சான்றிதழ் என்போறும் சிலர்.

மின்வெட்டு தீரவில்லை..ஏன் தளர்வுகூட இல்லை..விலைவாசி குறைய வில்லை..லஞ்சம் தலையை இன்னும் “முடிந்து “ கொள்ளக்கூட இல்லை..விரித்தாடிக்கொண்டுதான் இருக்கிறது..

“சமச்சீர் கல்வி...ராஜிவ் கொலையாளிகளுக்கு தூக்கு...கூடங்குளம் அணிமின் நிலையம் “ பிரச்சினைகளில்..முதலில் ஒரு கருத்து...பின்னர் பொது கருத்து --பிரஷர்... ஜாஸ்தியான போது..”யூ டர்ன் “எடுத்து “அந்தர் பல்டி “ அடித்து ‘ ஜெ ‘ யின் மீண்டும் புதுக்கருத்து..

இதுதான் “ ஜெ “ கடந்து வந்த 6 மாதங்கள்...கடந்த 3 மாதத்துக்கு முன் “தினத்தந்தியில் “ ஜெ காரில் செல்லும் படம் ஒன்று வந்தது..அதில் கார்களின் அணிவகுப்பில்லை..போக்குவரத்து நிறுத்தப்படவில்லை..இதுதான் நாம் எதிர்பார்ப்பது...” ஜெ” மாறியிருந்தால் அது வரவேற்கத்தக்கது..என்று நான் எழுதியிருந்தேன்.

சிரிப்பு நடிகர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ திரு எஸ்.வி.சேகர் அவர்கள் என் கட்டுரையை படித்துவிட்டு “ ஜெ  தன் காலில் யாரும் விழுவதை விரும்பவில்லை..புகழ்ச்சியிலும் அவர்க்கு உடன்பாடில்லை..” என்பது மாதிரி எனக்கு எழுதியிருந்தார்..

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பல அதிமுக பிரதிநிதிகள்..”ஜெ “ யின் பேரால் உறுதி ஏற்றதும்...சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் திரு சைதை. துரைசாமி அவர்கள் உறுதிமொழியை படித்து அதில்” கடவுள் அறிய ”..என்னும் வாசகத்தை படிக்கும் போது  பக்கத்தில் அமர்ந்திருந்த “ஜெ” யை திரும்பிப்பார்த்ததும்..அப்போது “ஜெ” யின் முகத்தில் ஏற்பட்ட புன்முறுவலும்..வெட்கமும்..எஸ்.வி.சேகரின் பதிலை ஆமோதிப்பதாக இல்லை..

ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட திமுகவும் அதன் உள்ளாட்சி பிரதிநிதிகளும் அதிமுகவினருக்கு இந்தவிஷயத்தில் எந்த விதத்திலும் குறையவில்லை..அவர்கள் கலைஞர் பெயரால் உறுதி ஏற்ற “தமாஷ்” களும் அரங்கேறியது...

பிரிட்டிஷ்காரன் போய் வெகுநாளாகிவிட்டது..அடிமைத்தனம் அப்படியே தொடர்கிறது..”ஜால்ரத்தனத்துக்கு “ அந்நியப்பட்ட அந்நிய நாட்டுப்பெண் சோனியாவைக்கூட அதற்கு அடிமைப்படுதிய பெருமை நம் காங்கிரஸ் சகோதரர்களைச்சாரும்..

திமுக ஆட்சியில் காதை செவிடாக்கியது “ஜால்ரா சத்தம் “..ஏற்கனவே “கடவுள்..துர்க்கா...மகிஷாசுரமர்த்தினி..ஜீஸஸ் “--என ஓவர் ஜால்ரா சத்ததினால் மக்கள் “ ஜெ “க்கு  5 ஆண்டு ஓய்வு கொடுத்திருந்தனர்.

மதுரை..... சத்ததிற்கு பெயர் போனது ..மார்கழி மாதம் மதுரையின் ஒவ்வொரு கோயிலும் அது பிளாட்பார கோயில் உட்பட “ கோனிகல் ஸ்பீக்கரில் “ அலறும்..இந்த “நாய்ஸ் பொலுஷனிலிருந்து” மதுரையை காப்பாற்ற இதுவரை யாராலும் முடியவில்லை.ஓவராக போனால் அது பக்தி இல்லை..தமாஷ்...இடைஞ்சல்..

மும்மர் கடாஃபி உட்பட எத்தனையோ சர்வாதிகளைக்கண்டு மக்கள் பயந்து பணிந்து போயிருக்கிறார்கள்..அது உயிருக்கு பயந்து.....இங்கு “ஜெ”யைக்கண்டு பயப்பட என்ன இருக்கிறது..பதவியோ   ஐந்து ஆண்டுகாலம்தான்..அதுவும் திக்விஜயசிங் மாதிரி ஒரு “லூஸு” பிரதமரானால் உடனே ஆட்சியை டிஸ்மிஸ் செய்துவிட முடியும்....

பின் ஏன் அதிமுக காரன் “ ஜெ “ காலில் விழுகிறான்.. பதவி படுத்தும் பாடு..அதிமுகவில் பதவிகள் தியாகம் --சீனியாரிட்டி..அடிப்படையில் கொடுப்பதில்லை...கிடைப்பதில்லை..இந்த உண்மை கடைசியாக நடந்த துணை மேயர் தேர்வுவரை தொடர்கிறது..

இந்த “தொடர்ச்சிதான் “ காலில் விழுவதையும்..கடவுளாக துதி படுவதையும்..தூண்டுகிறது..

சாமியார்கள் சிலரே தங்களை அவதாரமாகவும் கடவுளாக அலங்கரிதுக்கொள்வதையும் பார்க்கும் போது..ஒரு சாதாரண அரசியல்வாதி “ஜெ’ க்கு ”கடவுளாக” ஆசை வருவது ஆச்சரியம் இல்லையே..

5 comments:

s.ve.சேகர் said...

நல்ல கட்டுரை .
நான் சிரிப்பு நடிகனல்ல.சிரிப்புப்படங்களின் நாயகனாகத்தான் இருந்திருக்கேன்.
நீங்கள் குறிப்பிட்ட காலில் விழும் கலாசாரம் பதவிக்காக மட்டும்தான்.அதில் எள்ளளவும் உண்மையான
மரியாதை கிடையாது. இன்றும் “ஜெ” காலில் விழுபவர்களில் பெரும்பான்மையோர் அவரின்
முதுகுப்பின்னால் புறம் பேசுபவர்களே.

எஸ்.ஆர்.சேகர் said...

அன்பு நண்பர் சேகர் அவர்களுக்கு வணக்கம்.

தாங்கள் ஹாஸ்ய சக்ரவர்த்தி எனபதும்---சிரிப்பு படங்களின் கதானாயகன் என்பதும் உண்மையிலும் உண்மை..சிரிப்பு நடிகர் என குறிப்பட்டதை திருத்திக்கொள்கிறேன்..

தங்களுடைய பதிலில் உள்ள தகவல்களே இன்றைய “ஜெ” வின் யதார்த்தமான உண்மை

எஸ்.ஆர்.சேகர் said...

அன்பு நண்பர் சேகர் அவர்களுக்கு வணக்கம்.

தாங்கள் ஹாஸ்ய சக்ரவர்த்தி எனபதும்---சிரிப்பு படங்களின் கதானாயகன் என்பதும் உண்மையிலும் உண்மை..சிரிப்பு நடிகர் என குறிப்பட்டதை திருத்திக்கொள்கிறேன்..

தங்களுடைய பதிலில் உள்ள தகவல்களே இன்றைய “ஜெ” வின் யதார்த்தமான உண்மை

எஸ்.ஆர்.சேகர் said...
This comment has been removed by the author.
எஸ்.ஆர்.சேகர் said...

அன்பு நண்பர் சேகர் அவர்களுக்கு வணக்கம்.

தாங்கள் ஹாஸ்ய சக்ரவர்த்தி எனபதும்---சிரிப்பு படங்களின் கதானாயகன் என்பதும் உண்மையிலும் உண்மை..சிரிப்பு நடிகர் என குறிப்பட்டதை திருத்திக்கொள்கிறேன்..

தங்களுடைய பதிலில் உள்ள தகவல்களே இன்றைய “ஜெ” வின் யதார்த்தமான உண்மை