Pages

Friday, September 25, 2015

சுவாமி தயானந்த சஸ்வதி அவர்களுக்கு என் புகழாஞ்சலி

(இன்று அகில இந்திய வானொலியில் சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களுக்கு நான் ஆற்றிய புகழாஞ்சலி)..

மறைந்த சுவாமி தயானந்த சஸ்வதி அவர்கள் ஒரு ஆன்மீக குரு மட்டுமல்ல..அவர் விஸ்வ குருவுமாவார்..

இந்த பாரத புண்ணிய பூமியி ல் எத்தனையோ மகான்கள் அவதரித்துள்ளனர்..அவர்களையெல்லாம் நாம் பார்த்ததில்லை--ஆனால் நம் கண்முன்னே நாம் வாழும் தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டம் மஞ்சக்குடியில் அவதரித்த சுவாமி தயான்ந்த சரஸ்வதி அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என் எண்ணி நாம் பெருமை படுகிறோம்..

ஒவ்வொரு மகானும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை கொண்டவர்கள்
..
சிலர் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
சிலர் . அதிசயங்களை புரிந்துள்ளனர்..
சிலர் ஆசிகளை அள்ளி அள்ளி வழங்கியுள்ளனர்..
சிலர் நமது அறிவுக்கண்களை ஞான விளக்கங்கள் கொண்டு திறந்துள்ளனர்..
சிலர் தாழ்த்தப்பட்ட மக்களின் ஒளி விளக்காக திகழ்ந்துள்ளனர்..
சிலர் மேல்தட்டு மக்களிடம் கோலோச்சி வந்துள்ளனர்..

இப்படி ஒவ்வொருவரும் பெற்ற தனித்தன்மைகள் அனைத்தையும் ஒருசேரக் கொண்ட மாமுனியாக சுவாமி தயானந்த சரஸ்வதி வாழ்ந்திருக்கிறார்..

சுவாமிகள் குப்பை அள்ளும் சுப்பனுக்கும் நெருக்கமானவர்..
கோமேதகம் விற்கும் சுமன் லாலுக்கும் விருப்பமானவர்..
அனைத்து பிரிவு, அனைத்து ஜாதியினருக்கும் அவர் ஆசிவழங்கி அருள்பாலித்துள்ளார்.

தேவாரம், திருவாசகம் போனற தமிழ்ப்பதியங்களை ஓதுபவர்கள் முதல், வேதாந்தம் உபநிடதங்கள் போதிக்கும், சமஸ்கிருத வித்வான்கள் வரைஅனைவராலும் ஈர்க்கப்பட்டவர்..

அவரது உபன்யாசங்களில் ஆங்கிலம் நயாகரா நீர் வீழ்ச்சி போல கொட்டும்..
அவர் ஆன்மீக ஞானபோதனைகளில்--கங்கையின் பிரவாகம்..
வேதாந்த வியாக்கியானங்களில், பிரம்மபுத்ராவின் பேரிரைச்சல்--
தேவார ,திருவாசக தமிழ்ப்பதியங்களில், ஞான சம்பந்தரே, நேரில் தோன்றி விளக்குவது போன்ற நுணுக்கம்.

.
சுவாமி தயானந்த சரஸ்வதி..மகரிஷிகளின் மகரிஷியாக விளங்கினார்.
ஏழைகளின் இறைத்தூதராகவும் செயல் பட்டார் சுவாமிஜி..

பத்திரிக்கையாளராக வாழ்வை துவக்கிய சுவாமிஜி நாத்தீகம், தெய்வ நிந்தனை கொடிகட்டி பறந்த காலத்தில், அவற்றிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்..சரியான பதிலடியை தன் கட்டுரைகள் மூலம் கொடுத்தார் சுவாமிஜி..

அவர் தர்ம ரக்‌ஷ்ண சமிதி என்ற சாதுக்களின் சங்கமத்தை உருவாக்கினார்..உபநிடதங்களின் உச்சத்தை கற்றுத்தெளிந்த 200 க்கும் அதிகமான “வேதாந்த விற்பன்னர்களை” உருவாக்கி உலகம் முழுதும் அனுப்பினார்..

தமிழகம் ஆன்மீக பூமி என்பதற்கு இறைவன் அனுப்பி வைத்த “அவதார சாட்சி” சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள்..

அவரது பாதம் பணிந்து என் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறேன்..

No comments: