Pages

Monday, June 13, 2011

" குடி “....குடிகளை கெடுத்தது..

வெளியே “வேலைக்கு பெண்கள் தேவை “ என போர்ட் “..வைத்திருந்தேன்..

என்னுடைய நிறுவனத்திற்கு வேலைகேட்டு...கடந்த இரண்டு மாதங்களில் மூன்று பெண்கள் .வந்தனர்.

அவர்களிடம் வேலைக்கு சேர்க்கும் முன் செய்யும் “கேள்விக் கணைகளை”--தொடுத்த படலத்தில் கிடைத்த தகவலகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் .....

ஒருவர் கீதா...வயது 30 இருக்கும்...கணவர் திருப்பூரில் பனியன் வியாபாரம் ...5 ஆம் வகுப்பு படிக்கும் ஒரே மகன்...”ஜாலிக்காக “குடித்த கணவன்..” ஜோலியே” குடிகாரனான்..தினசரி..அடி,தடி..சண்டை..சச்சரவு...கொஞ்சம் கொஞ்சமாக தொழில் மூடப்பட்டது.. இரவு படுக்கைக்கு மட்டுமே வீடு..

மாமியார் ஓவு பெற்ற ஆசிரியை..அதில் கொஞ்சம் பென்ஷன்...வரும் ஒரே வருவாயும் பையன்மீது வைத்த “மோசமான பாசத்தால் “குடிக்கவே” போனது..
வாழ வழிதெரியாமல் கோவை அரசினர் மகளிர் காப்பகத்தில் தஞ்சம்...வடிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு,  மகனை எங்காவது ஹாஸ்டலில் சேர்த்துவிடவும்.. தனக்கு வேலை கேட்டும் மன்றாடினாள்..

இரண்டாவது ..மாலா. வயது 24..தான்...சொந்த ஊர்..மதுரை...2.  .4..வயதில் இரண்டு  மகன்கள்..ஸாரி..கைக்குழந்தைகள்..இவள் கணவனும் குடிக்கடிமை...வீட்டை உதரி எரிந்துவிட்டு ஹோமில் தஞ்சம்...எப்படியாவது வேலை கொடுங்கள்..குழந்தைகளை கரைதேற்றும் வரை நிச்சயம் வேலையில் இருப்பேன் என உறுதி தந்தாள்..

மூன்றவது ..கலா...சேலத்துப் பெண்...இவள் கணவனும் வீட்டைவிட்டு “டாஸ்மாக்கிலேயே “ தஞ்சமிருந்தான்..
3 குழந்தைகள்...10..6...3..வயது..மூன்றாவது பெண்...”இனி அவர் திருந்தவே வாய்ப்பில்லை...வீட்டுக்கு போவதில் அர்த்தமில்லை...விசுவாசமாக வேலை செய்வேன்..வேலை கொடுங்கள்..””இப்படி சொன்னாள்..கலா..

இவை கண்ணுக்குத்தெரிந்த சம்பவங்கள்...கண்ணுக்குத்தெரியாமல்...கிராமம்..நகரம் தோறும் எத்தனை..கலா....மாலா..கீதாக்களோ...

“ குடி” உயர..அரசின் வருவாய் உயரும்......”குடி “ உயர..கலாக்களின்..எண்ணிக்கையும் உயருகிறதே...

இலங்கை இனப்படுகொலையில் தமிழர்களில்...  தந்தையை இழந்த “”தளிர்கள் ‘ஏராளம்..தமிழ் நாட்டில் டாஸ்மாக் நடத்தும் படுகொலையால்...தந்தை இருந்தும் குடும்பத்தை இழந்து நிற்கும் “ தளிர்கள் “..பெருகிவருகிறதே....

நேற்று...சென்னையில் ஆட்டோவில்   சென்ற போது டிரைவரிடம் கேட்டேன் ....அம்மா..ஆட்சி எப்படி என்று..--....இப்பல்லாம்..டாஸ்மாக்குல..அடிதடி கிடையாதுங்க..க்யூல நின்னுதான் வாங்கணும் என்றான்...

எவ்வளவு..இம்ப்ரூவ்மெண்ட்...ஆமாம்..அம்மாவுடைய “மிடாஸ் “ ( தொட்டதெல்லாம் பொன்னாகணும்னு.. வரங்கேட்ட புண்ணியவான் பேர்  ).....( பேராசையின் புதுப்பெயர் ) கம்பெனி கருணாநிதியளவு சம்பாதிக்க வேண்டாமா?...

குடியால் 30..40..வயதிலேயே “ சிவலோகப் பிராப்தி “ கிட்டும் இளைஞர்கள் பெருகிவருகிறார்கள்...இனி 5ஆம் வகுப்பு 6 ஆம் வகுப்பு படிக்கும் போதே பள்ளி டி.ஸி.யில்..அப்பா பெயருக்குமுன்  “”லேட் “..என்று போடும் மாணவர்கள் பெருகும் அபாயம் வரப்போவது... மிகுந்த கவலை அளிக்கிறது..

எரிந்தபின் இன்று அழுதென்ன லாபம்

ஒரு சாமியார்     உண்ணாவிரதமிருந்தார்
ஊரே      திமிலோகப்பட்டது
சாமியாருக்கும்     ஏழைக்கும்
உண்ணாவிரதம்    இயல்புதானே
இதிலென்ன   திமிலோகம்...அமர்க்களம்..

உண்ணாவிரதம்     காரணமல்ல
உணமைதான்   காரணம்

ஊழலை    ஒழிப்பாராம்
கருப்புப் பணத்தை    கண்டுபிடிப்பாராம்

இரண்டையும்    ஒழிப்பதும்
காங்கிரஸை     ஒழிப்பதும்
ஒன்றுதானே...விடுவார்களா
தடி  அடி  நடத்தினார்கள்

அடிவாங்கினர்   மக்கள்
தப்பித்தார்    சாமியார்

வந்தவர்கள்   யாரும் ஊழல்    செய்யவில்லை
ஊழலுக்கும்   இவர்களுக்கும்    ஒருகாத  தூரம்
ஓட்டுப்போடும்   முன்    சிந்தித்திருந்தால்
“ராம்லீலாவில்”  சிதறியிருக்க    வேண்டாமே

கண்கெட்ட   பிறகு   சூரியநமஸ்காரமா
சூரியனும்   கைய்யும்    சும்மாவா விடும்
அணைப்பதுபோல   அழைத்து   எரித்து முடித்தது
எரிந்தபின்    இன்று    அழுதென்ன லாபம்

Sunday, June 5, 2011

புதிய ஊழல் போராளிகள்— ஒரு இந்து நேசனின் சிந்தனைகள்.

புதிய ஊழல் போராளிகள்—
ஒரு இந்து நேசனின் சிந்தனைகள்.

64 ஆண்டுகளாக ஊழல் கொத்துகொத்தாக பெருகி இன்று “சிக்கு பிடித்த ஜடாமுடியாக” தலை விரித்து ஆடுகிறது.
எல்லா கொசுவிரட்டிகளும் பயனற்றுப் போய் இந்தியாவை இன்று ஊழல கொசு …கடித்து…குதறி..ரத்தம் உறிஞ்சி ”அனீமிக் “ ஆக்கி வருகிறது.

ஊழலின் மனோத்துவம் என்ன?..அது இந்தியாவில் வளர்ந்த கதை என்ன?

ஊழலின் ஊற்றுக்கண் காங்கிரஸ்..ஊழலை இந்தியாவிற்கு அறிமுக படுத்தியது காங்கிரஸ்..நேருவின் “முந்த்ரா”..ஊழல்---இந்திராவின் “நகர்வாலா “ ஊழல்---ராஜீவின் “பொஃபர்ஸ்” ஊழல்---நரசிம்ஹராவின் எம்பிக்களை “விலைக்குவாங்கிய ஊழல்---இந்த ஊழல் “கேஸ் பைப்பின் “”பிரஷரை”—அதிகமாக்கி உடைத்தது—2ஜி..ச்பெக்ட்ரம் ஊழல்—அந்தவகையில் தமிழனின் தலைகுனிவுக்கு “”மா””--- பெருமை சேர்த்தது..ஆண்டிமுத்து ராசாதான்…தமிழனை அனாதையாக விடாமல்..கை கோர்த்து காத்தது..கல்மாடிதான்..

மந்திரிகள் அடித்த கொள்ளைகளுக்கு வழிவகை செய்து கொடுத்து அதில் சிந்தியதை அள்ளிப்பருகும் அதிகாரிகள்…இவர்களின் ஊழலை “கண்காணிக்காமல்”..கண்னை மூடிக்கொண்டு ....ஊழலை ஊர்வலம் வரவிட்ட  பிரதமர்…

இது எப்போது மறையும்?...இதிலிருந்து எப்போது விடுதலை?...ஆள்பவர்கள் வாக்கு கொடுப்பது..வாளாவிருப்பதும்…வாடிக்கையாய் போய் விட்டதே?..என வருந்திய மக்களுக்கு--- தேவதூதனாக  வந்தார் சமூக சேவகர் அண்ணா  ஹஸாரே..

வெடித்துசிதறிய மக்கள் குமுறல்களின் வடிகாலே அண்ணா ஹஸாரே…நாலே நாட்களில் நாடே அவரிடம் போனது…சொல்லிலும் செயலிலும் தூய்மையும்..நேர்மையும் கலந்து…….சதோஷ் ஹெக்டே…அரவிந்த் ஹெஜ்ரிவால்…கிரண்பெடி…ஷாந்தி பூஷன்..என்ற வலுவான வழி நடத்தும் “டெக்னிக்கல்”…குழுகொண்ட சமூக இயக்கமானது”

யாரையும் காயப்படுத்தி முடமாக்கும் காங்கிரஸ்..அண்ணா ஹஸாரேவை முடமாக்க ஷாந்தி பூஷன் மீது சேற்றை வாரி இரைத்தது..அக்குழுவை உடைக்க அத்தனை “தகிடு தத்தங்களையும் செய்தது..மக்கள் பலம் பெருகியதால் அரசு பேச்சு வார்தைக்குவந்தது..ஜனலோக்பால் வரைவு பேச்சுவார்தை தினசரி நடந்தது..பலன் பூஜ்யமாகும் வண்ணம் சகுனிகள் கபில் சிபலும் வீரப்பமொய்லியும் பார்த்துக்கொள்ள பணிக்கப்பட்டனர்.

இதே நேரத்தில் ஊழல் எதிற்புக்கு புதிய “காற்றழுத்த தாழ்வு மண்டலம்” தோன்றி “பாபா ராம்தேவ் என்ற புதிய ஊழல் எதிற்பு புயல் உருவானது..இது காவியுடை போர்த்திய புயல்..கருப்புப்பணத்தை வெளியே கொண்டுவர கடுமையான 10 கோரிக்கைகளை அரசிடம் வைத்தது...


பேச்சு வார்த்தை என்னும் பெயரில் மத்திய மந்திரிசபையே அவரிடம் மண்டியிட்டது..”சிவில் சொசைட்டி “குழுவை உடைத்தெரிய நினைத்து அன்னா ஹசாரேயை தனிமைப்படுத்தும் முயற்சிகளையும் அரசு  தொடர்கிறது..

பாபா ராம்தேவின் பலம் என்ன?...அரியானாவில் சாதாரண யாதவ் குடும்பத்தில் பிறந்த நடுவயது சாமியாருக்கு 40 லட்சம் பேரில்  தொடங்கிய ஆதரவு… இன்று நாடே அவர் பின்னால் வரக்காத்திருக்கிறது..பெருகி வந்த ஆதரவில் பயந்துபோன மன்மோகன் சிங் அரசு ஸ்டார் ஓட்டலிலும்…விமான நிலய ஓய்வு அறைகளிலும் அவரிடம் துரத்தி துரத்தி பேச்சு வார்த்தை நடத்தி எதிர் பார்த்த மாதிரியே ஏமாற்றி கையெழுத்து வாங்கிக்கொண்டது..

உண்ண விரதம் இருந்த ராம்தேவ்..ராம்லீலா மைதானத்திலிருந்து நள்ளிரவில் அகற்றம்,,,..தடியடி..கண்ணீர்புகை ..இனி பேச்சு வார்த்தை நடக்குமா? பாபா ராம்தேவால் ஊழலை ஒழித்துவிட முடியுமா?..வெளிநாட்டிலுள்ள கருப்புப் பணம இந்தியாவுக்குள் வருமா? ஆள்பவர்கள் பணிவார்களா?..இவை அத்தனையும் “மில்லியன் டாலர் கேள்விகள்”

ஊழலை ஒழிக்க ஒரு சாமியார் புறப்பட்டுரிக்கிறார்..இது எந்த அளவு வெற்றியில் முடியும்?—சரித்திரம் கண்ட சாட்சிகள் என்ன?

