Pages

Sunday, August 9, 2015

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்பார்கள்??

(ஒரு வாரத்திற்கு முன்பு தினமணி--தினமலர்--தி இந்து--உட்பட பல பத்திரிக்கைகளுக்கு அனுப்பி--அவர்கள் வெளியிடாததால்--இன்று என் வலப்பக்கத்திற்கு கொண்டாட்டம்--பெரிய--விரிவான--இதுவரை யாரும் எழுதாத - கட்டுரை--படிப்பது கடினம்--இனி உங்கள் முடிவு)

”காந்தியவாதி”--சசிபெருமாளின் “அகாலமரணம்” --அதுவும் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது என்பது தமிழகத்தில் “மதுவிலக்கு கோரிய” போராட்டத்திற்கு பெரும் உந்துதலை கொடுத்துள்ளது..ம.திமுக உள்ளிட்ட சில சிறிய கட்சிகள் விடுத்த மதுவிற்க்கு எதிரான ஒருநாள் “பந்த்” பிசுபிசுத்தாலும், அரசியல் “அஜண்டாவில்” மதுஒழிப்பு போராட்டத்தின் முழுப்பலனும் “எங்களுக்கே” வரவேண்டும் --என விரும்பிய பெரிய கட்சிகள் இதை புறக்கணித்தாலும் ..தமிழகத்தில் மது ஒழிப்பு போராட்டம் “ஒரு புதிய பரிணாமத்தை” நோக்கி செல்ல துவங்கியுள்ளது உண்மையே.


மது உற்பத்தியை ஏகபோகமாக கையில்லே வைத்துள்ள திமுக--” மதுவிற்கு எதிராக போராட உங்களுக்கு தார்மீக உரிமை உள்ளதா?”என்ற மற்ற கட்சிகளின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திண்டாடுகிறது.
இதுவரை “மது ஒழிப்பை” தன் பிரதான “அஜண்டாவில்” வைத்திருந்த பா.ம.க.--”மது ஒழிப்பிற்க்கு தானே ஏகபோக சொந்தக்காரன்” என “பிராண்ட் லீடர் ஷிப்பை” கோருகிறது..இன்றைக்கு தமிழக அரசியலில் மது ஒழிக்க போராடினால் மட்டுமே “காலந்தள்ளமுடியும்” என்னும் மனோநிலக்கு அரசியல் கட்சிகள் வந்துவிட்டதை காணமுடிகிறது..

இந்த “மது ஒழிப்பு கூப்பாடு” எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் சாத்தியம்?--இது எப்படி ஆரம்பித்தது?--யார் யார் இடiையில் சேர்ந்தார்கள்?--என்ன செய்தால் “மது ஒழிப்பை “சாத்தியமாக்கமுடியும் ? என்கிற ஒரு “சின்ன” “அனாலிஸிசிசை” நாம் செய்யலாமா?

எங்கிருந்து ஆரம்பிப்பது?..தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி--மதுவை புட்டிப்பாலாய்--புகட்டிய” கலைஞரிடமிருந்தே துவங்குவோம்..


திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் வழிவகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்துவோம்" - கருணாநிதி .
முதலில் கருணாநிதியின் வார்த்தை ஜாலத்திற்குள் நான் செல்ல விரும்பவில்லை. இச்சொல்லாடலில் மறைந்திருக்கிற பல ரகசியங்களை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை.

கருணாநிதியின் பூர்வாஸ்ர விஷயங்களை எல்லாம் நினைவுபடுத்தி மூதறிஞர் ராஜாஜி மழையில் நனைந்து கொண்டு கருணாநிதியிடம் மதுவிலக்கு ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததை நினைவுகூர விரும்பவில்லை.
ஏன் கருணாநிதிக்கு இந்த மனமாற்றம்? எப்படி இந்த திடீர் அறிவிப்பு?
இல்லை, இல்லை. இது 2011 முதலே கலைஞர் இதயத்தில் இருக்கிறது. அதனால்தான் டாஸ்மார் கடைகளின் நேரத்தை எங்கள் ஆட்சியில் குறைத்தோம் என்கிற தளபதியாரின் ஸ்டேட்மெண்டால் “மது ஒழிப்பு—திமுகவில் உள்ள அஜண்டாதான்” என்றால்-- அதை சின்னக் குழந்தை கூட ஏற்றுக் கொள்ளாது.

ஆனால்.. கருணாநிதி மனதில் எது இந்த அறிவிப்பை செய்யத் தூண்டியது?

இந்த ஆராய்ச்சி பெரும் ஆராய்ச்சி. நிச்சயமாக மதுவிலக்கை இவரால் கொண்டுவர இயலாது அல்லது அமல்படுத்த மாட்டார். இதற்கான காரணங்கள் என்ன என்பதை கட்டுரையின் கடைசியில் சொல்கிறேன்.
நாடாளுமன்ற தேர்தலில் பூஜ்யம். குடும்பத்தில் பதவிப் போராட்டம். கட்சிக்குள் கடுமையான கோஷ்டி பூசல். 2ஜி ஊழலில் சம்மன். தண்டிக்கப்படும் அபாயம். கூட்டணி கட்சிகள் ஒதுங்கி ஓரம் போனது போக , தமிழ்நாட்டில் திடீரென ஒவ்வொரு கட்சியாக மது ஒழிப்புப் போராட்டம் நடத்த …..


ராமதாஸ் தன் மகனை முதல்வராக்க மது ஒழிப்பை கையிலெடுத்து மோடி பாணியில் மாநிலம் முழுக்க பிரச்சாரம். கோவையில்கூட ஒரு அதிரடி பொதுக்கூட்டம். இதேபோன்று பாஜகவும் மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம். இதில் 15,000க்கும் அதிகமானோர் கைது. இதோடு டாக்டர் தமிழிசையின் காரசாரமான எதிர் தாக்குதல் நடத்த….


எங்கே தான் தனிமைப்படுத்தப்படுவோமோ என்கிற அச்சத்தில் கடைசியாக மதுஒழிப்பை தானே கையிலெடுக்க முடிவு செய்தார் கலைஞர். அதன் விளைவு இந்த அறிவிப்பு. இதுதான் இதன் சிதம்பர ரகசியம்.
***நாளிதங்களில் பல கட்டுரைகள்-- மதுவிலக்கு சாத்தியமா? என பல புள்ளி விவரங்களை பட்டியலிட்டு வந்துள்ளது. ரூ.22,000 கோடி ஆண்டு வருமானம் தரும் போதை (காம) தேனு மது!


***மொத்த வருமானம் 1 லட்சத்து 42 ஆயிரம் கோடி. இதில் 15 சதவீதம் டாஸ்மாக் ஆக்கினால் வருவது?
***தமிழக அரசின் இலவச திட்டங்களான உணவு மானியம் 5,300 கோடி, மின்சார மானியம் 7,100 கோடி, பள்ளி சீருடை, புத்தகம், காலணி மானியம் 1,000 கோடி, இலவச மிக்சி கிரைண்டர் 2,000 கோடி, இலவச லேப்டாப் 1,100 கோடி, மற்ற இலவசங்கள் 5,000 கோடி என இலவசங்கள் டாஸ்மாக்கையே நம்பியுள்ளபோது எப்படி மதுவிலக்கை அரசு அமல்படுத்த முடியும்?என்பதுதான் இக்கட்டுரையின் சாரம்..


***வேறு வரிபோட எங்கே வகையுள்ளது? அது சாத்தியமா? மக்கள் எதிர்ப்பு வராதா? இக்கேள்விகள் எல்லாம் வெரும் பொருளாதாரம் சார்ந்தது.” மதுவிலக்கு”- என்பது வெரும் பொருளாதாரம் மட்டுமல்ல, இரு ஒரு சமூக ”சீர்படுத்தும்”-- பிரச்சினை.

***மது விற்பனையை துவக்கியபோது-- இது அரசு, மற்றும்..ஆளும் கட்சிக்காரர்கள் வருமானத்திற்கு மட்டுமாகவே பார்க்கப்பட்டது.

***இன்று அதை ஒழிக்கும் போது இதே பார்வை மட்டுமே மீண்டும் வைக்கப்படுகிறது. இது இதன் முழு பரிணாமமும் நமக்கு தெரியவில்லை, புரியவில்லை, அறியவில்லை என்பதையே இது காட்டுகிறது.
தமிழ்நாட்டின் இன்றைய மக்கள் தொகை 7.5 கோடி பேர். இந்த மக்கள்
தொகையில் பாதி பேர் பெண்கள். மீதி பாதி மக்கள் தொகையில், ஒரு கோடியிலிருந்து 1.5 கோடி பேர் குடிக்கிறார்கள். கிட்டத்தட்ட 2 கோடி பேர் Social drinkers. அல்லது நட்புக்காக குடிப்பவர்கள் என-- இது ஒரு ”பெரும் குடி மக்கள்”- நாடு.

