Pages

Friday, June 29, 2012

இதய வலி—ஒலி—கேட்கிறதா?—இனியே நீ அரசன்..

இதய வலி—ஒலி—கேட்கிறதா?—இனியே நீ அரசன்..

அந்த சீன தேசத்து மஹாராஜா…மகனை சிறந்த மன்னனாக்க..தன் “ஜென் குரு” விடம் அனுப்பிவைத்தார்..
ஆஸ்ரமத்துக்குள் நுழைந்த இளவரசனை ஓராண்டு காட்டிற்கு அனுப்பிவைத்தார் “ஜென் குரு”
ஆண்டு ஒன்று முடிந்த பின்பு ஆஸ்ரமத்துக்குள் நுழைந்த இளவரசனிடம் “அனுபவங்களை சொல் “ என்றார் “ஜென் குரு”
நான் காற்றில் அசையும் மரத்தின் ஓசையை  கேட்டேன்..பறவைகள் எழுப்பும் ஒலியையும் வண்டுகளின் ரீங்காரத்தையும் கேட்டேன்…உயரத்திலிருந்து விழும் நீர் வீழ்ச்சியின் ஓசையை கேட்டேன். என்றான்..
போதாது ..இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும்..மீண்டும் ஓராண்டு கானகத்தை தழுவு என்றார்.என்றார் ஜென் குரு
.
ஓராண்டும் ஓடிற்று..மீண்டும் திரும்பிய இளவரசனை குரு பார்க்க இளவரசன் சொன்னான்…….
பூக்கள் மலரும் போது விரியும் இதழ்களின் ஒலியை நான் உணர்ந்தேன்…
காலைக்கதிரவனின் வெப்பத்தால் சூடாகும் பூமியின் வாசத்தை என்னால் நுகர முடிந்தது..
இரவில் பெய்த பனியால் சுற்றுண்ட புல் நீரை உறிஞ்சும் ஒலியை என்னால் கேட்க முடிந்தது..என்றான்.
சரி..உனக்கு தகுதி வந்து விட்டது ..நீ..நாடு திரும்பலாம் என்றார்..

இது எப்படி தகுதியாகும் என்று கேட்ட மற்றொரு சிஷ்யனுக்கு பதில் சொன்னார் ஜென் குரு…
மக்கள் தங்கள் கவலைகளை –கஷ்டங்களை தெரிவிக்க ஆர்ப்பாட்டங்கள்…போராட்டங்கள்…நாடகங்கள்…ஊடகங்கள்..என பல அம்சங்கள் உள்ளது.
இவைதான்..புறக்காதால் சப்தம் கேட்ட முதலாண்டு அனுபவங்கள்..

குடிமக்களின் கவலைகளை தெரிவிக்க இயலாத போதும்..அவன் இதயத்திலுள்ள வலியின் ஓசையை..மனதிலுள்ல கவலையின் வாசத்தை உணர்பவனே அரசன்.
அந்த சக்தியை இளவரசன் இப்போது இரண்டாமாண்டு அனுபவத்தில் பெற்று விட்டான் .. என்றார் ஜென் குரு.

இன்றுதான்…இங்குதான்..போராட்டங்களும்..தீவைப்புக்களும்..கோர்ட் தீர்ப்புக்களும் கூட ஆட்சியாளர்களின் செவிகளை எட்டுவதில்லையே..காதுகள் செவிடாகிவிட்டனவே..

4 comments:

Unknown said...

nandru

கோவி said...

ஜென் கதைகள் படிக்க படிக்க சுவாரசியமே.

முத்தரசு said...

காலத்துக்கு ஏற்ற ஜென் கதை

sakthi said...

நல்ல கதை அழகு