1885 முதல் 1909 வரை சுதந்திரப் போராட்டம் மிதவாதிகள் கைய்யில் இருந்தது..பிறகு திலகரும் லாலா லஜபதிராய் போன்ற வேகமான தலைவர்கள் கைகளில் வந்தது..மக்களை தட்டி எழுப்ப அன்றைய சூழலில் திலகர் “சத்ரபதி சிவாஜியின் இந்து சாம்ராஜ்ய தினம்…கணேஷ் சதுர்த்தி “ முதலியவற்றைக் கொண்டாடினார்..

சும்மா இருக்குமா பிரிட்டிஷ் அரசு…அதுவரை மதபேதமின்றி நடந்த சுதந்திர போராட்டத்திற்கு ஆங்கில அரசு  இந்துமதச்சாயம்
பூசியது..முஸ்லிம்களுக்கு சலுகை அளித்து திசை திருப்பியது.. விளைவு சுதந்திரப் போராட்டம் இந்து—முஸ்லிம் பிரிவினைப்போராட்டமாகி..நாடும் துண்டாடப்பட்டது..சரித்திரம்..

பாபா ராம்தேவின் தீவிரம்..அவரை நாடி வரும் லட்சக்கணக்கான
மக்கள் கூட்டம்—இவைகளைக்கண்டு காங்கிரஸ் அரசு அதிர்ந்து போயிருக்கிறது..இது அரசை கவிழ்த்துவிடும் என்பதால் எதிர்பார்த்த படியே பாபா மீது சேற்றை வாரி வீசத்துவங்கியுள்ளது..

தனியார் ஜெட் விமானத்தில் அவரது பயணம்..ஸ்டார் ஓட்டலில் அவருடன் பேச்சு வார்த்தை..இவைகள் குற்றச்சாட்டுகளாய் காங்கிரஸ் கூறதுவங்கி விட்டது…

ராம் தேவும் தன் பங்குக்கு ஆங்கிலத்தை அகற்றி இந்திக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சொல்வதையும் விரைவில் காங்கிரஸ் கையில் எடுக்கும்..தெலுங்கானா கோரிக்கையை வெட்டி சாய்த்தது போல நாடுமுழுதும் உள்ள இந்தி பேசாத மக்களை பாபாவிடமிருந்து வெட்டிப் பிரிக்கும்.. மொழியின் பெயரால் எதிர்ப்பு அலையை உருவாக்கும்..

யோகாவிற்கு முதலிடம் என்ற அவரது கோரிக்கைக்கு இந்துமத சாயம் பூசி முஸ்லிம்..கிறிஸ்தவர்களை ஊழல் எதிற்பு இயக்கத்திலிருந்து  பிரிக்க முயலும்..

உலகநாடுகளிலேயே மிக வேகமா வளர்ந்து வரும் இந்தியா...இதன்  சாபக்கேடு “ஊழல்” …..ஏக இந்தியாவும் பொங்கியெழுந்து அதை ஒழிக்க துடிக்கும் இவ்வேளையில்…ராம்தேவை  இந்துமதவாதியாக்கி…மதச்சாயம் பூசும் படலம் தொடங்கியாகிவிட்டது..எதிபார்த்தபடி அபிஷேக் சிங்வியும்..திக் விஜய சிங்கும் இதை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்..இதைத்தான்  பிரிட்டிஷார் திலகருக்கெதிராக அன்றே செய்தார்கள்..இன்று காங்கிரஸ் செய்கிறது..

ராம்தேவ்வின் ஆஸ்ரமம் இனி அரசால் சல்லடை போட்டு சலிக்கப்படும்..இன்றைக்குள்ள சில “கார்பரேட்” சாமியார்கள் போல ராம்தேவ்வும் சற்று தூக்கலாக இருப்பது காங்கிரஸின் “உடைப்பு” வேலைகளுக்கு பக்கபலமாக இருக்கும்…அண்னா ஹசாரேவின் பேச்சு… நடவடிக்கைகள்…. போல பாபாவின் பேச்சுக்கள் ஸ்திரமாக இல்லாததும் ..குழப்பம் ஏற்படுத்தும் காங்கிரஸின் முயற்சிகளுக்கு வலுசேர்க்கும்..