ஒருமுறை குடித்தவன் ”ஆயுள் முழுவதும் குடிகாரன்”- என்பது குடிமக்கள் வாக்கு. குடி என்பது addiction. அது மூளையின் ஒரு பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. அந்த பகுதி ”ஒரு பெக் ”-போட்டால் 2 கேட்கும். 2 போட்டால் 3 கேட்கும். பிறகு 4,--5 என போய்க் கொண்டே இருக்கும். குறையாது. குறைக்க முடியாது. அப்படி ஒரு இறுக்கத்தைக் கொடுக்கும்.

தினசரி காலை முதல் மாலை வரை கிளாஸை கீழை வைக்காமல் இருக்கும் குடிகாரர்களுக்கு காரணம் அவர்களல்ல! அவர்களும் வேண்டுமென்றே செய்வதல்ல. இதற்கு பெயர்தான் addiction. இது கோகேன், மரியாஜீனா போன்ற போதை மருந்துகளுக்கு அடிமையானவர்கள் போல மதுவும்..போதைக்கு அடிமைப்படுத்தி விடுகிறது.

அர்ஜெண்டினாவின் கால்பந்து விளையாட்டு வீரர் மரடோனா போதை மருந்துக்கு அடிமையாகி சிகிச்சை பெற்று இப்போதுதான் மீண்டு வந்திருக்கிறார்.

குடிக்க ஆரம்பித்தவனின் நினைவு முழுவதும் ”அடுத்து எப்போது குடிப்போம்” என்பது பற்றி மட்டுமே நினைத்திருக்கும். மாலை 8 அல்லது 9 மணிக்கு ஒருவன் துவக்கத்தில் குடிக்க ஆரம்பிக்கிறான் என்றால் அவனுக்கு காலையில் எழுந்தது முதல் ”மாலை 8 மணி எப்போது வரும்”-- என்கிற நினைப்பே ஆட்கொள்(ல்லு)ளும்.

இது மதுவின் ”அளவு கூடக் கூட”-- இன்னும் அதிகமாகும். இரவு 9 மணிக்கு துவக்கியவனை-- விரைவில் மாலை 6 மணிக்கே துவக்குமாறு-- மூளை அவனுக்கு கட்டளையிடும்.

வாரம் ஒருமுறை சனிக்கிழமை இரவு மட்டும் குடித்தவனை ஞாயிறு இரவு என்றும் பிறகு வாரம் முழுவதும் குடிக்க தூண்டும் “அடிக்க்‌ஷன்” இது... பிறகு ”போதையே அவனது பாதையாகும்”-. முதலில் மனிதன் இதை விரும்பி ஏற்கிறான். பிறகு மனிதன் மேல் இது ஏறி நின்று விடுகிறது. அவனால் விடமுடியாத மனோவியாதியாக இதுமாறி விடுகிறது.

எதற்கு இவ்வளவு விளக்கம் தருகிறேன் என்றால், இந்த addictionன் கொடுமை என்ன என்பதை நாம் தெரிந்து கொண்டாலே இதை பூட்டுப்போட்டு (டாஸ்மாக் கடைக்கு) தடுத்துவிட முடியாது என்பதும்-- அதற்கு மேல் செய்ய வேண்டியிருக்கிறது என்பதும் தெரியவரும்.

தீர்வு என்ன--எப்படி?

ஏதோ குற்றத்திற்காக ஒரு குடிகாரன் சிறையில் தள்ளப்படுகிறான் என வைத்துக் கொள்வோம். அங்கே அவனால் ”போதை” இல்லாமல் இருக்க முடியாது. தினசரி ”அடிக்கும் நேரம்”- வரும்போது அவனால் சும்மா இருக்க முடியாது. கைகால்கள் ஆட்டம் காணும்; மனது பதைபதைக்கும்.

அதனால்தான் சிறைக்குள் மிகச்சாதாரணமாக கஞ்சா கடத்தப்படுகிறது. கஞ்சா ஈஸியான எளிதான வலுவான போதையாகும் என்பதோடு சீப்பானது. இதுவே ஊருக்குள் ஒரு குடிமகனுக்கு அவனது குடி நேரம் வந்தவுடன் காசில்லை என்று வைத்துக் கொள்வோம். உடனே அந்த காசைப் பெற, திருட, கொலை செய்ய, எந்தக் குற்றத்திலும் ஈடுபட அவனை அவனது” குடிமனது”- தூண்டும்.

