Pages

Thursday, January 10, 2013

முஸ்லீம்கள் உயிரின் மதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுமா?


” எல்லோரும் இன்புற்று இருப்பதைத்தவிர வேறொன்றரியேன் பராபரமே—தாயுமானவர்..”


“எல்லோரையும் துன்புறுத்துவதைத் தவிர வேரொன்றரிவேன் பராபரனே”—காங்கிரஸ் கட்சி..


எல்லா உயிர்களும் சமமானது..விலைமதிப்பற்றது என்பதை நாங்கள் முழுமையாக நம்புகிறோம்..


இப்போது விஷயத்துக்கு வருவோம்..

காங்கிரஸ் ஆளும் மராட்டிய மாநிலம் “தூலே “ என்னும் ஊரில் 3 நாளைக்கு முன் நடந்த கலவரத்தில், போலீஸ் துப்பாக்கி சூடூ நடத்தியதில், 5 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள்.70 போலீஸ்காரர்கள் தாக்கப்பட்டு, படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.


இந்த துப்பாக்கி சூட்டில் பலியான முஸ்லீம்களுக்கு ஆதரவாக எந்த “போலி மதசார்பற்ற கட்சிகளும்’ கண்டனமோ இரங்கலோ தெரிவிக்கவில்லை.


காரணம் கொன்றவர்க்ள் காங்கிரஸ்காரர்கள்..காங்கிரசால் முஸ்லீம்கள் கொல்லப்பட்டால்..அது உயிரில்லையா? அதற்கு மதிப்பில்லையா?


ஏன் ..ஒரு இரங்கல்…கண்டனம் கூட இல்லையா?..இதுதான் காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லீம்கள்.. நிலை..எப்போதும் வெறும் வாயை மெல்லும் கருணாநிதியும், லாலுபிரசாத்தும், பிரகாஷ்கரத்தும், வாய்மூடி மவுனியாய் இருப்பது ஏன்?


போட்டிபோட்டுக்கொண்டு விவாதம் நடத்தும், என்.டி.டி.வி. பர்க்காதத்தும், சி..என்.என்.ஐ.பி.என்…ராஜ்தீப் சர்தேசாயும், ஏன் விவாதம் நடத்தவில்லை?..ொன்றன் காங்கிரஸ்காரன் என்போ?


குஜராத்தோ அல்லது பா.ஜ.க ஆளும் மாநிலத்திலேயோ, இம்மாதிரி சம்பவங்கள் நடந்திருந்தால்தான், கொல்லப்பட்டவர்கள் முஸ்லீம்கள் என கருதப்படுவர்களோ?
அங்குதான் அவர்களின் உயிரின் மதிப்பு உயர்ந்ததோ?
அப்போதுதான் கண்டனங்களும், விவாதங்களும், இரங்கல் அறிக்கைகளும் வருமோ?


நான் ”தூலே” துப்பாக்கி சூட்டில் பலியான முஸ்லீம்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்ததையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

4 comments:

Anonymous said...

அஜ்மல் கசாப் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட போது பல மனித உரிமை வாதிகள் பொங்கி எழுந்தனர்.
பல இஸ்லாமிய மத வெறியர்கள் அஜ்மல் குற்றமற்றவன். அவன் தாக்குலில் ஈடுபட்டதாக கூறியது ஒரு அரசியல் நாதம் என்று ஒரு இஸ்லாமிய எழுத்தாளர் கட்டுரை போட்டார். (கீற்று தளத்திலும் வெளிவந்தது)
அதை நம்ம வாகாபி கூட்டம் தங்கள் தளங்களில் மறு பிரசுரம் செய்தன. ஒரு மதவெறி பெண் பதிவரும் அதை முக்கியமாக மறு பிரசுரம் செய்தார்.
முக்கியமாக நேற்று சிறிலங்காவை சேர்ந்த முஸ்லிம் பணிப்பெண் ஒருவர் சவுதியில் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அவர் பெயர் ரிஸானா நபீக். அவர் முஸ்லிம் தான்.