லோக்பால் மசோதாவில் பிரதமரையும் சேர்ப்பது அரசு நிர்வாகத்தில் அவரது மதிப்பை குறைக்கும்..அவர் குற்றமற்றவர் என பின்னாளில் நிரூபிக்கப் பட்டாலும் அரசு நிர்வாகம் சீர்குலையும்..ஸ்தம்பிக்கும் எனபது ஒரு வாதம்…சமூக குழுக்கள் இன்று பிரதமரை சேர்க்க வலியுறுத்துவதன் நோக்கம் ,,மன்மோகன் சிங் மாதிரி ஒரு பிரதமர்..ஊழலை அமைதியாக பார்த்துக்கொண்டிருப்பதும்..தடுக்க வேண்டியவரே துணை போவதாலும்தான்..

வரி ஏய்ப்பு என்பது நாட்டுக்கு மிகப்பெரிய நஷ்ட்டம்..ஆனாலும் இந்தியாவில் சம்பாதித்த கருப்புப் பணத்தை அந்நிய வங்கிகளில் முதலீடு செய்வது நாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்..அது சர்வதேச பயங்கரவாதிகள் கையில் விளையாடுகிறதா? நம் நாட்டிற்க்கு எதிரானவர்களிடம் முதலீடு செய்யப் படுகிறதா?—யாருக்குத் தெரியும்?—இந்த முதலீடுகள் நாட்டையே அழிக்கும் அணுகுண்டுகள்..

உள்நாட்டில் ஊழலையும் வெளிநாட்டில் கருப்பு பண முதலீடுகளையும் –கடந்த 64 ஆண்டுகளில் இல்லாத அளவு சோனியா தலைமயிலுள்ள கங்கிரஸ் அரசு செய்து வருகிறது..இந்த கொதிப்பின் வெளிப்பாடே பாபா ராம் தேவும்..அண்னா ஹசாரேயும்..

1975இல் லோக்நாயக் ஜயபிராகாஷ் நாரயண் விடுத்த அறைகூவல்“முழுப் புரட்சி”.....அதற்கு நாடு இப்போதுதான் தயாராகி வருகிறது..நம் கவலையெல்லாம் “வெண்ணெய் திரண்டும் வரும் போது தாழி உடைந்து விடக்கூடாதே” எனபதுதான்..

நாட்டை பிளந்தவர்கள்…16000 சதுரமைல்கள் சீனாவிடம் விட்டுக்கொடுத்தவர்கள்…கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர்கள்...கூர்க்காலேண்ட்—தெலிங்கானா போராட்டங்களை சிதைத்தவர்கள்..அந்நியப் பெண்ணை இந்தியப் பிரதமாக்கி... நாட்டை இத்தாலிக்கு அடகு வைக்க துடிப்பவர்கள்.....இந்த காங்கிரஸ்காரகள்..

இவர்கள் பாபாராம்தேவ் –அன்னா ஹசாரே..தலைமயிலான ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை..உடைத்து விடாமலிருக்க இவ்விருவருமே விழிப்போடு இருக்கவேண்டும்..

ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்தபின் வாராது வந்த மாமணி போல் உள்ளது…இன்றைய ஊழல் எதிர்ப்பு இயக்கம்..இது காக்கப்பட வில்லையானால்..அது நம் ஜனநாயகத்திற்கு பேரிடியாகும்..

Thursday, June 2, 2011

வீட்டுக்குள் போன ”நிதியால்” ரோட்டுக்கு வந்த “நிதிகள்”
“அஸ்ட்ரோ ஏஷியா நெட்வொர்க்” என்பது ஒரு லெட்டர்பேட் கம்பனி…இந்த லெட்டர்பேட் இன்னொரு லெட்டர்பேட் மேக்ஸ் எனபதின் பினாமி..ஏர்செல் என்னும் செல்போன் கம்பனியை வாங்கியுள்ளது..

இது தயாநிதி மாறன் “தயவால்” நடந்ததால்..அந்த “தயவுக்கு “ கைமாராக ரூ.840 கோடி தயாநிதி மாறன் அண்ணன் கலாநிதி மாறனுக்கு தரப்பட்டுரிக்கிறது..அதாவது “டெக்னிக்கலாக”…முதலீடு செய்யப்பட்டுரிக்கிறது..

தாத்தா..கருணாநிதி கம்பனி கலைஞர் டிவி..சாஹித் பல்வாவிடமிருந்து கடனாக ரூ.210 கோடி பெற்றது..அதாவது கையூட்டை..டெக்னிக்கலாக..கடனாக வாங்கி..கண்ணு கனிமொழி கம்பி எண்ணுது….