ஒரு அரசாணையில் ஒரு வேளை சாராயக் கடைக்கு மூடுவிழா நடத்தி நாம் டாஸ்மாக்கை எல்லாம் மூடி விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம்.
உடனே அத்தனை குடிகாரர்களின் ”இனி நாம் குடிக்க வேண்டாம்”- என்று
  முடிவு செய்துவிடுவார்களா?
 முடிவு அவர்களால் எடுக்கவே முடியாது. அந்த addiction அவர்களை விடவே

விடாது. அவர்களெல்லாம் போதையை மீண்டும் உடனடியாக பெறுவது எப்படி? என்பதைப் பற்றி மட்டுமே உடனே சிந்திக்கத் தொடங்குவார்கள்.
பணம் படைத்தவர்கள் பக்கத்து மாநிலத்துக்கு போவர். பணம் இல்லாதவர்கள் கள்ளச்சாராயம் - கஞ்சா- அபின், மற்றும் குறைந்த விலை அதிக போதையை நாடுவார்கள். வெளி மாநிலத்திற்கு போதைக்கு போய் திரும்பியவர் வரும் வழியில் accidentல் சிக்குவான். கள்ளச்சாராயம் போட்டவன் பேட்டரி, அரளி விதையால், ”ஆஸ்பத்திரி பெட்டில்”- சிக்குவான். ஆக ஒரு மிகப்பெரும் சமூக பதற்றம்.., social unrest வெடிக்கும்.


கலைஞர் ஏன் இவ்வளவு தைரியமாக மதுவிலக்கு அமலுக்கு ஒத்துக் கொண்டார் என்பது இப்போது புரிகிறதா?


இன்றுமுதல் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிப்பார். குடிகாரர்கள் addiction காரணமாக தரமற்ற போதையை நோக்கி ஓடுவர். கள்ளச் சாராயத்தினால் பெரும் மரணங்கள் சம்பவிக்கும். ஒரே வாரத்தில் ”சமூக மாற்றமும் ஏற்றமும் நடக்கவில்லை.”-” என் சொந்த மக்கள் தரமற்ற சாராயத்தை அருந்தி சாவதற்கு இந்த அரசு காரணமாக இருக்காது. பெண்களின் தாலியைக் காப்பாற்ற இந்த அரசு மதுவிலக்கை விலக்கிக் கொள்ள கனத்த இதயத்தோடு சம்மதிக்கிறது”-- என கண்ணிர் அறிக்கை வெளியிடுவார்.


உண்மையிலேயே மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?
முதலில்-- புதிதாக குடிக்க விரும்புபவர்கள் தடுக்க வேண்டும். இதற்காக பழைய குடிகாரர்களுக்கு அடையாள அட்டை அல்லது பர்மீட் கொடுக்க வேண்டும். பர்மிட் கொடுப்பது சாத்தியமா என்றால், சாத்தியமே.

டாஸ்மாக்கிற்கு சென்று சரக்கு வாங்கும்போது ஒரு சீட்டு கவுண்ட்டரிலேயே கொடுக்க வேண்டும். இதற்கு கால நிர்ணயமும் செய்ய வேண்டும். அந்த எண்ணை வைத்து onlineலேயே பர்மிட் பெற்றுக் கொள்ளுமாறு அரசு செய்யலாம். எனவே இதனால் புதிதாக குடிக்க விரும்புபவர்கள், 18 வயதுக்குக் கீழ் உள்ளோர் தடுத்து நிறுத்தப்படுவர்.


இரண்டு-- ”அடிக்‌ஷன்” எனப்படும் மதுவிற்கு அடிமையானோர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இது ஒரு பெரிய நீண்டதூர பாதை. முதலில் இதற்கான மறுவாழ்வு மையங்களையும் சிகிச்சை தரும்..மருத்துவமனைகளையும் அரசும் தனியார் தொண்டு நிறுவனங்களும் ஏற்படுத்த வேண்டும்.


இப்போது பல்வேறு நோய்களுக்காக உள்ள பொது மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிலும் படுக்கைகளின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 1 சதவீதத்துக்கும் குறைவே. மதுவிற்கான மறுவாழ்வு மையங்கள் உருவாக்கப்பட்டால் இது அப்படியே இன்னொரு மடங்கு அதிகரிக்க வேண்டியிருக்கும். இதை உடனடியாக செய்ய முடியாது.