உலகில் எங்காவது முஸ்லீம்க்கு தண்டனை வழங்கப்பட்டாலும் ஒப்பாரி வைக்கும், அல்லது யூத சதி என்று சொல்லும் இஸ்லாமிய சமுதாயம் இந்த விடயத்தில் கள்ள மௌனம் சாதிக்கின்றது. ஏனென்றால் தண்டனை வழங்கியது சவூதி. வகாபிகளின் சொர்க்க புரி.
ரிஸானா நபீக் கைது செய்யப்படுகையில் அவருக்கு 17வயது. இந்த விடயம் தொடர்பாக இலங்கை பதிவர் எழுதிய பதிவின் ஒரு பகுதியை பகிர்கின்றேன்.

"சிறுமியின் தவறொன்றை, “தவறுதலாக நிகழ்த்தப்பட்டுவிட்ட மரணத்தை“ஐந்து ஆண்டுகள் கழித்தும் மன்னிக்க முடியாத மனிதர்களுக்கிடையிலேயே நீவாழ வேண்டியேற்பட்டிருக்கிறது. சகோதரி நீ அனுபவித்த மனவேதனைகளும்-துன்புறுத்தல்களும், சிறைகளில் வாழ்ந்த அந்த ஐந்து வருடங்களில் ஆயிரம்முறை மரணத்தை அனுபவித்துவிட்ட வலியை தந்திருக்கும். உன்னைகொன்றுவிட்டு சரியான தீர்ப்பு எழுதிய திருப்தியில் இருக்கிறவர்கள் ஒன்றும்சாதனையாளர்கள் கிடையாது. அதுபோல, அவர்கள் மனிதத்தை உணர்ந்தவர்களாக இருக்கவும் முடியாது. ஏனென்றால் அமெரிக்காகாரர்களுக்கு அதே சட்டம் வேறு தீர்பையும் எழுதுகிறதாம்."

இந்த விடயம் தொடர்பாக கள்ள மௌனம் சாதிக்கும் வாகாபிய வெறியர்கள் என்ன பதில் சொல்ல போகின்றார்கள்?

Anonymous said...

நியாயமான கேள்விகள் தான். மத வியாபாரத்தில் உயிர்களின் மதிப்பு துச்சம். பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது துடிக்கும் மத அமைப்புக்கள், சிரியாவில் ஒரு ஆண்டில் மட்டும் கொல்லப்பட்ட 60,000 முஸ்லிம்கள் பற்றி வாய் திறக்கவில்லை. எங்கெங்கும் கள்ள மவுனங்களே.

வேகநரி said...

ஈராக்கில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த குர்தீஸ் இனத்தை இலட்ச கணக்கில் கொன்று குவித்தார்கள்.கொன்றவர்கள் யார் புனித இன அரபு இஸ்லாமியர்கள். அதனால் இந்திய இஸ்லாமியர்கள் வாயே திறக்கல்ல.

Anisha Yunus said...

சகோ சேகர், தங்கலின் தன்னலமில்லா இரங்கலுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

================================
ஹலோ அனானி,

ஒரே மெசேஜை காப்பி பேஸ்ட் செஞ்சு செஞ்சு களைச்சுப் போயிருப்பீங்க... வந்து என் பதிவையும் படிச்சிட்டுப் போயிடுங்க.

ஏங்க குமுதினி, இப்ப இந்த நடுநிலை போஸ்ட்டைப் பார்த்ததும், “மனித நல வெறி பிடித்த பதிவர்”ன்னு எழுதுவீங்களா?? இதன் மேல் சுவனப்பிரியன் அண்ணனும் பதிவு எழுதியிருக்கார். இன்னும் பல முஸ்லிம் பதிவர்கள், இங்கே, இங்கே, இங்கே எனப் பல இடங்களில், இன்னும் பல தளங்களிலும் எழுதியுள்ளார்கள். அப்ப எங்களை எல்லாம் நடுநிலைமைன்னு உங்க ‘பிரிவினைவெறி பிடித்த தீவிரவாத சங்கம்’ ஒத்துக்குமா? அதற்கு பாராட்டுவீங்களா??? செய்ய மாட்டீங்களே.... ஏன்ன்னா...உலகின் வாயில் இரட்டை நாக்கு!!
============================