இப்போது “டெஹல்கா” பத்திரிக்கையோடு சேர்ந்து வடக்கித்திய பத்திரிக்கைகள் அனைத்தும் தயாநிதியை துரத்தோ துரத்து என்று துரத்து கிறது..

இம்முறை தயாநிதி தப்பிவிடமுடியாது…தடுக்கிவிழத்தான் முடியும்..அது என்ன கர்மமோ சோனியாவை “ஆன்டி”என யார் அழைத்தாலும்..அவர்களுக்கு “திஹார் ஜெயிலில்ல”…ரூம் தயாராவது தவிற்கமுடியாதது ஆகிவிட்டது..

சோனியாவை “ஆன்டி” என்றழைத்த கனிமொழி முதல் ஆளாய் திஹாருக்கு போயாகிவிட்டது..தம்பி தயாநிதி ரொம்ப நாளா சோனியாவை ஆன்டி என்கிறார்..சனி கொஞ்சம் ஸ்லோ..ஆனா இப்ப புடுச்சுடுச்சு..தயாநிதிக்கு திஹார்ல ரூம் ரெடியா இருக்கு..போகிற தேதிதான் முடிவாகல்ல

“மக்கள் நிதியை” வீட்டுக்கு கொண்டுபோனதால்
தயா..கலா..கருணா..”நிதிகள்” ரோட்டுக்கு வருகிறார்கள்

ஜெ..மாறவில்லை..பெற்றோர் வேதனை தீரவில்லை..

ஜெ..மாறவில்லை..பெற்றோர் வேதனை தீரவில்லை..

கல்விக்கட்டணத்தை கண்டபடி உயர்த்தி..பெற்றோர்கள் வயிற்றில் பெட்ரோலை ஊற்றும் தனியார் பள்ளி நிர்வாகம் செய்யும் தவறுகள் ஜெ.யுக்கு தெரியாதாம்..

நேற்றைக்கு கல்விக்கட்டணம் பற்றிய ஒரு கேள்விக்கு ஜெ..யின் பதில் நெஞ்சில் நெருப்பை ஊற்றியது..”இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை..வந்தால் பரிசீலிக்கிறேன்’—இதுதான் அவர் பதில்.

போனவாரம்..கட்டண உயர்வில் அரசு தலையீடாது..என அவர் சொன்னதும் நெஞ்சு திக்கு..திக்கு. என்றது.
நான்காண்டுகாலமாக..,மாணவர்கள் தனியார் பள்ளிகள் முன்பு அனாதையாக கூடிநிற்பதும்… பள்ளிகள் தலைக்குதலை..கைக்கு வந்தபடி கல்விக்கட்டணம் வசூல் செய்வதும்..எல்லா டி.விக்களும்---ஜெயா டிவி. உட்பட காட்டினார்களே..

கட்டணத்தை “அழுதுவிட்டு” பெற்றோர்..டிவி முன் அழுததை ஜெயா டிவியும் கரிசனமாக ஒளிபரப்பியதே..கொடநாட்டில் கேபிள் இல்லையா/--டிஷ் டிவி கிடையாதா?—இதையெல்லாம் பார்க்க ஜெ யிக்கு நேரமில்லையா?

கலர் டிவியையும் 2ஜி பணத்தையும் மட்டுமே நம்பியதால் கலைஞர் வீட்டுக்கு அனுப்பப் பட்டார்..ஜனங்களின் “”நாடித்துடிப்பை” அறியாதவர்கள்..வாக்கு சீட்டுகள்மூலம் “நாதியற்றவர்கள்” ஆவது வரலாறு..அது நடந்து முடிந்து 15 நாட்கள்தான் ஆகிறது..

கடந்தாகால தவறுகளை திருத்திக்கொள்பவன்..எதிரி செய்த தவறை தொடராதவன்……புதிய தவறை புரியாதவன்….ஆட்சியிலிருந்து அகற்றப்பட முடியாதவன் ஆகிறான்..என்கிறது சாணக்கியனின் அர்த்தசாஸ்திரம்..

இதுதெரியாத மற்றவர்கள் “உள்ளே வந்தவுடன்..வெளியே அனுப்பும் தேதி..குறிக்கப்படுகிறார்கள்”….

கலைஞரை ஆட்சியில் அமர்த்த ஜெ யின் முதல் முயற்சியா இது?