ஒரு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் இவை உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில் இதற்கான நிதி அதிகம் தேவை. மதுவிலிருந்து விடுதலை சிகிச்சை உள் நோயாளி சிகிச்சை ஆகும். இதற்காக பாதிக்கப்பட்டோர் 2,3 மாதங்கள் குடும்பத்துடன் --தங்கி சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.

இக்காலகட்டத்தில் குடும்பமே ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டியிருப்பதால், குடும்பத் தலைவர்கள் வேலைக்கு போக முடியாது. எனவே அவர்களுக்கு அரசு நிவாரண உதவி தரவேண்டியிருக்கும்.

சிகிச்சைக்கான மருந்து, மாத்திரை, உறைவிடம், மற்றும் குடும்பச் செலவு என அரசுக்கு இது ஒரு பெரும் நிதிச்சுமை. இதற்கு அரசு முதலில் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். சிகிச்சை பெற்று திரும்பிய நோயாளி மறுபடியும் குடிக்குள் சென்று சிக்காமல் இருக்க alchoholic anonymus (ஆல்கஹாலிக் அனானிமஸ்) என்ற மதுவிலிருந்து மீண்டோர் அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் அவர்கள் மீண்டும் டாஸ்மாக் கடைக்கு திரும்பாமல் பாதுகாக்க வேண்டும்.
மூன்றாவதாக, Social drinkers எண்ணிக்கையை குறைக்க அல்லது கட்டுப்படுத்த சினிமா கலைஞர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் பத்திரிகைகள் மூலம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தொடர்ந்த பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும்.

எப்படி புகைப்பது ஒரு சமூக குற்றம் என்கிற நினைப்பு இன்று வந்து புகைப்பவர்கள் ”கண்ட இடங்களிலும்”- புகைக்க முடியாது அவர்களுக்கென்று தனி இடம் ஒதுக்கப்பட்டிருப்பது போல, குடிப்பது சமூக புறக்கணிக்கும் குற்றம் என்பதும் அது உடல் மனம், செயல் நலத்திற்கு கேடு என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக புகட்டப்பட வேண்டும்.

இவ்வளவு ஏற்பாடுகளும் செய்யாமல் திடீரென டாஸ்மாக்குக்கு பூட்டு போடுவேன் என சொல்வது.. பஸ் ஸ்டாப்பில் பார்த்த பெண்ணை “வா..கல்யாணம் செய்துகொண்டு ஓடிவிடுவோம்” என்று சொல்வது போலாகும்...

ஒரு சரியான Home work ம் ஒரு ”வலுவான -தில்லான”- மனமும் இருக்கும் கட்சியால் மட்டுமே மதுவிலக்கு பூரணமாக அமல்படுத்த முடியும். இவைகளை செய்யாமல் மது ஒழிப்பு என்பது ---நாடகம் --என்பதை தவிர வேறு என்ன சொல்ல?--.

1 comment:

Adirai anbudhasan said...

நிறைய செய்திகள், உண்மைகள் யாராலும் மதுவிலக்கு கொண்டுவர முடியாது.கொண்டு வர வேண்டும் என்று நினைத்தால், தன சாராய ஆலைகளை மூடவேண்டும். அடிமடியிலேயே கை வைக்க முடியுமா ? கழகங்களின் பெரும்தலைகளுக்கு வரும் வருமானத்தின் மெயின் கால்வாய் அடைபட்டு விடும்.
உயிருள்ள "ரோபோக்கள் '" இவர்கள் இல்லை என்றால், பஸ் எரியாது, போராட்டங்கள் நடக்காது, தீக்குளிப்பு இருக்காது, தலைமை அறிவிக்கும் போராட்டங்களை நடத்த ஆள் இருக்குமா ?
மிகவும் முக்கியமானது, நீங்கள் சொல்லும் 'குடி'மக்கள், யோசிக்க ஆரம்பித்தால் என்ன ஆகும் ? காலம் காலமாக யோசிக்க விடக்கூடாது என்று தொலைநோக்கு பார்வையுடன் திட்ட மிட்டு செய்தது வீணானால், நாடே ஆடிப்போய் விடாதா ? ஒன்றா இரண்டா ஒன்னரை கோடி பேர் என்கிறீர்கள். அப்படி ஒன்றை பொறுப்புள்ள அரசியலார்கள் நடக்க விடுவார்கள் ?...... விடலாமா ? மது விலக்கு கொண்டு வந்தால், கொலை, கொள்ளை,அடிதடி, கடத்தல் போன்றவைகளுக்கான சீப் லேபர் , ( பிரியாணி,போத்தல் ) இல்லாமல் பொய் விடும்